2 சாமுவேல் 14;11 பின்னும் அவள்; இரத்தப்பழி வாங்குகிறவர்கள் அழிம்பு செய்து, என் குமாரனை அதம்பண்ணப் பெருகிப் போகாதபடிக்கு, ராஜாவானவர் தம்முடைய தேவனாகிய கர்த்தரை நினைப்பாராக என்றாள். அதற்கு ராஜா: உனது குமாரனுடைய மயிரில் ஒன்றாவது தரையில் விழுவதில்லை என்று கர்த்தரின்ஜீவனைக்கொண்டு சொல்கிறேன் என்றான். தாவீதுடைய நம்பிக்கைக்குரிய சேனை வீரனும் அவன் நண்பனுமாகிய யோவாப் தாவீதுக்கும் அவனுடைய குமாரனாகிய அப்சலோமுக்கும் இடையே இருந்த இடைவெளியைப் போக்க தெக்கோவாவிலிருந்து ஒரு புத்தியுள்ள ஸ்திரீயைக் கொண்டு வந்தான். அவள் தன்னுடைய… Continue reading இதழ்:1808 இரக்கத்தை மட்டுமே தேவன் உன்னில் எதிர்பார்க்கிறார்!
Category: வேதாகம தியானம்
இதழ்:1807 என்னை மீறி உன்னை யாரும் தொட முடியாது!
2 சாமுவேல் 14: 9,10 பின்னும் அந்த தெக்கோவாவூர் திரீ ராஜாவைப் பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவனே, ராஜாவின்மேலும் அவர் சிங்காசனத்தின்மேலும் குற்றமில்லாதபடிக்கு, அந்தப்பழி என்மேலும், என் தகப்பன் வீட்டின்மேலும் சுமரக்கடவது என்றாள். அதற்கு ராஜா உனக்கு விரோதமாகப் பேசுகிறவனை என்னிடத்தில் கொண்டுவா. அப்பொழுது அவன் இனி உன்னைத் தொடாதிருப்பான் என்றான். கடந்த சில நாட்களாக நாம் தெக்கோவாவூரின் புத்தியுள்ள ஸ்திரீயைப் பற்றி படித்து வருகிறோம். அவள் எல்லாவற்றையும் பகுத்தறியத் தக்க ஞானம் கொண்டவள் என்றும், அவள்… Continue reading இதழ்:1807 என்னை மீறி உன்னை யாரும் தொட முடியாது!
இதழ்:1806 நம் தேவன் மனவுருக்கமும், இரக்கமும் உள்ளவர்!
2 சாமுவேல் 14: 5 -8 ராஜா அவளைப் பார்த்து: உனக்கு என்ன வேண்டும் என்றதற்கு அவள்: நான் விதவையானவள். என் புருஷன் சென்று போனான். உமது அடியாளுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்கள் இருவரும் வெளியிலே சண்டைபண்ணி, அவர்களை விலக்க ஒருவரும் இல்லாதபடியினால், ஒருவன் மற்றவனை அடித்துக் கொன்று போட்டான். வம்சத்தார் எல்லாரும் உம்முடைய அடியாளுக்கு விரோதமாய் எழும்பி, தன் சகோதரனைக் கொன்றுபோட்டவனை ஒப்பி, அவன் கொன்ற அவன் சகோதரனுடைய பிராணனுக்காக நாங்கள் அவனைக் கொன்றுபோடுவோம்.… Continue reading இதழ்:1806 நம் தேவன் மனவுருக்கமும், இரக்கமும் உள்ளவர்!
இதழ்:1805 என் வாய் மீட்பின் செய்தியைக் கூற ஏதுவாக்கியருளும்!
2 சாமுவேல் 14: 1- 4 ராஜாவின் இருதயம் அப்சலோமின்மேல் இன்னும் தாங்கலாயிருக்கிறதைச் செருயாவின் குமாரன் யோவாப் கண்டு, அவன் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்திரீயை அழைத்து...நீ துக்க வஸ்திரங்கள் உடுத்திக்கொண்டு.... ராஜாவினிடத்தில் போய் அவரை நோக்கி இன்ன இன்ன பிரகாரமாய் சொல்..... அப்படியே ..அந்த ஸ்திரீ ராஜாவோடே பேசப்போய் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: ராஜாவே ரட்சியும் என்றாள். இன்றைய வேதாகமப்பகுதியில் நாம் பார்க்கும் இந்தப்பெண்ணை தாவீதுடைய சேனைத்தலைவனும், நெருங்கிய நண்பனுமாகிய , யோவாப் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள… Continue reading இதழ்:1805 என் வாய் மீட்பின் செய்தியைக் கூற ஏதுவாக்கியருளும்!
இதழ்:1804 நன்மை தீமையை பகுத்தறியும் ஞானம்!
2 சாமுவேல் 14: 1- 2 ராஜாவின் இருதயம் அப்சலோமின்மேல் இன்னும் தாங்கலாயிருக்கிறதைச் செருயாவின் குமாரன் யோவாப் கண்டு, அவன் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்திரீயை அழைத்து.. இன்றைய வேதாகமப் பகுதியில் நாம் படிக்கும் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்திரீயைப் இதுவரை வேதத்தில் படித்ததாக ஞாபகமே இல்லை! உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? இந்தப் பெண்ணைப் பற்றி பிரசங்கம் கேட்டிருக்கிறோமா? நான் கேட்டதே இல்லைங்க! வேதத்தை வாசிக்கும்போது அல்லது வேதாகமக் கல்லூரியில் படிக்கும்போது இந்தப் பெண்ணைப் பற்றி ஒருவேளை படித்திருந்தாலும் இவள்… Continue reading இதழ்:1804 நன்மை தீமையை பகுத்தறியும் ஞானம்!
இதழ்:1803 பயத்திலிருந்து விடுதலை கொடுக்கும் தேவன்!
2 சாமுவேல் 17: 6-10 ஆகிலும் அப்சலோம் அற்கியனாகிய ஊசாயைக் கூப்பிட்டு அவன் வாய்மொழியையும் கேட்போம் என்றான். ஊசாய் அப்சலோமிடத்தில் வந்தபோது, அப்சலோம் அவனைப்பார்த்து: இந்தப் பிரகாரமாக அகித்தோப்பேல் சொன்னான். அவன் வார்த்தையின்படி செய்வோமா? அல்லவென்றால் நீ சொல் என்றான். அப்பொழுது ஊசாய் அப்சலோமை நோக்கி: அக்கிதோப்பேல் இந்தவிசை சொன்ன ஆலோசனை நல்லதல்ல என்றான். ... உம்முடைய தகப்பனும் அவன் மனுஷரும் பலசாலிகள் ... உம்முடைய தகப்பன் யுத்தவீரனுமாயிருக்கிறார்... உம்முடைய தகப்பன் சவுரியவான் என்றும் அவனோடிருக்கிறவர்கள் பலசாலிகள்… Continue reading இதழ்:1803 பயத்திலிருந்து விடுதலை கொடுக்கும் தேவன்!
இதழ்:1802 நாம் பெலனற்று போகும் வேளை கன்மலையை நெருங்குவோம்!
2 சாமுவேல் 17: 1-4 பின்பு அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி, நான் பன்னீராயிரம் பேரைத் தெரிந்து கொண்டு, எழுந்து இன்று இராத்திரி தாவீதைப் பின் தொடர்ந்து போகட்டும். அவன் விடாய்த்தவனும் கைதளர்ந்தவனுமாயிருக்கையில் நான் அவனிடத்தில் போய் அவனைத் திடுக்கிடப் பண்ணுவேன். அப்போது அவனோடிருக்கும் ஜனங்களெல்லாரும் ஓடிப்போவதினால் நான் ராஜா ஒருவனைமாத்திரம் வெட்டி, ஜனங்களையெல்லாம் உம்முடைய வசமாக திரும்பப்பண்ணுவேன். இப்படி செய்ய நீர் வகைதேடினால் எல்லாரும் திரும்பின பின் ஜனங்கள் சமாதானத்தோடு இருப்பார்கள் என்றான். இந்த வார்த்தை அப்சலோமின்… Continue reading இதழ்:1802 நாம் பெலனற்று போகும் வேளை கன்மலையை நெருங்குவோம்!
இதழ்:1801 தேவனை மட்டுமே பிரியப்படுத்தும் உள்ளம் நன்மையான வாழ்வைத் தரும்!
2 சாமுவேல் 15: 4-6 பின்னும் அப்சலோம்: வழக்கு வியாஜ்யமுள்ளவர்கள் எல்லோரும் என்னிடத்தில் வந்து நான் அவர்களுக்கு நியாயம் செய்யும்படிக்கு என்னைத் தேசத்திலே நியாதிபதியாக வைத்தால் நலமாயிருக்கும் என்பான். எவனாவது ஒருவன் அவனை வணங்க வரும்போது அவன் தன் கையை நீட்டி அவனைத்தழுவி முத்தஞ்செய்வான். இந்தப்பிரகாரமாக அப்சலோம் ராஜாவினிடத்தில் நியாத்திற்காக வரும் இஸ்ரவேலருக்கெல்லாம் செய்து, இஸ்ரவேல் மனிதருடைய இருதயத்தைக் கவர்ந்து கொண்டான். பரலோக தேவன் நமக்கு அருளியிருக்கும் நன்மையான வாழ்வு என்ன என்று நாம் தாவீதின் வாழ்க்கையிலிருந்து… Continue reading இதழ்:1801 தேவனை மட்டுமே பிரியப்படுத்தும் உள்ளம் நன்மையான வாழ்வைத் தரும்!
இதழ்:1800 ஒன்றாயிருத்தலினால் வரும் நன்மை!
யோவான் 17:10,11 என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்,அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன். நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள், நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும். தாவீதின் குடும்பத்தைப் பற்றி நாம் படிக்கும்போது அவனுடைய குடும்பத்தில் ஒருவருக்கொருவர் இருந்த இடைவெளிதான் இன்று என் மனதுக்கு வந்தது. தாவீதுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் இருந்த இடைவெளி, அவன் பிள்ளைகளுக்குள் ஒருவருக்கொருவர் இருந்த இடைவெளி இவற்றைப் பார்க்கும்போது… Continue reading இதழ்:1800 ஒன்றாயிருத்தலினால் வரும் நன்மை!
இதழ்:1799 இன்று என்பது மட்டுமே நம்மிடம் உள்ளது! வீணாக்காதே!
மீகா 7: 18,19 தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார். அவர் திரும்ப நம்மேல் நம்மேல் இரங்குவார். நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டு விடுவார். நான் என்றாவது கடந்த காலத்தில் பேசிய வார்த்தைகளையும், நடந்துகொண்ட விதத்தையும் மாற்றி வேறு வார்த்தைகளை பேசி, வேறு மாதிரி நடந்து கொண்டால் நலமாயிருக்கும் என்று நினைத்ததுண்டா?… Continue reading இதழ்:1799 இன்று என்பது மட்டுமே நம்மிடம் உள்ளது! வீணாக்காதே!
