சங்கீதம் 19: 14 என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக. இன்று நாம் 1 இராஜாக்கள் 3: 17-22 ல் நடந்த சம்பவத்தை நாம் இன்று படிக்கிறோம். வேதாகமத்தை திறந்து ஒருமுறை வாசித்து விடுங்கள். என்னுடைய கற்பனையின்படி அன்றைய எருசலேம் செய்தித் தாள் இருந்திருக்குமானால், இந்தத் தலைப்போடு தான் வந்திருக்கும்; இரண்டு வேசிகள் ஒரு பிள்ளையின் உரிமைக்காக சண்டை: மன்னர் சாலொமோனின் தீர்ப்பு இன்று. … Continue reading இதழ்:1526 ஒரு தறியில் நெய்யப்பட்ட பொய்!
Category: வேதாகம தியானம்
இதழ்:1525 ருசித்தால் மட்டுமே உணவின் சுவை தெரியும்!
1 இராஜாக்கள் 3: 16 அப்பொழுது வேசிகளான இரண்டு ஸ்திரீகள் ராஜாவினிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றார்கள். சாலொமோன் புதிதாக சிங்காசனம் ஏறியிருக்கிற ராஜா என்று பார்த்தோம். கிபியோனில் கர்த்தர் அவனுக்கு தரிசனமாகி உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது, அவன் உம்முடைய ஜனத்தை நியாயம் தீர்க்க ஞானம் வேண்டும் என்று கேட்டான். அந்த விண்ணப்பம் கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருந்தது. இன்று ஒருவேளை கர்த்தர் நமக்கு தரிசனமாகி நாம் வேண்டிய ஞானத்தை அருளினால், அவர் நமக்கு ஞானம்… Continue reading இதழ்:1525 ருசித்தால் மட்டுமே உணவின் சுவை தெரியும்!
இதழ்:1524 கர்த்தருக்கு உகந்த விண்ணப்பம் செய்கிறேனா?
1 இராஜாக்கள் 3: 5 - 10 ........சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது. இன்று நான் ஜெபித்து முடித்தவுடனே கர்த்தர் என்னைப் பார்த்து, உன் விண்ணப்பம் எனக்கு உகந்ததாயிருந்தது என்றால் நான் எப்படி துள்ளிக் குதிப்பேன் என்று சற்று யோசித்து பார்த்தேன். என் வார்த்தைகள் அவருக்கு பிரியமாயிருந்தன என்று நினைக்கும்போதே சந்தோஷம் பொங்கும். இன்றைய வேதாகமப் பகுதியின் உண்மை என்னவென்றால் சாலொமோனின் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டது. தேவனாகிய கர்த்தர் சாலொமோனுடைய விண்ணப்பத்தின் மேல்… Continue reading இதழ்:1524 கர்த்தருக்கு உகந்த விண்ணப்பம் செய்கிறேனா?
இதழ்:1523 உம்முடைய பாதைகளை எனக்கு போதியும்!
1 இராஜாக்கள்: 2:1-4 தாவீது தன்னுடைய மரண காலம் சமீபித்தபோது, அவன் தன் குமாரனாகிய சாலொமோனுக்குக் கட்டளையிட்டு சொன்னது: நான் பூலோகத்தார் யாவரும் போகிற வழியே போகிறேன், நீ திடன்கொண்டு புருஷனாயிரு....... மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி, நீ உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள, அவர் வழிகளில் நடக்கும்படிக்கு அவருடைய காவலைக் காப்பாயாக. இன்று தொடர்ந்து தாவீது தன்னுடைய மரணப் படுக்கையில் சாலொமோனுக்கு விட்டு சென்ற அறிவுரையைப் படிக்கிறோம். முதலில் நான் இதைப்… Continue reading இதழ்:1523 உம்முடைய பாதைகளை எனக்கு போதியும்!
இதழ்: 1522 எல்லையை தாண்டி விடாதே! ஆபத்து!
1 இராஜாக்கள் 2:4 ... நீ உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள, அவர் வழிகளில் நடக்கும்படிக்கு அவருடைய காவலைக் காப்பாயாக. இந்த வருடத்தின் 10 வது மாதத்தைக் காணச் செய்த தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம். இந்த மாதமும் அவர் நம்மோடிருந்து , காத்து, பராமரித்து, வழிநடத்துமாறு தலை கவிழ்ந்து ஒரு நொடி ஜெபிப்போம். இஸ்ரவேலை ஆண்ட ராஜாவும், ஆளப்போகிற ராஜாவும் பேசிக் கொண்டிருப்பதை நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு அனுபவம் மிக்க… Continue reading இதழ்: 1522 எல்லையை தாண்டி விடாதே! ஆபத்து!
இதழ்:1521 வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையின் இரகசியம்!
1 இராஜாக்கள்: 2:1-4 தாவீது தன்னுடைய மரண காலம் சமீபித்தபோது, அவன் தன் குமாரனாகிய சாலொமோனுக்குக் கட்டளையிட்டு சொன்னது: நான் பூலோகத்தார் யாவரும் போகிற வழியே போகிறேன், நீ திடன்கொண்டு புருஷனாயிரு....... மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி, நீ உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள, அவர் வழிகளில் நடக்கும்படிக்கு அவருடைய காவலைக் காப்பாயாக. தாவீது ராஜாவின் கடைசி நாட்கள் நெருங்கிய வேளையில், அவன் தன் குமாரனாகிய சாலொமோனுக்கு தன்னுடைய சிங்காசனத்தை மட்டும் அல்ல,… Continue reading இதழ்:1521 வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையின் இரகசியம்!
இதழ்:1520 உன்னுடைய விலைமதிப்பை நீ அறிவாயா?
1 இராஜாக்கள் 1:15 அப்படியெ பத்சேபாள் பள்ளியறைக்குள் ராஜாவினிடத்தில் போனாள், ராஜா மிகவும் வயது சென்றவனாயிருந்தான்... 1 இராஜாக்கள் படிக்க ஆரம்பித்திருக்கிறோம். இந்த புத்தகம் பெலவீனமாகவும், வயது முதிர்தவராகவும் இருந்த தாவீது ராஜாவுடன் ஆரம்பிக்கிறது. இந்த வேளையில் அவனுடைய குடும்பத்தில் யார் அடுத்ததாக சிங்காசனம் ஏறுவது என்ற சண்டைகள் ஆரம்பித்து விட்டன. அவர்கள் ஒவ்வொருவருக்கும் தகப்பன் தாவீதாக இருந்தாலும் அவர்களுடைய தாய் வேறு என்று நமக்குத் தெரியும். இந்த வேளையில் சாலொமோனின் தாயாகிய பத்சேபாள், தேவனுடைய தீர்க்கதரிசியாகிய… Continue reading இதழ்:1520 உன்னுடைய விலைமதிப்பை நீ அறிவாயா?
இதழ்:1519 இயேசுவே எங்கள் மாலுமியாயிரும்!
1 ராஜாக்கள் 1:1 தாவீது ராஜா வயது சென்ற விர்த்தாப்பியானபோது, வஸ்திரங்களால் அவனை மூடினாலும், அவனுக்கு அனல் உண்டாகவில்லை. தாவீது ராஜாவின் வாழ்க்கையை பல வாரங்கள் நாம் படித்து விட்டோம். இன்று அவருடைய வாழ்வின் கடைசிப் பகுதியைப் பார்க்கிறோம். இன்றைய மருத்துவ மேன்மைகள் இல்லாத அந்த கால கட்டத்தின் வழக்கப்படி ராஜாவிற்கு பணிவிடை செய்யவும், அவனுடைய சரீரத்துக்கு அனல் கொடுக்கவும் சூனேம் ஊராளாகிய அபிஷாகை கொண்டு வந்தார்கள். இது தவறான உறவுக்காக அல்ல என்று வேதம் நமக்கு… Continue reading இதழ்:1519 இயேசுவே எங்கள் மாலுமியாயிரும்!
இதழ்:1518 கர்த்தருடைய செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் உண்டு!
சங்: 51: 8 நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூறும். தேவனாகிய கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்?என்ற தலைப்பின் கடைசி பாகம் இன்று! கடந்த வாரத்தில் கர்த்தர் நம்மோடு பண்ணின உடன்படிக்கையில் மாறாதவர் என்று பார்த்தோம். அவர் வார்த்தை மாறாது! அவர் சொன்ன யாவற்றையும் நிறைவேற்றுவார். இன்று இதை தெளிவாக நம்முடைய மனதில் கொண்டு இந்த வசனத்தை நாம் மறுபடியும் படிக்கப்போகிறோம். தாவீது தான் தேவனாகிய கர்த்தருடன் கொண்டிருந்த அந்த… Continue reading இதழ்:1518 கர்த்தருடைய செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் உண்டு!
இதழ்:1517 ஐயோ! இருதய மாற்று சிகிச்சையா?
சங்: 51: 7 - 11 நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன். என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன். நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூறும். என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை… Continue reading இதழ்:1517 ஐயோ! இருதய மாற்று சிகிச்சையா?
