1 சாமுவேல் 3: 19 “சாமுவேல் வளர்ந்தான்; கர்த்தர் அவனுடனேகூட இருந்தார்; அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்து போகவில்லை. இன்று நாம் இந்த வசனத்தைப் பார்க்கும் முன்னர், ” …உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல் வார்த்தைகளிலெல்லாம் ஒருவார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும், உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள். அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒருவார்த்தையும் தவறிப்போகவில்லை” (யோசுவா 23:14 ) என்ற யோசுவாவின் வார்த்தைகளை சற்றுத் திரும்பிப்… Continue reading இதழ்:1284 மனம் மாற கர்த்தர் ஒரு மனிதன் அல்ல!
Category: Tamil Bible study
இதழ்:1283 உம்மைத் துதிக்காத நாவும் கேளாத செவியும் மகிமை இழந்ததெ!
1 சாமுவேல்: 4: 21, தேவனுடைய பெட்டி பிடிபட்டு. அவளுடைய மாமனும், அவளுடைய புருஷனும் இறந்து போனபடியினால், அவள்: மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்று சொல்லி, அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்று பேரிட்டாள். இன்றைய வேதாகமப் பகுதியில், நிறை கர்ப்பிணியான ஏலியின் மருமகள், கர்த்தரின் பெட்டி பிடிபட்டதையும், தன் கணவனும், மாமனாரும் மரித்துப் போனதையும் கேட்ட போது, வேதனையில் பிரசவித்து கர்த்தரின் மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்றாள் என்று பார்க்கிறோம். மறுபடியும் இங்கு சிம்சோனின்… Continue reading இதழ்:1283 உம்மைத் துதிக்காத நாவும் கேளாத செவியும் மகிமை இழந்ததெ!
இதழ்:1282 கடவுள் உன் தேவைக்காக உபயோகப்படுத்தும் பொருள் அல்ல!
I சாமுவேல் 4:3 ஜனங்கள் திரும்பப் பாளயத்துக்கு வந்தபோது, இஸ்ரவேலின் மூப்பரானவர்கள், இன்று கர்த்தர் பெலிஸ்தருக்கு முன்பாக நம்மை முறிய அடித்ததென்ன? சீலோவிலிருக்கிற கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டு வருவோம்; அது நம்மை நம்முடைய பகைஞரின் கைக்கு விலக்கி ரட்சிக்கும்படி, நம்முடைய நடுவிலே வரவேண்டியது என்றார்கள். நம்முடைய இந்த ராஜாவின் மலர்த்தோட்டத்துக்கு ஒவ்வொரு நாளும் உலகத்தின் 38 நாடுகளிலிருந்து சகோதர சகோதரிகள் வந்து பயனடைகின்றனர். உங்கள் அனைவருக்கும் மனித உழைப்பைக் குறைக்கும் வகையில் வந்திருக்கும் மின்சாதனங்களைப் பற்றி… Continue reading இதழ்:1282 கடவுள் உன் தேவைக்காக உபயோகப்படுத்தும் பொருள் அல்ல!
இதழ்:1281 கர்த்தரின் சத்தம் நம் பிள்ளைகளின் செவிகளில் விழுகிறதா?
1 சாமுவேல்:2:26 சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ பெரியவனாக வளர்ந்து கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்து கொண்டான். 1 சாமுவேல் 3:10 அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்கு சாமுவேல்: சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான். ஒருநாள் நான் ஒரு அமைதியான புல் வெளியில் அமர்ந்து சிறு பிள்ளைகள் விளையடுவதைக் கவனித்துக் கொண்டிருந்தேன். இளம் தாய்மார்கள் தங்கள் சிறு குழந்தைகளைக் கைகளில் பிடித்துக் கொண்டு நடந்தனர். என் மனக்கண்களில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு… Continue reading இதழ்:1281 கர்த்தரின் சத்தம் நம் பிள்ளைகளின் செவிகளில் விழுகிறதா?
இதழ்:1280 புயலுக்கு முன்னரே நங்கூரத்தை ஸ்திரமாய் போடு!
1 சாமுவேல்: 2: 11, 12 ” பின்பு எல்க்கானா ராமாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போனான்; அந்தப் பிள்ளையோ ஆசாரியனாகிய ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான். ஏலியின் குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள்; அவர்கள் கர்த்தரை அறியவில்லை.” நாம் பிறக்கும்போதே எல்லாவற்றையும் அறிந்தவராய்ப் பிறப்பதில்லை! இந்த உலகத்தில் நாம் வாழும் ஒவ்வொரு நாளும் நமக்கு ஏதாவது ஒரு கல்வி பயலும் நாள் தான்! நம்முடைய வாழ்வின் அனுபவங்கள் ஒவ்வொன்றும் நமக்கு எதையாவது போதிக்கின்றன! சில பாடங்களை நாம்… Continue reading இதழ்:1280 புயலுக்கு முன்னரே நங்கூரத்தை ஸ்திரமாய் போடு!
இதழ்: 1279 பிள்ளைகளை அரவணைக்க ஒருபோதும் தவறாதே!
1 சாமுவேல் 2: 19 “அவனுடைய தாய் வருஷந்தோறும் செலுத்தும் பலியைச் செலுத்துகிறதற்காக, தன் புருஷனோடேகூட வருகிறபோதெல்லாம், அவனுக்கு ஒரு சின்னச் சட்டையைத் தைத்துக் கொண்டு வருவாள்”. ஒரு நாற்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னால் என்னுடைய அம்மாவின் கையால் செய்த ஒரு பொம்மையை நான் இன்றும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறேன். அந்த பொம்மையை செய்த ஒரு வருடத்தில் அவர்கள் மரித்துப் போனாலும் அது எனக்கு ஒரு அன்பின் அடையாள சின்னமாகவே இருக்கிறது. என்னுடைய கணவர் வீட்டிலிருந்து நாங்கள்… Continue reading இதழ்: 1279 பிள்ளைகளை அரவணைக்க ஒருபோதும் தவறாதே!
இதழ்: 1278 உன் பிள்ளைகளுக்காக மன்றாடி ஜெபி!
1 சாமுவேல்: 2: 1 “அப்பொழுது அன்னாள் ஜெபம் பண்ணி” அன்னாளின் குடும்ப வாழ்க்கையைப் பற்றியும், ஆவிக்குரிய வாழ்க்கையைப் பற்றியும் சில வாரங்கள் நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். அன்னாளின் வாழ்க்கையை ஆழமாக படிக்க ஆரம்பித்த எனக்கு அவள் மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது போல் உங்களுக்கும் இருந்திருப்பாள் என்று நினைக்கிறேன். அன்னாளின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கும்போது பிள்ளைக்காக அவள் ஜெபித்த ஜெபமே அவளுடைய வாழ்க்கையில் ஒரு ஆயுதமாக இருந்தது. ஜெபத்துக்கு எவ்வளவு வல்லமை உள்ளது என்று அந்தத் தாய்… Continue reading இதழ்: 1278 உன் பிள்ளைகளுக்காக மன்றாடி ஜெபி!
இதழ்:1277 இருளுக்கு பின் ஒளி வீசும் என்பதை மறந்து விடாதே!
1 சாமுவேல் 1:18 ” அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயை கிடைக்கக்கடவது என்றாள்; பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை. சென்னையில் ஒருநாள் நான் மேகம் இருட்டிக் கொண்டு வருவதைக் கண்டேன். அந்தக் கரு மேகத்துடன் வந்தது புயல் போன்ற பெருங்காற்று! எங்களுடைய மரங்கள் ஒடிந்து விழுவது போல ஆடிக்கொண்டிருந்தபோது வந்தது ஒரு கனத்த பெருமழை! அந்த வேளையில் மரங்கள் ஆடுவதையே பார்த்துக் கொண்டிருந்த என்னுடைய கவனத்தை, பெரு… Continue reading இதழ்:1277 இருளுக்கு பின் ஒளி வீசும் என்பதை மறந்து விடாதே!
இதழ்:1276 என் மாம்சமானது உம்மையே வாஞ்சிக்கிறது!
1 சாமுவேல்: 1: 13 ” அன்னாள் தன் இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள் மாத்திரம் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கப்படவில்லை;” அன்னாள் தன்னுடைய கனவுகள் நொறுங்கிப் போனவளாய், இருதயம் உடைந்தவளாய், தேவனுடைய சமுகத்துக்கு வந்தாள். அவள் மேல் எறியப்பட்ட வார்த்தைகள் அவளை அம்பு போல குத்தின. எந்த மனிதராலும் புரிந்து கொள்ள முடியாத நிலையில் வேதனை நிறைந்தவளாய், கண்களில் நீர் பனிக்க தன் ‘இருதயத்திலே பேசினாள் ‘ என்று பார்க்கிறோம். அன்னாளின் ஜெபத்தைப் பற்றி நாம்… Continue reading இதழ்:1276 என் மாம்சமானது உம்மையே வாஞ்சிக்கிறது!
இதழ்:1275 ஒளிமயமாகும் என் வாழ்விலும் உம்மையே கனம் பண்ணுவேன்!
1 சாமுவேல் 1: 11 “…. ஒரு பொருத்தனை பண்ணினாள்” பொருத்தனை என்ற வார்த்தையைக் கேட்ட வுடன் என் நினைவுக்கு வருவது முரட்டுத்தனமான யெப்தாவின் பொருத்தனைதான் (நியா:11;30 ). நாம் அவனைப் பற்றியும், அவனுடைய பொருத்தனைக்கு பலியான அவன் குமாரத்தியைப் பற்றியும் பல நாட்கள் படித்தோம். பொருத்தனை என்ற வார்த்தை என்னைப் பொருத்தவரையில் சற்று பயமூட்டும் வார்த்தையே. அநேக நேரங்களில் உணர்ச்சிவசமாக நான் இதை செய்ய மாட்டேன், அதை செய்ய மாட்டேன் என்று நாம் கர்த்தரிடம் பொருத்தனை… Continue reading இதழ்:1275 ஒளிமயமாகும் என் வாழ்விலும் உம்மையே கனம் பண்ணுவேன்!
