சங்கீதம் 51:1 தேவனே உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். இன்றுமுதல் நாம் சில வாரங்கள் தேவனாகிய கர்த்தர் தாவீது ராஜாவை ஏன் நேசித்தார் என்று அலசிப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். நாம் இதை செய்யாவிட்டால் நாம் தாவீதின் வாழ்க்கையைப் பற்றி படித்து முடித்ததற்கு அர்த்தமே இல்லாமல் போகும்! தேவனாகிய கர்த்தர் ஏன் ஏன் ஏன் தாவீதை நேசித்தார்? உங்களுக்கு ஏதாவது பதில் தெரியுமானால் என்னோடு தயவு… Continue reading இதழ்:2239 ஒரு ஆணித்தரமான உண்மை தெரியுமா?
Category: வேதாகம தியானம்
இதழ்:2238 தேவனே நம் வெகுமதியாவார்!
2 சாமுவேல் 14: 17, 21 ராஜாவாகிய என் ஆண்டவனுடைய வார்த்தை எனக்கு ஆறுதலாயிருக்கும் என்று உமது அடியாளாகிய நான் எண்ணினேன். நன்மையும் தீமையும் கேட்கும்படி ராஜாவாகிய என் ஆண்டவன் தேவனுடைய தூதனைப்போல இருக்கிறார்.... அப்பொழுது ராஜா யோவாபைப் பார்த்து: இதோ இந்தக் காரியத்தைச் செய்கிறேன். நீ போய் அப்சலோம் என்னும் பிள்ளையாண்டானைத் திரும்ப அழைத்துக்கொண்டு வா என்றான். வேதத்தில் ஆபிரகாம் தேவனாகிய கர்த்தரால் , தான் இதுமுன் அறிந்திராத ஒரு தேசத்துக்கு புறப்படும்படி அழைக்கப்பட்டார். கர்த்தருடைய… Continue reading இதழ்:2238 தேவனே நம் வெகுமதியாவார்!
இதழ்:2235 நீ பெற்ற இரக்கத்தை மற்றவருக்கு காண்பி!
2 சாமுவேல் 14;11 பின்னும் அவள்; இரத்தப்பழி வாங்குகிறவர்கள் அழிம்பு செய்து, என் குமாரனை அதம்பண்ணப் பெருகிப் போகாதபடிக்கு, ராஜாவானவர் தம்முடைய தேவனாகிய கர்த்தரை நினைப்பாராக என்றாள். அதற்கு ராஜா: உனது குமாரனுடைய மயிரில் ஒன்றாவது தரையில் விழுவதில்லை என்று கர்த்தரின்ஜீவனைக்கொண்டு சொல்கிறேன் என்றான். தாவீதுடைய நம்பிக்கைக்குரிய சேனை வீரனும் அவன் நண்பனுமாகிய யோவாப் தாவீதுக்கும் அவனுடைய குமாரனாகிய அப்சலோமுக்கும் இடையே இருந்த இடைவெளியைப் போக்க தெக்கோவாவிலிருந்து ஒரு புத்தியுள்ள ஸ்திரீயைக் கொண்டு வந்தான். அவள் தன்னுடைய… Continue reading இதழ்:2235 நீ பெற்ற இரக்கத்தை மற்றவருக்கு காண்பி!
இதழ்:2234 மாபெரும் காரியத்தை நமக்காக செய்யும் இயேசு கிறிஸ்து!
2 சாமுவேல் 14: 9,10 பின்னும் அந்த தெக்கோவாவூர் திரீ ராஜாவைப் பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவனே, ராஜாவின்மேலும் அவர் சிங்காசனத்தின்மேலும் குற்றமில்லாதபடிக்கு, அந்தப்பழி என்மேலும், என் தகப்பன் வீட்டின்மேலும் சுமரக்கடவது என்றாள். அதற்கு ராஜா உனக்கு விரோதமாகப் பேசுகிறவனை என்னிடத்தில் கொண்டுவா. அப்பொழுது அவன் இனி உன்னைத் தொடாதிருப்பான் என்றான். கடந்த சில நாட்களாக நாம் தெக்கோவாவூரின் புத்தியுள்ள ஸ்திரீயைப் பற்றி படித்து வருகிறோம். அவள் எல்லாவற்றையும் பகுத்தறியத் தக்க ஞானம் கொண்டவள் என்றும், அவள்… Continue reading இதழ்:2234 மாபெரும் காரியத்தை நமக்காக செய்யும் இயேசு கிறிஸ்து!
இதழ்:2233 அன்று நான் சற்று இரங்கியிருந்தால்?
2 சாமுவேல் 14: 5 -8 ராஜா அவளைப் பார்த்து: உனக்கு என்ன வேண்டும் என்றதற்கு அவள்: நான் விதவையானவள். என் புருஷன் சென்று போனான். உமது அடியாளுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்கள் இருவரும் வெளியிலே சண்டைபண்ணி, அவர்களை விலக்க ஒருவரும் இல்லாதபடியினால், ஒருவன் மற்றவனை அடித்துக் கொன்று போட்டான். வம்சத்தார் எல்லாரும் உம்முடைய அடியாளுக்கு விரோதமாய் எழும்பி, தன் சகோதரனைக் கொன்றுபோட்டவனை ஒப்பி, அவன் கொன்ற அவன் சகோதரனுடைய பிராணனுக்காக நாங்கள் அவனைக் கொன்றுபோடுவோம்.… Continue reading இதழ்:2233 அன்று நான் சற்று இரங்கியிருந்தால்?
இதழ்:2232 இன்று எதை தேவனுக்கு அர்ப்பணிக்கப் போகிறாய்!
2 சாமுவேல் 14: 1- 4 ராஜாவின் இருதயம் அப்சலோமின்மேல் இன்னும் தாங்கலாயிருக்கிறதைச் செருயாவின் குமாரன் யோவாப் கண்டு, அவன் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்திரீயை அழைத்து...நீ துக்க வஸ்திரங்கள் உடுத்திக்கொண்டு.... ராஜாவினிடத்தில் போய் அவரை நோக்கி இன்ன இன்ன பிரகாரமாய் சொல்..... அப்படியே ..அந்த ஸ்திரீ ராஜாவோடே பேசப்போய் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: ராஜாவே ரட்சியும் என்றாள். இன்றைய வேதாகமப்பகுதியில் நாம் பார்க்கும் இந்தப்பெண்ணை தாவீதுடைய சேனைத்தலைவனும், நெருங்கிய நண்பனுமாகிய , யோவாப் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள… Continue reading இதழ்:2232 இன்று எதை தேவனுக்கு அர்ப்பணிக்கப் போகிறாய்!
இதழ்:2231 எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கும் ஞானம்!
2 சாமுவேல் 14: 1- 2 ராஜாவின் இருதயம் அப்சலோமின்மேல் இன்னும் தாங்கலாயிருக்கிறதைச் செருயாவின் குமாரன் யோவாப் கண்டு, அவன் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்திரீயை அழைத்து.. இன்றைய வேதாகமப் பகுதியில் நாம் படிக்கும் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்திரீயைப்பற்றி, இதுவரை வேதத்தில் படித்ததாக ஞாபகமே இல்லை! உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? இந்தப் பெண்ணைப் பற்றி பிரசங்கம் கேட்டிருக்கிறோமா? நான் கேட்டதே இல்லைங்க! வேதத்தை வாசிக்கும்போது அல்லது வேதாகமக் கல்லூரியில் படிக்கும்போது இந்தப் பெண்ணைப் பற்றி ஒருவேளை படித்திருந்தாலும்… Continue reading இதழ்:2231 எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கும் ஞானம்!
இதழ்:2230 பயமே நம்மைக் கொல்லும் முதல் எதிரி!
2 சாமுவேல் 17: 6-10 ஆகிலும் அப்சலோம் அற்கியனாகிய ஊசாயைக் கூப்பிட்டு அவன் வாய்மொழியையும் கேட்போம் என்றான். ஊசாய் அப்சலோமிடத்தில் வந்தபோது, அப்சலோம் அவனைப்பார்த்து: இந்தப் பிரகாரமாக அகித்தோப்பேல் சொன்னான். அவன் வார்த்தையின்படி செய்வோமா? அல்லவென்றால் நீ சொல் என்றான். அப்பொழுது ஊசாய் அப்சலோமை நோக்கி: அக்கிதோப்பேல் இந்தவிசை சொன்ன ஆலோசனை நல்லதல்ல என்றான். ... உம்முடைய தகப்பனும் அவன் மனுஷரும் பலசாலிகள் ... உம்முடைய தகப்பன் யுத்தவீரனுமாயிருக்கிறார்... உம்முடைய தகப்பன் சவுரியவான் என்றும் அவனோடிருக்கிறவர்கள் பலசாலிகள்… Continue reading இதழ்:2230 பயமே நம்மைக் கொல்லும் முதல் எதிரி!
இதழ்:2229 பெலனற்று போனேன், பெலனைத்தாரும்!
2 சாமுவேல் 17: 1-4 பின்பு அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி, நான் பன்னீராயிரம் பேரைத் தெரிந்து கொண்டு, எழுந்து இன்று இராத்திரி தாவீதைப் பின் தொடர்ந்து போகட்டும். அவன் விடாய்த்தவனும் கைதளர்ந்தவனுமாயிருக்கையில் நான் அவனிடத்தில் போய் அவனைத் திடுக்கிடப் பண்ணுவேன். அப்போது அவனோடிருக்கும் ஜனங்களெல்லாரும் ஓடிப்போவதினால் நான் ராஜா ஒருவனைமாத்திரம் வெட்டி, ஜனங்களையெல்லாம் உம்முடைய வசமாக திரும்பப்பண்ணுவேன். இப்படி செய்ய நீர் வகைதேடினால் எல்லாரும் திரும்பின பின் ஜனங்கள் சமாதானத்தோடு இருப்பார்கள் என்றான். இந்த வார்த்தை அப்சலோமின்… Continue reading இதழ்:2229 பெலனற்று போனேன், பெலனைத்தாரும்!
இதழ்:2228 உம்மை மட்டுமே நேசிக்கும் உள்ளம் வேண்டும்!
2 சாமுவேல் 15: 4-6 பின்னும் அப்சலோம்: வழக்கு வியாஜ்யமுள்ளவர்கள் எல்லோரும் என்னிடத்தில் வந்து நான் அவர்களுக்கு நியாயம் செய்யும்படிக்கு என்னைத் தேசத்திலே நியாதிபதியாக வைத்தால் நலமாயிருக்கும் என்பான். எவனாவது ஒருவன் அவனை வணங்க வரும்போது அவன் தன் கையை நீட்டி அவனைத்தழுவி முத்தஞ்செய்வான். இந்தப்பிரகாரமாக அப்சலோம் ராஜாவினிடத்தில் நியாத்திற்காக வரும் இஸ்ரவேலருக்கெல்லாம் செய்து, இஸ்ரவேல் மனிதருடைய இருதயத்தைக் கவர்ந்து கொண்டான். பரலோக தேவன் நமக்கு அருளியிருக்கும் நன்மையான வாழ்வு என்ன என்று நாம் தாவீதின் வாழ்க்கையிலிருந்து… Continue reading இதழ்:2228 உம்மை மட்டுமே நேசிக்கும் உள்ளம் வேண்டும்!
