2 சாமுவேல் 12:7 ....இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னை சவுலின் கைக்கு தப்புவித்து, உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கையளித்தேன். இது போதாதிருந்தால் இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன். நாத்தான் தீர்க்கதரிசி தாவீதின் முன்னால் நின்று ஒரு ஐசுவரியவான் ஒரு ஏழையினுடைய ஆட்டுக்குட்டியைத் திருடி சமைத்த கதையைக் கூறியது… Continue reading இதழ்: 749 இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன்!
Category: Tamil Bible study
இதழ்: 748 நீ என்ன அவ்வளவு பெரியவனா?
2 சாமுவேல் 12:7 ....இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி..... நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் வெள்ள நீர் தலைமேல் போய் நாம் மூச்சுத்திணறுவது போன்ற காலம் வருவதுண்டு அல்லவா? அப்படிப்பட்ட நேரங்களில் நான் இரவில் வெளியெ வெறித்துப் பார்ப்பதுண்டு! நட்சத்திரக் கூட்டங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை! அவைகளைப் பார்க்கும்போது கர்த்தர் எவ்வளவு அழகான வடிவமைப்பாளர் என்று யோசிப்பேன்! யோபு 38:31ல் ஆறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்த சம்பத்தை நீ… Continue reading இதழ்: 748 நீ என்ன அவ்வளவு பெரியவனா?
இதழ்: 747 நீ சிக்கிய சிலந்தி வலை!
2 சாமுவேல்: 12:7 அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன் தாவீது சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறான்! இஸ்ரவேலை ஆளும்படி தேவனாகிய கர்த்தரால் நியமிக்கப்பட்ட ராஜா அவன்! அரண்மனைக்கு அன்று ஒரு விருந்தாளி வந்திருக்கிறார். இந்தமுறை அந்த விருந்தாளி ஒன்றும் தேநீர் குடிக்க வரவில்லை! தேவனுடைய செய்தியோடு வந்திருக்கிறார் அவர்! முதலில் அவர் ஏதோ ஒரு பணக்காரனால் திருடப்பட்ட ஒரு ஆட்டுக்குட்டியின் கதையோடு வந்த மாதிரி இருந்தாலும், சீக்கிரமே அவர் வந்த காரியத்தின் நோக்கம் வெளிப்பட்டுவிட்டது. தாவீது… Continue reading இதழ்: 747 நீ சிக்கிய சிலந்தி வலை!
இதழ்:746 நாலத்தனையாய் கொடுக்கும் உள்ளம்!
2 சாமுவேல் 12:6 அவன் இரக்கமற்றவனாயிருந்து, இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், அந்த ஆட்டுக்குட்டிக்காக நாலத்தனை திரும்பச் செலுத்தவேண்டும் என்றான். நாத்தான் கூறிய கதையின் மூலம் ஐசுவரியவான் ஒருவன் ஏழையின் ஆட்டுக்குட்டியைத் திருடி சமைத்ததை அறிந்தவுடன் தாவீது அவன் மீது மிகவும் கோபப்பட்டு அவன் மரண தண்டனை பெற வேண்டும் என்று கூறியதை பார்த்தோம். இன்றைய வேதாகமப் பகுதியில் தாவீது அந்த ஆட்டுக்குட்டிக்காக நாலத்தனை திரும்பச் செலுத்தவேண்டும் என்பதைப் பார்க்கிறோம். இதைப்படிக்கும்போது லூக்கா 19 ல் நாம் வாசிக்கும் சகேயு… Continue reading இதழ்:746 நாலத்தனையாய் கொடுக்கும் உள்ளம்!
இதழ்: 745 தகுதியற்ற எனக்கு அளித்த கிருபை!
2 சாமுவேல் 12:5 அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் (அந்த பணக்காரன் மேல்) மிகவும் கோபம் மூண்டவனாகி, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தை செய்த மனுஷன் மரணத்துக்குப் பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன். தாவீதுக்கு பயங்கர கோபம்! தீர்க்கதரிசியான நாத்தான் கூறிய கதையில் வந்த ஐசுவரியவான் ஒரு ஏழையின் ஆட்டுக்குட்டியைத் திருடி விட்டான். உடனே அவன் நியாயம்தீர்க்கப் பட் வேண்டும் என்று நினைத்தான் தாவீது.… Continue reading இதழ்: 745 தகுதியற்ற எனக்கு அளித்த கிருபை!
இதழ்: 744 உண்மையில் யார் குற்றவாளி?
2 சாமுவேல் 12:5 அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் (அந்த பணக்காரன் மேல்) மிகவும் கோபம் மூண்டவனாகி.... நீ யாருடைய தவறையாவது சீர் திருத்த நினைக்கும்போது உன்னையே சற்றுக் கண்ணாடியில் பார்த்துக்கொள் என்று யாரோ எழுதியதை படித்திருக்கிறேன். நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களை குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ( மத்:7:1) என்று கர்த்தராகிய இயேசு சொன்னார். மற்றவருடைய குற்றத்தை நாம் சுலபமாக கண்டுபிடித்து விடுவோம், நம்முடைய குற்றம் மட்டும்தான்… Continue reading இதழ்: 744 உண்மையில் யார் குற்றவாளி?
இதழ்: 743 அப்பத்தை பகிர பின்வாங்காதே!
2 சாமுவேல் 12: 4 அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்கு சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல்..... நாத்தான் தாவீதிடம் கூறிய கதையில் பணக்காரன் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியை இச்சித்ததாகப் பார்த்தோம். அந்த இச்சை தான் அவனை தரித்திரன் வீட்டில் இருந்த ஆட்டுக்குட்டியைத் திருட வைத்தது. இன்றையதினம் நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய சுயநலமற்ற, இரக்க மனப்பான்மையை பற்றிப் பார்ப்போம். இது நாம் பார்த்த இச்சை, பெருமை… Continue reading இதழ்: 743 அப்பத்தை பகிர பின்வாங்காதே!
இதழ்: 742 தேவையா? இச்சையா?
2 சாமுவேல் 12: 4 அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்கு சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்த தரித்திரனுடைய ஆட்டுக் குட்டியைப் பிடித்து அதைத் தன்னிடத்தில்வந்த மனுஷனுக்கு சமையல் பண்ணுவித்தான் என்றான். ஆதியாகமத்தில் நாம் ஆபிரகாமின் குடும்பமும், லோத்தின் குடும்பமும் பலுகிப் பெருகிப்போனதைப் பார்க்கிறோம். இருவரும் பெரிய ஆஸ்தியை சேர்த்துவிட்டனர், அவர்களுடைய ஆடு மாடுகளுக்கு இடம் கொள்ளவில்லை. அதனால் ஆபிரகாம் தன்னுடைய குமாரனைப்போல இருந்த… Continue reading இதழ்: 742 தேவையா? இச்சையா?
இதழ்:741 எண்ணத்தின் தோற்றத்தை அறிவார்!
2 சாமுவேல் 12: 4 அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்கு சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்த தரித்திரனுடைய ஆட்டுக் குட்டியைப் பிடித்து அதைத் தன்னிடத்தில்வந்த மனுஷனுக்கு சமையல் பண்ணுவித்தான் என்றான். நாத்தான் தாவீதிடம் ஒரு கதையுடன் வந்ததைப் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது ஏழை, பணக்காரனுடைய கதை! அந்த பணக்காரனிடத்தில் ஒரு வழிப்போக்கன் உணவைத்தேடி வருகிறான். அவன் எந்த வேளையில் வந்தான், எப்படிப்பட்ட நிலையில்… Continue reading இதழ்:741 எண்ணத்தின் தோற்றத்தை அறிவார்!
இதழ்: 740 வழிப்போக்கனான என்னை போஷித்தவர்!
2 சாமுவேல் 12:4. அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்கு சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல்..... வீட்டுக்கு வந்தவர்களை உபசரிப்பது நம்முடைய நாட்டின் கலாசாரம் அல்லவா? நம்மைப்போல பல தேசங்களில் இந்த கலாசாரம் காணப்படுகிறது. ஒருதடவை நாங்கள் நேபாள தேசத்துக்குப் போனபோது ஏதோ ஒரு கிராம தகராறு காரணமாக எங்களுடைய கார் தலைநகருக்குள் போக அனுமதிக்கப்படவில்லை. இரவு பொழுது போயிற்று! எல்லா ஹோட்டல்களும் மூடப்பட்டன! என்ன செய்வதென்று அறியாது… Continue reading இதழ்: 740 வழிப்போக்கனான என்னை போஷித்தவர்!
