சங்: 34:8 கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள், அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். நம் ஒவ்வொருவருக்கும் எதிர்பார்ப்புகள் உண்டு. இந்த வாரம் நான்கு எதிர்பார்ப்புக்ளைப் பற்றிப்படிக்கப்போவதாக சொல்லியிருந்தேன். உங்களிடம் ஒரு கேள்வி! யாருடனாவது பழகும்போது அவர் மிகவும் நல்லவராகவும், மனதுக்கு பிடித்தவராகவும் இருந்து, பின்னால் நீங்கள் எதிர்பாராத அளவுக்கு முற்றிலும் மாறான குணம் படைத்தவர் என்று தெரிய வரும் போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது? நிச்சயமாக உங்கள் ஒவ்வொருவருக்கும் இப்படிப்பட்ட அனுபவம் இருக்கும் என்று நினைக்கிறேன்.… Continue reading இதழ்:2118 ருசித்து மட்டும் பாருங்கள் – எதிர்பார்ப்பு 1
Category: Tamil Christian Families
இதழ்: 2117 அநேக எதிர்பார்ப்புகள் உண்டு அல்லவா?
சங்கீதம் 62:5 என் ஆத்துமாவே தேவனையே நோக்கி அமர்ந்திரு, நான் நம்புகிறது அவராலே வரும். பல வருடங்களுக்கு முன்பு என்னுடைய கம்பெனியின் தேவைக்காக ஒருவரை அணுகினோம். அவர் நேரில் வந்து எங்களோடு பேசிய பின்னர் எங்களுக்கு உதவுவதாக வாக்குக்கொடுத்தார். ஆனால் அதன்பின்னர் நாங்கள் பலமுறை அணுகியும் அவர் வாக்குக்கொடுத்ததைக் காப்பாற்றவில்லை. நாங்கள் அவரை நம்பி ஏமாந்தது தான் மிச்சம். இதைப்பற்றி நான் அடிக்கடி யோசிப்பதுண்டு! இந்த என்னுடைய ஏமாற்றத்துக்கு காரணம் நான் கேட்டது கிடைக்காததினால் அல்ல… Continue reading இதழ்: 2117 அநேக எதிர்பார்ப்புகள் உண்டு அல்லவா?
இதழ்:2116 இந்தக் கொடிய ஆயுதம் உனக்குரியது அல்ல!
2 சாமுவேல் 3: 26,27 யோவாப் தாவீதை விட்டு புறப்பட்டவுடனே அவன் அப்னேரைத் தாவீதுக்குத் தெரியாமல் கூட்டிக்கொண்டுவரும்படி ஆட்களை அனுப்பினான். அப்னேர் எப்ரோனுக்குத் திரும்பி வருகிறபோது, யோவாப் அவனோடே இரகசியமாய்ப் பேசப்போகிறவன்போல அவனை ஒலிமுகவாசலின்நடுவே ஒரு பக்கமாய் அழைத்துப்போய் தன் தம்பி ஆசகேலுடைய இரத்தப்பழியை வாங்க அங்கே அவனை வயிற்றிலே குத்திக் கொன்றுபோட்டான். இன்றைய வசனங்களை என்ன வார்த்தையால் விவரிப்பது என்றே தெரியவில்லை. முதலாவது அப்னேர் சவுலின் படைத்தலைவன், ஒரு வீரன். எத்தனையோ யுத்ததங்களையும், எத்தனையோ இரத்தவெள்ளத்தையும்… Continue reading இதழ்:2116 இந்தக் கொடிய ஆயுதம் உனக்குரியது அல்ல!
இதழ்:2115 ஆத்துமா விரும்புவதையெல்லாம் அடைய ஆசை!
2 சாமுவேல்: 3: 21 அப்னேர் தாவீதை நோக்கி: நான் எழுந்துபோய் இஸ்ர்வேலரை எல்லாம் உம்மோடே உடன்படிக்கைபண்ணும்படிக்கு, ராஜாவாகிய என் ஆண்டவனிடத்தில் சேர்த்துக்கொண்டு வருகிறேன். அதினாலே உம் ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் என்றான். இன்றைய வசனத்தை வாசிக்கும்போது அது நம்முடைய அன்றாட வாழ்வில் நமக்கு எதைக் கற்பிக்கிறது என்று சற்று நேரம் சிந்தித்தேன். என்னுடைய சொந்த அனுபவங்களுக்காக நான் இன்று கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் நான் விரும்பினது எல்லாமே எனக்கு நிச்சயமாக கிடைத்ததில்லை.… Continue reading இதழ்:2115 ஆத்துமா விரும்புவதையெல்லாம் அடைய ஆசை!
இதழ்: 2114 எல்லா பொல்லாங்குக்கும் பின் விளைவு உண்டு!
2 சாமுவேல் 3: 15,16 அப்பொழுது இஸ்போசேத் அவளை லாயீசின் குமாரனாகிய பல்த்தியேல் என்னும் புருஷனிடத்திலிருந்து அழைத்துவர ஆட்களை அனுப்பினான். அவள் புருஷன் பகூரீம்மட்டும் அவள் பிறகாலே அழுதுகொண்டு வந்தான். அப்னேர் அவனை நோக்கி நீ திரும்பிப்போ என்றான். அவன் திரும்பிப்போய்விட்டான். தாவீதுக்கும் மீகாளுக்கும் நடுவில் இருந்த அன்பின் கதை 1 சாமுவேல் 18:28 ல் ஆரம்பித்தது. மீகாள் தாவீதை நேசித்தாள், ஆனால் ஒருவேளை தாவீது அவளை உண்மையாக நேசித்தானா அல்லது ராஜாவின் மகள் என்பதற்காக மணந்தானா… Continue reading இதழ்: 2114 எல்லா பொல்லாங்குக்கும் பின் விளைவு உண்டு!
இதழ்:2113 எதை அடைய இந்தப் பாடு படுகிறாய்?
2 சாமுவேல் 3:14 .... நான் பெலிஸ்தருடைய நூறு நுனித்தோல்களைப் பரிசமாகக் கொடுத்து, விவாகம் பண்ணின என் மனைவியாகிய மீகாளை அனுப்பிவிடும் என்று சொல்லச் சொன்னான். தாவீது சவுலின் மகளாகிய மீகாளைத் திருமணம் செய்ய சவுல் கேட்டதையெல்லாம் செய்திருந்தான். பெலிஸ்தருடைய 100 நுனித்தோல்களை பரிசமாகக் கொடுத்து அவளை அடைந்திருந்தான். ஆனால் ராஜாவாகிய சவுலோ தாவீதைப் பழிவாங்க நினைத்து அவன் மனைவியாகிய மீகாளை வேறொருவனுக்கு விவாகம் செய்திருந்தான். இப்பொழுது சவுல் மரித்த பின் தாவீது தனக்கு நடந்த… Continue reading இதழ்:2113 எதை அடைய இந்தப் பாடு படுகிறாய்?
இதழ்:2112 மாயையைப் பாராதபடி என் கண்களை விலக்கும்!
2 சாமுவேல் 3: 12,13 அப்னேர் தன் நாமத்தினாலே தாவீதினிடத்திற்கு ஸ்தானாதிபதிகளை அனுப்பி , தேசம் யாருடையது? என்னோடே உடன்படிக்கை பண்ணும். இதோ இஸ்ரவேலையெல்லாம் உம்மிடத்தில் திருப்ப, என் கை உம்மோடிருக்கும் என்று சொல்லச் சொன்னான். அதற்கு தாவீது: நல்லது. உன்னோடே நான் உடன்படிக்கைபண்ணுவேன். ஆனாலும் ஒரேகாரியம் உன்னிடத்தில் கேட்டுக்கொள்கிறேன். அது என்னவெனில் நீ என் முகத்தைப் பார்க்க வரும்போது சவுலின் குமாரத்தியாகிய மீகாளை நீ அழைத்து வரவேண்டும். நான் பலமுறை வேதத்தைப் படித்திருந்தாலும் ராஜாவின் மலர்களுக்கு… Continue reading இதழ்:2112 மாயையைப் பாராதபடி என் கண்களை விலக்கும்!
இதழ்:2111 பதவிக்கான சண்டை வேண்டாமே!
2 சாமுவேல் 3: 9-10 நான் ராஜ்யபாரத்தை சவுலின் குடும்பத்தைவிட்டுத் தாண்டப்பண்ணி, தாவீதின் சிங்காசனத்தைத் தாண் துவக்கி பெயர்செபா மட்டுமுள்ள இஸ்ரவேலின்மேலும், யூதாவின்மேலும் நிலைநிறுத்தும்படி, கர்த்தர் தாவீதுக்கு ஆணையிட்டபடியே நான் அவனுக்கு செய்யாமற்போனால்..... அப்னேர் சவுலின் படைத்தலைவனாக இருந்தவன். சவுலின் எதிர்பாராத மரணத்துக்கு பின், அவன் சவுலின் குடும்பத்துக்குத் தன் ஆதரவைத் தொடர்ந்து கொடுத்தான். அவன் தேவன் தாவீதுக்குக் கொடுத்திருந்த வாக்குத்தத்தத்தை நன்கு அறிந்திருந்தான் என்று இன்றைய வேதாகமப்பகுதி நமக்குத் தெரிவிக்கிறது. ஏழரை வருடங்கள் சவுலின் குடும்பம்… Continue reading இதழ்:2111 பதவிக்கான சண்டை வேண்டாமே!
இதழ்:2110 ஒருவர் மேல் வீண்பழி சுமத்தும் பாவம்!
2 சாமுவேல் 3: 7 - 8 சவுலுக்கு ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் என்னும் பேருள்ள ஒரு மறுமனையாட்டி இருந்தாள். இஸ்போசேத் அப்னேரை நோக்கி: நீ என் தகப்பனாருடைய மறுமனையாட்டியினிடத்தில் பிரவேசித்தது என்ன என்றான். அப்னேர் இஸ்போசேத்தின் வார்த்தைகளுக்காக மிகவும் கோபம் கொண்டு....... என்னை நீர் இன்று ஒரு ஸ்திரீயினிமித்தம் குற்றம் பிடிக்கிறதற்கு, நான் யூதாவுக்கு உட்கையான ஒரு நாய்த்தலையா? தேர்தல் போர் என்ற தலைப்பில் அவ்வப்பொழுது செய்தி வருவதை நாம் பார்ப்பதுண்டு அல்லவா? அவற்றைப் பார்க்கும்போது… Continue reading இதழ்:2110 ஒருவர் மேல் வீண்பழி சுமத்தும் பாவம்!
இதழ்:2109 மனதை அங்குமிங்கும் அலைய விடாதீர்கள்!
2 சாமுவேல் 2:2 , 11 அப்படியே தாவீது தன் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாவோடும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளான அபிகாயிலோடும்கூட அவ்விடத்துக்குப் போனான். தாவீது எப்ரோனிலெ யூதா கோத்திரத்தின்மேல் ராஜாவாயிருந்த நாட்களின் இலக்கம் ஏழு வருஷமும் ஆறு மாதமுமாம். இன்றைய வேதாகமப் பகுதியில், தாவீது எப்ரோனில் தன் மனைவிமாரோடு சென்று ஏழுவருடம் யூதாவின் மேல் மட்டும் ராஜாவாயிருந்தான் என்று பார்க்கிறோம். முழு இஸ்ரவேலின் மேலும் ராஜாவாக அவன் இந்த ஏழு வருடங்களும் காத்திருக்க… Continue reading இதழ்:2109 மனதை அங்குமிங்கும் அலைய விடாதீர்கள்!
