உபாகமம்:34:12 ”கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை” நாங்கள் இஸ்ரவேலில் கெத்செமனே தோட்டத்தில் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து யூதாஸ் என்பவனால் காட்டிக்கொடுக்கப்பட்ட மரத்தடியில் நின்று கொண்டு எங்கள் இருவரையும் சேர்த்து போட்டோ எடுக்கமுடியாமல், யாரிடம் கேட்பது என்று திகைத்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது ஒரு சகோதரி, ரஷ்யா நாட்டை சேர்ந்தவர்கள், எங்களிடம் வந்து கேமராவை வாங்கி சேர்ந்து நில்லுங்கள் நான் போட்டோ எடுக்கிறேன் என்று சொல்லி எங்கள் இருவரையும் படம் எடுத்ததுமட்டுமல்லாமல்,… Continue reading இதழ்: 842 மோசே அறிந்த கன்மலை!
Category: Family Devotion
இதழ்:841 சாபமிட அவர் என்ன மந்திரவாதியா?
உபாகமம் 28:13 இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வார்த்தைகள் யாவையும் விட்டு விலகி வேறே தேவர்களைச் சேவிக்கும்படிக்கு நீ வலதுபுறம் இடதுபுறம் சாயாமல், கதைப் புத்தகங்களில் மந்திரவாதியின் சாபத்தினால் மனிதன் பூனையாவதைப் பற்றி படித்திருக்கிறேன்! ஏழை எளிய மக்கள் ஒருவரோடொருவர் சண்டை போட்டுக் கொள்ளும்போது நீ மண்ணாய் போவாய், நீ விளங்காமல் போவாய், என்று சாபமிடுவதையும் கண்களால் பார்த்திருக்கிறேன். என்னுடைய சொந்த கிராமத்தில் ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் தொடர்ந்து ஊனமாய், குருடாய்ப் பிறந்தபோது, அவர்கள் யாருக்கோ அநியாயம்… Continue reading இதழ்:841 சாபமிட அவர் என்ன மந்திரவாதியா?
இதழ் 840 நீ வாலாகாமல் தலையாவாய்!
உபாகமம்:28:14 “ இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும், அவைகளுக்கு செவிகொடுத்து வந்தால் கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்.” சில வருடங்களுக்கு முன் நான் அலுவலகத்துக்கு போகும் வழியில் வயல்வெளிகள்இருந்தன! அந்த வயல்களில் வாத்துகள் கூட்டம் கூட்டமாய் வலம் வந்துக்கொண்டிருக்கும் அழகை அடிக்கடி நான் ரசிப்பதுண்டு. அதில் எப்பொழுதுமே ஒரு வாத்து முன்னால் இருக்கும், மற்றவை அனைத்தும் அந்த தலைவர் வாத்து போகிற திசையில்… Continue reading இதழ் 840 நீ வாலாகாமல் தலையாவாய்!
இதழ்: 839 மின்னலுடன் கூடிய மழை வரும்!
உபாகமம்: 28:12 ஏற்றகாலத்திலே உன் தேசத்திலே மழை பெய்யும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும்,கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷ சாலையாகிய வானத்தை திறப்பார். சில வருடங்களுக்கு முன்பு மே மாதத்தில் ஒருநாள், நாங்கள் காரில் பெங்களூருக்கு போய்க் கொண்டிருந்தோம். அன்று மழைக்கு எந்த அறிகுறியுமே இல்லை. சென்னையிலிருந்து வேலூர் வரை கடும் வெயில் காய்ந்து கொண்டிருந்தது! வேலூரைத் தாண்டி சற்று தூரம் சென்றவுடன் திடீரென்று மின்னல்களோடு, கருமேகத்துடன் மழை கொட்டியது. அப்படிப்பட்ட மழையை நான் இதுவரை… Continue reading இதழ்: 839 மின்னலுடன் கூடிய மழை வரும்!
இதழ்: 838 பூவோடு சேர்ந்த நார் யாராயிருக்கும்?
உபாகமம்: 28:10 ”அப்பொழுது கர்த்தருடைய நாமம் உனக்குத் தரிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள்.” நான் கல்லூரியில் படித்த நாட்களில் நாங்கள் அனைவரும் பயந்த ஒரு பேராசிரியை இருந்தார்கள். அவர்களைக் கண்டால் பயம் என்றவுடன் அவர்களைப்பற்றி தவறாக நினைத்துவிடாதீர்கள். மரியாதையால் வந்த பயம். அழகும், நவீனமும், அறிவும், திறமையும் கொண்ட அவர்களை எங்கள் எல்லாருடைய உள்ளத்திலும் இடம் பிடித்துவிட்டார்கள். யாருடைய வகுப்பை தவற விட்டாலும் சரி, அவர்கள் வகுப்புக்கு சரியாக போய்விடுவோம் வேலையை சரியாக… Continue reading இதழ்: 838 பூவோடு சேர்ந்த நார் யாராயிருக்கும்?
இதழ்: 837 தலைக்கு வந்த ஆபத்து கீழ்ப்படிதலால் போனது!
யாத்தி:4: 20, 24, 25 அப்பொழுது மோசே தன் மனைவியையும், தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக் கொண்டு எகிப்து தேசத்துக்கு திரும்பினான்.... வழியில் தாங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு வெளிப்பட்டு அவனைக் கொல்லப் பார்த்தார். அப்பொழுது சிப்போராள் ஒரு கருக்கான கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள். சிப்போராள் மோசேக்கு பாலைவனத்தில் கிடைத்த நீரோடை. பல கனவுகளோடு அவள்… Continue reading இதழ்: 837 தலைக்கு வந்த ஆபத்து கீழ்ப்படிதலால் போனது!
இதழ்:836 உன் திருமண வாழ்க்கையின் கனவுகள் நனவாயிற்றா?
யாத்தி: 2: 21, 22 மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்க சம்மதித்தான்; அவன் சிப்போரள் என்னும் தன் குமாரத்தியை மோசேக்கு கொடுத்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்றாள்; நான் அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி அவனுக்கு கேர்சொம் என்று பேரிட்டான். மோசே! 40 வருடங்கள் அரண்மனையில் வாழ்ந்தான்! பார்வோன் குமாரத்தியின் செல்லக் குமாரனாய், பார்வோன் ராஜாவின் பேரனாய் எல்லாவித செல்வங்களையும் அனுபவித்து வளர்ந்தான். எகிப்து ராஜ்யத்தை ஆளவேண்டிய ராஜகுமாரன் ஒருநாள் எபிரேயரைக் கொடுமைப் படுத்திய… Continue reading இதழ்:836 உன் திருமண வாழ்க்கையின் கனவுகள் நனவாயிற்றா?
இதழ்:835 நீ உன் குடும்பத்தைத் தெரிந்து கொள்ளவில்லை!
யோவான்:13: 34 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்கு கொடுக்கிறேன். அன்பின் சகோதர சகோதரிகளுக்கு என்னுடைய அன்பின் வாழ்த்துக்கள்! கடந்த 2009 லிருந்து, 2019 வரை 42 நாடுகளிலிருந்து உங்களில் அநேகர் ஒவ்வொரு நாளும் இந்த தோட்டத்துக்கு வருகை தருவதைப் பார்த்து கர்த்தருக்கு துதி ஸ்தோத்திரங்களை மலர்களாக செலுத்தினேன். இது உங்கள் ஒவ்வொருவரிலும் உள்ள வேதத்தைக் குறித்த தாகத்தைத் தான் எனக்கு வெளிப்படுத்தியது. நான் இந்த தின… Continue reading இதழ்:835 நீ உன் குடும்பத்தைத் தெரிந்து கொள்ளவில்லை!
இதழ்: 834 துதியும் ஸ்தோத்திரமும் மருந்தாகுமா?
எண்ணா:12: 13, 15 அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி; தேவனே அவளை குணமாக்கும் என்று கெஞ்சினான். அப்படியே மிரியாம் ஏழுநாள் பாளயத்துக்கு புறம்பே விலகப்பட்டிருந்தாள். மிரியாம் சேர்த்துக்கொள்ளப்படுமட்டும் ஜனங்கள் பிரயாணம் பண்ணாதிருந்தார்கள். தேவனுடைய சேவைக்காக தங்களை அர்ப்பணித்த அநேக மிஷனரிகளைப் பற்றி படிக்கும்போது நாம் இவர்களை சந்திக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்று எண்ணுவதுண்டு! அப்படிப்பட்டவர்களின் பட்டியலில் இடம் பெறுபவர் டாக்டர் பால் பிராண்ட் என்ற மருத்துவரும் அவர் மனைவி மார்கரெட் அம்மையாரும். அவர் நம்முடைய தமிழ்நாட்டில் ஒரு மிஷனரி… Continue reading இதழ்: 834 துதியும் ஸ்தோத்திரமும் மருந்தாகுமா?
இதழ்: 833 உன் வாயில் துதி புறப்படும்போதே தேவனுடைய வல்லமை புறப்படும்!
யாத்தி:15: 20, 21 “ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும், தன் கையில் தம்புருவை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புரோடும், நடனத்தோடும் அவளுக்கு பின்னே புறப்பட்டுப்போனார்கள். மிரியாம் அவர்களுக்கு பிரதிவசனமாக; கர்த்தரைப் பாடுங்கள்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையும் குதிரை வீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள்.” இன்று காலையில் எப்பொழுதும் எழும்புகிற நேரத்தைவிட சிறிது அதிக நேரம் படுத்திருக்க என் சரீரம் ஆசைப்பட்டது. ஆனால் என் வீட்டுத் தோட்டத்தில் உள்ள பறவைகளின் சத்தம் என்னை நிச்சயமாக… Continue reading இதழ்: 833 உன் வாயில் துதி புறப்படும்போதே தேவனுடைய வல்லமை புறப்படும்!
