1 ராஜாக்கள் 1:1 தாவீது ராஜா வயது சென்ற விர்த்தாப்பியானபோது, வஸ்திரங்களால் அவனை மூடினாலும், அவனுக்கு அனல் உண்டாகவில்லை. தாவீது ராஜாவின் வாழ்க்கையை பல வாரங்கள் நாம் படித்து விட்டோம். இன்று அவருடைய வாழ்வின் கடைசிப் பகுதியைப் பார்க்கிறோம். இன்றைய மருத்துவ மேன்மைகள் இல்லாத அந்த கால கட்டத்தின் வழக்கப்படி ராஜாவிற்கு பணிவிடை செய்யவும், அவனுடைய சரீரத்துக்கு அனல் கொடுக்கவும் சூனேம் ஊராளாகிய அபிஷாகை கொண்டு வந்தார்கள். இது தவறான உறவுக்காக அல்ல என்று வேதம் நமக்கு… Continue reading இதழ்:1519 இயேசுவே எங்கள் மாலுமியாயிரும்!
Category: Tamil Bible study
இதழ்:1518 கர்த்தருடைய செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் உண்டு!
சங்: 51: 8 நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூறும். தேவனாகிய கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்?என்ற தலைப்பின் கடைசி பாகம் இன்று! கடந்த வாரத்தில் கர்த்தர் நம்மோடு பண்ணின உடன்படிக்கையில் மாறாதவர் என்று பார்த்தோம். அவர் வார்த்தை மாறாது! அவர் சொன்ன யாவற்றையும் நிறைவேற்றுவார். இன்று இதை தெளிவாக நம்முடைய மனதில் கொண்டு இந்த வசனத்தை நாம் மறுபடியும் படிக்கப்போகிறோம். தாவீது தான் தேவனாகிய கர்த்தருடன் கொண்டிருந்த அந்த… Continue reading இதழ்:1518 கர்த்தருடைய செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் உண்டு!
இதழ்:1517 ஐயோ! இருதய மாற்று சிகிச்சையா?
சங்: 51: 7 - 11 நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன். என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன். நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூறும். என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை… Continue reading இதழ்:1517 ஐயோ! இருதய மாற்று சிகிச்சையா?
இதழ்:1516 அவர் வாக்கு மாறிடாரே! நம்பி வா!
சங்: 51: 9 - 11 என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும். தேவனாகிய கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்? என்ற தலைப்பில் இன்று பத்தாவது நாளாகப் படிக்கிறோம். சில வருடங்களுக்கு முன்னால் நானும் என் மகனும் பிஸினஸ் விஷயமாக வெளியூர்… Continue reading இதழ்:1516 அவர் வாக்கு மாறிடாரே! நம்பி வா!
இதழ்:1515 எங்கள் கிணற்று நீரின் ருசி உங்களுக்குத் தெரியுமா?
சங்: 51:8 நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூறும். தேவனாகிய கர்த்தர் தாவீதை ஏன் நேசித்தார்? என்ற தலைப்பின் 9 ம் பாகம் இன்று பார்கிறோம். உலகம் கொடுக்கக்கூடாத சந்தோஷம் ஒன்று உண்டு என்பது என்னைபோல நீஙகளும் அறிவீர்கள் என்று நம்புகிறேன். அதுமட்டுமல்ல இந்த சந்தோஷத்தை உலகம் நம்மிடமிருந்து பறிக்கவும் முடியாது.ஆனால் சில நேரங்களில் நம்முடைய வாழ்க்கையை நாமே ஆளுகை செய்து கொள்ளலாம் அங்கு கர்த்தர் தேவையில்லை என்று நாம்… Continue reading இதழ்:1515 எங்கள் கிணற்று நீரின் ருசி உங்களுக்குத் தெரியுமா?
இதழ்:1514 பரிசுத்தம் பெற உம்மண்டை நிற்கும் பாவி நான்!
சங்:51:7 நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன். என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன். தேவனாகிய கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்? என்பதின் 8 வது பாகம் இன்று. தாவீது இந்த அன்புக் கடிதத்தின் முதல் சில வசனங்களில், தான் வழிதவறிப் போன இந்த நிலையில் கர்த்தருடைய கிருபை தனக்குக் கிடைக்க வேண்டுமென்று கெஞ்சுகிறான். தேவனுடைய மிகுந்த இரக்கங்களால் தன்னை ரட்சிக்க வேண்டுமென்று வேண்டுகிறான். தன்னுடைய பாவத்திலிருந்து முற்றிலும் சுத்திகரிக்கப்பட்டு, தன்னைக் குற்றப்படுத்தும்… Continue reading இதழ்:1514 பரிசுத்தம் பெற உம்மண்டை நிற்கும் பாவி நான்!
இதழ்:1512 சொந்தம் என்ற பந்தம் கொண்ட பாவம்!
சங்: 51:5 இதோ நான் துர்க்குணத்தில் உருவானேன், என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள். தேவனாகிய கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்? இன்று ஆறாவது நாளாக இந்தத் தலைப்பை தியானிக்கிறோம். பல வருடங்களுக்கு முன்னால் ஈராக் தேசத்தில் ஏதேன் தோட்டம் இருந்தாகக் கருதப்படும் ஒரு இடம் கண்டுபிடிக்கப்பட்டது. ஒருகாலத்தில் இது பச்சையான சதுப்பு நிலமாக இருந்திருக்கக்கூடும் என்பதற்கு அடையாளமாக இந்த இடம் மிகவும் நீர் வளமோடு ஈரமாக இருந்தது. உலகத்தின் இந்த பகுதியில், காய்ந்த பாலைவனங்கள் அதிகமாகக் காணப்படும்… Continue reading இதழ்:1512 சொந்தம் என்ற பந்தம் கொண்ட பாவம்!
இதழ்:1511 தேவனோடு கொண்ட உறவு கண்ணாடி போல் நொறுங்கிய தருணம்!
சங்: 51:4 தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன். . தாவீதை கர்த்தர் ஏன் நேசித்தார்? ஐந்தாவது நாளாக இந்தத் தலைப்பைத் தொடருகிறோம். நாம் வாசிக்கிற இந்த வேதாகமப் பகுதியில் தாவீது தன்னுடைய பாவத்தை அறிக்கையிடுவதைப் பார்க்கிறோம். இங்கு அவன் தான் கர்த்தர் ஒருவருக்கே விரோதமாக பாவஞ்செய்வதாக சொல்கிறான்! இதை வாசிக்கும்போது , என்ன இவன் பத்சேபாளுக்கு விரோதமாக பாவம் செய்யவில்லையா? இறந்து போனதே அந்தக் குழந்தை எப்படி? கொலை செய்யப்பட்டானே… Continue reading இதழ்:1511 தேவனோடு கொண்ட உறவு கண்ணாடி போல் நொறுங்கிய தருணம்!
இதழ்:1510 நமது குற்றப் பழியை அவர் மேல் அல்லவா போடுகிறோம்!
சங்: 51:3 என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன், என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது. ஏன் கர்த்தர் தாவீதை நேசித்தார் என்று படித்துக்கொண்டிருக்கிறோம். இன்று நான்காவது நாள். ஒருவேளை நீங்கள் புதிதாக இந்த ராஜாவின் மலர்த் தோட்டத்துக்கு வந்திருப்பீர்களானால் தயவுசெய்து கடந்த நாட்களுக்குரிய தியானத்தையும் படியுங்கள்! என்றாவது குற்ற உணர்ச்சியால் அவதிப் பட்ட அனுபவம் உண்டா? ஐயோ இதை நான் ஏன் செய்தேன் ? என்று நாம் எத்தனை காரியங்களைக் குறித்து கவலைப்படுகிறோம். அப்போஸ்தலனாகிய பவுல்… Continue reading இதழ்:1510 நமது குற்றப் பழியை அவர் மேல் அல்லவா போடுகிறோம்!
இதழ்: 1508 மனந்திருந்தி கிருபை பெற்ற ஒரு குமாரன்!
சங்:51: 1 தேவனே உமது கிருபையின்படி எனக்கு இரங்கும். உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னை சுத்திகரியும். தேவனாகிய கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்? இந்தத் தலைப்பை தாவீது எழுதிய சங்கீதங்களின் மூலம், சில வாரங்கள் படிக்கப்போகிறோம் என்று சொல்லியிருந்தேன். இன்று இரண்டாவது நாள்! சங்கீதம் 51 ஐ நாம் வரி வரியாகப் படிக்கும்போது அதின் பின்னணியை நாம் மறக்கக்கூடாது. இதை எழுதிய ராஜாவாகிய தாவீது, யூதாவுக்கும், இஸ்ரவேலுக்கும் ராஜா. இந்த சங்கீதத்தில் தாவீது… Continue reading இதழ்: 1508 மனந்திருந்தி கிருபை பெற்ற ஒரு குமாரன்!
