1 சாமுவேல் 16:1 கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய். நீ உன் கொம்பைத் தைலத்தால் நிரப்பிக்கொண்டு வா. பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன். அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார். நாம் சவுலைப் பற்றி நேற்று பார்த்தது மிகவும் வருந்தத்தக்க ஒன்று என்பதை நாம் அறிவோம். சவுல் தன்னுடைய முரட்டாட்டத்தால் தன்னுடைய தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொண்டான் என்று பார்த்தோம். அதே… Continue reading இதழ்:1314 ஒரு நொடியில் ஆசீர்வாதங்கள் விலகிப் போகும்!
Category: Tamil Bible study
இதழ்:1313 சிறப்பான ஆரம்பம் ஆனால் கசப்பான முடிவு!
1 சாமுவேல் 15 : 23 இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனியப்பாவத்துக்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும், விக்ரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது. நீர் கர்த்தருடைய வார்த்தையைப் பறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினான் என்றான். ஒருநாள் நாங்கள் வால்பாறையிலிருந்து திரும்பும்போது ஒரு ஆண் யானை தனியாக நின்றுகொண்டிருந்தது. காரை சற்று ஓரம் நிறுத்தி அதனைப் பார்த்தோம். வாட்டசாட்டமான அந்த யானை திடீரென்று தன் தும்பிக்கையால் மண்ணை எடுத்து அதன் தலையின்மேல் இரைக்க ஆரம்பித்தது. அதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தாலும் அதிக நேரம் அங்கு… Continue reading இதழ்:1313 சிறப்பான ஆரம்பம் ஆனால் கசப்பான முடிவு!
இதழ்:1312 தேவனுடைய பார்வையில் விசேஷித்த ஊழியம்!
1 சாமுவேல் 15:17 அப்பொழுது சாமுவேல்: நீர் உம்முடையப் பார்வைக்குச் சிறியவராயிருந்தபோது அல்லவோ இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர். இந்த வருடத்தின் கடைசி மாதத்திற்கு வந்துவிட்டோம்! இது கர்த்தர் நமக்கு அளித்திருக்கும் மாபெரிய ஈவு அல்லவா? கோடானுகோடி ஸ்தோத்திரங்களை அவருக்கு நாம் ஏறெடுப்போம்! இந்த மாதம் நம்மில் அனைவருக்கு சந்தோஷத்தை கொண்டு வரும் மாதம்! ஆம்!! நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் பிறப்பை நாம் நினைவு கூறும் மாதம் இது ! தேவனாகிய கர்த்தருடைய பிரசன்னம் நம் அனைவரோடும் இருந்து… Continue reading இதழ்:1312 தேவனுடைய பார்வையில் விசேஷித்த ஊழியம்!
இதழ்:1311 கிறிஸ்தவ வாழ்க்கையை அழிக்கும் சிறுநரிகள்!
1 சாமுவேல் 15: 13,14 சாமுவேல் சவுலினிடத்தில் போனான்.சவுல் அவனை நோக்கி நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர். கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான். அதற்குச் சாமுவேல்: அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்றான். ஒருவர் தான் செய்த தவறை மறைக்கும் படியாக நாவில் தேன்ஒழுகும் வார்த்தைகளை பேசுவதைப்பார்த்து இப்படியும் ஒருவர் போலியாக இருக்கமுடியுமா என்று வியந்த அனுபவம் உங்களுக்கு உண்டா? இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுல் இங்கு அப்படித்தான்… Continue reading இதழ்:1311 கிறிஸ்தவ வாழ்க்கையை அழிக்கும் சிறுநரிகள்!
இதழ்: 1310 உன்னை நேசிப்பவருக்கு இந்த மனவேதனையை கொடுக்காதே!
1 சாமுவேல் 15: 10,11 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது: நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது. இன்றைய வேத பகுதியை வாசிக்கும்போது நாம் என்றைக்காவது நம்முடையப் பிள்ளைகளைப் பார்த்து இவனை அல்லது இவளை ஏன் பெற்றோமோ என்று மனஸ்தாபப் பட்டதுண்டோ என்று சிந்தித்தேன்! அவர்கள் தவறு பண்ணியபோதுகூட ஒருநாளும் அந்த எண்ணம் தலைதூக்கியதேயில்லை. பிள்ளைகள் தவறு பண்ணும்போது மனவேதனை உண்டு ஆனால் மனஸ்தாபம் இல்லை என்றுதானே என்னைப்போல நீங்களும் நினைக்கிறீர்கள்! இந்த… Continue reading இதழ்: 1310 உன்னை நேசிப்பவருக்கு இந்த மனவேதனையை கொடுக்காதே!
இதழ்: 1309 என்ன அருமையான யோசனை!
1 சாமுவேல் 15: 1,3, 9 பின்பு சாமுவேல் சவுலை நோக்கி: ....இப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும். .... இப்பொழுதும் நீ போய் , அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், கழுதைகளையும், கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான். சவுலும், ஜனங்களும் ஆகாகையும்,ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும் அழித்துபோட மனதில்லாமல் தப்ப வைத்து, அற்பமானவைகளும், உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்… Continue reading இதழ்: 1309 என்ன அருமையான யோசனை!
இதழ்:1308 கர்த்தர் என்ன நம் பக்கத்திலா இருக்கிறார்!
1 சாமுவேல் 14:6 யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய அந்தத் தாணையத்துக்குப் போவோம் வா. ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார். அநேகம்பேரைக் கொண்டாகிலும்,கொஞ்சம்பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை என்றான். கடவுள் எப்படி என் தேவைகளை அறிந்து எனக்காக யாவையும் செய்ய முடியும்! அவர் என்ன நம் அருகில் இருக்கிறாரா? என்னைப்போல் எத்தனை கோடி மக்கள் தங்களை அவருடைய பிள்ளைகள் என்கிறார்கள்! அத்தனைபேரில் சத்தமும் அவர் காதில் விழுமா? என்று… Continue reading இதழ்:1308 கர்த்தர் என்ன நம் பக்கத்திலா இருக்கிறார்!
இதழ்: 1307 தனிமையில் தேவனைத் தேடு!
1 சாமுவேல் 13:14 இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது.கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கேற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்களின்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார். கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளவில்லையே என்று சொன்னான். நான் என்று வேதத்தை படிக்க ஆரம்பித்தேனோ அன்றிலிருந்து தாவீதைப் பற்றி அதிகமாக படிப்பேன். முதலில் தாவீது கோலியாத்! பின்னர் தாவீது பத்சேபாள்!!!! உண்மையிலேயே இந்த ஹீரோவின் வாழ்க்கையில் உயர்வு தாழ்வுகள் இருந்தன! உயர்வும் தாழ்வும் இல்லாத கிறிஸ்தவ வாழ்க்கையை… Continue reading இதழ்: 1307 தனிமையில் தேவனைத் தேடு!
இதழ்: 1306 ஆயிரம் உபதேசங்களை விட ஒரு கீழ்ப்படிதல் நலம்!
1 சாமுவேல் 13: 9 அப்பொழுது சவுல்: சர்வாங்கதகனபலியையும் சமாதானபலிகளையும் என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்று சொல்லி, சர்வாங்கதகனபலியைச் செலுத்தினான். சந்தர்ப்பவாதி என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டதுண்டா? சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக உபயோகப்படுத்துபவர்கள் அவர்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசுபவர்களையும்,செயல்படுபவர்களையும் கூட நான் அப்படித்தான் நினைப்பேன். வேதவார்த்தைகளைக் கூட அவர்களுக்கு சாதகமாகத் திறமையாக மாற்றிக்கொள்வார்கள். சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு நான் நடந்துகொள்வேன் அது கர்த்தருடைய வார்த்தைக்கு விரோதமாக இருந்தாலும் பரவாயில்லை, அந்த வசனத்தை எனக்கு சாதகமாக மாற்றிக்கொள்வேன் என்ற குணம்! இப்படிப்பட்ட சந்தர்ப்பவாத… Continue reading இதழ்: 1306 ஆயிரம் உபதேசங்களை விட ஒரு கீழ்ப்படிதல் நலம்!
இதழ்: 1305 இன்னும் சற்று பொறுமையோடு காத்திரு!
1 சாமுவேல் 13:7,8 ...சவுலோ இன்னும் கில்காலில் இருந்தான்.சகல ஜனங்களும் பயந்து கொண்டு அவனுக்குப்பின் சென்றார்கள். அவன் தனக்குச் சாமுவேல் குறித்த காலத்தின்படி ஏழுநாள்மட்டும் காத்திருந்தான். சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை. ஜனங்கள் அவனைவிட்டுச் சிதறிப்போனார்கள். ஒருமுறை ஒரு செயற்குழுவுக்குச் சென்றிருந்தேன். காலை 10.30 க்கு அங்கேயிருக்க வேண்டுமென்று அவசர அவசரமாக சென்றால் 11.15 வரை நாங்கள் 3 பேர் தான் உட்கார்ந்திருந்தோம். செயற்குழு தலைவர் எப்பொழுதும் எங்களுக்கு முன்னால் வருபவர். அன்றைய தாமதத்தின் காரணம் தெரியாமல் காத்திருந்த… Continue reading இதழ்: 1305 இன்னும் சற்று பொறுமையோடு காத்திரு!
