1 சாமுவேல் 25:13 அப்பொழுது தாவீது தன் மனுஷரைப் பார்த்து: நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொள்ளுங்கள் என்றான். 2 சாமுவேல் 2:1 பின்பு தாவீது கர்த்தரை நோக்கி: நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான். தாவீது பத்சேபாளுடன் கொண்ட உறவைப்பற்றி நாம் தொடர்ந்து படிக்கும் போது தாவீதின் சில அடிப்படை குண நலன்களை நாம் பார்க்காமல் கடந்து போகக்கூடாது. இன்றைய வசனங்கள் நமக்கு தாவீதின் குணத்தின் இரு பக்கங்களைக் காட்டுகிறது. ஒருபக்கம்… Continue reading இதழ்: 1393 கோபம் ஒருபக்கம் குணம் மறு பக்கம்!
Category: Tamil Bible study
இதழ்:1392 நமக்குள்ளே புதைந்திருக்கும் மிருகத்தன்மை!
2 சாமுவேல் 5:10 தாவீது நாளுக்கு நாள் விருத்தியடைந்தான். சேனைகளின் தேவனாகிய அவனோடேகூட இருந்தார். தேவனாகிய கர்த்தர் அவருடைய பிள்ளைகளாகிய நம்மோடு ஏற்படுத்தும் அழகிய உறவைப்பற்றி பார்த்தபின்னர், நாம் இன்று தாவீதின் வாழ்க்கையைத் தொடருகிறோம். தாவீதைப்பற்றி எல்லோருடைய மனதிலும் எழும் ஒரே கேள்வி, கர்த்தருடைய இருதயத்திற்கேற்ற ஒருவன் என்று அழைக்கப்பட்ட தாவீது எப்படி பெண்களோடு கொண்ட உறவில் தவறு செய்தான் என்று! தாவீதைப் பற்றி கடந்த சில நாட்களில் அதிகமாக படித்தபோது, தன்னுடைய இள வயதில் தேவனோடு… Continue reading இதழ்:1392 நமக்குள்ளே புதைந்திருக்கும் மிருகத்தன்மை!
இதழ்:1391 நம்மைப் போஷித்து, காத்து, வழிநடத்தும் பொறுப்புள்ளவர்!
மத்தேயு:10:29 ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல் அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. ஒருநாள் மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தபோது ஒரு கூட்டம் ( பைசன்) காட்டு எருமைகளைப் பார்த்தோம். உடனே காரை ஓரமாக நிறுத்திவிட்டு போட்டோ எடுக்க ஆரம்பித்தோம். அப்பொழுது பின்னால் இருந்த கூட்டத்துக்கு தலைவர் போல இருந்த ஒரு பலமான தோற்றம் கொண்ட ஒரு மாடு தலையை உயர்த்தி எங்களுடைய காரை முறைத்து பார்க்க ஆரம்பித்தது.… Continue reading இதழ்:1391 நம்மைப் போஷித்து, காத்து, வழிநடத்தும் பொறுப்புள்ளவர்!
இதழ்:1390 என்னோடிரும் என்றும் மாறாத என் நேச கர்த்தரே !
எபிரேயர் 13:8 இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். என்னிடம் ஒரு பழைய வாஷிங் மெஷின் இருந்தது. ஒருநாளும் ரிப்பேர் என்று யாரிடமும் கொடுத்ததேயில்லை. நான் புதிய மெஷின் வாங்கியவுடன், எத்தனையோ வருடங்கள் உழைத்த அந்த மெஷினை என்னிடம் வேலை செய்த பெண்ணுக்கு கொடுத்தேன். சில வருடங்கள் கழித்து அவளை நான் பார்த்தபோது அந்த மெஷின் இன்னும் நன்றாக வேலை செய்கிறது என்றாள். அப்படிப்பட்ட திடமான மெஷினை விட திடமான ஒரு உறவை நாம்… Continue reading இதழ்:1390 என்னோடிரும் என்றும் மாறாத என் நேச கர்த்தரே !
இதழ்:1389 நம்பும்போதுதான் அவரது நம்பகத்தன்மை தெரியும்!!
எரேமியா: 17:7 கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். நம்பிக்கை! இந்த வார்த்தைக்கு அர்த்தத்தைத் தேடி நான் அகராதிக்கு போகவேண்டாம்! அந்த வார்த்தையின் அர்த்தத்தை என் அம்மாவிடம் கண்டிருக்கிறேன். தன்னை நம்பி யார் எந்த பொறுப்பைக் கொடுத்தாலும் தன்னால் முடிந்தவரை சரியாக செய்து முடிக்கும் குணம் அம்மாவிடம் இருந்தது. ஒரு காரியத்தை மறுபடியும் ஞாபகப்படுத்தவே தேவையில்லை! எப்படியாவது அது நடந்து விடும்! ஆனால் அம்மாவைவிட நான் நம்பக்கூடியவர் யார் தெரியுமா? என்னுடைய… Continue reading இதழ்:1389 நம்பும்போதுதான் அவரது நம்பகத்தன்மை தெரியும்!!
இதழ்: 1388 தேவனின் உண்மையை ருசித்துப் பார்!
சங்: 34:8 கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள், அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். நம் ஒவ்வொருவருக்கும் எதிர்பார்ப்புகள் உண்டு. நாம் ஒரு நான்கு எதிர்பார்ப்புக்ளைப் பற்றிப்படிக்கப்போவதாக சொல்லியிருந்தேன். உங்களிடம் ஒரு கேள்வி! யாருடனாவது பழகும்போது அவர் மிகவும் நல்லவராகவும், மனதுக்கு பிடித்தவராகவும் இருந்து, பின்னால் நீங்கள் எதிர்பாராத அளவுக்கு முற்றிலும் மாறான குணம் படைத்தவர் என்று தெரிய வரும் போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது? நிச்சயமாக உங்கள் ஒவ்வொருவருக்கும் இப்படிப்பட்ட அனுபவம் இருக்கும் என்று நினைக்கிறேன்.… Continue reading இதழ்: 1388 தேவனின் உண்மையை ருசித்துப் பார்!
இதழ்:1387 ஆத்துமமே கர்த்தரையே நோக்கி காத்திரு!
சங்கீதம் 62:5 என் ஆத்துமாவே தேவனையே நோக்கி அமர்ந்திரு, நான் நம்புகிறது அவராலே வரும். 2 சாமுவேலை படித்துக் கொண்டிருக்கும் நான் ஒரு சின்ன இடைவெளியில் என் உள்ளத்தை தொட்ட இன்னொரு தலைப்பைப் பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு என்னுடைய கம்பெனியின் தேவைக்காக ஒருவரை அணுகினோம். அவர் நேரில் வந்து எங்களோடு பேசிய பின்னர் எங்களுக்கு உதவுவதாக வாக்குக்கொடுத்தார். ஆனால் அதன்பின்னர் நாங்கள் பலமுறை அணுகியும் அவர் வாக்குக்கொடுத்ததை காப்பாற்றவில்லை. நாங்கள் அவரை… Continue reading இதழ்:1387 ஆத்துமமே கர்த்தரையே நோக்கி காத்திரு!
இதழ்:1386 நீ அல்ல! நானே இதற்கு பதிற்செய்வேன்!
2 சாமுவேல் 3: 26,27 யோவாப் தாவீதை விட்டு புறப்பட்டவுடனே அவன் அப்னேரைத் தாவீதுக்குத் தெரியாமல் கூட்டிக்கொண்டுவரும்படி ஆட்களை அனுப்பினான். அப்னேர் எப்ரோனுக்குத் திரும்பி வருகிறபோது, யோவாப் அவனோடே இரகசியமாய்ப் பேசப்போகிறவன்போல அவனை ஒலிமுகவாசலின்நடுவே ஒரு பக்கமாய் அழைத்துப்போய் தன் தம்பி ஆசகேலுடைய இரத்தப்பழியை வாங்க அங்கே அவனை வயிற்றிலே குத்திக் கொன்றுபோட்டான். இன்றைய வேதாகமப்பகுதியை எப்படிப்பட்ட வார்த்தையால் விவரிப்பது என்றே தெரியவில்லை.ஒரு கொடூர பழிவாங்குதலை இங்கு பார்க்கிறோம். முதலாவது அப்னேர் சவுலின் படைத்தலைவன், ஒரு வீரன்.… Continue reading இதழ்:1386 நீ அல்ல! நானே இதற்கு பதிற்செய்வேன்!
இதழ்:1385 மீடியா மூலம் பார்க்கும் வாழ்க்கை!
2 சாமுவேல்: 3: 21 அப்னேர் தாவீதை நோக்கி: நான் எழுந்துபோய் இஸ்ர்வேலரை எல்லாம் உம்மோடே உடன்படிக்கைபண்ணும்படிக்கு, ராஜாவாகிய என் ஆண்டவனிடத்தில் சேர்த்துக்கொண்டு வருகிறேன். அதினாலே உம் ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் என்றான். இன்றைய வசனத்தை வாசிக்கும்போது அது நம்முடைய அன்றாட வாழ்வில் நமக்கு எதைக் கற்பிக்கிறது என்று சற்று நேரம் சிந்தித்தேன். என்னுடைய வாலிப வயதில் நான் விரும்பினவை எல்லாமே எனக்கு நிச்சயமாக கிடைத்ததில்லை. சில நேரங்களில் நான் எதிர்பார்க்காமல் வந்த சில சிறிய… Continue reading இதழ்:1385 மீடியா மூலம் பார்க்கும் வாழ்க்கை!
இதழ்:1384 உன் ஆணவத்தால் நிம்மதியை இழந்து விடாதே!
2 சாமுவேல் 3: 15,16 அப்பொழுது இஸ்போசேத் அவளை லாயீசின் குமாரனாகிய பல்த்தியேல் என்னும் புருஷனிடத்திலிருந்து அழைத்துவர ஆட்களை அனுப்பினான். அவள் புருஷன் பகூரீம்மட்டும் அவள் பிறகாலே அழுதுகொண்டு வந்தான். அப்னேர் அவனை நோக்கி நீ திரும்பிப்போ என்றான். அவன் திரும்பிப்போய்விட்டான். தாவீதுக்கும் மீகாளுக்கும் நடுவில் இருந்த அன்பின் கதை 1 சாமுவேல் 18:28 ல் ஆரம்பித்தது. மீகாள் தாவீதை நேசித்தாள், ஆனால் ஒருவேளை தாவீது அவளை உண்மையாக நேசித்தானா அல்லது சவுல் ராஜாவின் மகள் என்பதற்காக… Continue reading இதழ்:1384 உன் ஆணவத்தால் நிம்மதியை இழந்து விடாதே!
