1 சாமுவேல் 25: 33 நீ சொல்லிய யோசனை ஆசீர்வதிக்கப்படுவதாக. அபிகாயில் சொன்ன யோசனையை தாவீது ஏற்றுக்கொண்டான் என்று பார்த்தோம். இன்றைய வசனத்தைப் படிக்கும்போது தாவீதின் குமாரனாகிய சாலொமோன் நீதிமொழிகளில் கூறியது நினைவிற்கு வந்தது நல்யோசனை உன்னைக் காப்பாற்றும்; புத்தி உன்னைப் பாதுகாக்கும் (நீதி:2:11) எத்தனையோமுறை நாம் பேசிவிட்டு பின்னர் யோசிக்கிறோம். ஆனால் இன்று அபிகாயிலின் வாழ்க்கையின் மூலம், யோசித்தபின்னர் பேசுவதைப் பற்றி வேதத்திலிருந்து அறிகிறோம். நாம் ஒரு காரியத்தைக் குறைவாகப் புரிந்து கொண்டு பேசும்போது என்ன… Continue reading இதழ்:1359 அழிவுக்கு வழிவகுக்கும் வார்த்தைகள்!
Category: Family Devotion
இதழ்:1358 உள்ளம் திறந்து பேசுதலே உறவுக்கு அஸ்திபாரம்!
1 சாமுவேல் 25: 35 அவள் தனக்குக் கொண்டுவந்ததைத் தாவீது அவள் கையிலே வாங்கிக்கொண்டு, அவளைப்பார்த்து; நீ சமாதானத்தோடே உன் வீட்டுக்குப் போ. இதோ நான் உன் சொல்லைக்கேட்டு,உன் முகத்தைப்பார்த்து, இப்படிச் செய்தேன் என்றான். இதை எழுதும்போது ஒரு கட்டிட வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தேன். ஒரு பிளாக்குக்கு மேலாக இன்னொரு பிளாக்கை வைத்து ஒவ்வொரு சுவராக ஒரு கட்டிடம் உருவமைந்தது. இன்றைய வேதாகமப்பகுதி, தாவீதுக்கும், அபிகாயிலுக்கும் நடுவே ஏற்ப்பட்ட உறவு, வெற்றிகரமாக கட்டி முடித்த ஒரு கட்டிடத்தைப்… Continue reading இதழ்:1358 உள்ளம் திறந்து பேசுதலே உறவுக்கு அஸ்திபாரம்!
இதழ்:1357 உம் வார்த்தைகளை என் வாழ்வு உரத்த சத்தமிடட்டும்!
1 சாமுவேல்: 25: 32 அப்பொழுது தாவீது அபிகாயிலை நோக்கி : உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். மிகப்பிரமாதமான விருந்தோடும், சாந்தமான வார்த்தைகளோடும் வந்த அபிகாயில் பேசி முடித்தவுடனே தாவீது அவளிடம் கூறிய வார்த்தைகளைத்தான் இந்த வசனத்தில் பார்க்கிறோம். உண்மையை சொன்னால் இந்த வார்த்தைகள் பல காரணங்களுக்காக என்னை மிகவும் தொட்டு விட்டன! முதலாக தாவீது அவளை தேவன் தாமே அனுப்பியதாகக் கூறுகிறான். ஏனெனில் அவள் தாவீதிடம் பேசிய வார்த்தைகள்,… Continue reading இதழ்:1357 உம் வார்த்தைகளை என் வாழ்வு உரத்த சத்தமிடட்டும்!
இதழ்:1356 என் அறிவே இதை சாதித்தது என்று நினைக்கிறாயா?
1 சாமுவேல் 25: 26 - 27 இப்போதும் என் ஆண்டவனே, நீர் இரத்தம் சிந்தவும்,உம்முடைய கை நீதியைச் சரிக்கட்டவும் கர்த்தர் உமக்கு இடம்கொடுக்கவில்லை என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக் கொண்டும், உம்முடைய ஜீவனைக் கொண்டும் சொல்லுகிறேன்..... இப்போதும் உமது அடியாள் என் ஆண்டவனுக்குக் கொண்டுவந்த காணிக்கையை ஏற்றுக் கொண்டு, என் ஆண்டவனைப் பின்பற்றுகிற வாலிபருக்குக் கொடுப்பீராக. உமது அடியாளின் பாதகத்தை மன்னியும். இந்த புதிய மாதத்துக்காக உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி செலுத்துவோம். இந்த உலகமே கொரோனாவின் பிடியில்… Continue reading இதழ்:1356 என் அறிவே இதை சாதித்தது என்று நினைக்கிறாயா?
இதழ்:1355 நீ நினைத்த வாழ்க்கை அமையவில்லையா?
1 சாமுவேல் 25:25 என் ஆண்டவனாகிய நீர் நாபால் என்னும் இந்தப் பேலியாளின் மனுஷனை ஒரு பொருட்டாக எண்ண வேண்டாம். அவன் பெயர் எப்படியோ அப்படியே அவனும் இருக்கிறான். அவன் பெயர் நாபால். அவனுக்குப் பயித்தியமும் இருக்கிறது. அபிகாயில் தன்னை எதிர்கொண்ட பிரச்சனைகளுக்கு யாரையும் குற்றம் சுமத்தாமல், பழியைத் தானே ஏற்றுக்கொண்டு, சாந்தமான வார்த்தைகளால் தாவீதிடம் பேசினாள் என்று பார்த்தோம். அவள் பேச ஆரம்பித்தவுடனே அவள் எவ்வளவு பேசினாள் என்பதை படிக்கும் போது எனக்கு ஆச்சரியமாக… Continue reading இதழ்:1355 நீ நினைத்த வாழ்க்கை அமையவில்லையா?
இதழ்:1354 அலை பாயும் நீருக்கு அணை கட்டிய சாந்தம்!
1 சாமுவேல் 25: 24 ........உம்முடைய அடியாளுடைய வார்த்தைகளை நீர் கேட்கும்பொருட்டாக உம்முடைய அடியாள் உமது செவிகேட்கப் பேசவேண்டும். நாபாலைத் திருமணம் செய்த குற்றம் அல்லாமல் வேறு குற்றம் அறியாத ஒரு பெண்தான் நம்முடைய அபிகாயில். இந்த அழகியப் பெண்ணின் குணநலன்களைத் தான் நாம் படித்துக்கொண்டிருக்கிறோம். அவளுடைய புத்திசாலித்தனம், கவனித்து செயல் படும் குணம், நேரத்தை வீணாக்கமல் செயல் படும் தன்மை, தாழ்மையான குணம் என்று பல நற்குணங்களை பார்த்துவிட்டோம். அலைபாயும் நீருக்கு அணை கட்டுவதுபோல,… Continue reading இதழ்:1354 அலை பாயும் நீருக்கு அணை கட்டிய சாந்தம்!
இதழ்:1353 தன்னுடைய தாழ்மையால் பட்டயத்தை இறங்க செய்த பெண்!
1 சாமுவேல் 25:24 அவன் பாதத்திலே விழுந்து; என் ஆண்டவனே இந்தப் பாதகம் என் மேல் சுமரட்டும். மற்றவர்கள் செய்த குற்றத்துக்கு பழியை சுமப்பது என்பது என்னால் என்றுமே முடியாத ஒன்று. நான் செய்யும் தவறுகளுக்கு மற்றவர்கள் மேல் பழியை சுமத்தவும் மாட்டேன். இன்றைய வேதாகம வசனம் நிச்சயமாக என் மனதை நெகிழ வைத்தது. அவள் தாவீதண்டை சென்று தன் கணவனாகிய நாபால் செய்த அட்டூழியத்துக்கு பழியைத் தானாக முன்வந்து தன்மேல் ஏற்றுக் கொண்ட ஒரு தைரியமானப்… Continue reading இதழ்:1353 தன்னுடைய தாழ்மையால் பட்டயத்தை இறங்க செய்த பெண்!
இதழ்:1352 தாழ்மை என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன?
1 சாமுவேல் 25: 23 அபிகாயில் தாவீதைக் காண்கையில், தீவிரமாய் கழுதையை விட்டு இறங்கி, தாவீதுக்கு நேராகத் தரையில் முகங்குப்புற விழுந்து பணிந்து தாவீதும் அவனோடிருந்த 400 பேரும் தங்களுடைய உதவியை உதாசீனப்படுத்தின நாபாலுக்கு தங்களுடைய வீரத்தைக் காண்பிக்க பட்டயத்தை ஏந்தி கோபத்துடன் விரைந்தனர். அவர்களுடைய முகத்தில் கொலைவெறி காணப்பட்டது. நாபாலும் தாவீதும் சந்தித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நினைக்கவே முடியவில்லை ஆனால் அதற்குள் தாவீது சென்ற வழியில் அபிகாயில் என்ற ஒரு ஒளி அவனை சந்திக்கிறது.… Continue reading இதழ்:1352 தாழ்மை என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன?
இதழ்:1351 மன வருத்தங்களை மாற்றும் அன்பு!
1 சாமுவேல்: 25:18 அபொழுது அபிகாயில் தீவிரமாய் இருநூறு அப்பங்களையும், இரண்டு துருத்தி திராட்சரசத்தையும், சமையல் பண்ணப்பட்ட ஐந்து ஆடுகளைதும், ஐந்துபடி வறுத்த பயற்றையும், வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சக்குலைகளையும், வற்றலான இருனூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து கழுதைகள் மேல் ஏற்றி அபிகாயில் என்ற இந்த அழகும், அறிவும் வாய்ந்த பெண் தன்னுடைய ஊழியக்காரன் தன்னிடம் கூறிய வார்த்தைகளை எடை போட்டு, தன்னுடைய கணவன் நாபாலின் புத்திகெட்ட செயலால் விளையப்போகும் தீங்கை உணர்ந்து சற்றும் தாமதியாமல் செயலில் இறங்குகிறாள்… Continue reading இதழ்:1351 மன வருத்தங்களை மாற்றும் அன்பு!
இதழ்:1350 நல்வழிப்படுத்தும் ஒரு வேத பாடம்!
1 சாமுவேல் 25: 15 -17 அந்த மனுஷரோ எங்களுக்கு மிகவும் உபகாரிகளாயிருந்தார்கள். நாங்கள் வெளியிடங்களில் இருக்கும்போது அவர்கள் எங்களிடத்தில் நடமாடின நாளெல்லாம் அவர்கள் எங்களை வருத்தப்படுத்தினதுமில்லை. நமது பொருளில் ஒன்றும் காணாமற்போனதுமில்லை. நாங்கள் ஆடுகளை மேய்த்து அவர்களிடத்தில் இருந்த நாளெல்லாம் அவர்கள் இரவும் பகலும் எங்களைச் சுற்றிலும் மதிலாயிருந்தார்கள். இப்போதும் நீர் செய்யவேண்டியதைக் கவனித்துப் பாரும். ஒருவேளை கடவுள் இந்த வேதப்புத்தகத்தை கட்டுரைகளாக எழுதியிருந்தால் எப்படி அவை மனதில் நின்றிருக்குமோ என்னவோ? ஆனால் கர்த்தர்… Continue reading இதழ்:1350 நல்வழிப்படுத்தும் ஒரு வேத பாடம்!
