சங்:51:6 இதோ உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர். அந்தக்கருணத்தில் ஞானத்தை எனக்கு தெரியப்படுத்துவீர். தேவனாகிய கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்? இன்று ஏழாவது நாளாக இந்தத் தலைப்பில் தியானிக்கிறோம். நாம் நேற்று ஏதேன்எ ன்னும் பரிபூரண அழகானத் தோட்டத்தைப் பற்றிப் பார்த்தோம். அந்த அழகிய சுற்றுபுறத்தில் வாழ்ந்தவர்கள் தான் ஆதாமும் ஏவாளும். தேவனாகிய கர்த்தர் அந்தத் தோட்டத்தில் உள்ள எல்லாவற்றையும் அனுபவிக்க அவர்களுக்கு சுதந்தரம் கொடுத்தாலும், ஒரே ஒரு மரத்தின் கனியை மாத்திரம் புசிக்க வேண்டாம் என்றிருந்தார். வேதம்… Continue reading இதழ்:1818 உண்மையை நான் அறிந்து கொள்ளும் ஞானத்தைத் தாரும்!
Category: வேதாகம தியானம்
இதழ்:1817 நம்மை இரட்சிக்க தம்மையே ஈந்தவர்!
சங்: 51:5 இதோ நான் துர்க்குணத்தில் உருவானேன், என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள். தேவனாகிய கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்? என்று தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறோம்! பல வருடங்களுக்கு முன்னால் ஈராக் தேசத்தில் ஏதேன் தோட்டம் இருந்தாகக் கருதப்படும் ஒரு இடம் கண்டுபிடிக்கப்பட்டது. ஒருகாலத்தில் இது பச்சையான சதுப்பு நிலமாக இருந்திருக்கக்கூடும் என்பதற்கு அடையாளமாக இந்த இடம் மிகவும் நீர் வளமோடு ஈரமாக இருந்தது. உலகத்தின் இந்த பாகத்தில் காய்ந்த பாலைவனங்கள் அதிகமான ஒரு பகுதியில்… Continue reading இதழ்:1817 நம்மை இரட்சிக்க தம்மையே ஈந்தவர்!
இதழ்:1816 உம்முடைய நாமத்துக்கு கேடு விளைவித்த பிள்ளை நான்!
சங்: 51:4 தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன். . தாவீதை கர்த்தர் ஏன் நேசித்தார்? என்று தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறோம். நாம் வாசிக்கிற இந்த வேதாகமப் பகுதியில் தாவீது தன்னுடைய பாவத்தை அறிக்கையிடுவதைப் பார்க்கிறோம். இங்கு அவன் தான் கர்த்தர் ஒருவருக்கே விரோதமாக பாவஞ்செய்வதாக சொல்கிறான்! இதை வாசிக்கும்போது , என்ன இவன் பத்சேபாளுக்கு விரோதமாக பாவம் செய்யவில்லையா? இறந்து போனதே அந்தக் குழந்தை எப்படி? கொலை செய்யப்பட்டானே… Continue reading இதழ்:1816 உம்முடைய நாமத்துக்கு கேடு விளைவித்த பிள்ளை நான்!
இதழ்:1815 குற்ற உணர்ச்சியை மறைக்க செலவு செய்யாதே!
சங்: 51:3 என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன், என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது. ஏன் கர்த்தர் தாவீதை நேசித்தார் என்ற தலைப்பை நாம் தாவீது எழுதிய சங்கீதங்கள் மூலமாக படித்துக் கொண்டிருக்கிறோம். என்றாவது குற்ற உணர்ச்சியால் அவதிப் பட்ட அனுபவம் உண்டா? ஐயோ இதை இப்படி செய்திருக்கலாமே! இந்த இடத்தில் இப்படி பேசியிருக்கலாமே! தவறு செய்துவிட்டோமே என்று நாம் எத்தனை காரியங்களைக் குறித்து கவலைப்படுகிறோம். அப்போஸ்தலனாகிய பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் எல்லோரும் பாவம்… Continue reading இதழ்:1815 குற்ற உணர்ச்சியை மறைக்க செலவு செய்யாதே!
இதழ்:1814 உன் நடத்தைக்கு சுண்ணாம்பு அடித்து மறைக்காதே!
சங்:51:2 என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும். கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்? இதைத்தான் நாம் சங்கீதங்களின் மூலம் பார்க்கிறோம். நாத்தான் தாவீதின் பாவத்தை சுட்டிக் காட்டியவுடன் தாவீது தேவனாகிய கர்த்தருடைய இரக்கத்தை நாடினான் என்று பார்த்தோம். அவரோ அவனை பாதைத் தவறிப் போன ஒரு குழந்தையாகப் பார்த்தார்! தாவீது தான் செய்த மகா பயங்கர செயலை உணர்ந்தவுடன் தன்னுடைய அரண்மனையில் அவனுக்கு ஆலோசனை சொல்ல இருந்த அநேக ஞானிகளைத்… Continue reading இதழ்:1814 உன் நடத்தைக்கு சுண்ணாம்பு அடித்து மறைக்காதே!
இதழ்:1813 உமது இரக்கத்தால் என்னை சுத்திகரியும்!
சங்:51: 1 தேவனே உமது கிருபையின்படி எனக்கு இரங்கும். உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னை சுத்திகரியும். தாவீது எழுதிய சங்கீதங்களின் மூலம் தாவீதின் வாழ்க்கையைப் பற்றி திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சங்கீதம் 51 ஐ நாம் வரி வரியாகப் படிக்கும்போது அதின் பின்னணியை நாம் மறக்கக்கூடாது. இதை எழுதிய ராஜாவாகிய தாவீது, யூதாவுக்கும், இஸ்ரவேலுக்கும் ராஜா. இந்த சங்கீதத்தில் தாவீது எழுதிய வரிகள் தேவனாகிய கர்த்தர் அவனுடைய வாழ்வில் நேரிடையாக சந்தித்ததை அவன்… Continue reading இதழ்:1813 உமது இரக்கத்தால் என்னை சுத்திகரியும்!
இதழ்:1812 மகத்துவ தேவனின் மா தயவு!
சங்கீதம் 51:1 தேவனே உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். இன்றுமுதல் நாம் சில நாட்கள் தேவனாகிய கர்த்தர் தாவீது ராஜாவை ஏன் நேசித்தார் என்று அலசிப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். தேவனாகிய கர்த்தர் ஏன் ஏன் ஏன் தாவீதை நேசித்தார்? உங்களுக்கு ஏதாவது பதில் தெரியுமானால் என்னோடு தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்களேன்! தாவீதின் வாழ்க்கையில் அவன் பெண்களை நடத்தியவிதம் கர்த்தரைப் பிரியப்படுத்தும் விதத்தில் இல்லவே… Continue reading இதழ்:1812 மகத்துவ தேவனின் மா தயவு!
இதழ்:1811 நாம் நம்பினவைகளை காணுவதே விசுவாசத்தின் பலன்!
2 சாமுவேல் 14: 17, 21 ராஜாவாகிய என் ஆண்டவனுடைய வார்த்தை எனக்கு ஆறுதலாயிருக்கும் என்று உமது அடியாளாகிய நான் எண்ணினேன். நன்மையும் தீமையும் கேட்கும்படி ராஜாவாகிய என் ஆண்டவன் தேவனுடைய தூதனைப்போல இருக்கிறார்.... அப்பொழுது ராஜா யோவாபைப் பார்த்து: இதோ இந்தக் காரியத்தைச் செய்கிறேன். நீ போய் அப்சலோம் என்னும் பிள்ளையாண்டானைத் திரும்ப அழைத்துக்கொண்டு வா என்றான். வேதத்தில் ஆபிரகாம் தேவனாகிய கர்த்தரால் , தான் இதுமுன் அறிந்திராத ஒரு தேசத்துக்கு புறப்படும்படி அழைக்கப்பட்டார். கர்த்தருடைய… Continue reading இதழ்:1811 நாம் நம்பினவைகளை காணுவதே விசுவாசத்தின் பலன்!
இதழ்:1810 சிறு குழந்தையைப் போல கர்த்தரை நம்பு!
2 சாமுவேல் 14: 15,16 இப்போதும் என் ஆண்டவனாகிய ராஜாவோடே இந்த வார்த்தையை பேச வந்த முகாந்தரம் என்னவென்றால்: ஜனங்கள் எனக்குப் பயமுண்டாகினதினால் நான் ராஜாவோடே பேசவந்தேன். ஒருவேளை ராஜா தமது அடியாளுடைய வார்த்தையின்படி செய்வார் என்று உமது அடியாளாகிய நான் நினைத்ததினாலும் வந்தேனே ஒழிய வேறில்லை. என்னையும் என் குமாரனையும் ஏகமாய்த் தேவனுடைய சுதந்திரத்திற்கு புறம்பாக்கி அழிக்க நினைக்கிற மனுஷனுடைய கைக்குத் தமது அடியாளை நீங்லாக்கிவிடும்படிக்கு ராஜா கேட்பார். தெக்கோவாவிலிருந்து வந்த பெண் புத்திசாலியானவள் என்று… Continue reading இதழ்:1810 சிறு குழந்தையைப் போல கர்த்தரை நம்பு!
இதழ்:1809 தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்!
2 சாமுவேல் 14: 12, 13 அபொழுது அந்த ஸ்திரீ ராஜாவாகிய என் ஆண்டவனோடே உமது அடியால் ஒரு வார்த்தைசொல்ல உத்தரவாக வேண்டும் என்றாள். அவன் சொல்லு என்றான். அப்பொழுது அந்த ஸ்திரீ: பின்னை ஏன் தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாய் இப்படிப்பட்ட நினைவை நீர் கொண்டிருக்கிறீர். துரத்துண்ட தம்முடையவனை ராஜா திரும்ப அழைக்காததினாலே ராஜா இப்பொழுது சொன்ன வார்த்தையினால் குற்றமுள்ளவரைப்போல இருக்கிறார். எனக்கு சின்ன வயதிலிருந்தே மிருக கண்காட்சிக்கு போவது மிகவும் பிடிக்கும். அங்கே உள்ள மிருகங்களில்… Continue reading இதழ்:1809 தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்!
