2 சாமுவேல் 13:1,2 இதற்குப்பின்பு தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள ஒரு சகோதரி இருந்தாள். அவள்மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகங் கொண்டான். தன் சகோதரியாகிய தாமாரின் நிமித்தம் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான். தாவீது இஸ்ரவேலுக்கும், யூதாவுக்கும் ராஜா. ஒரு பாடகன், இசைக்கருவி வாசிக்கும் கலைஞன், ஒரு மகா பெரிய யுத்த வீரன். மற்றும் காதலில் மன்னன் கூட! அவன் மனது விரும்பும் யாரையும் அடையத் தவற மாட்டான் - அரண்மனை நிறைந்திருந்த அவனுடைய… Continue reading இதழ் 765 ஷ் கவனம்! பிள்ளைகள் பார்க்கிறார்கள்!
Category: Bible Study
இதழ் 764 ஒரு மா பெரும் அதிசயம்!
யோவான் 3:16 தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் அன்புகூர்ந்தார். தாவீதையும் பத்சேபாளையும் குறித்து அநேக வாரங்கள் படித்து விட்டோம். தாவீதின் வாழ்க்ககையைத் தொடருமுன் ஒரு சிறிய இடைவேளை எடுக்கலாம் என்று நினைத்தேன். இந்த வருடத்தின் கடைசி மூன்று மாதங்களுக்குள் வந்திருக்கிறோம்.கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் நாட்கள் அதிக தூரம் இல்லை. தேவன் நம்மேல் கூர்ந்த மாபெரும் அன்பைக் கொண்டாடும் நாட்கள் அவை. நாம்… Continue reading இதழ் 764 ஒரு மா பெரும் அதிசயம்!
இதழ்: 763 வேறொருவரும் அறியாத உன் பெயர்!
2 சாமுவேல் 12: 24 - 25 அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். அவனுக்கு சாலொமோன் என்று பேரிட்டாள். அவனிடத்தில் கர்த்தர் அன்பாயிருந்தார். அவர் தீர்க்கதரிசியாகிய நாத்தானை அனுப்ப, அவன் கர்த்தரின் நிமித்தம் அவனுக்கு யெதிதியா என்று பேரிட்டான். எத்தனை முறை நாம் காலையில் ஒரு வசனத்தைப் படிக்கும்போது, இன்று இது எனக்காகவே எழுதப்பட்டது என்று நினைக்கிறோம்! நாம் இவ்வளவு நாட்கள் நாம் படித்த தாவீதின் வாழ்க்கை நம்மில் பலரோடு பேசியிருக்கும் என்று நம்புகிறேன். தாவீது தன்னுடைய… Continue reading இதழ்: 763 வேறொருவரும் அறியாத உன் பெயர்!
இதழ்: 762 பெண்ணுக்குரிய மரியாதை!
2 சாமுவேல் 12:24 பின்பு தாவீது தன் மனைவியாகிய பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி..... நான் சில நாட்களில் இந்த தியானத்தை எழுத அதிகமாய் ஆசைப்படுவதுண்டு. அப்படிப்பட்ட நாட்களில் ஒன்றுதான் இது. தாவீதின் வாழ்க்கையில் பாவத்தினால் ஏற்பட்ட புயல் ஓய்ந்து, ஒரு திருப்புமுனை ஏற்பட்ட நேரம் இது. இந்த வேதாகம தியானத்தை படிக்கும் ஒவ்வொரு ஆணுக்கும், பெண்களின் இருதயத்தில் ஏற்படும் ஒரு பெரிய ஏக்கத்தை வெளிப்படுத்தும் வேதப் பகுதி இது! தாவீதின் வாழ்க்கையை நாம் இதுவரை பார்த்ததின் மிகச்… Continue reading இதழ்: 762 பெண்ணுக்குரிய மரியாதை!
இதழ்: 761 கண்ணீர் மூலம் காணும் வானவில்!
2 சாமுவேல் 12: 14 உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய்ச் சாகும். நாம் என்றைக்காவது கடவுளிடம் நம்முடைய வேதனை, கண்ணீர், மனக்குளைச்சல் இவற்றைப்பற்றி நேரிடையாக பேச முடியும் என்று நினைக்கிறீர்களா? முடியாது என்று நினைத்தால் எரேமியா தீர்க்கதரிசியின் வார்த்தைகளைப் பாருங்கள்! கர்த்தாவே உம்மோடே நான் வழக்காடப்போனால் தேவரீர் நீதியுள்ளவராமே, ஆகிலும் உம்முடைய நியாங்களைக் குறித்து உம்மோடே நான் பேசும்படி வேண்டுகிறேன். ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகஞ்செய்துவருகிற அனைவரும் சுகித்திருக்கிறதென்ன? (எரே12:1) இந்த மனிதனின் துணிச்சல் எனக்கு மிகவும்… Continue reading இதழ்: 761 கண்ணீர் மூலம் காணும் வானவில்!
இதழ்: 760 ருசித்து பாருங்கள்!
2 சாமுவேல் 12:23 ....கர்த்தர் எனக்கு இரங்குவாரோ, எப்படியோ, என்று உபவாசித்து அழுதேன். இந்த 2 சாமுவேல் 12 ம் அதிகாரத்தில் நம்முடைய பரமபிதா ஏதோ நமக்கு சத்து நிறைந்த உணவு கொடுப்பது போல புதைந்திருக்கிறது இந்த அருமையான வசனம். தாவீது தன்னுடைய ஊழியரைப்பார்த்து தன்னுடைய குழந்தை உயிரோடு இருந்தபோது உபவாசித்து அழுததைப்பற்றிக் கூறும்போது, ஒருவேளை கர்த்தர் அந்தக் குழந்தை மேல் இரக்கம் காட்டுவாரோ என்று நினைத்ததாகக் கூறுகிறான். இங்கு தாவீது கர்த்தருடைய இரக்க குணத்தின்மேல் சந்தேகப்பட்டு… Continue reading இதழ்: 760 ருசித்து பாருங்கள்!
இதழ்: 759 துக்கமாக இருக்க வேண்டாம்!
2 சாமுவேல் 12: 21- 23 .. நீர் செய்கிற இந்தக் காரியம் என்ன? பிள்ளை உயிரோடிருக்கையில் உபவாசித்து அழுதீர், பிள்ளை மரித்தபின்பு எழுந்திருந்து அசனம்பண்ணுகிறீரே என்றார்கள். அதற்கு அவன், பிள்ளை இன்னும் உயிரோடிருக்கையில், பிள்ளை பிழைக்கும்படிக்குக் கர்த்தர் எனக்கு இரங்குவாரோ, எப்படியோ யாருக்குத் தெரியும் என்று உபவாசித்து அழுதேன். அது மரித்திருக்கிற இப்போது நான் உபவாசிக்க வேண்டியது என்ன? இனி நான் அதைத் திரும்பிவரப்பண்ணக் கூடுமோ? நான் அதினிடத்துக்குப் போவேனே அல்லாமல் அது என்னிடத்துக்குத் திரும்பி… Continue reading இதழ்: 759 துக்கமாக இருக்க வேண்டாம்!
இதழ்: 758 கேட்கப்படாத ஜெபம் உண்டா?
2 சாமுவேல் 12: 16,18 அப்பொழுது தாவீது அந்தப் பிள்ளைக்காகத் தேவனிடத்தில் பிரார்த்தனைப்பண்ணி, உபவாசித்து, உள்ளே போய் இராமுழுதும் தரையிலே கிடந்தான். ஏழாம்நாளில் பிள்ளை செத்துப்போயிற்று. கேட்கப்படாத ஜெபம் உங்கள் வாழ்க்கையில் உண்டா? எனக்கு உண்டு! 1977 ல் என்னுடைய அம்மா நோய்வாய்ப்பட்டு படுத்திருக்கும்போது நானும் தாவீதைப்போலத்தான் அழுது, உபவாசம் பண்ணி, தரையில் விழுந்து கிடந்து ஜெபித்தேன். அப்பொழுது அம்மாவிற்க்கு 42வயதுதான். கர்த்தர் என்னுடைய ஜெபத்தை நிச்சயம் கேட்பார் என்று வாலிப பிராயத்தில் இருந்த நான் விசுவாசத்தோடு… Continue reading இதழ்: 758 கேட்கப்படாத ஜெபம் உண்டா?
இதழ்: 757 பத்சேபாள் கடந்த மலைப்பாதை!
2 சாமுவேல் 12:14, 15 ஆனாலும் இந்தக் காரியத்தினாலே .... உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய்ச் சாகும் என்று சொல்லி நாத்தான் தன் வீட்டுக்குப் போய் விட்டான்.அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார். நான் கடலோரப் பட்டணத்தில் வாழ்ந்தாலும் மலைகளை ரசிப்பது எனக்கு மிகவும் பிரியம். அடுக்கடுக்கான மலைத்தொடரும், பள்ளத்தாக்க்குகளும் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். சமீபத்தில் ஸ்காட்லாண்டு தேசத்தின் உயர்ந்த மலைகளை ஹெலிகாப்டரிலிருந்து எடுத்த வீடியோ ஒன்றைப் பார்த்தேன். சொல்ல வார்த்தைகளே… Continue reading இதழ்: 757 பத்சேபாள் கடந்த மலைப்பாதை!
இதழ்: 756 தூஷணம் வேண்டாம்! நறுமணம் வீசு!
2 சாமுவேல் 12:14 ஆனாலும் இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினாலே ..... நம்மை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் வேத வார்த்தைகளில் ஒன்றுதான் இன்றைய வேதாகமப் பகுதி நினைக்கிறேன். தேவனாகிய கர்த்தர் தாவீதும் பத்சேபாளும் செய்த பாவத்தின் எதிர்விளைவைப் பற்றி பேசியது நம் ஒவ்வொருவருக்கும் பொருந்தும். தாவீது பத்சேபாளுடன் செய்த பாவத்தை அவனுக்கு உணர்த்திய நாத்தான், அந்தக் காரியம் கர்த்தருடைய சத்துருக்கள் அவரை தூஷிக்க காரணமாகி விட்டதை உணர்த்துகிறான். தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட இஸ்ரவேலின்… Continue reading இதழ்: 756 தூஷணம் வேண்டாம்! நறுமணம் வீசு!
