2 சாமுவேல் 11: ... அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமான பத்சேபாள் என்றார்கள். உனக்கு இஷ்டப்படி நீ செய்யலாம் என்ற சுதந்தரம் என்னுடைய இளவயதில் கொடுக்கப்படவில்லை. அம்மா, அப்பா, டீச்சர்ஸ், போதகர்மார், என்ற பலருடைய அட்வைஸ் கேட்டுதான் நடந்தோம். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி தங்களுடைய சொந்த வழியில் நடந்தவர்கள் பல விளைவுகளை சந்திக்க வேண்டியிருந்தது. அவர்களால் அவர்களுடைய குடும்பம் தலைகுனிந்து நிற்க வேண்டியிருந்தது! எல்லா செயல்களுக்கும் பக்க விளைவுகள் உண்டு! அதுவும் யாரையும்பற்றி யோசிக்காமல்… Continue reading இதழ்: 711 இஷ்டம்போல வாழும் வாழ்க்கை!
Category: கிறிஸ்தவ குடும்பங்களுக்கு
இதழ்: 710 சோதனையை திறந்த வீட்டிற்குள் வரவழைப்பது போல!
2 சாமுவேல் 11:3 ... அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள். ராஜாக்கள் யுத்தத்துக்கு போகும் காலத்தில் தாவீது தன்னுடைய வீட்டின் உப்பாரிகையின் மேல் உலாவிக்கொண்டிருந்தபோது ஸ்நானம் செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கண்டு, அவள் யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான் என்று பார்த்தோம். அவன் அனுப்பிய ஆட்கள் அவளைப் பற்றிய தகவலுடன் திரும்பி வந்தனர். அவள் பெயர் பத்சேபாள் என்றும் அவள் திருமணமானவள் என்றும் அறிந்து கொண்டான் தாவீது. இந்த… Continue reading இதழ்: 710 சோதனையை திறந்த வீட்டிற்குள் வரவழைப்பது போல!
இதழ்: 709 ஆற்றல் மிக்க ஆறு அழிக்கும் சக்தியாய் மாறுவது போல!
2 சாமுவேல் 11: அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான். இரண்டு வருடங்களுக்கு முன்பு இமாலய மலையில் உள்ள தரம்சாலா என்ற மலை நகருக்கு சென்றிருந்தோம். அங்கே எங்கள் விமானம் இறங்கியவுடன் என்னுடைய செல் போனில் ஒரு மெசேஜ் வந்தது. அங்கு உள்ள நதிகளின் ஒரங்களில் நடக்க வேண்டாம் என்ற எச்சரிக்கை அது. அங்கே நதிக் கரையோரம் சென்ற போதுதான் அந்த எச்சரிக்கையின் அர்த்தம் புரிந்தது. நதிகளின் ஓரங்களில் பெரிய பெரிய… Continue reading இதழ்: 709 ஆற்றல் மிக்க ஆறு அழிக்கும் சக்தியாய் மாறுவது போல!
இதழ்: 708 உனக்கு விரிக்கப்படும் வலை!
2 சாமுவேல் 11:3 அப்பொழுது அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான். ஒருநாள் தாவீது மதிய நேர ஓய்வுக்குப் பின், தன்னுடைய அரண்மனையின் உப்பாரிகையிலே உலாவிக் கொண்டிருந்தான். அருமையான காற்று! தான் அதிகமாக நேசித்த எருசலேம் நகரத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். தாவீதை ஒன்றும் குறை சொல்வதற்கில்லை! அவனுக்கு சொந்தமான இடத்தில் அவன் உல்லாசமாய், அமைதியாய், காற்றோட்டமாய் நடந்தது ஒன்றும் தவறே இல்லை! எத்தனை வருடங்கள் காடுகளிலும், மேடுகளிலும், மலைகளிலும், காலம் கழிக்க வேண்டியிருந்தது!… Continue reading இதழ்: 708 உனக்கு விரிக்கப்படும் வலை!
இதழ்: 707 பார்க்க அழகாயிருந்தால் ???
2 சாமுவேல் 11:2 அந்த ஸ்திரீ வெகு சௌந்தரவதியாயிருந்தாள். ஒரு பெண்ணைப்பார்த்து நீ அழகாய் இருக்கிறாய் என்று சொல்லி பாருங்கள்! அந்த முகத்தில் காணும் புன்னகையே வேறாக இருக்கும். யாருக்குத்தான் பிடிக்காது தன்னை ஒருவர் அழகு என்று வர்ணிப்பது. தாவீதின் அராசாட்சியின் இரண்டாம் பாகத்தை 2 சாமுவேல் 11 ம் அதிகாரத்தில் எழுதியவர், பத்சேபாள் வெகு சௌந்தரவதியாயிருந்தாள் என்று எழுதத் தவறவில்லை. ஒருவேளை அவள் அழகில்லாதவளாய் இருந்திருந்தால் ஒருவேளை தாவீது அவளுக்கு அந்த நாளைக் கொடுத்திருக்கமாட்டானோ என்று… Continue reading இதழ்: 707 பார்க்க அழகாயிருந்தால் ???
இதழ்: 706 ஊக்குவிக்கப்பட்ட சோதனை!
2 சாமுவேல் 11: 2 ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பாரிகையின்மேல் உலாத்திக் கொண்டிருந்தபோது ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பாரிகையின் மேலிருந்து கண்டான். நம் மத்தியில் அதிகமாக பேசப்படும் தாவீது, பத்சேபாள் என்பவர்களின் கதையை நாம் ஆழமாக படிக்கப்போகிறோம். இந்தக் கதையை நாம் தொடருமுன், தேவனாகிய கர்த்தர் ஆதாம் ஏவாளிடம், ஏதேன் தோட்டத்தில் எச்சரித்துக் கூறிய வார்த்தைகளை பாருங்கள். தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் … Continue reading இதழ்: 706 ஊக்குவிக்கப்பட்ட சோதனை!
இதழ்: 705 கீழ் நோக்கிய அந்த ஒரு நொடி!!!!!!!
2 சாமுவேல் 11:2 ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பாரிகையின்மேல் உலாத்திக்கொண்டிருந்தபோது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பாரிகையின் மேலிருந்து கண்டான். அந்த ஸ்திரீ வெகு சௌந்தரியவதியாயிருந்தாள். ஒருநாள் காலையில் வாசலில் கால் வைக்கும்போது ஏதோ ஒன்று நீளமாக இருப்பதுபோலத் தோன்றியது. அங்கு ஒரு தொட்டியில் சிவப்பு நிற நீளமான பூக்கள் பூக்கும். அந்தப் பூ காய்ந்து மண் கலரில் விழுந்து கிடக்கும். நான் அந்தப்பூ தான் விழுந்து கிடக்கிறது என்று காலை தூக்கி… Continue reading இதழ்: 705 கீழ் நோக்கிய அந்த ஒரு நொடி!!!!!!!
இதழ்: 704 வீணாக்கும் ஒவ்வொரு நொடியும்!
சங்கீதம்31:15 என் காலங்கள் உம் கரத்தில் இருக்கிறது... தாவீதிற்கு அதிக செல்வந்தமும், உல்லாசமான ஓய்வு நேரமும் கிடைத்தது என்று நாம் பார்த்தோம். எல்லா ராஜாக்களும் யுத்தத்துக்கு போகும் காலத்தில் அனைத்து இஸ்ரவேலும் யோவாபின் தலைமையில் யுத்தத்தில் இருந்தபோது தாவீது மட்டும் தன் வீட்டில் உல்லாசமாய் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தான். தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள்! ஓய்வு எடுப்பது தவறே இல்லை. பெரிய கூட்டமாய் வந்த ஜனங்களுக்கு ஊழியம் செய்த தன்னுடைய சீஷரைப் பார்த்து , தன்னுடன் வந்து சற்று இளைப்பாறும்படி கர்த்தராகிய… Continue reading இதழ்: 704 வீணாக்கும் ஒவ்வொரு நொடியும்!
இதழ்: 703 உல்லாசமான ஓய்வு நேரம்!
2 சாமுவேல் 11:2 ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை உப்பாரிகையின்மேல் உலாத்திக் கொண்டிருந்தபோது.... பல நேரங்களில் சாலை ஓரங்களில் சோம்பலாய் உட்கார்திருப்பவர்களைப் பார்த்து வேலைவெட்டியில்லாமல் இப்படி உட்கார்ந்திருக்கிறார்களே என்று நினைப்பேன். ஆனால் பணக்காரகள் தான் அதிகமாக வேலை வெட்டியில்லாமல் நேரத்தைக் கழிக்கிறார்கள். பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்தவர்களுக்கு உல்லாசமான ஓய்வு நேரம் அதிகம் கிடைக்கிறது. இங்குதான் லோத்தின் குடும்பம் வாழ்ந்த சோதோமும், எருசலேமில் யுத்தத்துக்கு போகாமல் வீட்டில் இருந்த தாவீதின் கதையும் சம்பந்தப்படுகிறது!… Continue reading இதழ்: 703 உல்லாசமான ஓய்வு நேரம்!
இதழ்: 702 நம்மை நாமே ஏமாற்றுவதின் விளைவு?
2 சாமுவேல்:11:1 ....தாவீதோ எருசலேமிலே இருந்துவிட்டான். வேதம் எனக்கு எடுத்துரைக்கும் உண்மைகளில் ஒன்று, கர்த்தராகிய தேவன் உண்மையை அறிந்தவர் என்று அல்ல, அவரே சத்தியம் அல்லது உண்மை என்று! சங்கீதம் 31: 5 ல் தாவீது கர்த்தரை சத்தியபரன் என்று கூறுகிறான். இதை நான் ஏன் இங்கு கூறுகிறேன் என்றால், ஏன் தேவனாகிய கர்த்தர் தாவீது, பத்சேபாள் போன்ற ஒரு கதையை தம்முடைய சத்திய வார்த்தைகளில் இடம் பெற செய்திருக்கிறார் என்று நாம் புரிந்து கொள்வதற்காகத்தான். இந்த… Continue reading இதழ்: 702 நம்மை நாமே ஏமாற்றுவதின் விளைவு?
