Bible Study

மலர்:1 இதழ்:28 வெற்றியின் சின்னம்!

ஆதி:25:1-2  “ ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரியையும் விவாகம்பண்ணியிருந்தான்” ஆபிரகாம் தன் முதிர்  வயதில் கேத்தூராள் என்னும் பெண்ணை மணந்து அவள் மூலமாய் ஆறு குமாரர்களைப் பெற்றான் என்று இந்த வேத பகுதியில் பார்க்கிறோம்.  ஒருவேளை சாராளை இழந்த தனிமை அவனை இன்னொரு பெண்ணிடம் விரட்டியது போலும்.  தனிமையை போக்க தேவனைத் தேட வேண்டிய வயதில் பெண்ணைத்  தேடினான் ஆபிரகாம். தேவன் ஆபிரகாமைத் தெரிந்து கொண்டு அவனைத் திரளான ஜனத்துக்கு தகப்பனாக்குவேன் என்றார். தன்… Continue reading மலர்:1 இதழ்:28 வெற்றியின் சின்னம்!

Bible Study

மலர்:1 இதழ்:27 இது ஒரு கதையல்ல! சத்தியம்!

ஆதி:24  தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! ஈசாக்கும், ரெபெக்காளும் திருமணத்தில் ஒன்றிணைந்தனர் என்று பார்த்தோம் அல்லவா? இந்த இடத்தில் வேதம் நமக்கு கற்பிக்கிற மகா பெரிய சம்பவம், மணவாளனாகிய  கிறிஸ்துவுடன், மணவாட்டியாகிய நாம் ( திருச்சபை) ஒன்றிணைக்கப்படுவது. இந்த திருமண சம்பவத்தை இன்று நாம்  படிப்போம். முதலாவது  ஆதி: 24:7 ல் , தந்தையாகிய ஆபிரகாம் தன் ஒரே குமாரனாகிய ஈசாக்குக்கு ஒரு மணவாட்டியை அளிக்க விரும்புகிறதைப் பார்க்கிறோம். இதைப் போலத்தான் பிதாவாகிய தேவன் தன் ஒரே… Continue reading மலர்:1 இதழ்:27 இது ஒரு கதையல்ல! சத்தியம்!

Bible Study

மலர்:1 இதழ்: 25 விசுவாசமுண்டு! பொறுமை எங்கே!

ஆதி: 21: 1 – 7  தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்!   நாட்கள் உருண்டோடின! கர்த்தர் வாக்குறைத்த படியே சாராள் மேல் கடாட்சமானார். சாராள் தன் முதிர் வயதிலே கர்ப்பவதியாகி ஆபிரகாமுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். அவள் ஏந்திய பாரம், நிந்தனை, வேதனை, அவமானம், மலடி என்ற பட்டம், ஆகாரினால் வந்த நிந்தை அத்தனைக்கும் முடிவாக ஈசாக்கு பிறந்தான்.  ஆபிரகாம் என்பதற்கு ‘ திரளான ஜனத்துக்கு தகப்பன்” என்று அர்த்தம். சாராளிடம் அவள் கணவன் பேரைக்… Continue reading மலர்:1 இதழ்: 25 விசுவாசமுண்டு! பொறுமை எங்கே!

Bible Study

மலர்:1 இதழ்: 24 உன் சாட்சி என்ன ஆச்சி?

ஆதி: 19: 3 – 38  தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்!   லோத்தின் மனைவி சோதோமை விட்டு பிரிய மனதில்லாமல், திரும்பிப் பார்த்து உப்புத்தூணானாள் என்று நேற்று பார்த்தோம். இஸ்ரவேல் நாட்டிலே உப்புக்கடல் எனப்படுகிற கடல் பகுதியை நாங்கள் பார்க்க சென்ற போது, வழியில் தூரமாய் ஓரிடத்தை காண்பித்து சரித்திரத்தின் படி,  இந்த இடத்தில் தான் லோத்தின் மனைவி உப்புத்துணாய் நின்றிருப்பாள் என்று எங்கள் வழிகாட்டி கூறினார். Dead sea  என்றழைக்கப்படும் உப்புக் கடல் பகுதியில்… Continue reading மலர்:1 இதழ்: 24 உன் சாட்சி என்ன ஆச்சி?

Bible Study

மலர்:1 இதழ்: 23 காத்துக் கொள் உன் பரம அழைப்பை!

ஆதி: 19: 15 – 29  தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்!   லோத்தின் குடும்பம் சோதோமை நோக்கி கூடாரம் போட்டனர், பின்னர் சோதோமுக்குள்ளேயே குடியேறினர் என்று நேற்று பார்த்தோம். லோத்தின்  குடும்பத்தை உலகப்பிரகாரமான ஆசைகள் பிணைத்திருந்ததால் அவர்கள் ரோமர்: 12:2 ல் கூறப்பட்டுள்ளது போல ‘இந்த பிரபஞ்சத்துக்குரிய வேஷம்’ தரித்து வாழ்ந்தனர்!  ஆனால் அதன் விளைவு என்ன தெரியுமா? அவர்கள் சோதோமில் சம்பாதித்த அத்தனையும் கரியாகிப் போயிற்று. தேவன் அந்தப் பட்டணங்களையும், சமபூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின்… Continue reading மலர்:1 இதழ்: 23 காத்துக் கொள் உன் பரம அழைப்பை!

Bible Study

மலர்:1 இதழ்: 22 ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால்!

  ஆதி: 19: 1 - 15  தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்!    லோத்துவின் குடும்பத்தை எகிப்தின் ஆடம்பரம், ஆஸ்தி , பட்டண வாழ்க்கை, சுகபோகம் என்ற பல ஆசைகள் கட்டியிருந்தன. அதனால் தான் சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான், என்று நேற்று பார்த்தோம். லோத்துவின் குடும்பம் ஒவ்வொரு நாளும் தூங்கி எழும்போது சோதோமைப் பார்த்து ஏங்கியிருப்பார்கள். ஆதி : 13: 12 ல், சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான் என்று வாசிக்கிறோம். நாம் அடுத்த… Continue reading மலர்:1 இதழ்: 22 ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால்!

Bible Study, Call of Prayer, Family Devotion, To the Tamil Christian community

மலர்:1 இதழ்: 21 ஆடம்பரம் ஆழ்த்திவிடும் !

ஆதி: 16 – 33   தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்!   சர்வ வல்லமையுள்ள கர்த்தர்  தம்மால் ஆகாதது ஒன்றுமில்லையென்று வயது முதிர்ந்த ஆபிரகாமுக்கும், சாராளுக்கும் உறுதியளித்த பின், சோதோமை நோக்கி சென்றார். அவரோடு வந்த தூதர்கள் சற்று முன்னே செல்ல, கர்த்தர் தம்மை வழியனுப்ப வந்த ஆபிரகாமோடு தான் செய்யப் போகிற காரியங்களைப் பகிர்ந்து கொள்கிறார். ( ஆதி: 19:1). ஆபிரகாமை தேவன் அறிந்ததால்  அவனுக்கு தாம் சோதோமுக்கு செய்யப்போகிற காரியங்களை வெளிப்படுத்தினார்! என்ன ஆச்சரியம்!… Continue reading மலர்:1 இதழ்: 21 ஆடம்பரம் ஆழ்த்திவிடும் !

Bible Study

மலர்:1 இதழ்: 20 கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?

    ஆதி: 18: 9 - 15   தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! ஆபிரகாம் விருந்தினரை  உபசரித்ததை பற்றி நேற்று பார்த்தோம். வாசலில் நின்ற மூன்று புருஷரையும் வருந்தியழைத்து, விருந்தளித்த பின்னர்,  சாராள் மற்ற வேலைகளைப் பார்க்க கூடாரத்துக்குள் திரும்பினாள். ஆபிரகாம் விருந்தாளிகளோடு மரத்துக்கடியில் நின்று கொண்டிருந்தான். சாராள் உள்ளே  வேலை செய்து கொண்டிருந்தாலும், அவள் காது வந்தவர்கள் என்ன பேசுகிறார்கள்? அவர்கள் யார்? என்பதை அறிய கவனமாயிருந்தது. அவர்கள் ஆபிரகாமிடம் உன் மனைவி சாராள்… Continue reading மலர்:1 இதழ்: 20 கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?

Bible Study

மலர்:1 இதழ்:19 உபசரித்தல் ஊழியமா?

ஆதி: 18: 1- 10   தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்!   காலங்கள் உருண்டு ஒடின! ஆகார் வனாந்திரத்திலிருந்து திரும்பி வந்து இஸ்மவேலைப் பெற்ற பின் பதின்மூன்று வருடங்கள் கழிந்து விட்டன! இப்பொழுது ஆபிராமுக்கு வயது 99.       (ஆதி: 17:5) கர்த்தர் ஆபிராமுக்கு தரிசனமாகி, “இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால் , உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்” என்றும் ,  ( ஆதி: 17:15)  “சாராய்… Continue reading மலர்:1 இதழ்:19 உபசரித்தல் ஊழியமா?

Bible Study

மலர்:1 இதழ்:18 நீர் என்னைக் காண்கிற தேவன்! – II

ஆதி: 16 : 9    தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! தேவன் ஆகாரை, அவள் மரணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் வனாந்திரத்தில் கண்டார்.  ஆதி: 16:13                 “ என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன்” என்றாள்  ஆகார் என்று நேற்று பார்த்தோம். அவள் கடினமான வனாந்திரத்தில் அலைந்து திரிந்த போது கர்த்தர் அவளை நோக்கி, “ நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப் போய், அவள் கையின் கீழ் அடங்கியிரு” என்று சொல்வதைக் காண்கிறோம். ஒரு பெண் கடினமாக நடத்தப்பட்டாள்… Continue reading மலர்:1 இதழ்:18 நீர் என்னைக் காண்கிற தேவன்! – II