யாத்தி:18:19 இப்பொழுது என் சொல்லைக்கேளும், உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன், தேவனும் உம்மோடு கூட இருப்பார்………” 18:24 மோசே தன் மாமன் சொல்கேட்டு அவன் சொன்னபடியெல்லாம் செய்தான். மோசேயின் குடும்பம் ஒன்று சேர்ந்த இடத்தில் சந்தோஷம் இருந்தது என்று பார்த்தோம். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, குடும்ப நலனுக்காக முடிவு எடுத்து, விட்டு கொடுத்து வாழ்ந்த குடும்பம் என்று அவர்களைப் பற்றி பார்த்தோம். யாத்தி:18: 14 – 25 வசனங்களைப் படிக்கும் போது இன்னுமொரு சம்பவத்தைப் பற்றி படிக்கிறோம். மோசேயின் குடும்பம்… Continue reading இதழ்: 1058 பெரியவர்களின்ஆலோசனை ஒரு விலை உயர்ந்த பரிசு போன்றது!
Category: கிறிஸ்தவ குடும்பங்களுக்கு
இதழ்:1057 நல்ல குடும்பமே ஒருவனின் வெற்றிக்குப் பின்னணி!
யாத்தி: 18: 5 “மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயின் குமாரரோடும், அவன் மனைவியோடுங்கூட, அவன் பாளயமிறங்கியிருந்த தேவ பர்வதத்தினிடத்தில் வனாந்திரத்துக்கு வந்து….” நாம் கடந்த நாட்களில் மோசேயுடைய வாழ்க்கையில் முக்கிய இடம் வகுத்த பெண்களைப் பற்றி அறிந்தோம். அவன் தாய் யோகெபெத், சகோதரி மிரியம், அவனை பரிவுடன் வளர்த்து ராஜ குமாரனாக்கிய பார்வோன் குமாரத்தி, அவன் மனைவி சிப்போராள் என்ற பல பெண்கள் அவன் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட மிகப்பெரிய தலைவனாவதற்கு ஒருமுக்கிய காரணம் வகுத்தனர். அவன் மனைவியாகிய சிப்போராள்… Continue reading இதழ்:1057 நல்ல குடும்பமே ஒருவனின் வெற்றிக்குப் பின்னணி!
இதழ்: 1056 கீழ்ப்படியாமையால் வந்த ஆபத்து!
யாத்தி:4: 20, 24, 25 அப்பொழுது மோசே தன் மனைவியையும், தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக் கொண்டு எகிப்து தேசத்துக்கு திரும்பினான்…. வழியில் தாங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு வெளிப்பட்டு அவனைக் கொல்லப் பார்த்தார். அப்பொழுது சிப்போராள் ஒரு கருக்கான கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள். சிப்போராள் மோசேக்கு பாலைவனத்தில் கிடைத்த நீரோடை என்று பார்த்தோம். பல கனவுகளோடு… Continue reading இதழ்: 1056 கீழ்ப்படியாமையால் வந்த ஆபத்து!
இதழ் 1055 வாழ்க்கையே வெறும் கனவுதானா?
யாத்தி: 2: 21, 22 மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்க சம்மதித்தான்; அவன் சிப்போரள் என்னும் தன் குமாரத்தியை மோசேக்கு கொடுத்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்றாள்; நான் அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி அவனுக்கு கேர்சொம் என்று பேரிட்டான். இன்று நாம் மோசேயை மணந்த சிப்போராளைப் பற்றிப் படிக்க ஆரம்பிக்கிறோம்! மோசே!!!!!! 40 வருடங்கள் அரண்மனையில் வாழ்ந்தான்! பார்வோன் குமாரத்தியின் செல்லக் குமாரனாய், பார்வோன் ராஜாவின் பேரனாய் எல்லாவித செல்வங்களையும் அனுபவித்து வளர்ந்தான். எகிப்து… Continue reading இதழ் 1055 வாழ்க்கையே வெறும் கனவுதானா?
இதழ்: 1054 நம் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் வருமா?
யோவான்:13: 34 “ நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்கு கொடுக்கிறேன்” கடந்த சில வாரங்களாக நாம் யாத்திராகம புத்தகத்தில்பெஇடம் பெற்றுள்ள அநேகப் ண்களைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம். எபிரேயக் குழந்தைகளை சிசுகொலையினின்று காத்த சிப்பிராள், பூவாள் என்ற மருத்துவச்சிகளை சந்தித்தோம்! பார்வோன் குமாரத்தியைப் பற்றியும், மோசேயின் தாயாகிய யோகெபெத் பற்றியும் அறிந்து கொண்டோம். சில நாட்களாக மோசேயின் சகோதரி மிரியாமை சந்தித்து, தேவனால் தீர்க்கதரிசி என்றழைக்கப்பட்ட, இஸ்ரவேல்… Continue reading இதழ்: 1054 நம் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் வருமா?
இதழ்: 1053 நன்றியால் துதி பாடு!
எண்ணா:12: 13, 15 அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி; தேவனே அவளை குணமாக்கும் என்று கெஞ்சினான். அப்படியே மிரியாம் ஏழுநாள் பாளயத்துக்கு புறம்பே விலகப்பட்டிருந்தாள். மிரியாம் சேர்த்துக்கொள்ளப்படுமட்டும் ஜனங்கள் பிரயாணம் பண்ணாதிருந்தார்கள். தேவனுடைய சேவைக்காக தங்களை அர்ப்பணித்த அநேக மிஷனரிகளைப் பற்றி படிக்கும்போது நாம் இவர்களை சந்திக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்று எண்ணுவதுண்டு! அப்படிப்பட்டவர்களின் பட்டியலில் இடம் பெறுபவர் டாக்டர் பால் பிராண்ட் என்ற மருத்துவரும் அவர் மனைவி மார்கரெட் அம்மையாரும். அவர் நம்முடைய தமிழ்நாட்டில் ஒரு மிஷனரி… Continue reading இதழ்: 1053 நன்றியால் துதி பாடு!
இதழ்: 1052 மாறுபட்ட மனம் துதியை மாற்றி விடும்!
எண்ணா:12: 1, 2 “எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால் மிரியாமும் ஆரோனும்,அவன் விவாகம் பண்ணியிருந்த எத்தியோப்பிய தேசத்து ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி: கர்த்தர் மோசேயைக்கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக் கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார். சில நேரங்களில் நம்மை சுற்றி நடக்கும் ஆபத்து, விபத்துகளைப் பற்றி கேள்விப்படும்போது, “அதன் பின்னர் அவர்கள் என்றென்றும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்” என்ற வாக்கியம் கதைகளுக்கு மாத்திரம் அல்ல நம் வாழ்க்கைக்கும் சொந்தமாயிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்… Continue reading இதழ்: 1052 மாறுபட்ட மனம் துதியை மாற்றி விடும்!
இதழ்: 1051 துதித்துப் பாடிட பாத்திரர்!
யாத்தி:15: 20, 21 “ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும், தன் கையில் தம்புருவை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புரோடும், நடனத்தோடும் அவளுக்கு பின்னே புறப்பட்டுப்போனார்கள். மிரியாம் அவர்களுக்கு பிரதிவசனமாக; கர்த்தரைப் பாடுங்கள்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையும் குதிரை வீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள்.” இந்த புதிய மாதத்தில் பிரவேசிக்கும் கிருபையை அளித்த தேவனை ஸ்தோத்தரித்து இந்த வருடத்தின் கடைசி மாதத்தை நாம் அவருடைய கரத்தில் அர்ப்பணிப்போம்! நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையை… Continue reading இதழ்: 1051 துதித்துப் பாடிட பாத்திரர்!
இதழ்: 1050 இந்த வயதில் எங்கிருந்து வந்தது இந்த தைரியம்!
சங்கீ: 16: 1 “தேவனே என்னைக் காப்பாற்றும். நான் உம்மை நம்பியிருக்கிறேன்” நாம் கடந்த வாரம் மிரியாமைப்பற்றிப் படிக்க ஆரம்பித்தோம்! அவள் பார்வோன் குமாரத்தியிடம் ஞானமாய் பேசி குழந்தையின் தாயே குழந்தையை வளர்க்கும் திட்டத்தைக் கொடுக்கிறாள். ஞானமுள்ளவள் மட்டுமல்ல, மிரியாமை ஒரு திடமான, தைரியமான பெண்ணாகக் கூட இங்கு காண்கிறோம். இந்த சம்பவம் நடந்த போது மிரியாமுக்கு ஏழிலிருந்து பத்து வயதுக்குள் இருந்திருக்கும் என்று கருதுகின்றனர்! நாணலினால் செய்த பெட்டியில் அவள் தம்பி மோசே நைல் நதிக்கரையில் வைக்கப்பட்டபோது, யார்… Continue reading இதழ்: 1050 இந்த வயதில் எங்கிருந்து வந்தது இந்த தைரியம்!
இதழ்:1049 இத்தனைத் தெளிவு எங்கிருந்து வந்தது?
சில நாட்கள் நாம் மோசேயின் தாயாகிய யோகெபெத்தைப் பற்றிப் பார்த்தோம். பின்னர் பார்வோன் குமாரத்தியைப் பற்றியும் பார்த்தோம். இன்று முதல் மோசேயின் தமக்கையாகிய மிரியாமைப் பற்றி ஒரு சில நாட்கள் படிப்போம். குழந்தை மோசேயை நாணல் பெட்டியில் வைத்து நைல் நதியோரமாய் நாணல் நிறைந்த கரையில் மிதக்க வைத்து, குழந்தையின் அக்காவாகிய மிரியாமை தூரத்தில் இருந்து காவல் காக்கும்படி செய்தாள் யோகெபெத். மிரியாமுக்கு அப்பொழுது பத்திலிருந்து பதின்மூன்று வயதிற்குள் இருக்கும். யார் அந்த நதிக்கரையோரமாக வருவார்களோ? யார்… Continue reading இதழ்:1049 இத்தனைத் தெளிவு எங்கிருந்து வந்தது?
