1 யோவான் 4:9 தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைத்திருக்கும்படிக்குத் தேவன் அவரைஇவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. அன்பின் சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் என்னுடைய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்! இன்றைய வேதாகமப் பகுதியில் இருந்து மூன்று காரியங்களை இந்த கிறிஸ்மஸ் நன்னாளில் உங்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன்! முதலாவது நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்திலிருந்து அன்பு வெளிப்பட்டது! இரண்டாவது அந்த அன்பு இந்த உலகத்துக்கு வந்தது! மூன்றாவது அந்த அன்பு நாம் பிழைக்கும்படியாய் சிலுவை… Continue reading இதழ்:2185 கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்!
Category: Tamil Bible study
இதழ்: 2184 வார்த்தையானவர் மாம்சமான அதிசயம்!
மத்தேயு: 1:21 அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். நாம் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் பிறப்பைப் பற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு குழந்தையும் பிறந்தவுடன் அதன் பெற்றோர் பெருமையுடன் குழந்தையின் பெயரை உறவினருக்கு அறிவிப்பார்கள் அல்லவா? இப்பொழுது நாம் படிக்கப்போகும் வேத பகுதியில் மத்தேயு நமக்கு ஒரு குழந்தையின் பெயரை அறிவிக்கப் போகிறார்! இந்த அறிவிப்பு… Continue reading இதழ்: 2184 வார்த்தையானவர் மாம்சமான அதிசயம்!
இதழ்:2183 கிறிஸ்துமஸ் உனக்கு நம்பிக்கையைக் கொடுக்கட்டும்!
ஏசாயா:7:14 .... இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். இந்த வாரம் நாம் நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையை உலகமே நினைவு கூறும் வாரம். ஆதலால் அவருடைய முதலாம் வருகையைப் பற்றி நாமும் படிக்கலாம் என்று நினைக்கிறேன். நம்முடைய வேதத்தில் உள்ள நான்கு சுவிசேஷங்களும் நான்கு முக்கிய செய்தியை வெளிப்படுத்துகின்றன! மாற்கு சுவிசேஷம் இயேசு கிறிஸ்துவை ஒரு தாழ்மையுள்ள சேவகனாகவும், லூக்கா அவரை மனிதக் குமாரனாகவும்,… Continue reading இதழ்:2183 கிறிஸ்துமஸ் உனக்கு நம்பிக்கையைக் கொடுக்கட்டும்!
இதழ்:2182 நல்ல மரத்தின் வேரைப் போன்றது நம் எண்ணங்கள்!
2 சாமுவேல் 12: 4 அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்கு சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்த தரித்திரனுடைய ஆட்டுக் குட்டியைப் பிடித்து அதைத் தன்னிடத்தில்வந்த மனுஷனுக்கு சமையல் பண்ணுவித்தான் என்றான். நாத்தான் தாவீதிடம் ஒரு கதையுடன் வந்ததைப் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது ஏழை, பணக்காரனுடைய கதை! அந்த பணக்காரனிடத்தில் ஒரு வழிப்போக்கன் உணவைத்தேடி வருகிறான். அவன் எந்த வேளையில் வந்தான், எப்படிப்பட்ட நிலையில்… Continue reading இதழ்:2182 நல்ல மரத்தின் வேரைப் போன்றது நம் எண்ணங்கள்!
இதழ்:2181 உன்னை போஷித்ததை மறந்து விடாதே!
2 சாமுவேல் 12:4. அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்கு சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல்..... வீட்டுக்கு வந்தவர்களை உபசரிப்பது நம்முடைய நாட்டின் கலாசாரம் அல்லவா? நம்மைப்போல பல தேசங்களில் இந்த கலாசாரம் காணப்படுகிறது. ஒருதடவை நாங்கள் நேபாள தேசத்துக்குப் போனபோது ஏதோ ஒரு கிராம தகராறு காரணமாக எங்களுடைய கார் தலைநகருக்குள் போக அனுமதிக்கப்படவில்லை. இரவு பொழுது போயிற்று! எல்லா ஹோட்டல்களும் மூடப்பட்டன! என்ன செய்வதென்று அறியாது… Continue reading இதழ்:2181 உன்னை போஷித்ததை மறந்து விடாதே!
இதழ்:2180 இரக்க குணத்தை எப்படி வெளிப்படுத்துகிறாய்?
2 சாமுவேல் 12: 3 தரித்திரனுக்குத் தான் கொண்டு வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத் தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது. அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங்கூட இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து, அவன் மடியிலே படுத்துக் கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது. வேதம் எனக்கு மிகவும் பிரியமான புத்தகமாயிருப்பதின் காரணங்களில் ஒன்று வேதத்தில் காணும் நிஜ வாழ்க்கை மூலம் நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள் தான்! ஏனெனில் அன்று அந்த… Continue reading இதழ்:2180 இரக்க குணத்தை எப்படி வெளிப்படுத்துகிறாய்?
இதழ்:2179 அழிந்து போகும் செல்வத்துக்கா முக்கியத்துவம்?
2 சாமுவேல் 12: 2 ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்தது. சென்னையில் வெள்ளம் வந்தபோது தன்னுடைய இரண்டு மாடி வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும், இரண்டு கார்களையும் இழந்த ஒரு தம்பதியர் நாங்கள் ஒருவரையொருவர் இழக்கவில்லையே என்று கடவுளுக்கு நன்றி சொன்னது என் நினைவை விட்டு விலகவில்லை! இன்றைய வேதாகம வசனம் ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்த ஒரு ஐசுவரியவானைப் பற்றி கூறுகிறது. இவன் வெறும் ஆடுகளை மாத்திரம் வைத்திருந்ததாகவோ அல்லது மாடுகளை வளர்த்தவனாகவோ அல்ல ஆடுகளும்,மாடுகளும் வெகு… Continue reading இதழ்:2179 அழிந்து போகும் செல்வத்துக்கா முக்கியத்துவம்?
இதழ்:2178 எல்லாமே உண்டு ஆனால் தேவ பிரசன்னம் இல்லையே!
2 சாமுவேல் 12: 1 ... ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள். ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன். இன்று நாம் இந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிற கதையைப் படிக்க ஆரம்பிக்கிறோம். இதை முதலில் வாசிக்கும்போது தாவீதிடம் அவன் பத்சேபாளுடன் செய்த பாவத்தையும், உரியாவை கொலை செய்ததையும் குறித்து கண்டிக்கவே இந்தக் கதை சொல்லப்பட்டது என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் இதை முழுதும் வாசித்து முடிக்கும்போதுதான் இந்தக் கதை தாவீதுக்கே சொல்லப்பட்டது போல இருந்தாலும் உனக்கும் எனக்குமே… Continue reading இதழ்:2178 எல்லாமே உண்டு ஆனால் தேவ பிரசன்னம் இல்லையே!
இதழ்:2177 கதையின் மூலம் எச்சரிக்கப்பட்ட சம்பவம்!
2 சாமுவேல் 12: 1-4 ... ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள். ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன். ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்தது. தரித்திரனுக்குத் தான் கொண்டு வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத் தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது. அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங்கூட இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து, அவன் மடியிலே படுத்துக் கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது. அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான்.… Continue reading இதழ்:2177 கதையின் மூலம் எச்சரிக்கப்பட்ட சம்பவம்!
இதழ்:2176 உன்னை இன்று அனுப்புவாரானால் கீழ்ப்படிவாயா?
2 சாமுவேல் 12:1 கர்த்தர் நாத்தானைத் தாவீதினிடத்தில் அனுப்பினார். இவன் அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி.... தாவீது, பத்சேபாள் இருவருடைய வாழ்விலும் முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் இந்த தேவனுடைய மனுஷனான நாத்தான். இன்றைய வேதாகம வசனம் நமக்கு மூன்று காரியங்களை கூறுகிறது. அனுப்பினார், வந்து, நோக்கி என்ற வார்த்தைகளை கவனியுங்கள்! தாவீது பத்சேபாளின் கணவனாகிய உரியாவை நடத்திய விதம் கர்த்தரின் மனதை புண்படுத்தியது. தாவீது செய்த எல்லா அநியாயங்களும் கர்த்தரின் பார்வையில் பட்டன. ஆதலால் கர்த்தர்… Continue reading இதழ்:2176 உன்னை இன்று அனுப்புவாரானால் கீழ்ப்படிவாயா?
