1 இராஜாக்கள்; 6:38 பதினோராம் வருஷம் பூல் என்னும் எட்டாம் மாதத்திலே , அந்த ஆலயமுழுதும் சகல சட்டதிட்டத்தின்படியே ஒரு பங்கும் குறையாமல் கட்டித் தீர்ந்தது. அவன் அதைக்கட்டி முடிக்க ஏழுவருஷம் சென்றது. 7:1 சாலொமோன் தன் அரமனை முழுதையும் கட்டிமுடிக்கப் பதின்மூன்று வருஷம் சென்றது. சாலொமோனின் வாழ்வில் தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேறியதைப் பார்த்தோம். இன்று நாம் பார்க்கப் போகும் இரண்டாவது வார்த்தை முக்கியத்துவம் என்பது. இன்றைய இரண்டு வேதாகமப்பகுதிகளை ஆழமாகப் படித்தபோது, சாலொமோனுக்கு தேவனுடைய ஆலயத்தை… Continue reading இதழ்:1536 எறும்புகள் பரபரப்பாக உள்ளன ஆனால் எதற்கு?
Category: வேதாகம தியானம்
இதழ்:1535 இருளில் மின்னும் நட்சத்திரங்கள் போன்ற வாக்குத்தங்கள்!
1 இராஜாக்கள்: 6: 12 -13 நீ என் கட்டளைகளின்படி நடந்து, என் நீதி நியாயங்களை நிறைவேற்றி, என் கற்பனைகளின்படியெல்லாம்நடந்து கொள்ளும்படிக்கு அவைகளைக் கைக்கொண்டால், நீ கட்டுகிற இந்த ஆலயத்தைக்குறித்து நான் உன் தகப்பனாகிய தாவீதோடே சொன்ன என் வார்த்தையை உன்னிடத்தில் நிறைவேற்றி, இஸ்ரவேல் புத்திரர் நடுவிலே வாசம்பண்ணி, என் ஜனமாகிய இஸ்ரவேலைக் கைவிடாதிருப்பேன் என்றார். இன்றைய வேதாகமப் பகுதியையும், சாலொமோனுடைய வாழ்க்கையையும் ஆராய்ந்து படிக்கும்போது, மூன்று வார்த்தைகள் என் மனதில் வந்து கொண்டேயிருந்தன! இன்று என்… Continue reading இதழ்:1535 இருளில் மின்னும் நட்சத்திரங்கள் போன்ற வாக்குத்தங்கள்!
இதழ்:1534 தேவனுடைய திட்டத்துக்குள் அடங்கிய வாழ்வு!
1 இராஜாக்கள்:6:1 இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நானூற்று எண்பதாம் வருஷத்திலும், சாலொமோன் இஸ்ரவேலின்மேல் ராஜாவான நாலாம் வருஷம் சீப்மாதமாகிய இரண்டாம் மாதத்திலும், அவன் கர்த்தரின் ஆலயத்தைக் கட்டத்தொடங்கினான். நாம் பிறந்த போதே தேவன் நம்முடைய வாழ்வில் ஏதோ நோக்கம் கொண்டிருந்தார் என்பதை உண்மையிலேயே விசுவாசிக்கிறாயா? அப்படியானால், தேவன் தம்முடைய நோக்கத்தை முதலிலிருந்து கடைசிவரை வெளிப்படுத்தியிருக்கிறாரா? இந்த இரண்டு கேள்விகளே சாலொமோனின் வாழ்விற்குத்தான் பொருத்தமாக உள்ளது என்ற எண்ணம் இன்றைய வேதாகமப் பகுதி எனக்குக் கொடுத்தது.… Continue reading இதழ்:1534 தேவனுடைய திட்டத்துக்குள் அடங்கிய வாழ்வு!
இதழ்:1533 மரியாதையைக் கொடுத்து மரியாதையை வாங்கு!
1 இராஜாக்கள் 5:6, 7, 12 ஆதலால் லீபனோனில் எனக்காக கேதுருமரங்கள் வெட்டக் கட்டளையிடும்.சீதோனியரைப்போல மரவெட்டு வேலை அறிந்தவர்கள் எங்களுக்குள்ளே ஒருவருமில்லை என்பது உமக்குத் தெரியும் ...... நீர் சொல்வதின்படியெல்லாம் உம்முடைய வேலைக்காரரின் சம்பளத்தை உமக்குக் கொடுப்பேன் என்று சொல்லச் சொன்னான். ஈராம் சாலொமோனின் வார்த்தைகளைக் கேட்டபோது மிகவும் சந்தோஷப்பட்டு..... தாவீதுக்கு ஞானமுள்ள குமாரனைக் கொடுத்த கர்த்தர் இன்று ஸ்தோத்தரிக்கப்படுவாராக என்று சொல்லி, ..... ஈராமுக்கும் சாலொமோனுக்கும் சமாதானம் உண்டாயிருந்து, இருவரும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள். இன்றைய… Continue reading இதழ்:1533 மரியாதையைக் கொடுத்து மரியாதையை வாங்கு!
இதழ்:1532 ஒரே வாழ்வு! ஒரே நோக்கம்!
1 இராஜாக்கள் 5:2-5 அப்பொழுது சாலொமோன் ஈராமிடத்தில் ஆட்களை அனுப்பி..... ஆகையால் நான் உன் ஸ்தானத்தில் உன் சிங்காசனத்தின்மேல் வைக்கும் உன் குமாரனே என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான் என்று கர்த்தர் என் தகப்பனாகிய தாவீதினிடத்தில் சொன்னபடியே ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்று இருக்கிறேன். இஸ்ரவேலின் புதிய ராஜாவாகிய சாலொமோனை அண்டை நாடுகள் கவனிக்க ஆரம்பித்தன. தீருவின் ராஜாவாகிய ஈராம் முதலில் அவனுக்கு தன்னுடைய ஊழியர் மூல பரிசுகள் அனுப்பினான் என்று பார்த்தோம். இந்த நட்பு சாலொமோனுக்கு… Continue reading இதழ்:1532 ஒரே வாழ்வு! ஒரே நோக்கம்!
இதழ்:1531 கரையாத உப்பு எப்படி சுவையேற்ற முடியும்?
1 இராஜாக்கள்: 5:1 சாலொமோனை அவனுடைய பிதாவின் ஸ்தானத்தில் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள் என்று தீருவின் ராஜாவாகிய ஈராம் கேள்விப்பட்டு, தன் ஊழியக்காரரை அவனிடத்தில் அனுப்பினான். ஈராம் தாவீதுக்குச் சகல நாளும் சிநேகிதனாயிருந்தான். இந்த வேதாகமப் பகுதியை நான் பலமுறை வாசித்து கடந்து சென்றிருக்கிறேன் ஆனால் இன்று இதை வாசித்தபோது இதில் ஒரு நல்ல நட்பை பார்த்தேன். இஸ்ரவேலின் ராஜாவாக இருந்த தாவீதுக்கும் , தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கும் நடுவில் இருந்த நட்பு. இன்றைய நடைமுறைப்படி சொல்லப்போனால்… Continue reading இதழ்:1531 கரையாத உப்பு எப்படி சுவையேற்ற முடியும்?
இதழ்:1530 கேள்! நீ கேட்பதற்கு மேலாகவே உனக்கு அருளப்படும்!
1 இராஜாக்கள்: 4:29,30,32 தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும், புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார். சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் , எகிப்தியரின் சகல ஞானத்தையும் பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது. அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான், அவனுடைய பாட்டுக்கள் ஆயிரத்து ஐந்து. சாலொமோனுக்கு தேவன் அருளிய ஞானத்தைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம். இன்றைய வேதாகமப் பகுதி கூறுகிறது, தேவன் அவனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும் ,கொடுத்தது மட்டுமல்லாமல் மனோவிருத்தியையும் கொடுத்தார் என்று. தேவன் சாலொமோனுக்கு… Continue reading இதழ்:1530 கேள்! நீ கேட்பதற்கு மேலாகவே உனக்கு அருளப்படும்!
இதழ்:1529 என்னை கொழுந்துவிட்டு எரியப்பண்ணும்!
1 இராஜாக்கள்: 3:27 அப்பொழுது ராஜா உயிரோடிருக்கிற பிள்ளையைக்கொல்லாமல் அவளுக்குக் கொடுத்து விடுங்கள், அவளே அதின் தாய் என்றான். இந்த வேதாகமப் பகுதியை இன்று நான் வாசித்த போது, சாலொமோனின் அரங்கத்தில் கூடியிருந்த மக்களின் முகத்தில் காணப்பட்ட ஆச்சரியத்தை என்னால் காண முடிந்தது. அங்கிருந்த மக்கள் அப்படியே வாயடைத்து நிற்கும்படியாக சாலொமோன் கொடுத்த நியாயத்தீர்ப்பு இருந்தது மட்டும் அல்லாமல், இது மனிதனுடைய ஞானத்தினால் அல்ல, தேவனுடைய ஞானத்தினால் மட்டுமே ஆகும் என்று இஸ்ரவேல் முழுவதும் உள்ள மக்கள்… Continue reading இதழ்:1529 என்னை கொழுந்துவிட்டு எரியப்பண்ணும்!
இதழ்:1528 தன் பிள்ளைக்காக மன்றாடிய தாய்!
1 இராஜாக்கள்3: 24-27 ஒரு பட்டயத்தை கொண்டுவாருங்கள் என்றான், அவர்கள் ஒரு பட்டயத்தை ராஜாவினிடத்தில் கொண்டுவந்தார்கள். ராஜா உயிரோடிருக்கிற பிள்ளையை இரண்டாகப் பிளந்து, பாதியை இவளுக்கும் பாதையை அவளுக்கும் கொடுங்கள் என்றான். அப்பொழுது உயிரோடிருக்கிற பிள்ளையின் தாய், தன் பிள்ளைக்காக அவள் குடல் துடித்ததினால், ராஜாவை நோக்கி; ஐயோ என் ஆண்டவனே, உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்ல வேண்டாம், அதை அவளுக்கே கொடுத்து விடும் என்றாள். மற்றவள் அது எனக்கும் வேண்டாம், உனக்கும் வேண்டாம் என்றாள். அப்பொழுது… Continue reading இதழ்:1528 தன் பிள்ளைக்காக மன்றாடிய தாய்!
இதழ்:1527 ஒரு பட்டயத்தால் உருவப்பட்ட உண்மை!
1 இராஜாக்கள்3: 24,25 ஒரு பட்டயத்தை கொண்டுவாருங்கள் என்றான், அவர்கள் ஒரு பட்டயத்தை ராஜாவினிடத்தில் கொண்டுவந்தார்கள். ராஜா உயிரோடிருக்கிற பிள்ளையை இரண்டாகப் பிளந்து, பாதியை இவளுக்கும் பாதையை அவளுக்கும் கொடுங்கள் என்றான். உண்மை பெலவீனமாகத் தோன்றினாலும் உண்மை எப்பொழுதுமே மிகவும் பெலமுள்ளது என்று சொல்வார்கள். இரண்டு தாய்மார்! ஒரு குழந்தை! இருவரும் சொந்தம் கொண்டாடுகிறார்கள்! யாரிடம் உண்மை உள்ளது? யார் பொய் சொல்கிறார்கள்? தேவனாகிய கர்த்தர் வாலிபனாகிய சாலொமொன் கேட்ட ஞானத்தை அவனுக்கு கொடுத்தது மட்டுமல்லாமல், அவனுடைய… Continue reading இதழ்:1527 ஒரு பட்டயத்தால் உருவப்பட்ட உண்மை!
