யாத்தி: 18: 5 “மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயின் குமாரரோடும், அவன் மனைவியோடுங்கூட, அவன் பாளயமிறங்கியிருந்த தேவ பர்வதத்தினிடத்தில் வனாந்திரத்துக்கு வந்து….” நாம் மோசேயுடைய வாழ்க்கையைப் பற்றி படிக்கும் போது பெண்கள் அவன் வாழ்க்கையில் முக்கிய இடம் வகுத்தனர் என்று அறிந்தோம். அவன் தாய் யோகெபெத், சகோதரி மிரியம், பார்வோன் குமாரத்தி, அவன் மனைவி சிப்போராள் என்ற பல பெண்கள் அவன் வாழ்க்கையை பாதுகாத்து, வளர்த்து, நேசித்து வந்தனர் என்று பார்க்கிறோம். மோசேயின் மனைவியாகிய… Continue reading மலர் 6 இதழ் 355 ஒருவரையொருவர் புரிந்து கொண்ட குடும்பம்!
Category: Bible Study
HE IS RISEN INDEED!
And the angel answered and said unto the woman, ‘Fear not ye for I know that ye seek Jesus, which was crucified. He is not here, for HE IS RISEN’. (Matt 28:6) Ten years ago my husband and I took a trip all through the Holy Land. We had a longing to walk where Jesus… Continue reading HE IS RISEN INDEED!
மலர் 6 இதழ் 354 உயிரைக் காத்த கீழ்ப்படிதல்!
யாத்தி:4: 20, 24, 25 அப்பொழுது மோசே தன் மனைவியையும், தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக் கொண்டு எகிப்து தேசத்துக்கு திரும்பினான்.... வழியில் தாங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு வெளிப்பட்டு அவனைக் கொல்லப் பார்த்தார். அப்பொழுது சிப்போராள் ஒரு கருக்கான கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள். சிப்போராள் மோசேக்கு மீதியான் வனாந்தரத்தில் கிடைத்த பரிசு என்று பார்த்தோம்.… Continue reading மலர் 6 இதழ் 354 உயிரைக் காத்த கீழ்ப்படிதல்!
மலர் 6 இதழ் 353 கனவுகள் நொறுங்கிப் போன குடும்ப வாழ்க்கையா?
யாத்தி: 2: 21, 22 மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்க சம்மதித்தான்; அவன் சிப்போரள் என்னும் தன் குமாரத்தியை மோசேக்கு கொடுத்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்றாள்; நான் அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி அவனுக்கு கேர்சொம் என்று பேரிட்டான். மோசே! 40 வருடங்கள் பார்வோனின் அரண்மனையில் வாழ்ந்தான்! பார்வோன் குமாரத்தியின் செல்லக் குமாரனாய், பார்வோன் ராஜாவின் பேரனாய் எல்லாவித செல்வங்களையும் அனுபவித்து வளர்ந்தான். எகிப்து ராஜ்யத்தை ஆளவேண்டிய ராஜகுமாரன், எபிரேயரைக் கொடுமைப் படுத்திய ஒரு… Continue reading மலர் 6 இதழ் 353 கனவுகள் நொறுங்கிப் போன குடும்ப வாழ்க்கையா?
மலர் 6 இதழ் 352 முறுமுறுப்பால் தண்டிக்கப்பட்ட தீர்க்கதரிசி!
strong>எண்ணா:12: 13, 15 அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி; தேவனே அவளை குணமாக்கும் என்று கெஞ்சினான். அப்படியே மிரியாம் ஏழுநாள் பாளயத்துக்கு புறம்பே விலகப்பட்டிருந்தாள். மிரியாம் சேர்த்துக்கொள்ளப்படுமட்டும் ஜனங்கள் பிரயாணம் பண்ணாதிருந்தார்கள். தேவனுடைய சேவைக்காக தங்களை அர்ப்பணித்த அநேக மிஷனரிகளைப் பற்றி படிக்கும்போது நாம் இவர்களை சந்திக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்று எண்ணுவதுண்டு! அப்படிப்பட்டவர்களின் பட்டியலில் இடம் பெறுபவர் டாக்டர் பால் பிராண்ட் என்ற மருத்துவரும் அவர் மனைவி மார்கரெட் அம்மையாரும். அவர் நம்முடைய தமிழ்நாட்டில் ஒரு… Continue reading மலர் 6 இதழ் 352 முறுமுறுப்பால் தண்டிக்கப்பட்ட தீர்க்கதரிசி!
மலர் 6 இதழ் 351 மலருக்காக துதிக்கும் வாய் முள்ளுக்காக முறுமுறுப்பதென்ன?
எண்ணா:12: 1, 2 “எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால் மிரியாமும் ஆரோனும்,அவன் விவாகம் பண்ணியிருந்த எத்தியோப்பிய தேசத்து ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி: கர்த்தர் மோசேயைக்கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக் கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார். சில நேரங்களில் நம்மை சுற்றி நடக்கும் காரியங்களைப் பார்க்கும் போது 'என்றென்றும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்; என்ற வாக்கியம் கதைகளுக்கு மாத்திரம் அல்ல நம் வாழ்க்கைக்கும் சொந்தமாயிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று… Continue reading மலர் 6 இதழ் 351 மலருக்காக துதிக்கும் வாய் முள்ளுக்காக முறுமுறுப்பதென்ன?
மலர் 6 இதழ் 350 துதி பாடல் பாடிய முதல் தீர்க்கதரிசி!
யாத்தி:15: 20, 21 “ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும், தன் கையில் தம்புருவை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புரோடும், நடனத்தோடும் அவளுக்கு பின்னே புறப்பட்டுப்போனார்கள். மிரியாம் அவர்களுக்கு பிரதிவசனமாக; கர்த்தரைப் பாடுங்கள்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையும் குதிரை வீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள்.” சில நாட்களுக்கு முன்பு வால்பாறையில் உள்ள எங்கள் வீட்டில் தங்கியிருந்தோம். காலையில் எப்பொழுதும் எழும்புகிற நேரத்தைவிட சிறிது அதிக நேரம் படுத்திருக்க என் சரீரம் ஆசைப்பட்டது. ஆனால்… Continue reading மலர் 6 இதழ் 350 துதி பாடல் பாடிய முதல் தீர்க்கதரிசி!
மலர் 6 இதழ் 349 செய்யும் வேலையில் வெற்றி வேண்டுமா?
மிரியாம் பார்வோன் குமாரத்தியிடம் ஞானமாய் பேசி குழந்தையின் தாயே குழந்தையை வளர்க்கும் திட்டத்தைக் கொடுத்தாள் என்று பார்த்தோம். நாணலினால் செய்த பெட்டியில் அவள் தம்பி மோசே நைல் நதிக்கரையில் வைக்கப்பட்டபோது, யார் அந்தப் பக்கம் வருகிறார்களோ, அந்தப் பெட்டி யார் கண்ணில் படப்போகிறதோ என்று ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தப் பெட்டி பார்வோனின் படை வீரர் கண்ணில் படுமானால் தன் தம்பி மறுநிமிடம் நைல் நதியில் பிணமாக மிதப்பான் என்பதும் இந்தப் பெண்ணுக்கு தெரியும். நிச்சயமாக அவள் தன்… Continue reading மலர் 6 இதழ் 349 செய்யும் வேலையில் வெற்றி வேண்டுமா?
மலர் 6 இதழ் 348 சரியாகப் பேசத் தெரிந்த ஒரு சிறுமி!
சில நாட்கள் நாம் மோசேயின் தாயாகிய யோகெபெத்தைப் பற்றிப் பார்த்தோம்! இன்று முதல் மோசேயின் தமக்கையாகிய மிரியாமைப் பற்றி ஒரு சில நாட்கள் படிப்போம். குழந்தை மோசேயை நாணல் பெட்டியில் வைத்து நைல் நதியோரமாய் நாணல் நிறைந்த கரையில் மிதக்க வைத்து, குழந்தையின் அக்காவாகிய மிரியாமை தூரத்தில் இருந்து காவல் காக்கும்படி செய்தாள் யோகெபெத். மிரியாமுக்கு அப்பொழுது பத்திலிருந்து பதின்மூன்று வயதிற்குள் இருக்கும். யார் அந்த நதிக்கரையோரமாக வருவார்களோ? யார் இந்த பெட்டியைப் பார்ப்பார்களோ? என்று அவள்… Continue reading மலர் 6 இதழ் 348 சரியாகப் பேசத் தெரிந்த ஒரு சிறுமி!
மலர் 6 இதழ் 347 ஒரு தாயின் கனவு!
எண்ணா: 26: 59 “ அம்ராமுடைய மனைவிக்கு யொகெபெத் என்று பேர்; அவள் எகிப்திலே லேவிக்கு பிறந்த குமாரத்தி; அவள் அம்ராமுக்கு ஆரோனையும், மோசேயையும், அவன் சகோதரியான மிரியாமையும் பெற்றாள்” யோகெபெத்தைப் பற்றி நாம் படித்து வருகிறோம்! அவள் ஆரோன்,மிரியாம், மோசே இவர்களைப் பெற்றத் தாய்! யோகெபெத் வாழ்ந்த சமயம் இஸ்ரவேல் மக்கள் அடிமைத்தனத்தில் இருந்தனர். அவர்கள் மேல் கடினமான சுமை சுமத்தப்பட்டது. அப்படிப்பட்ட இருண்ட சமயத்தில் வாழ்ந்த இந்த இளம் தாய் தன் பிள்ளைகளுக்கு ஆபிரகாம்,… Continue reading மலர் 6 இதழ் 347 ஒரு தாயின் கனவு!
