1 இராஜாக்கள் 17:13,14 அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே, நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து.... கர்த்தர் தேசத்தின் மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்து போவதும் இல்லை, கலசத்தின் எண்ணெய் குறைந்து போவதுமில்லை என்று இஸ்ரவேலின் தேவனாகியக் கர்த்தர் சொல்லுகிறார் என்றான். 20 ம் நூற்றாண்டில் பிரபலமான சுவிசேஷகர் பால் ராடர் அவர்களின் சரித்திரத்தைப் பற்றிப் படித்தேன். அவர் தனுடைய சிறு வயதிலேயே அவர் தகப்பனாருடன் அமெரிக்காவின் பல மாகாணங்களுக்கு ஊழியத்துக்கு… Continue reading இதழ்:1667 விசுவாசிக்கிறவனுக்கு எல்லாமே கூடும்!
Category: வேதாகம தியானம்
இதழ்:1666 கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திரு!
1 இராஜாக்கள் 17:12 அதற்கு அவள் பானையில் ஒரு பிடி மாவும், கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையெண்ரு உம்முடைய தேவனாகியக் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். இதோ நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துபோக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றாள். இந்த புதிய மாதத்தைக் காணச் செய்த தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம். இந்த மாதம் முழுவதும் தேவன் நம்மைக் கரம் பிடித்து நடத்தும்படியாக சற்று தலை வணங்கி… Continue reading இதழ்:1666 கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திரு!
இதழ்:1665 கடினமான பாதையும் இலகுவாகும்!
ஆதி: 12:1 கர்த்தர் ஆபிராமை நோக்கி : நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டு புறப்பட்டு, நான் உனக்கு காண்பிக்கும் தேசத்துக்கு போ சாராயின் தகப்பன் தேராகு திடிரென்று தன் குடும்பத்தாரோடு தாங்கள் வாழ்ந்த ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு கானான் என்கிற தேசத்துக்கு புறப்பட்டான். வேதத்தை கூர்ந்து படித்திருப்பேர்களானால், தேராகு சாராயின் தகப்பனா? அவன் ஆபிராமுக்கு தகப்பனல்லவா? என்று கேட்பீர்கள். ஆம்! அவன் ஆபிராமின் தகப்பனும் கூட! (… Continue reading இதழ்:1665 கடினமான பாதையும் இலகுவாகும்!
இதழ்:1664 நீ தேவனுக்காக உபயோகப்படுத்தப் படும் ஒரு சிறந்த பாத்திரம்!
ஆதி 11:30 சாராய்க்கு பிள்ளையில்லை. மலடியாயிருந்தாள் என் வாழ்க்கையில் குழந்தை பாக்கியம் இல்லாத பல பெண்களின் மன வேதனையை கண்கூடாக கண்டிருக்கிறேன். நான் பார்த்து வளர்ந்த ஒரு இளம் பெண், திருமணமாகி பலமுறை கருவுற்றும் குழந்தை பெரும் பாக்கியம் இல்லாததால் தற்கொலை செய்து கொண்டதை கேள்விப்பட்டு மனதுடைந்தேன். இது உலகம் முழுவதும் நடக்கும் ஒரு சம்பவம் தான் அல்லவா? இன்று நாம் வாசிக்கிற இந்த வேதாகமப் பகுதியில், ஏபேருடைய வம்சத்தில் வந்த ஆபிராம், சாராய் என்ற பெண்ணை மணக்கிறான்… Continue reading இதழ்:1664 நீ தேவனுக்காக உபயோகப்படுத்தப் படும் ஒரு சிறந்த பாத்திரம்!
இதழ்:1663 நாம் கிறிஸ்துவுக்குள் ஒரே குடும்பத்தின் பிள்ளைகள்!
அப்போஸ்தலர்: 17:26 மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின் மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார். தேவன் நோவாவோடு செய்த உடன்படிக்கையை நிறைவேற்ற நோவாவின் மனைவி உறுதுணை யாக இருந்ததைப் பார்த்தோம்! பாவம் நிறைந்த இந்த உலகில் பரிசுத்தமாய் வாழ்ந்த சில தனிப்பட்ட மனிதர் மூலமாய் தேவன் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றினார். அவர்களை தமக்கு சொந்தமான ஜனமக்கினார். ஏனெனில் அவர்கள் தேவனை நோக்கிப் பார்த்தார்கள், தேவனோடு சஞ்சரித்தார்கள்.… Continue reading இதழ்:1663 நாம் கிறிஸ்துவுக்குள் ஒரே குடும்பத்தின் பிள்ளைகள்!
இதழ்:1662 ஒரு காவியத்தலைவியின் கதை!
ஆதி: 6:18 ஆனாலும் உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன். நீயும் உன்னோடே கூட உன் குமாரரும், உன் மனைவியும், உன் குமாரரின் மனைவிகளும், பேழைக்குள் பிரவேசியுங்கள். எந்த ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்பும் ஒரு பெண் ( தாயோ அல்லது மனைவியோ ) உறுதுணையாக நிச்சயமாக இருந்திருப்பார்கள் என்பது நமக்கு நன்கு தெரிந்த உண்மை. அவர்களுடைய பெயர் வெளியே வருவதேயில்லை! அப்படிப்பட்ட பெயர் எழுதப்படாத ஒரு காவியத்தலைவி தான் நோவாவின் மனைவி! ஒருநாள் தேவன் நோவாவை நோக்கி,… Continue reading இதழ்:1662 ஒரு காவியத்தலைவியின் கதை!
இதழ்:1661 தேவனுடைய மாசற்ற பிள்ளைகளாய் வாழ்ந்தவர்!
ஆதி : 5: 27 மெத்துசலாவுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்.. மெத்தூசலாவைப் பெற்ற பின் தன்னுடைய பிள்ளைகளை ஆவிக்குரிய வாழ்க்கையில் நடத்தும் பெரும் பொறுப்பு ஏனோக்கை ஆவிக்குரிய வாழ்க்கையில் அக்கறை காட்ட செய்தது என்று வேதம் கூறுகிறது. இன்று, மெத்தூசலாவின் பிறப்பை மற்றும் அல்ல, இறப்பையும் கவனியுங்கள். (ஆதி: 5:27 ). மெத்தூசலாவின் வயது 969 வருடம், அவன் 187 ம் வயதில் லாமேக்கைப் பெற்றான், லாமேக்கு 182 வயதில் நோவாவைப் பெற்றான், நோவா பிறக்கும்… Continue reading இதழ்:1661 தேவனுடைய மாசற்ற பிள்ளைகளாய் வாழ்ந்தவர்!
இதழ்:1660 தேவனை முகமுகமாய் தரிசித்த நாட்கள் எங்கே?
ஆதி: 5:5 ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம், அவன் மரித்தான். ஏதேன் தோட்டத்தின் நிகழ்வுகளை சற்று திரும்பிப் பார்போம். ஏவாளின் பெண்மையின் சக்தி ஆதாமை பாவத்துக்குள்ளாகியது என்பதை நாம் அறிவோம்! அவர்கள் இருவரும் தேவனுடைய பிரசன்னத்திலிருந்து வெளியேற்றப் பட்டனர்! அதன்பின்பு ஆதாம் 930 வயதுவரை வாழ்ந்தான். ஏவாளும் சுமார் 900 வருடங்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது. இந்த நீண்ட கால வாழ்க்கையில் எத்தனை முறை தன்னுடைய கீழ்ப்படியாமையால் வந்த தண்டனையை நினைத்து குமுறியிருப்பார்கள்! ஒரு… Continue reading இதழ்:1660 தேவனை முகமுகமாய் தரிசித்த நாட்கள் எங்கே?
இதழ்:1659 ஆபத்திலிருந்து நம்மை தப்புவிக்கும் ஜெபம்!
மத்தேயு: 26: 41 நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். தம்முடைய சீஷர்களோடு தனிமையில் நேரம் செலவிடுவது நம்முடைய ஆண்டவருக்கு இது முதல் தடவையல்ல! ஆனால் அந்த இரவு முற்றிலும் மாறுபட்ட ஒரு இரவு! மத்தேயு கூறுகிறார் அந்த இரவில் உணவு அருந்தி விட்டு ஸ்தோத்திரப் பாட்டைப் பாடிய பின்னர் அவர்கள் ஒலிவ மலைக்குப் புறப்பட்டுப் போனார்கள். அங்கு அவர் தம்முடைய சீஷருடனே அன்று இரவு சம்பவிக்கப்… Continue reading இதழ்:1659 ஆபத்திலிருந்து நம்மை தப்புவிக்கும் ஜெபம்!
இதழ்:1658 உலர்ந்த உள்ளத்தை மலரச் செய்யும் பாடம்!
ரூத்: 4: 16 “நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள்.” சென்னையில் வளர்ந்த எனக்கு வானவில் என்ற வார்த்தையே எனக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொண்டு வரும்! பெருமழை பெய்து கொண்டிருந்த ஒரு சமயம், மழையினால் பெரிய இழப்புகள் நேர்ந்து, இந்த மழை எப்பொழுது நிற்கும் என்று எல்லோரும் ஏங்கிக் கொண்டிருந்த சமயம், ஒருநாள் காலை அழகிய வானவில் ஒன்று வானத்தின் ஒரு மூலையிலிருந்து மறு மூலையைத் தொட்டதுபோல வந்தது. முதல்… Continue reading இதழ்:1658 உலர்ந்த உள்ளத்தை மலரச் செய்யும் பாடம்!
