மத்தேயு 12:42 தென் தேசத்துக் ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து சாலோமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்..... நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்த சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றம்சுமத்துவாள். இன்று கடைசியாக பத்தாவது நாளாக சேபாவின் ராஜஸ்திரீயைப் பற்றிப் படிக்கப் போகிறோம். இன்றைய நாட்களில் அநேக தீர்க்கதரிசனங்களைப் பற்றியும், தீர்க்கதரிசிகளைப் பற்றியும் கேள்விப் படுகிறோம். உண்மையாகவே தேவனுடைய செய்தி தான் நமக்குக் கொடுக்கப்படுகிறதா அல்லது அது ஒரு தனிப்பட்ட மனிதனின் செய்தியா… Continue reading இதழ்:1549 தெற்கத்திய ராணி கூறப்போகும் சாட்சி!
Category: Tamil Bible study
இதழ்:1548 உன் பாத்திரம் நிரப்பப்படும்!
1 இராஜாக்கள் 10:13 ராஜாவாகிய சாலொமோந்தானே சந்தோஷமாய் சேபாவின் ராஜஸ்திரீக்கு வெகுமதிகள் கொடுத்ததும் அல்லாமல், அவள் விருப்பப்பட்டு கேட்டது எல்லாவற்றையும் அவளுக்குக் கொடுத்தான். இளம் சாலொமோனின் ஞானத்தையும், செல்வ செழிப்பையும் பற்றி அறிந்த சேபாவின் ராஜஸ்திரீ, அதை அவனுக்கு வழங்கியவர் சாலொமோனுடைய தேவன் என்பதையும் கேள்விப்பட்டு, தான் கேட்டது உண்மையா என்று அறியும்படியாய் த்ன்னுடைய தேசத்திலிருந்து புறப்பட்டு வந்தாள் என்று பார்த்தோம். அநேக ஒட்டகங்களில் பரிசுப்பொருட்களைத் தாங்கியவளாய்,அவள் கடினமான பாலைவனத்தை கடந்து வந்தாள். அவள் அமைதியாய் அந்த… Continue reading இதழ்:1548 உன் பாத்திரம் நிரப்பப்படும்!
இதழ்:1547 நன்றியறிதல் அல்ல! நன்றி-வாழுதல் வேண்டும்!
1 இராஜாக்கள் 10:10 அவள் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும்,மிகுதியான கந்த வர்க்கங்களையும்,இரத்தினங்களையும் கொடுத்தாள்.சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவாகிய சாலொமோனுக்கு கொடுத்த அவ்வளவு கந்தவர்க்கங்கள் பிற்பாடு ஒருக்காலும் வரவில்லை. வேதாகம வல்லுநர் மத்யூ ஹென்றி அவர்கள் கூறிய இந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. நன்றியறிதல் நல்லது ஆனால் நன்றி - வாழுதல் அதைவிட மேலானது ( Thanksgiving is good but thanks-living is better) இதை வாசிக்கும்போது, புதிய ஏற்பாட்டில் லூக்கா 17 ம் அதிகாரத்தில்… Continue reading இதழ்:1547 நன்றியறிதல் அல்ல! நன்றி-வாழுதல் வேண்டும்!
இதழ்:1546 நியாயமும் நீதியும் தேவனாகிய கர்த்தருடைய நற்குணம்!
1 இராஜாக்கள் 10:9 உம்மை இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வைக்க, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக. கர்த்தர் இஸ்ரவேலை என்றைக்கும் சிநேகிக்கிறபடியினால் நியாயமும் நீதியும் செய்கிறதற்கு உம்மை ராஜாவாக ஏற்படுத்தினார் என்றாள். சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனிடம் கேள்விகணைகளைத் தொகுத்து அதற்கு விடைகளையும் அறிந்தபின்னர், இஸ்ரவேல் முழுவதும் சுற்றிப்பார்க்கிறாள். சாலொமோன் கட்டின தேவாலயத்தின் பிரம்மாண்டத்தையும், தாவீதின் நகரத்தையும் சுற்றிப் பார்த்தபின்னர் அவள் முதன்முதலாக பேச ஆரம்பிக்கிறாள். அவள் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளுடைய அறிவின் கூர்மையைக் காண்பிக்கின்றன!… Continue reading இதழ்:1546 நியாயமும் நீதியும் தேவனாகிய கர்த்தருடைய நற்குணம்!
இதழ்:1545 ஆச்சரியமும் பிரம்மிப்பும் வெளிப்படும் நேரம்!
1 இராஜாக்கள் 10:8-9 உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள் , எப்போதும் உமக்கு முன்பாக நின்று உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள். உம்மை இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வைக்க, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக. சேபாவின் ராஜஸ்திரீ தன்னுடைய அழகிய பயணத்தின் கடைசிப் பகுதிக்கு வருகிறாள். அவளுடைய கடினமான விடுகதைகளால் சாலொமோனை சோதித்த பின்னர், தேவனாகிய கர்த்தர் அவனுக்கு அளித்திருந்த ஞானத்தையும், அவனுடைய ராஜ்யத்தின் செழிப்பையும், அங்கு காணப்பட்ட ஒழுங்கு முறைகளையும் தன்னுடைய கண்ணாரக்… Continue reading இதழ்:1545 ஆச்சரியமும் பிரம்மிப்பும் வெளிப்படும் நேரம்!
இதழ்:1544 நீ செலவிடும் ஒவ்வொரு மணித்துளியும் மகத்துவத்தை காண்பிக்கும்!
1 இராஜாக்கள் 10:7 நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அந்த வார்த்தைகளை நான் நம்பவில்லை, இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று காண்கிறேன்.... இன்றைய வேதாகமப் பகுதி எனக்கு ரோமர் 14:5 ல் , ..அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்க வேண்டும் என்று விசுவாசிகளுக்கு கூறியது நினைவுக்கு வந்தது. இதை என்னிடம் பிரித்து எழுதும்படி சொன்னால் இப்படித்தான் எழுதுவேன், வேதாகமத்தை வாசி, ஆழமாக படி, அதைக் கற்றுக்கொள்,உன் உள் மனதில் நிச்சயமாய் விசுவாசி! ஆனால்… Continue reading இதழ்:1544 நீ செலவிடும் ஒவ்வொரு மணித்துளியும் மகத்துவத்தை காண்பிக்கும்!
இதழ்:1543 விசுவாசத்தில் நாணலைப்போல ஒழுங்கற்று இருப்போர்!
1 இராஜாக்கள்10: 4-5 சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுடைய சகல ஞானத்தையும், அவன் கட்டின அரமனையயும், அவன் பந்தியின் போஜன பதார்த்தங்களையும், அவன் ஊழியக்காரரின் வீடுகளையும், அவன் உத்தியோகஸ்தரின் வரிசையையும்,அவர்கள் வஸ்திரங்களையும், அவனுடைய பானபாத்திரக்காரரையும், அவன் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமைகொண்டு, இந்த புதிய மாதத்தைக் காணச் செய்த தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம்.இந்த மாதம் முழுவதும் கர்த்தர் நம்மை கரம்பிடித்து நடத்துமாறு தலைகவிழ்ந்து ஒரு நொடி ஜெபிப்போம். ஒரு நிமிடம் நம்மை… Continue reading இதழ்:1543 விசுவாசத்தில் நாணலைப்போல ஒழுங்கற்று இருப்போர்!
இதழ்:1542 நல்ல பங்கைத் தெரிந்துகொள்ளத் தவறாதே!
1 இராஜாக்கள் 10:3 அப்பொழுது சாலொமோன் அவள் கேட்டவைகளையெல்லாம் விடுவித்தான். அவளுக்கு விடுவிக்கக்கூடாதபடிக்கு, ஒன்றாகிலும் ராஜாவுக்கு மறைபொருளாயிருக்கவில்லை. சேபாவின் ராஜஸ்திரீயைப்பற்றி சில நாட்கள் படித்துக் கொண்டிருக்கிறோம். அவள் ஒரு அராபிய நாட்டை சேர்ந்தவள். சாலொமோனையும் அவனோடு இணைந்திருந்த தேவனுடைய நாமத்தையும் அறிய வேண்டி எருசலேமுக்கு வந்தவள். இன்றைய வேதாகமப் பகுதி கூறுகிறது, அவள் சாலொமோனிடம் அநேக காரியங்களை கேட்டறிந்தாள் என்று பார்க்கிறோம். படிப்பும், ஞானமும் ஆண்களுக்கே உரித்தான அந்த காலகட்டத்தில், இந்தப் பெண் அநேக ஆழமான கேள்விகளோடு… Continue reading இதழ்:1542 நல்ல பங்கைத் தெரிந்துகொள்ளத் தவறாதே!
இதழ்:1541 நீ கொடுப்பதால் ஒருபோதும் இழந்து போக மாட்டாய்!
1 இராஜாக்கள் 10:2 மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும், இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும், எருசலேமுக்கு வந்தாள் சாலோமோனின் ஞானத்தையும், அதன் மூலம் மகிமைப்படும் கர்த்தருடைய நாமத்தையும் பற்றி நேரில் கண்டு அறிந்துகொள்ளவே சேபாவின் ராஜஸ்திரீ தன்னுடைய பரிவாரத்தோடு புறப்பட்டு வந்தாள் என்று பார்த்தோம். இன்றைய வேதாகமப் பகுதி அவள் வெறுங்கையோடு வரவில்லை , விலையேறப்பெற்ற பரிசுகளோடு வந்தாள் என்று கூறுகிறது. அநேகர் அவளுடைய வருகையின் நோக்கம் ஒரு அரசியல் காரணம்தான் என்று கூறினாலும், நாம் வேதத்தின்… Continue reading இதழ்:1541 நீ கொடுப்பதால் ஒருபோதும் இழந்து போக மாட்டாய்!
இதழ்:1540 அந்நியரை நியாயம் தீர்க்க வேண்டாம்!
1 இராஜாக்கள் 10:1 கர்த்தருடைய நாமத்தைக் குறித்துச் சாலொமோனுக்கு உண்டாயிருந்த கீர்த்தி சேபாவின் ராஜஸ்திரீக்குக் கேள்வியானபோது அவள் விடுகதைகளில் அவனை சோதிக்கிறதற்காக, இன்றிலிருந்து ஒரு பத்து நாட்கள் நாம், மிகவும் பிரசித்தமான இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோனை நேரில் பார்க்க புறப்பட்டு வந்த வெளிநாட்டு ராணியைப் பற்றி படிக்கப் போகிறோம். இந்த ராணியின் வாழ்க்கை மூலமாக தேவன் நமக்கு என்ன கற்றுக் கொடுக்கப் போகிறார் என்று பார்க்கும் முன்னர் நான் படித்த, அறிந்து கொண்ட சிலவற்றை உங்கள் முன்… Continue reading இதழ்:1540 அந்நியரை நியாயம் தீர்க்க வேண்டாம்!
