யாத்தி: 22:21 “அந்நியனை சிறுமைப் படுத்தாமலும், ஒடுக்காமலும் இருப்பீர்களாக! நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்தீர்களே.” நாம் சில நாட்களாக, கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு கொடுத்த கட்டளைகளைப் பற்றி தியானித்துக் கொண்டிருக்கிறோம். இதை எழுத ஆரம்பிக்கும் போது பல அனுபவங்கள் மனக்கண் முன் வருகின்றன! பல மாகாணங்களுக்கு வேலையின் காரணமாக சென்றிருக்கிறோம். எத்தனை பேர் எங்களை அன்புடன் உபசரித்தனர்! எல்லாவற்றுக்கும் மேலான அனுபவம் ஒரு அந்நிய தேசத்து குடும்பம் முன்பின் அறியாத எங்களுக்கு தங்க இடம் கொடுத்து… Continue reading மலர் 6 இதழ் 365 நாமும் அந்நியராயிருந்தோம்!
Category: Bible Study
மலர் 6 இதழ் 364 ஆசை வார்த்தைகளால் நயங்காட்டாதே!
யாத்தி:22:16 நியமிக்கப் படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம் போக்கி அவளோடே சயனித்தால், அவன் அவளுக்காக பரிசம் கொடுத்து அவளை விவாகம் பண்ணக் கடவன். யாத்திராகமத்தில் உள்ள தேவனுடைய கட்டளைகளை சில நாட்கள் தியானிக்கலாம் என்று நினைத்தோம். இன்றைய வேதாகம பகுதியில் “மோசம் போகுதல்” என்ற வார்த்தையைப் பார்க்கிறோம். அப்படியானால் என்ன? சில நேரங்களில் நாம் எதையாவது செய்யக்கூடாது என்று உறுதியாய் வாழும்போது சோதனைகள் குறுக்கிட்டு நம்மை நயங்காட்டி மோசம் போக்குகின்றன அல்லவா? இன்றைய வேதாகம… Continue reading மலர் 6 இதழ் 364 ஆசை வார்த்தைகளால் நயங்காட்டாதே!
மலர் 6 இதழ் 363 மலைப் பாதையில் போடப்பட்ட இரும்புத்தடை போல!
யாத்தி: 20:12 …உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக. தேவன் இஸ்ரவேல் மக்கள் மூலமாய் நமக்கு அளித்த ஒரு சில பிரமாணங்களை படித்தபின்னர் நாம் யாத்திராகமத்தை விட்டு கடந்து செல்லலாம் என்று நாம் பார்த்தோம். இன்று நாம் தியானிக்கிற முதல் பிரமாணம் யாத்தி 20: 12 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்பது. நான் அடிக்கடி வால்பாறை என்ற மலையின் மேல் அமைந்துள்ள நகருக்கு பிரயாணம்… Continue reading மலர் 6 இதழ் 363 மலைப் பாதையில் போடப்பட்ட இரும்புத்தடை போல!
மலர் 6 இதழ் 362 கோணலான வாழ்க்கை செவ்வையாகும்!
யாத்தி: 21: 1 மேலும் நீ (மோசே) அவர்களுக்கு அறிவிக்கவேண்டிய பிரமாணங்களாவன; இன்று காலையில் என் வீட்டு வாசலில் பூத்து குலுங்குகிற African Tulips என்ற செந்நிற மலர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மரத்தின் நுனி கிளைகளில்,கொத்து கொத்தாக, அடுக்கடுக்காக பூத்து, இந்த இடத்துக்கே ஒரு தனி அழகைக் கொடுக்கிறது. இந்த மலர்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது கர்த்தரின் படைப்பில் இந்த மலர்கள் தான் எத்தனை விதம் என்று ஆச்சரியப் பட்டேன். ஒவ்வொரு மலரிலும் ஒரு தனி… Continue reading மலர் 6 இதழ் 362 கோணலான வாழ்க்கை செவ்வையாகும்!
மலர் 6 இதழ் 361 சமுத்திரத்தை பிளந்த கீழ்க்காற்று!
யாத்தி: 14: 13 “...... நீங்கள் நின்று கொண்டு இன்றைக்கு கர்த்தர் உங்களுக்கு செய்யும் இரட்சிப்பை பாருங்கள்......” நாங்கள் கிராமங்களில் உள்ள சிறு குழந்தைகளை ஒன்று சேர்க்கும்போது அவர்களை அமைதிப்படுத்துவது ஒரு கடினமான காரியமாய் இருக்கும். கட்டுக்கு அடங்காமல் பிள்ளைகள் கத்தும்போது சிலநேரம் உரத்தகுரலில் ‘இப்பொழுது அமைதியாய் இருக்கிறீர்களா இல்லையா’ என்று சத்தமிட்டால் தான் குழந்தைகள் அடங்குவார்கள். நான் யாத்தி: 14: 13 வாசித்தபோது இப்படித்தான் யோசித்தேன். இஸ்ரவேல் மக்களின் அழுகை, கூக்குரல், முறுமுறுப்பு இவற்றை கேட்ட… Continue reading மலர் 6 இதழ் 361 சமுத்திரத்தை பிளந்த கீழ்க்காற்று!
மலர் 6 இதழ் 360 கடக்க முடியாத கடலின் கரையிலே!
யாத்தி:14: 13 “அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி பயப்படாதிருங்கள்...” இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்த தேவனாகிய கர்த்தர் அவர்களை பகலிலே மேக ஸ்தம்பத்திலும், இரவிலே அக்கினி ஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்று வழிநடத்தினார். இப்பொழுது வேதத்தில் நாம் படிக்கிற விதமாக, சில காரியங்களை உங்கள் மனக்கண்கள் முன் படம் போல வைக்கிறேன்! எகிப்திலே மகா அற்புதத்தை கண்களால் கண்ட அவர்கள் தேவனாகிய கர்த்தர் மேல் தங்கள் முழு நம்பிக்கையையும் வைத்திருப்பார்கள் என்று நாம் நினைக்கும் வேளையில்,… Continue reading மலர் 6 இதழ் 360 கடக்க முடியாத கடலின் கரையிலே!
மலர் 6 இதழ் 359 திக்கு தெரியாத வனாந்திரத்தில்!
யாத்தி:14: 1,4 கர்த்தர் மோசேயை நோக்கி: ஆகையால் பார்வோன் அவர்களைப் பின் தொடரும்படிக்கு நான் அவன் இருதயத்தை கடினப்படுத்தி, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும், அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன் என்றார்....” கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை கானானை நோக்கி நடக்க விடாமல், அதற்கு எதிர் திசையில் வழிநடத்தி சமுத்திரத்துக்கும், வனாந்திரத்துக்கும் இடையே பாளையமிரங்க கட்டளையிட்டார் என்று பார்த்தோம். பார்வோனின் அரண்மனையில் பரபரப்பு! கோஷேன் நாட்டிலிருந்து புறப்பட்ட இஸ்ரவேலரை அவர்கள் வணங்கும் யேகோவா முட்டாள்… Continue reading மலர் 6 இதழ் 359 திக்கு தெரியாத வனாந்திரத்தில்!
மலர் 6 இதழ் 358 அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும் உபத்திரவம்!
யாத்தி:14: 1-3 கர்த்தர் மோசேயை நோக்கி: நீங்கள் திரும்பி மித்தோலுக்கும், சமுத்திரத்துக்கும் நடுவே...... சமுத்திரக்கரையிலே பாளயமிறங்குவீர்களாக. அப்பொழுது பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைக் குறித்து:அவர்கள் தேசத்திலே திகைத்து திரிகிறார்கள், வனாந்திரம் அவர்களை அடைத்துப் போட்டது என்று சொல்லுவான்’. சில நாட்களுக்கு முன்னர் என்னுடைய எம்பிராய்டரி நூல்கள் வைத்திருக்கும் டப்பா என் இரண்டரை வயது பேரன் Zac கையில் சிக்கிக் கொண்டது.அவன் அழகாக red .. yellow .. pink..purple என்று சொல்லிக்கொண்டு அத்தனையையும் பிரித்துப் போட்டு விட்டான்.… Continue reading மலர் 6 இதழ் 358 அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும் உபத்திரவம்!
மலர் 6 இதழ் 357 தம்பி மனைவி ஆகாதவளா?
எண்ணா:12: 1, 2 “எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால் மிரியாமும் ஆரோனும்,அவன் விவாகம் பண்ணியிருந்த எத்தியோப்பிய தேசத்து ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி: கர்த்தர் மோசேயைக்கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக் கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார். மோசேயின் மனைவியாகிய சிப்போராளின் மூலம் நம் குடும்பத்தில் கடைபிடிக்க வேண்டிய சில நல்ல குணநலன்களைப் பற்றி பார்த்துக் கொண்டு வருகிறோம். மோசே தன் மாமனாரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, அவருடைய ஆலோசனையைக் கேட்டு செயல்… Continue reading மலர் 6 இதழ் 357 தம்பி மனைவி ஆகாதவளா?
மலர் 6 இதழ் 356 பெரியவர்களின் ஆலோசனையை உதறாதே!
யாத்தி:18:19 இப்பொழுது என் சொல்லைக்கேளும், உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன், தேவனும் உம்மோடு கூட இருப்பார்.........” 18:24 மோசே தன் மாமன் சொல்கேட்டு அவன் சொன்னபடியெல்லாம் செய்தான். மோசேயின் குடும்பம் ஒன்று சேர்ந்த இடத்தில் சந்தோஷம் இருந்தது என்று பார்த்தோம். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, குடும்ப நலனுக்காக முடிவு எடுத்து, ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து வாழ்ந்த குடும்பம் என்று அவர்களைப் பற்றி பார்த்தோம். யாத்தி:18: 14 – 25 வசனங்களைப் படிக்கும் போது இன்னுமொரு சம்பவத்தைப் பற்றி… Continue reading மலர் 6 இதழ் 356 பெரியவர்களின் ஆலோசனையை உதறாதே!
