1 சாமுவேல் 27: 8 - 12 அங்கேயிருந்து தாவீதும் அவன் மனுஷரும் கெசூரியர் மேலும் கெஸ்ரியர் மேலும், அமலேக்கியர் மேலும் படையெடுத்துப்போனார்கள்....... இன்ன இன்னபடி தாவீது செய்தான் என்று தங்களுக்கு விரோதமான செய்தியை அறிவிக்கத்தக்க ....ஒரு புருஷனையாகிலும்,ஸ்திரீயையாகிலும் உயிரோடே வைக்காதிருப்பான். ஆகீஸ் தாவீதை நம்பி: அவன் இஸ்ரவேலராகிய தன்னுடைய ஜனங்கள் தன்னை வெறுக்கும்படி செய்கிறான். என்றைக்கும் அவன் என் ஊழியக்காரனாயிருப்பான் என்பான். நான் என்றுமே தாவீதின் வாழ்க்கை நமக்கு ஒரு நல்ல பாடமான வாழ்க்கை என்று… Continue reading இதழ்:1369 பாவத்தின் கருவியே பொய்தான்!
Category: Family Devotion
இதழ்:1368 கொடிய வனாந்திரத்தில் கர்த்தரே நம் அரண்!
1 சாமுவேல் 27:1 பின்பு தாவீது நான் எந்த நாளிலாகிலும் ஒருநாள் சவுலின் கையினால் மடிந்து போவேன்.இனி சவுல் இஸ்ரவேலின் எல்லைகளில் எங்கேயாவது என்னைக் கண்டு பிடிக்கலாம் என்கின்ற நம்பிக்கையற்றுப் போகும்படிக்கும், நான் பெலிஸ்தரின் தேசத்துக்குப் போய், தப்பித்துக் கொள்வதைப் பார்க்கிலும் நலமான காரியம் வேறில்லை என்று தன் இருதயத்தில் யோசித்தான். நான் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள வால்பாறைக்கு அடிக்கடி வருவேன். அங்கு ஒரு இடத்தில் உள்ள மரங்கள் எப்பொழுதும் என் கண்களைக் கவரும். வானளாவிய அவைகள்… Continue reading இதழ்:1368 கொடிய வனாந்திரத்தில் கர்த்தரே நம் அரண்!
இதழ்:1367 வெற்றிகரமான திருமணம் என்ற முக்கோணம்!
1 சாமுவேல்: 25:42 பின்பு அபிகாயில் தீவிரித்து எழுந்து, ஒரு கழுதையின்மேல் ஏறி, ஐந்து தாதிப் பெண்களைக் கூட்டிக் கொண்டு, தாவீதின் ஸ்தானாதிபதிகளுக்குப் பின்சென்று போய் அவனுக்கு மனைவியானாள். நான் இதற்கு முன்னால் இந்தப் பகுதியை வாசிக்கும்போதெல்லாம், ஒரு பணக்கார விதவையான அபிகாயில், தாவீதை மணந்து சந்தோஷமாக வாழ்ந்தாள் என்றுதான் நினைத்துக்கொள்வேன். ஆனால் அபிகாயிலின் வாழ்க்கையைப் பற்றி ஆழமாகப் படிக்கும் போது தான் அது தவறான எண்ணம் என்று புரிந்தது. தாவீது தன்னிடம் ஆள் அனுப்பியபோது அவள்… Continue reading இதழ்:1367 வெற்றிகரமான திருமணம் என்ற முக்கோணம்!
இதழ்:1366 கண்ணில் நீர் காயும் முன் எடுக்கும் முடிவு?
1 சாமுவேல்: 25: 39 - 43 நாபால் செத்துப்போனான் என்று தாவீது கேள்விப்பட்டபோது,......அபிகாயிலை விவாகம் பண்ணுகிறதற்காக அவளோடு பேச, தாவீது ஆட்களை அனுப்பினான். பின்பு அபிகாயில் தீவிரித்து எழுந்து.... அவனுக்கு மனைவியானாள். யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாமையும் தாவீது விவாகம்பண்ணினான். அவர்கள் இருவரும் அவனுக்கு மனைவியானார்கள். அபிகாயிலின் கணவன் கர்த்தர் வாதித்ததினால் மரித்ததை நேற்றுப் பார்த்தோம். அதைக் கேள்விப்பட்ட தாவீது அபிகாயிலை மணக்க விரும்பி தூது அனுப்புகிறான்.. இந்த அதிகாரத்தைப் படிக்கும்போது என்ன காரணத்தினால் தாவீது… Continue reading இதழ்:1366 கண்ணில் நீர் காயும் முன் எடுக்கும் முடிவு?
இதழ்:1365 உன்னிடம் இன்று கேட்கப்பட்டால்?
1 சாமுவேல் 25:37-38 பொழுது விடிந்து நாபாலின் வெறி தெளிந்தபின்பு அவன் மனைவி இந்த வர்த்தமானங்களை அவனுக்கு அறிவித்தாள். அப்பொழுது அவன் இருதயம் அவனுக்குள்ளே செத்து, அவன் கல்லைப் போலானான். கர்த்தர் நாபாலை வாதித்ததினால் ஏறக்குறைய பத்து நாளுக்கு பின்பு அவன் செத்தான். நாபாலின் வீட்டில் ராஜவிருந்து நடந்துமுடிந்தது. மதுபானத்தை அதிகமாக அருந்தியிருந்ததால், அன்று இரவு நாபாலிடம் அபிகாயில் எந்தக்காரியத்தையும் சொல்லவில்லை என்று பார்த்தோம். மறுநாள் காலையில், எல்லாவற்றையும் நாபாலுக்கு அவள் அறிவித்தாள். நாம் அவளுடைய காலத்துக்கு… Continue reading இதழ்:1365 உன்னிடம் இன்று கேட்கப்பட்டால்?
இதழ்:1364 கோபம் அடங்கும்வரை பேசாமலிருப்பது விவேகம்!
1 சாமுவேல் 25: 36 .....அவன் மிகவும் வெறித்துமிருந்தான்.ஆகையால் பொழுது விடியுமட்டும் சிறிய காரியமானாலும்,பெரிய காரியமானாலும் ஒன்றையும் அவனுக்கு அறிவிக்கவில்லை. அபிகாயில் தாவீதை சந்தித்துத் திரும்பும்போது ராஜ விருந்து நடந்து கொண்டிருந்தது என்று பார்த்தோம். நாபால் குடித்து வெறித்திருந்தான். அதனால் அபிகாயில் அவனிடம் ஒன்றையும் அறிவிக்கவில்லை என்று வேதம் கூறுகிறது. இந்தப்பகுதி மறுபடியும் அபிகாயிலுடைய விவேகத்தை நமக்கு தெளிவு படுத்துகிறது. தாவீதை சந்தித்துத் தன்னுடைய மதிகேட கணவனையும், ஊழியரையும் தலைக்கு வந்த ஆபத்திலிருந்து மீட்டு, அவள் வீட்டுக்குத்… Continue reading இதழ்:1364 கோபம் அடங்கும்வரை பேசாமலிருப்பது விவேகம்!
இதழ்:1363 நானே சம்பாதித்த சொத்து அல்லவா!!!!
1 சாமுவேல் 25: 36 அபிகாயில் நாபாலிடத்தில் வந்தபோது, இதோ, ராஜாவிருந்துக்கு ஒப்பான விருந்து அவன் வீட்டிலே நடந்தது. அவன் இருதயம் களித்திருந்தது. அவன் மிகவும் வெறித்துமிருந்தான்.ஆகையால் பொழுது விடியுமட்டும் சிறிய காரியமானாலும்,பெரிய காரியமானாலும் ஒன்றையும் அவனுக்கு அறிவிக்கவில்லை. ஆடுகள் மயிர் கத்தரிக்கும் காலம் கடந்து விட்டது! நாபாலுக்கு நல்ல வருமானம்! தாவீதிடம் நீயா நானா என்று பேசிவிட்டு, இப்பொழுது தாவீது நானூறுபேரோடு கர்மேலில் அவனைக்கொல்ல வருவதுகூடத் தெரியாமல் நாபால் வெறித்துக் களித்துக்கொண்டிருந்தான்! அவனுடைய மனைவியாகிய அபிகாயில்… Continue reading இதழ்:1363 நானே சம்பாதித்த சொத்து அல்லவா!!!!
இதழ்:1362 அனுதின ஓட்டம் எளிதாக ஒரு வழி!
1 சாமுவேல் 25:34 ... உனக்குப் பொல்லாப்புச் செய்ய எனக்கு இடம்கொடாதிருக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு மெய்யாய்ச் சொல்லுகிறேன்.. நம்மில் எத்தனை பேர் ஒருநாளில் ஒன்றுக்கு இரண்டு வேலையை செய்துகொண்டு பிள்ளைகளோடு இருக்கக் கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொருநாளும் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றுகூட நமக்குத் தெரியவில்லை! நம்முடைய வேலைகளுக்கே நேரம் ஒதுக்கத் தெரியாதபோது வேதம் வாசிப்பதும், ஜெபிப்பதும் சாத்தியமா என்ன? அபிகாயில், தாவீது என்ற இருவரின் வாழ்க்கையிலிருந்து நாம் இன்னொரு பாடம் கற்றுக்கொள்வோமென்றால்… Continue reading இதழ்:1362 அனுதின ஓட்டம் எளிதாக ஒரு வழி!
இதழ்:1361 தேவனாகிய கர்த்தரே மேற்பார்வையிடுவார்!
1 சாமுவேல் 25:33 ... என் கையே பழிவாங்காதபடிக்கும், நீ இன்றையதினம் எனக்குத் தடை பண்ணினபடியினால், நீயும் ஆசீர்வதிக்கப்படுவாயாக! ஆலோசனையைக் கொடுப்பதும், ஆலோசனையை ஏற்றுக்கொள்வதும் ஒரு நல்ல உறவுக்கு தேவையான அஸ்திபாரம் என்று அபிகாயில், தாவீதின் வாழ்க்கையிலிருந்து பார்த்தோம். இன்றைய வசனத்தில் தாவீது அபிகாயிலிடம், ' என்னுடைய வாழ்வில் யார் எதற்கு பொறுப்பு என்று சற்று ஞாபகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி அபிகாயில்' என்று கூறுவது போல் உள்ளது! கண்ணுக்கு கண் என்ற வேத வசனத்தை இறுகப்பிடித்துக் கொண்டு… Continue reading இதழ்:1361 தேவனாகிய கர்த்தரே மேற்பார்வையிடுவார்!
இதழ்:1360 ஆலோசனை என்னும் விலையேறப்பெற்ற பரிசு!
1 சாமுவேல் 25:33 நீ சொல்லிய யோசனை ஆசிர்வதிக்கப்படுவதாக; நான் இரத்தம் சிந்த வராதபடிக்கும்..... நீ இன்றைய தினம் எனக்குத் தடை பண்ணினபடியால் நீயும் ஆசிர்வதிக்கப்படுவாயாக! நமக்கு யாராவது யோசனை சொன்னால் நாம் எப்பொழுதும் நல்ல அர்த்தத்தில் எடுத்துக்கொள்வதுண்டா என்று இன்றைய வசனம் என்னை சிந்திக்க வைத்தது. நண்பர்களுக்கு இடையிலாகட்டும், உறவினருக்காகட்டும் ஆலோசனை சொல்வது என்பது ஒரு கடினமான காரியம். அவர்களே யோசித்து நல்ல முடிவு எடுக்கட்டும் நாம் தலையிடக் கூடாது என்றுதான் நினைப்போம். கணவன் மனைவிக்குள்ளும்,… Continue reading இதழ்:1360 ஆலோசனை என்னும் விலையேறப்பெற்ற பரிசு!
