ஆதியாகமம் 22 :14 ஆபிரகாம் அந்த இடத்துக்கு யகோவாயீரே என்று பெயரிட்டான் அதனாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக் கொள்ளப்படும் என்று இந்நாள் வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வருடமாக நான் எழுத ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு வேதபகுதிக்கு வந்திருக்கிறோம். நாம் 1 இராஜாக்கள் , 2 இராஜாக்கள் புத்தகங்களைப் படிக்கும் பொழுது தேவனாகிய கர்த்தருடைய பிள்ளைகள் எவ்வாறு கீழ்ப்படியாமல் போனார்கள் என்பதைப் பார்த்தோம். அப்படிப்பட்டதொரு இருண்ட நாட்களில், பழிவாங்குதலும், விக்கிரக ஆரதனையும் தலைவிரித்து ஆடிக்… Continue reading இதழ்:1590 யெகோவா-யீரே நம் தேவைகளை சந்திப்பார்!
Category: Tamil Bible study
இதழ்:1589 நான் ஜெயித்ததால் உங்களுக்கும் ஜெயம் உண்டு!
1 ராஜாக்கள் 16 :25 உம்ரி கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்து தனக்கு முன்னிருந்த எல்லாரைப் பார்க்கிலும் கேடாய் நடந்து, ஒவ்வொரு நாளும் உலகத்தில் நடப்பவைகளை பார்க்கும் போதும், கேள்விப்படும் பொழுதும், செய்தித்தாள்களில் வாசிக்கும் போதும், என் மனதில் விழும் கேள்வி , இன்னும் எவ்வளவு தூரம்தான் இந்த உலகம் கீழ்நோக்கி செல்லும் என்பதுதான். இஸ்ரவேலை ஆண்ட ராஜாக்கள் ஒவ்வொருவராக 'ஒரு நன்மையும் இல்லை ' என்ற முத்திரையைப் பதித்த பின், ராஜாவாகிய உம்ரி பதவி ஏற்கிறான். அவன் தனக்கு… Continue reading இதழ்:1589 நான் ஜெயித்ததால் உங்களுக்கும் ஜெயம் உண்டு!
இதழ்: 1588 உன்னுடைய வார்த்தைகள் அல்ல! வாழ்க்கை பேசட்டும்!
1 ராஜாக்கள் 15:11 ஆசா தன் தகப்பனாகிய தாவீதை போல கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்தான். இன்று நாம் மறுபடியும் 1 ராஜாக்களின் புத்தகத்தைத் தொடரப் போகிறோம். இன்றைய வேதாகமப் பகுதி ஒரு இருண்ட வேளையில் வீசும் ஒளிக்கதிர் போல உள்ளது. ஒவ்வொரு ராஜாக்களும் தேவனை பின்பற்றத் தவறிக் கொண்டிருந்த வேளையில் இந்த ஒரு மனிதன் தாவீதைப் போல கர்த்தருடைய பார்வைக்கு செம்மையானத செய்தான் என்று பார்க்கிறோம். தேவனை அறியாத, மற்றும் கர்த்தருக்கு கீழ்ப்படியாத மக்கள் வாழும் ஒரு… Continue reading இதழ்: 1588 உன்னுடைய வார்த்தைகள் அல்ல! வாழ்க்கை பேசட்டும்!
இதழ்:1587 A VERY BLESSED NEW YEAR 2023!
எனது அன்பான சகோதர சகோதரிகளே! உலகத்தின் பல்வேறு நாடுகளிலிருந்து என்னுடைய ராஜாவின் மலர்கள் தோட்டத்துக்கு வருகை தரும் உங்கள் யாவருக்கும் நம்முடைய இரட்சகராகிய இயேசுவின் நாமத்தில் புத்தாண்டு வாழ்த்துக்கள்! ராஜாவின் மலர்களை வாசிப்போர் 60 க்கும் மேற்ப்பட்ட நாடுகளிலிருந்து இந்த இணைய தளத்திற்கு வருகை தருவதைப் பார்த்து ஆச்சரியமடைந்து என் தேவனை ஸ்தோத்தரித்தேன். அது போக 650 பேர் இதை தினமும் உங்களது ஈமெயில் மூலம் பெற்றுக் கொள்கிறீர்கள். அநேகர் இதை தினமும் வாட்ஸ்அப் மூலம் உங்கள்… Continue reading இதழ்:1587 A VERY BLESSED NEW YEAR 2023!
இதழ்:1586 தேவனே நம் உள்ளிந்திரியங்களை ஆராய்ந்து அறிபவர்!
யோசுவா: 7:21 ”கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும், நான் கண்டு அவைகளை இச்சித்து, எடுத்துக்கொண்டேன். இதோ அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைந்திருக்கிறது. பலநாட்களாக நாம் ஆகானைப்பற்றி படித்துக்கொண்டிருக்கிறோம். இஸ்ரவேலின் சேனையில் ஒரு போர்வீரனாக, தேவனாகிய கர்த்தரின் சித்தப்படி எரிகோவை அழிக்கப் புறப்பட்ட இந்த வீரன், பொருளாசை என்ற சலனத்துக்கு சற்று இடம் கொடுத்ததால், அவன் நோக்கம் தடுமாறி, கண்களால் கண்ட பொருட்களை இச்சித்து, தனக்கு… Continue reading இதழ்:1586 தேவனே நம் உள்ளிந்திரியங்களை ஆராய்ந்து அறிபவர்!
இதழ்: 1585 தேவனே நம் பயங்களை நீக்குபவர்!
நியா: 4 : 8, 9 அதற்கு பாராக்; நீ என்னோடேகூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான். அதற்கு அவள்; நான் உன்னோடே நிச்சயமாக வருவேன்….என்று சொல்லி, தெபோராள் எழும்பி, பாராக்கோடே கூடக் கேதேசுக்குப் போனாள். சென்னையில் கடற்கரை சென்று விட்டாலே , துறைமுகத்தை நோக்கி வரும் கப்பல்களைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிரியமானக் காரியம். கப்பல்கள் துறைமுகத்தை அடைந்துவிட்டால் அவை பத்திரமாக ஆபத்து இல்லாத இடத்துக்கு வந்துவிட்டன என்ற திருப்தி எனக்கு.… Continue reading இதழ்: 1585 தேவனே நம் பயங்களை நீக்குபவர்!
இதழ்:1584 தேவனே நம் எதிரியை முறியடிக்க செய்பவர்!
1 சாமுவேல் 17:45: அதற்குத் தாவீது பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும் ஈட்டியோடும் கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய். நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தினாலே உன்னிடத்தில் வருகிறேன். இன்றைய வேத வசனத்தைப் பாருங்கள்! கோலியாத் எப்படி யுத்ததுக்குத் தயாராக வந்தான் என்று நமக்கு தெளிவாக காட்டுகிறது! இஸ்ரவேல் தேசத்திற்கு சென்றபோது தாவீதும் கோலியாத்தும் யுத்தம் செய்த இடத்திற்குப் போயிருந்தோம்.கோலியாத் தன்னுடைய பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் நின்று தாவீதை எதிர்கொண்ட இடம்… Continue reading இதழ்:1584 தேவனே நம் எதிரியை முறியடிக்க செய்பவர்!
இதழ்:1583 தேவனே நமக்கு வழிகாட்டியானவர்!
நியா:4:14 அப்பொழுது தெபோராள் ..எழுந்து போ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள். நாம் இந்த வருடத்தின் கடைசி நாட்களில் இருக்கிறோம். இன்று நாம் தியானிக்கும் இந்த வசனத்தை வாசிக்கும்போது என்னை மிகவும் கவர்ந்த காரியம் என்ன என்றால், கர்த்தர் இஸ்ரவேல் மக்களையும், தெபோராளையும் எழுந்து போ என்று மாத்திரம் கட்டளை கொடுக்கவில்லை, அதோடு கூட அவர்களுக்கு முன்னால் செல்லும் வழிகாட்டியையும் கவனிக்கும்படி கூறுகிறார். வழிகாட்டி என்ற வார்த்தையை நான்… Continue reading இதழ்:1583 தேவனே நமக்கு வழிகாட்டியானவர்!
இதழ்:1582 தேவனே நமக்கு நித்திய அடைக்கலமானவர்!
உபாகமம்:33:27 “ அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; ” வேதத்தை வாசிப்பது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அநேகர் சங்கீதத்தை தவிர மற்ற பழைய ஏற்பாட்டு புத்தகங்களைத் தவிர்த்து விடுவதைப் பார்த்திருக்கிறேன்! அதிலும் இந்த உபாகமம் புத்தகத்தின் விநோதமான இந்தப் பெயருக்கு நமக்கு அர்த்தமே தெரியாது பின்னர் எப்படி வாசிப்பது என்று நினைப்பார்கள்! மோசே இஸ்ரவேல் மக்களுக்கு கொடுக்கும் கடைசி உபதேசத்தை இந்தப் பகுதியில் வாசிக்கிறோம். இன்றைக்கு நாம்… Continue reading இதழ்:1582 தேவனே நமக்கு நித்திய அடைக்கலமானவர்!
இதழ்:1581 கிறிஸ்துமஸ் என்பதின் அர்த்தமே அன்பு என்பதுதான்!
1 யோவான் 4:9 தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைத்திருக்கும்படிக்குத் தேவன் அவரைஇவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. அன்பின் சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்! இன்றைய வேதாகமப் பகுதியில் இருந்து மூன்று காரியங்களை இந்த கிறிஸ்மஸ் நன்னாளில் உங்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன்! முதலாவது நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்திலிருந்து அன்பு வெளிப்பட்டது! இரண்டாவது அந்த அன்பு இந்த உலகத்துக்கு மானிடனாய் வந்தது! மூன்றாவது அந்த அன்பு நாம் பிழைக்கும்படியாய்… Continue reading இதழ்:1581 கிறிஸ்துமஸ் என்பதின் அர்த்தமே அன்பு என்பதுதான்!
