ஆதி: 34:13 “ அப்பொழுது யாக்கோபின் குமாரர் தங்கள் சகோதரியாக தீனாளை சீகேம் என்பவன் தீட்டு படுத்தினபடியால், அவனுக்கும் அவன் தகப்பன் ஏமோருக்கும் வஞ்சகமான மறுமொழியாக:” யாராவது உங்களை வஞ்சகமாக ஏமாற்றிய கசப்பான அனுபவம் உங்களுக்கு உண்டா? பொய்யை உண்மையைப்போல சித்தரித்து கூறி நம்ப வைத்து கழுத்தறுக்கப்பட்ட அனுபவம் உண்டா? இவர்கள் பேசுவது உண்மையா அல்லது பொய்யா என்று நம்மை திணற வைக்கக் கூடிய அளவு பேசுகிறவர்கள் பலரை நம் ஒவ்வொருவர் வாழ்விலும் கண்டிருப்போம்! யாக்கோபின்… Continue reading மலர்:1 இதழ்: 43 நம்பவைத்து ஏமாற்றுவது என்றால்?
Category: Bible Study
மலர்:1 இதழ்:38 பயமொன்றுமில்லை!
ஆதி:32: 9-11 “பின்பு யாக்கோபு, என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாய் இருக்கிறவரே: உன் தேசத்துக்கும், உன் இனத்தாரிடத்துக்கும் திரும்பிப் போ உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே , அடியேனுக்கு தேவன் காண்பித்த எல்லா தயவுக்கும், எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும், கையுமாய் இந்த யோர்தானைக் கடந்து போனேன், இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன். என் சகோதரனாகிய ஏசாவின் கைக்கு என்னைத் தப்புவியும்;… Continue reading மலர்:1 இதழ்:38 பயமொன்றுமில்லை!
மலர்:1இதழ்:37 உன் கடந்த காலமும் அவர் கையில்….
“நீ தூணுக்கு அபிஷேகஜ்செய்து , எனக்கு ஒரு பொருத்தனை பண்ணின பெத்தேலிலே உனக்கு தரிசனமான தேவன் நானே, இப்பொழுது நீ எழுந்து, இந்த தேசத்தைவிட்டு புறப்பட்டு உன் இனத்தாரிருக்கிற தேசத்துக்கு திரும்பிப் போ என்றார் என்றான்” ( ஆதி:31:13) பல வருடங்களாக யாக்கோபு , பேராசைக்காரன், லாபானுடைய ஆதிக்கத்துக்கு, கீழே வாழ்ந்தான் என்று பார்த்தோம். கர்த்தர் யாக்கோபின் வாழ்வில் பெரிய திட்டம் வைத்திருந்தார், அவனோ வஞ்சனையும், பொறாமையும், பேராசையும் நிறைந்த சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தான்.… Continue reading மலர்:1இதழ்:37 உன் கடந்த காலமும் அவர் கையில்….
ஜெபக்கூடாரம்!
தேவ தூதன் மூலமாய் பதிலை வரவழைத்த ஜெபம்! தானியேல்: 9: 21 – 23 அப்படி நான் ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கும்போதே, முதல் தரிசனத்திலே நான் கண்ட புருஷனாகிய காபிரியேல், வேகமாய்ப் பறந்து வந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான்............ ஆதலால் நீ வேண்டிக் கொள்ளத் தொடங்கின போதே கட்டளை வெளிப்பட்டது, நான் அதை அறிவிக்க வந்தேன்.....” தானியேல் ஒரு சாதாரண மனிதன் தான். அவன் ஜெபித்துக் கொண்டிருந்த போது… Continue reading ஜெபக்கூடாரம்!
மலர்:1 இதழ்:34 தற்செயலாக நடந்ததா?
ஆதி: 29: 9-11 “ அவர்களோடே அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே , தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஒட்டிக்கொண்டு வந்தாள். யாக்கோபு தன் தாயின் சகோதரனாகிய லாபானுடைய குமாரத்தியாகிய ராகேலையும், தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளையும் கண்டபோது, யாக்கோபு போய், கிணற்றின் வாயிலிருக்கிற கல்லைப் புரட்டி தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டினான். பின்பு யாக்கோபு ராகேலை முத்தஞ் செய்து, சத்தமிட்டு அழுது..” நாம் சில… Continue reading மலர்:1 இதழ்:34 தற்செயலாக நடந்ததா?
மலர்:1 இதழ்:33 எதை விதைத்தாயோ அதை அறுப்பாய்!
ஆதி: 28: 1,2 “ ஈசாக்கு யாக்கோபை அழைத்து, அவனை ஆசிர்வதித்து, நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண் கொள்ளாமல், எழுந்து புறப்பட்டு பதான் அராமிலிருக்கிற உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவெலுடைய வீட்டுக்கு போய், அவ்விடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் குமாரத்திகளுக்குள் பெண்கொள் என்று அவனுக்கு கட்டளையிட்டான்.” யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கை ஏமாற்றி பொய் சொல்லி ஆசிர்வாதத்தை பெற்றவுடன் , ஏசா அவன் மீது மூர்க்கம் கொண்டிருப்பதை அறிந்து ஈசாக்கும், ரெபெக்காளும் அவனை,… Continue reading மலர்:1 இதழ்:33 எதை விதைத்தாயோ அதை அறுப்பாய்!
மலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்! விளைவு?
ஆதி: 27:13 “அதற்கு அவன் தாய், என் மகனே, உன்மேல் வரும் சாபம் என்மேல் வரட்டும்; என் சொல்லை மாத்திரம் கேட்டு , நீ போய், அவைகளை என்னிடத்தில் கொண்டுவா என்றாள்.” யாக்கோபு தன் தாயின் நேசத்தை பெற்றான். ஈசாக்கு வயதான போது குடும்பத்தின் ஆசிர்வாதத்தை மூத்த குமாரனுக்கு வழங்கும் நேரம் வந்த போது, ரெபெக்காள் தன் இளைய குமாரனுக்கு அந்த ஆசீர்வாதம் கிடைக்க வேண்டுமென்று எண்ணுகிறாள். ஆண்டவர் வாக்குத்தத்தம் பண்ணிய பிள்ளையை பெற்றுக்கொள்ள… Continue reading மலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்! விளைவு?
மலர்:1 இதழ்:31 ஐந்தில் அல்ல! ஐம்பதிலா?
ஆதி: 26 ,27 “ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும் , ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும், விவாகம் பண்ணினான். அவர்கள் ஈசாக்குக்கும், ரேபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள்.” ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று சொல்வர். சிறு பிராயத்தில் நாம் எப்படி வளர்க்கப்படுகிறோமோ அப்படித்தான் நாம் முதிர்வயதில் இருப்போம். சிறுவயதில் சரியான பாதையில் நடத்தி, பிள்ளைகளை உருவாக்குவது ஒரு தாயின் கடமையல்லவா? பல ஆசிரியர்கள் ஒரு மனிதன் உருவாவதற்கு காரணமாயிருந்தாலும், எல்லாரையும் விட சிறந்த… Continue reading மலர்:1 இதழ்:31 ஐந்தில் அல்ல! ஐம்பதிலா?
மலர்:1 இதழ்:30 ஒரு தாய் பிள்ளைகளுக்குள்ளே காட்டும் பட்சபாதம்!
ஆதி: 25:23 அதற்கு கர்த்தர்; இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது ; இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும்: அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப் பார்க்கிலும் பலத்திருப்பார்கள்; மூத்தவன் இளையவனை சேவிப்பான் என்றார். வீட்டில் அநேக பிள்ளைகளோடு வளர்ந்த சிலர், முதல் பிள்ளைக்குத்தான் அம்மாவிடம் பாசம் கிடைக்கும் கடைசி பிள்ளைக்கும் அதில் பங்குண்டு, ஆனால் நடுவில் உள்ள பிள்ளைகளுக்கு எதுவும் கிடைக்காது என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். சொத்து விஷயங்களில் கூட… Continue reading மலர்:1 இதழ்:30 ஒரு தாய் பிள்ளைகளுக்குள்ளே காட்டும் பட்சபாதம்!
மலர்:1 இதழ்:! 29 அன்று நடந்ததது இன்றுமா?
ஆதி: 25: 20 “ மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார். அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள்”. மறுபடியும் சரித்திரத்தின் சக்கரங்கள் அதே பாதையில் சுழன்றன! சாராளின் மருமகளாகிய ரெபெக்காள் மலடியாயிருந்தாள். சாராள் எத்தனை வருடங்கள் வேதனையிலும், கண்ணீரிலும், நிந்தனையிலும் காத்திருந்து தன் வாழ்க்கையின் பெரும் பாகத்தை வெறுமையாகவே கழித்தாள் அல்லவா? அதே வேதனை இந்த குடும்பத்தில் மறுபடியும் நேரிட்டது. ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில்,… Continue reading மலர்:1 இதழ்:! 29 அன்று நடந்ததது இன்றுமா?
