1 இராஜாக்கள் 19:10 அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான். நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன் என்ற எலியாவின் வார்த்தைகள் என்னை இன்றைய தியானத்தை எழுத வைத்தன. திருமணம் ஆனவர்களோ அல்லது திருமணம் ஆகதவர்களோ, கூட்டத்தில் இருப்பவர்களோ அல்லது இரளான தனி அறியில் இருப்பவர்களோ… Continue reading இதழ்:1828 தேவன் தனிமையை நல்லதல்ல என்று கண்டார்!
Category: வேதாகம தியானம்
இதழ்:1827 தேவனால் ஏற்படுத்தப்பட்ட நட்பு என்ற உறவு!
1 இராஜாக்கள் 19 : 19 - 21 அப்படியே அவன் அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போய், பன்னிரண்டு ஏர்பூட்டி உழுத சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவைக் கண்டான்; அவன் பன்னிரண்டாம் ஏரை ஓட்டிக்கொண்டிருந்தான்; எலியா அவன் இருக்கும் இடமட்டும் போய், அவன்மேல் தன் சால்வையைப் போட்டான். அப்பொழுது அவன் மாடுகளைவிட்டு, எலியாவின் பிறகே ஓடி: நான் என் தகப்பனையும் என் தாயையும் முத்தஞ்செய்ய உத்தரவு கொடும், அதற்குப்பின் உம்மைப் பின்தொடர்வேன் என்றான். அதற்கு அவன்: போய்த் திரும்பிவா; நான்… Continue reading இதழ்:1827 தேவனால் ஏற்படுத்தப்பட்ட நட்பு என்ற உறவு!
இதழ்:1826 திரும்பிப் போ! உன் பணிகளைத் தொடரு!
1 இராஜாக்கள் 19 : 13, 15, 16 அதை எலியா கேட்டபோது, தன் சால்வையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, கெபியின் வாசலில் நின்றான். அப்பொழுது, இதோ, எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்கிற சத்தம் அவனுக்கு உண்டாயிற்று.... அப்பொழுது கர்த்தர் அவனைப் பார்த்து: நீ தமஸ்குவின் வழியாய் வனாந்தரத்திற்குத் திரும்பிப்போய், ஆசகேலைச் சீரியாவின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, பின்பு நிம்சியின் குமாரனாகிய யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, ஆபேல்மேகொலா ஊரானான சாப்பாத்தின் குமாரனாகிய… Continue reading இதழ்:1826 திரும்பிப் போ! உன் பணிகளைத் தொடரு!
இதழ்:1825 இந்த உலகத்தின் அந்நியர்களும், பரதேசிகளும்!
1 பேதுரு 2 : 11பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி, நாம் எலியாவின் வாழ்க்கையைப் பற்றியும் அவனுடைய வாழ்வில் ஏற்பட்ட மிகபெரிய சவால்களையும் பற்றி படித்துக் கொண்டிருக்கும்போது, எலியா எவ்வளவுதூரம் தேவனுடைய சித்தத்தை தன்னுடைய வாழ்வில் நிறைவேற்றினான் என்ற உண்மை என்னை திகைக்க வைத்தது. கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு வந்தபோது உடனே அவன் புறப்படுவதையும், அதன்படி செயல்படுவதையும் பார்க்கும் போது அவன் இந்த உலகத்தை தனக்கு சொந்தமாக… Continue reading இதழ்:1825 இந்த உலகத்தின் அந்நியர்களும், பரதேசிகளும்!
இதழ்:1824 தேவனுடைய அமர்ந்த மெல்லிய சத்தம்!
1 இராஜாக்கள் 19:11 - 13 அப்பொழுது அவர்: நீ வெளியே வந்து கர்த்தருக்கு முன்பாகப் பர்வதத்தில் நில் என்றார்; அப்பொழுது, இதோ, கர்த்தர் கடந்துபோனார்; கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்களைப் பிளக்கிறதும் கன்மலைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டாயிற்று; ஆனாலும் அந்தக் காற்றிலே கர்த்தர் இருக்கவில்லை; காற்றிற்குபின் பூமி அதிர்ச்சி உண்டாயிற்று; பூமி அதிர்ச்சியிலும் கர்த்தர் இருக்கவில்லை. பூமி அதிர்ச்சிக்குப்பின் அக்கினி உண்டாயிற்று; அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை; அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லிய சத்தம் உண்டாயிற்று.அதை எலியா கேட்டபோது, தன்… Continue reading இதழ்:1824 தேவனுடைய அமர்ந்த மெல்லிய சத்தம்!
இதழ்:1823 நான் பெலனற்று போனேன் கர்த்தாவே!
சங்: 51: 8 நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூறும். தேவனாகிய கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்? என்ற கேள்விக்கு பதிலை நாம் தாவீது எழுதிய சங்கீதங்களின் மூலம் தேடி கொண்டிருக்கிறோம். இன்று பன்னிரண்டாவது நாள். நேற்று நாம் கர்த்தர் நம்மோடு பண்ணின நிபந்தனையற்ற அன்பின் உடன்படிக்கையில் அவர் என்றுமே மாறாதவர் என்று பார்த்தோம். அவர் வார்த்தை மாறாது! அவர் சொன்ன யாவற்றையும் நிறைவேற்றுவார். இன்று இதை தெளிவாக நம்முடைய மனதில்… Continue reading இதழ்:1823 நான் பெலனற்று போனேன் கர்த்தாவே!
இதழ்:1822 தேவனுடைய நிபந்தனையற்ற அன்பின் உடன்படிக்கை!
சங்: 51: 7 - 11 நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன். என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன். நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூறும். என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை… Continue reading இதழ்:1822 தேவனுடைய நிபந்தனையற்ற அன்பின் உடன்படிக்கை!
இதழ்:1821 நம்முடைய குறைகளுக்கு அப்பாற்பட்ட அவருடைய வாக்குத்தத்தம்!
சங்: 51: 9 - 11 என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும். தேவனாகிய கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்? என்ற கேள்விக்கு பதிலை தாவீது எழுதிய சங்கீதங்களிலிருந்து கடந்த 10 நாட்களாகப் படிக்கிறோம். சில வருடங்களுக்கு முன்னால் நானும் என்… Continue reading இதழ்:1821 நம்முடைய குறைகளுக்கு அப்பாற்பட்ட அவருடைய வாக்குத்தத்தம்!
இதழ்:1820 பணத்தால் கொள்ள முடியாத சந்தோஷம்!
சங்: 51:8 நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூறும். தேவனாகிய கர்த்தர் தாவீதை ஏன் நேசித்தார்? என்ற கேள்விக்கு பதிலை தாவீது எழுதிய சங்கீதங்களின் மூலம் பார்க்கிறோம். உலகம் கொடுக்கக்கூடாத சந்தோஷம் ஒன்று உண்டு என்பது என்னைபோல நீஙகளும் அறிவீர்கள் என்று நம்புகிறேன். அதுமட்டுமல்ல இந்த சந்தோஷத்தை உலகம் நம்மிடமிருந்து பறிக்கவும் முடியாது.ஆனால் சில நேரங்களில் நம்முடைய வாழ்க்கையை நாமே ஆளுகை செய்து கொள்ளலாம் அங்கு கர்த்தர் தேவையில்லை என்று… Continue reading இதழ்:1820 பணத்தால் கொள்ள முடியாத சந்தோஷம்!
இதழ்:1819 நம்மை சுத்திகரிக்கும் ஆவியானவர்!
சங்:51:7 நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன். என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன். தேவனாகிய கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்? என்பதை நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். தாவீது இந்த அன்புக் கடிதத்தின் முதல் சில வசனங்களில், தான் வழிதவறிப் போன இந்த நிலையில் கர்த்தருடைய கிருபை தனக்குக் கிடைக்க வேண்டுமென்று கெஞ்சுகிறான். தேவனுடைய மிகுந்த இரக்கங்களால் தன்னை ரட்சிக்க வேண்டுமென்று வேண்டுகிறான். தன்னுடைய பாவத்திலிருந்து முற்றிலும் சுத்திகரிக்கப்பட்டு, தன்னைக் குற்றப்படுத்தும் உணர்ச்சிகளிலிருந்து… Continue reading இதழ்:1819 நம்மை சுத்திகரிக்கும் ஆவியானவர்!
