யோசு:2:11 “……உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும், கீழே பூமியிலும் தேவனானவர்.” சில வருடங்களுக்கு முன்னர், நான் கம்பெனி நடத்திக் கொண்டிருந்த போது உலக பொருளாதார நிலைமையால் எங்கள் கம்பெனியின் ஏற்றுமதி மிகவும் குறைவுபட்டது. அநேக தொழிலாளர்கள் இருந்ததால் வேலையை நிறுத்தமுடியாமல் தொடர்ந்துவந்தோம். நாங்கள் தயாரித்த ஆடைகள் குவிய ஆரம்பித்தது. ஒரு வருடம் எப்படியோ சமாளித்து விட்டேன், அடுத்த வருடம் என்னால் கம்பெனியில் வேலை செய்தவர்களின் ஊதியம், பராமரிப்பு இவற்றை சமாளிக்க முடியாமல் திணறினேன். என்னுடைய உடல்நிலை… Continue reading இதழ்:2452 காணப்படாதவைகளை விசுவாசிக்கக் கிருபை தாரும்!
Category: Tamil Bible study
இதழ்:2451 இரக்கமும், அன்பும் காட்டத் தவறி விடாதே!
யோசுவா 2:12 ”இப்பொழுதும் நான் உங்களுக்கு தயவு செய்தபடியினால், நீங்களும் என் தகப்பன் குடும்பத்துக்கு தயவு செய்வோம் என்று கர்த்தர் பேரில் எனக்கு ஆணையிட்டு.” சுனாமியால் சென்னையின் கடலோரப் பகுதிகள் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு உதவி செய்ய அடிக்கடி நாங்கள் நாகப்பட்டினம் சென்று வந்தோம். அந்த சமயத்தில் அநேக மசூதிகளும், தேவாலயங்களும், மக்களை தங்கவைத்து அடைக்கலம் கொடுத்தனர். கிறிஸ்தவர்கள் என்றோ முஸ்லிம்கள் என்றோ, இந்துக்கள் என்றோ எந்த பாகுபாடும் இன்றி ஒருவருக்கொருவர் உதவி செய்தனர். ஜாதி மத வேறுபாடால்… Continue reading இதழ்:2451 இரக்கமும், அன்பும் காட்டத் தவறி விடாதே!
இதழ்:2450 உம்மை அறிய கிருபை தாரும்!
யோசுவா: 2:9 ”கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக் கொடுத்தாரென்றும்…..அறிவேன்” யோசுவாவால் அனுப்பப்பட்ட இஸ்ரவேலின் வேவுகாரர் இருவர் ராகாபின் வீட்டில் நுழைந்தபோது, எரிகோவின் ராஜாவால் எச்சரிக்கப் பட்டும், ஒரு நொடி கூட பின்னோக்காமல் இஸ்ரவேலின் ராஜாதி ராஜாவுக்கு கீழ்ப்படிய முடிவு செய்து, அந்த இரண்டு மனிதரையும் ராகாப் தன்னுடைய வீட்டில் ஒளித்து வைத்தாள் என்று நேற்று நாம் பார்த்தோம். ராகாப் அவர்களிடம் கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக் கொடுத்தாரென்று அறிவேன் என்பதாக இன்றைய வேத வசனம் கூறுகிறது. இந்த… Continue reading இதழ்:2450 உம்மை அறிய கிருபை தாரும்!
இதழ்:2449 Wishing you all a very Blessed New Year 2026!
யோசுவா 2:2 அப்பொழுது எரிகோவின் ராஜா ராகாபண்டைக்கு ஆள் அனுப்பி உன்னிடத்தில் வந்து உன் வீட்டுக்குள் பிரவேசித்த மனுஷரை வெளியே கொண்டுவா; அவர்கள் தேசத்தையெல்லாம் வேவுபார்க்கும்படி வந்தார்கள் என்றான். உலகமெங்கும் இந்த தினசரி தியானத்தைத் தவறாமல் வாசிக்கும் என் அன்பு சகோதர சகோதரிகளுக்கு இந்தப் புதிய ஆண்டு ஒரு பெரிய ஆசீர்வாதமான ஆண்டாக மலர வேண்டுமென்று ஜெபிக்கிறேன். தேவன் நமக்காக வைத்திருக்கும் ஆசீர்வாதங்கள் தடையில்லாமல் நம்மை வந்தடைய அவருடைய கரத்துக்குள் நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்! நாம் ராகாபைப்… Continue reading இதழ்:2449 Wishing you all a very Blessed New Year 2026!
THANK YOU LORD FOR 2025!
This morning as the year 2025 is coming to an end I sat down to worship the Lord with gratitude filling my heart! Very grateful for His Grace - the free and boundless mercy of God. The grace that filled the Father's heart and led Him to send His only begotten son Jesus to earth!… Continue reading THANK YOU LORD FOR 2025!
இதழ்:2448 இன்னும் ஒரு தருணம்!
யோசுவா: 2:1 ”நூனின் குமாரனாகிய யோசுவா சித்தீமிலிருந்து வேவுகாரராகிய இரண்டு மனுஷரை இரகசியமாய் வேவு பார்க்கும்படி அனுப்பி நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்து வாருங்கள் என்றான்; அவர்கள் போய் ராகாப் என்னும் பெயர் கொண்ட வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து….” நாடகங்கள் பார்த்த அனுபவம் உண்டா? நாடகத்துக்கு உயிர் கொடுப்பது அதன் பின்னணி தானே! ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி வருவதற்குள் மேடையின் பின்னணி அதற்குத் தக்கவாறு மாறினால் தான் காட்சிக்கு உயிர் கிடைக்கும்! நாம்… Continue reading இதழ்:2448 இன்னும் ஒரு தருணம்!
இதழ்:2447 தேவனுடைய வார்த்தைகளின் மேல் அசராத நம்பிக்கை வை!
யோசுவா: 1: 9 நான் உனக்குக் கட்ளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்..” மோசே இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து வழிநடத்த கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட தாசன். யாத்திராகமம் 3 ம் அதிகாரத்திலிருந்து உபாகமம் 34 ம் அதிகாரம் வரை வேதத்தில் மோசேயுடைய ஊழியத்தைபற்றிப் படிக்கிறோம். நீண்ட காலம் தலைவராயிருந்த மோசேயை இழந்ததும் மக்கள் துக்கமடைந்தனர். இன்னும் வனாந்தரத்தைத் தாண்டவில்லை! யோர்தானைக் கடக்க வேண்டும்! எதிரிகளை முறியடிக்கவேண்டும்! கானானை… Continue reading இதழ்:2447 தேவனுடைய வார்த்தைகளின் மேல் அசராத நம்பிக்கை வை!
இதழ்:2446 நீரே என் அடைக்கலம்! நீரே என் ஆதாரம்!
உபாகமம்:33:27 “ அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; ” வேதத்தை வாசிப்பது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அநேகர் சங்கீதத்தை தவிர மற்ற பழைய ஏற்பாட்டு புத்தகங்களைத் தவிர்த்து விடுவதைப் பார்த்திருக்கிறேன்! அதிலும் இந்த உபாகமம் புத்தகத்தின் விநோதமான இந்தப் பெயருக்கு நமக்கு அர்த்தமே தெரியாது பின்னர் எப்படி வாசிப்பது என்று நினைப்பார்கள்! கிறிஸ்துமஸ் வாரத்துக்கு முன்பு இந்த உபாகமம் புத்தகத்தை நாம் சில வாரங்கள் படிக்க கர்த்தர்… Continue reading இதழ்:2446 நீரே என் அடைக்கலம்! நீரே என் ஆதாரம்!
இதழ்:2445 கிஸ்துமஸ் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளத் தவறாதே!
யாத்தி:22:22,23 ”விதவையையும், திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக; அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்டு..” நாம் இந்தக் கிறிஸ்துமஸ் காலத்தில் மறக்காமல் செய்ய வேண்டிய ஒன்றை இன்று நினைவுபடுத்த விரும்புகிறேன்! என்னுடைய வால்பாறை வீட்டில் ஒரு அழகிய சில்வர் ஓக் மரம் நின்றது. அது இலைகளை பரப்பியவிதமாக நின்றபோது அநேக பறவைகள் அதன் மேல் வந்து உட்காரும். மயில் தோகை விரித்து ஆடுவது போல அதன் இலைகள்… Continue reading இதழ்:2445 கிஸ்துமஸ் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளத் தவறாதே!
இதழ்:2444 wishing all my readers a very Blessed Christmas!
தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்.-2 கொரி 9 : 15 தேவனுடைய பிறப்பைப்பற்றி வார்த்தைகளால் சொல்ல முடியாத அப்போஸ்தலனாகிய பவுல் கூறிய வார்த்தைகளைப் பாருங்கள்! இயேசு என்ற ஈவை நமக்குத் தந்தருளிய தேவனாகியக் கர்த்தருக்குக் கோடாகோடி ஸ்தோத்திரங்கள்! நமக்காய் இந்த பூவில் வந்துதித்த தேவ குமாரனின் பிரசன்னம் உங்கள் ஒவ்வொருவரையும் பரிபூரணமாய் வந்தடையட்டும்! WISHING YOU ALL A HAPPY AND BLESSED CHRISTMAS! Dr Prema Sunder Raj and Family
