சங்: 51: 9 - 11 என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும். தேவனாகிய கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்? என்ற தலைப்பில் இன்று பத்தாவது நாளாகப் படிக்கிறோம். சில வருடங்களுக்கு முன்னால் நானும் என் மகனும் பிஸினஸ் விஷயமாக வெளியூர்… Continue reading இதழ்:1516 அவர் வாக்கு மாறிடாரே! நம்பி வா!
Category: வேதாகம தியானம்
இதழ்:1515 எங்கள் கிணற்று நீரின் ருசி உங்களுக்குத் தெரியுமா?
சங்: 51:8 நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூறும். தேவனாகிய கர்த்தர் தாவீதை ஏன் நேசித்தார்? என்ற தலைப்பின் 9 ம் பாகம் இன்று பார்கிறோம். உலகம் கொடுக்கக்கூடாத சந்தோஷம் ஒன்று உண்டு என்பது என்னைபோல நீஙகளும் அறிவீர்கள் என்று நம்புகிறேன். அதுமட்டுமல்ல இந்த சந்தோஷத்தை உலகம் நம்மிடமிருந்து பறிக்கவும் முடியாது.ஆனால் சில நேரங்களில் நம்முடைய வாழ்க்கையை நாமே ஆளுகை செய்து கொள்ளலாம் அங்கு கர்த்தர் தேவையில்லை என்று நாம்… Continue reading இதழ்:1515 எங்கள் கிணற்று நீரின் ருசி உங்களுக்குத் தெரியுமா?
இதழ்:1514 பரிசுத்தம் பெற உம்மண்டை நிற்கும் பாவி நான்!
சங்:51:7 நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன். என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன். தேவனாகிய கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்? என்பதின் 8 வது பாகம் இன்று. தாவீது இந்த அன்புக் கடிதத்தின் முதல் சில வசனங்களில், தான் வழிதவறிப் போன இந்த நிலையில் கர்த்தருடைய கிருபை தனக்குக் கிடைக்க வேண்டுமென்று கெஞ்சுகிறான். தேவனுடைய மிகுந்த இரக்கங்களால் தன்னை ரட்சிக்க வேண்டுமென்று வேண்டுகிறான். தன்னுடைய பாவத்திலிருந்து முற்றிலும் சுத்திகரிக்கப்பட்டு, தன்னைக் குற்றப்படுத்தும்… Continue reading இதழ்:1514 பரிசுத்தம் பெற உம்மண்டை நிற்கும் பாவி நான்!
இதழ்:1512 சொந்தம் என்ற பந்தம் கொண்ட பாவம்!
சங்: 51:5 இதோ நான் துர்க்குணத்தில் உருவானேன், என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள். தேவனாகிய கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்? இன்று ஆறாவது நாளாக இந்தத் தலைப்பை தியானிக்கிறோம். பல வருடங்களுக்கு முன்னால் ஈராக் தேசத்தில் ஏதேன் தோட்டம் இருந்தாகக் கருதப்படும் ஒரு இடம் கண்டுபிடிக்கப்பட்டது. ஒருகாலத்தில் இது பச்சையான சதுப்பு நிலமாக இருந்திருக்கக்கூடும் என்பதற்கு அடையாளமாக இந்த இடம் மிகவும் நீர் வளமோடு ஈரமாக இருந்தது. உலகத்தின் இந்த பகுதியில், காய்ந்த பாலைவனங்கள் அதிகமாகக் காணப்படும்… Continue reading இதழ்:1512 சொந்தம் என்ற பந்தம் கொண்ட பாவம்!
இதழ்:1511 தேவனோடு கொண்ட உறவு கண்ணாடி போல் நொறுங்கிய தருணம்!
சங்: 51:4 தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன். . தாவீதை கர்த்தர் ஏன் நேசித்தார்? ஐந்தாவது நாளாக இந்தத் தலைப்பைத் தொடருகிறோம். நாம் வாசிக்கிற இந்த வேதாகமப் பகுதியில் தாவீது தன்னுடைய பாவத்தை அறிக்கையிடுவதைப் பார்க்கிறோம். இங்கு அவன் தான் கர்த்தர் ஒருவருக்கே விரோதமாக பாவஞ்செய்வதாக சொல்கிறான்! இதை வாசிக்கும்போது , என்ன இவன் பத்சேபாளுக்கு விரோதமாக பாவம் செய்யவில்லையா? இறந்து போனதே அந்தக் குழந்தை எப்படி? கொலை செய்யப்பட்டானே… Continue reading இதழ்:1511 தேவனோடு கொண்ட உறவு கண்ணாடி போல் நொறுங்கிய தருணம்!
இதழ்:1510 நமது குற்றப் பழியை அவர் மேல் அல்லவா போடுகிறோம்!
சங்: 51:3 என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன், என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது. ஏன் கர்த்தர் தாவீதை நேசித்தார் என்று படித்துக்கொண்டிருக்கிறோம். இன்று நான்காவது நாள். ஒருவேளை நீங்கள் புதிதாக இந்த ராஜாவின் மலர்த் தோட்டத்துக்கு வந்திருப்பீர்களானால் தயவுசெய்து கடந்த நாட்களுக்குரிய தியானத்தையும் படியுங்கள்! என்றாவது குற்ற உணர்ச்சியால் அவதிப் பட்ட அனுபவம் உண்டா? ஐயோ இதை நான் ஏன் செய்தேன் ? என்று நாம் எத்தனை காரியங்களைக் குறித்து கவலைப்படுகிறோம். அப்போஸ்தலனாகிய பவுல்… Continue reading இதழ்:1510 நமது குற்றப் பழியை அவர் மேல் அல்லவா போடுகிறோம்!
இதழ்: 1508 மனந்திருந்தி கிருபை பெற்ற ஒரு குமாரன்!
சங்:51: 1 தேவனே உமது கிருபையின்படி எனக்கு இரங்கும். உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னை சுத்திகரியும். தேவனாகிய கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்? இந்தத் தலைப்பை தாவீது எழுதிய சங்கீதங்களின் மூலம், சில வாரங்கள் படிக்கப்போகிறோம் என்று சொல்லியிருந்தேன். இன்று இரண்டாவது நாள்! சங்கீதம் 51 ஐ நாம் வரி வரியாகப் படிக்கும்போது அதின் பின்னணியை நாம் மறக்கக்கூடாது. இதை எழுதிய ராஜாவாகிய தாவீது, யூதாவுக்கும், இஸ்ரவேலுக்கும் ராஜா. இந்த சங்கீதத்தில் தாவீது… Continue reading இதழ்: 1508 மனந்திருந்தி கிருபை பெற்ற ஒரு குமாரன்!
இதழ் 1507 என்னையும் நேசிக்கும் என் தேவன்!
சங்கீதம் 51:1 தேவனே உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். இன்றுமுதல் நாம் சில வாரங்கள் தேவனாகிய கர்த்தர் தாவீது ராஜாவை ஏன் நேசித்தார் என்று அலசிப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். நாம் இதை செய்யாவிட்டால் நாம் தாவீதின் வாழ்க்கையைப் பற்றி படித்து முடித்ததற்கு அர்த்தமே இல்லாமல் போகும்! தேவனாகிய கர்த்தர் ஏன் ஏன் ஏன் தாவீதை நேசித்தார்? உங்களுக்கு ஏதாவது பதில் தெரியுமானால் என்னோடு தயவு… Continue reading இதழ் 1507 என்னையும் நேசிக்கும் என் தேவன்!
இதழ்: 1506 விசுவாசம் என்பது நாம் காணக்கூடாதவைகளை நம்புதல்!
2 சாமுவேல் 14: 17, 21 ராஜாவாகிய என் ஆண்டவனுடைய வார்த்தை எனக்கு ஆறுதலாயிருக்கும் என்று உமது அடியாளாகிய நான் எண்ணினேன். நன்மையும் தீமையும் கேட்கும்படி ராஜாவாகிய என் ஆண்டவன் தேவனுடைய தூதனைப்போல இருக்கிறார்.... அப்பொழுது ராஜா யோவாபைப் பார்த்து: இதோ இந்தக் காரியத்தைச் செய்கிறேன். நீ போய் அப்சலோம் என்னும் பிள்ளையாண்டானைத் திரும்ப அழைத்துக்கொண்டு வா என்றான். வேதத்தில் ஆபிரகாம் தேவனாகிய கர்த்தரால் , தான் இதுமுன் அறிந்திராத ஒரு தேசத்துக்கு புறப்படும்படி அழைக்கப்பட்டார். கர்த்தருடைய… Continue reading இதழ்: 1506 விசுவாசம் என்பது நாம் காணக்கூடாதவைகளை நம்புதல்!
இதழ்: 1505 உன்னை அரவணைக்கக் காத்திருக்கும் கரம்!
2 சாமுவேல் 14: 15,16 இப்போதும் என் ஆண்டவனாகிய ராஜாவோடே இந்த வார்த்தையை பேச வந்த முகாந்தரம் என்னவென்றால்: ஜனங்கள் எனக்குப் பயமுண்டாகினதினால் நான் ராஜாவோடே பேசவந்தேன். ஒருவேளை ராஜா தமது அடியாளுடைய வார்த்தையின்படி செய்வார் என்று உமது அடியாளாகிய நான் நினைத்ததினாலும் வந்தேனே ஒழிய வேறில்லை. என்னையும் என் குமாரனையும் ஏகமாய்த் தேவனுடைய சுதந்திரத்திற்கு புறம்பாக்கி அழிக்க நினைக்கிற மனுஷனுடைய கைக்குத் தமது அடியாளை நீங்லாக்கிவிடும்படிக்கு ராஜா கேட்பார். தெக்கோவாவிலிருந்து வந்த பெண் புத்திசாலியானவள் என்று… Continue reading இதழ்: 1505 உன்னை அரவணைக்கக் காத்திருக்கும் கரம்!
