2 சாமுவேல்: 11:4 அவள் அவனிடத்தில் வந்தபோது அவளோடே சயனித்தான். இன்றைய வேதாகமப்பகுதியை வாசித்தபோது, சக்திவாய்ந்த பதவி மனிதனை ஊழல் செய்விக்காது. மனிதர் தான் சக்திவாய்ந்த பதவியை ஊழல் செய்கிறான் என்று யாரோ எழுதியது கவனத்துக்கு வந்தது. ஒருகாலத்தில் பக்கத்து வீட்டு நண்பராக இருந்தவர் கூட, பிசினஸ் ஆகட்டும் அல்லது அரசியல் ஆகட்டும் ஏதோ ஒரு இடத்தில் உயர்ந்த பதவியைப் பிடித்தவுடன் ஆளே மாறிப்போவதில்லையா? கிறிஸ்தவ ஊழியக்காரர் கூட சிலரைப் பார்த்திருக்கிறேன். ஞாயிற்றுக் கிழமைகளில் அவர்கள் ஊழியத்துக்காக… Continue reading இதழ்:2156 பதவி வந்தவுடன் எதையும் செய்யலாம் என்ற தவறான கருத்து!
Category: Tamil Bible study
இதழ்:2155 பிறருக்கு சொந்தமானதை பறித்துக் கொள்வது களவுக்கு சமம்!
2 சாமுவேல் 11: 4 அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்துவரச் சொன்னான். கவுதாரி என்ற பறவையைப் பற்றி அறிந்திருப்பீர்கள். எரேமியா தீர்க்கதரிசி இதைப்பற்றி 17 ம் அதிகாரத்தில் எழுதுகிறார். நானும் சற்று ஆர்வத்தோடு இதைப்பற்றி படித்தேன். மற்ற பறவைகளைப் போல இது மரங்கள் மேல் கூடு கட்டுவதில்லை. அது தரையிலேயே முட்டையிட்டு அடைகாக்கும். சில நேரங்களில் மற்ற பறவைகளின் கூடுகளில் தன் முட்டையை இடும். எது எப்படியோ சுலபமான வழியில் காரியத்தை சாதித்துக் கொள்ளும்… Continue reading இதழ்:2155 பிறருக்கு சொந்தமானதை பறித்துக் கொள்வது களவுக்கு சமம்!
இதழ்:2154 என் இஷ்டம் போலத்தான் வாழ்வேன் என்று எண்ணாதே!
2 சாமுவேல் 11: ... அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமான பத்சேபாள் என்றார்கள். உனக்கு இஷ்டப்படி நீ செய்யலாம் என்ற சுதந்தரம் என்னுடைய இளவயதில் கொடுக்கப்படவில்லை. அம்மா, அப்பா, டீச்சர்ஸ், போதகர்மார், என்ற பலருடைய அட்வைஸ் கேட்டுதான் நடந்தோம். ஆனால் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், தங்களுடைய சொந்த வழியில் நடந்தவர்கள் பல விளைவுகளை சந்திக்க வேண்டியிருந்தது. அவர்களால் அவர்களுடைய குடும்பம் தலைகுனிந்து நிற்க வேண்டியிருந்தது! எல்லா செயல்களுக்கும் பக்க விளைவுகள் உண்டு! அதுவும் யாரையும்பற்றி யோசிக்காமல்… Continue reading இதழ்:2154 என் இஷ்டம் போலத்தான் வாழ்வேன் என்று எண்ணாதே!
இதழ்:2153 நமக்குள் ஒளிந்திருக்கும் இச்சைகள்!
2 சாமுவேல் 11:3 ... அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள். ராஜாக்கள் யுத்தத்துக்கு போகும் காலத்தில் தாவீது தன்னுடைய வீட்டின் உப்பாரிகையின் மேல் உலாவிக்கொண்டிருந்தபோது ஸ்நானம் செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கண்டு, அவள் யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான் என்று பார்த்தோம். அவன் அனுப்பிய ஆட்கள் அவளைப் பற்றிய தகவலுடன் திரும்பி வந்தனர். அவள் பெயர் பத்சேபாள் என்றும் அவள் திருமணமானவள் என்றும் அறிந்து கொண்டான் தாவீது. இந்த… Continue reading இதழ்:2153 நமக்குள் ஒளிந்திருக்கும் இச்சைகள்!
இதழ்:2152 யாரை விசாரிக்கத் தெரிந்து கொள்கிறாய்?
2 சாமுவேல் 11: அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான். சில வருடங்களுக்கு முன்பு இமாலய மலையில் உள்ள தரம்சாலா என்ற மலை நகருக்கு சென்றிருந்தோம். அங்கே எங்கள் விமானம் இறங்கியவுடன் என்னுடைய செல் போனில் ஒரு மெசேஜ் வந்தது. அங்கு உள்ள நதிகளின் ஒரங்களில் நடக்க வேண்டாம் என்ற எச்சரிக்கை அது. அங்கே நதிக் கரையோரம் சென்ற போதுதான் அந்த எச்சரிக்கையின் அர்த்தம் புரிந்தது. நதிகளின் ஓரங்களில் பெரிய பெரிய… Continue reading இதழ்:2152 யாரை விசாரிக்கத் தெரிந்து கொள்கிறாய்?
இதழ்:2151 மீனுக்கு தீனி போட்டு பிடிப்பது போல!
2 சாமுவேல் 11:3 அப்பொழுது அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான். ஒருநாள் தாவீது மதிய நேர ஓய்வுக்குப் பின், தன்னுடைய அரண்மனையின் உப்பாரிகையிலே உலாவிக் கொண்டிருந்தான். அருமையான காற்று! தான் அதிகமாக நேசித்த எருசலேம் நகரத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். தாவீதை ஒன்றும் குறை சொல்வதற்கில்லை! அவனுக்கு சொந்தமான இடத்தில் அவன் உல்லாசமாய், அமைதியாய், காற்றோட்டமாய் நடந்தது ஒன்றும் தவறே இல்லை! எத்தனை வருடங்கள் காடுகளிலும், மேடுகளிலும், மலைகளிலும், காலம் கழிக்க வேண்டியிருந்தது!… Continue reading இதழ்:2151 மீனுக்கு தீனி போட்டு பிடிப்பது போல!
இதழ்:2150 கண்களை அதின்போக்கிலே அலைய விடும் முட்டாள்தனம்!
2 சாமுவேல் 11:2 அந்த ஸ்திரீ வெகு சௌந்தரவதியாயிருந்தாள். ஒரு பெண்ணைப்பார்த்து நீ அழகாய் இருக்கிறாய் என்று சொல்லி பாருங்கள்! அந்த முகத்தில் காணும் புன்னகையே வேறாக இருக்கும். யாருக்குத்தான் பிடிக்காது தன்னை ஒருவர் அழகு என்று வர்ணிப்பது. தாவீதின் அரசாட்சியின் இரண்டாம் பாகத்தை 2 சாமுவேல் 11 ம் அதிகாரத்தில் எழுதியவர், பத்சேபாள் வெகு சௌந்தரவதியாயிருந்தாள் என்று எழுதத் தவறவில்லை. ஒருவேளை அவள் அழகில்லாதவளாய் இருந்திருந்தால் ,தாவீது அவளுக்கு அந்த நாளைக் கொடுத்திருக்கமாட்டானோ என்று நான்… Continue reading இதழ்:2150 கண்களை அதின்போக்கிலே அலைய விடும் முட்டாள்தனம்!
இதழ்:2149 அங்கிருந்து நாம் ஓட வேண்டாமா?
2 சாமுவேல் 11: 2 ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பாரிகையின்மேல் உலாத்திக் கொண்டிருந்தபோது ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பாரிகையின் மேலிருந்து கண்டான். நம் மத்தியில் அதிகமாக பேசப்படும் தாவீது, பத்சேபாள் என்பவர்களின் கதையை நாம் சில நாட்கள் ஆழமாக படிக்கப்போகிறோம். இந்தக் கதையை நாம் தொடருமுன், தேவனாகிய கர்த்தர் ஆதாம் ஏவாளிடம், ஏதேன் தோட்டத்தில் எச்சரித்துக் கூறிய வார்த்தைகளை பாருங்கள். தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின்… Continue reading இதழ்:2149 அங்கிருந்து நாம் ஓட வேண்டாமா?
இதழ்:2148 பணத்தை விட விலையுயர்ந்தது நம்முடைய நேரம்!
சங்கீதம்31:15 என் காலங்கள் உம் கரத்தில் இருக்கிறது... இந்த புதிய மாதத்தைக் காணச் செய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! இந்த மாதம் முழுவதும் கர்த்தருடைய கரம் நம்மை வழி நடத்துமாறு நம்மை அவரிடம் ஒப்புவிப்போம். தாவீதிற்கு அதிக செல்வந்தமும், உல்லாசமான ஓய்வு நேரமும் கிடைத்தது என்று நாம் பார்த்தோம். எல்லா ராஜாக்களும் யுத்தத்துக்கு போகும் காலத்தில் அனைத்து இஸ்ரவேலும் யோவாபின் தலைமையில் யுத்தத்தில் இருந்தபோது தாவீது மட்டும் தன் வீட்டில் உல்லாசமாய் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தான். தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள்! ஓய்வு… Continue reading இதழ்:2148 பணத்தை விட விலையுயர்ந்தது நம்முடைய நேரம்!
இதழ்:2147 வேண்டாத பாதைக்கு இழுத்து செல்லும் செல்வம்!
2 சாமுவேல் 11:2 ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை உப்பாரிகையின்மேல் உலாத்திக் கொண்டிருந்தபோது.... பல நேரங்களில் சாலை ஓரங்களில் சோம்பலாய் உட்கார்திருப்பவர்களைப் பார்த்து வேலைவெட்டியில்லாமல் இப்படி உட்கார்ந்திருக்கிறார்களே என்று நினைப்பேன். ஆனால் பணக்காரர்கள் தான் அதிகமாக வேலை வெட்டியில்லாமல் நேரத்தைக் கழிக்கிறார்கள். பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்தவர்களுக்கு உல்லாசமான ஓய்வு நேரம் அதிகம் கிடைக்கிறது. இங்குதான் லோத்தின் குடும்பம் வாழ்ந்த சோதோமும், எருசலேமில் யுத்தத்துக்கு போகாமல் வீட்டில் இருந்த தாவீதின் கதையும் சம்பந்தப்படுகிறது!… Continue reading இதழ்:2147 வேண்டாத பாதைக்கு இழுத்து செல்லும் செல்வம்!
