உபாகமம்: 4:20 இந்நாளில் நீங்கள் இருக்கிறது போல தமக்கு சுதந்தரமான ஜனமாயிருக்கும்படி கர்த்தர் உங்களை சேர்த்துக் கொண்டு உங்களை எகிப்து என்னும் இருப்புக்காளவாயிலிருந்து புறப்படப்பண்ணினார். இருப்புக்காளவாய் என்ற வார்த்தையை சென்னையில் வாழும் நாங்கள், எங்களுடைய கோடை வெயிலுக்கு ஒப்பிட்டுப் பழக்கம். சூரியனின் கதிர்கள் எங்களை எரித்துவிடும் எண்ணத்தில் பாய்வதுபோல் இருக்கும். அதன் கொடுமைக்கு ஒத்துழைப்பது போல கடலின் ஈரப்பதமும் சேர்ந்து கொள்ளும்! ஒருசில நாட்கள் மாலையில் சில்லென்று தென்றல் காற்று கடலிலிருந்து வீசும்போது சென்னைவாசிகளாகிய நாங்கள் அதை… Continue reading மலர் 6 இதழ்: 399 – முள்ளுள்ள கத்தாழையில் மலர்கள்!
Category: The word of God
மலர் 6 இதழ்: 398 – இயேசுவின் நாமமே பலத்த துருகம்!
உபாகமம்: 4: 41, 43 ”முற்பகையின்றிக் கைப்பிசகாய்ப் பிறனைக் கொன்றவன் அடைக்கலப்பட்டணங்களில் ஒரு பட்டணத்தில் தப்பியோடிப்போய் பிழைத்திருக்கும்படியாக,.. மூன்று பட்டணங்களை மோசே யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியோதய திசையில் ஏற்படுத்தினான். நான் அதிகமாக சரித்திர புத்தகங்களை விரும்பி வாசித்திருக்கிறேன். சரித்திரப்பூர்வமான இடங்களைப் பார்ப்பதும் எனக்கு மிகவும் பிடிக்கும். பள்ளிக்கூட நாட்களில் போன உல்லாசப்பயணங்களில், ராஜாக்கள் தம்முடைய நாட்டைப் பாதுகாக்கக் கட்டிய கோட்டைகள் தான் எப்பொழுதும் என் மனதில் நிற்கும். அந்தக் கோட்டைகளைப் பார்க்கும்போது அந்த நாட்டின் ஜனங்கள் எப்படியாக… Continue reading மலர் 6 இதழ்: 398 – இயேசுவின் நாமமே பலத்த துருகம்!
மலர் 6 இதழ்: 397 – உனக்காக வேறொரு திட்டமொன்று!
உபாகமம்: 3: 23 -27 ”அக்காலத்திலே நான் கர்த்தரை நோக்கி; கர்த்தராகிய ஆண்டவரே நீர் உமது அடியானுக்கு உமது மகத்துவத்தையும், உமது வல்லமையுள்ள கரத்தையும் காண்பிக்கத் தொடங்கினீர்; வானத்திலும் பூமியிலும் உம்முடைய கிரியைகளுக்கும், உம்முடைய வல்லமைகளுக்கும் ஒப்பாக செய்யத்தக்கவன் யார்? நான் கடந்துபோய் யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள அந்த நல்ல தேசத்தையும் அந்த நல்ல மலையையும், லீபனோனையும் பார்க்கும்படி உத்தரவு கொடுத்தருளும் என்று வேண்டிகொண்டேன். கர்த்தரோ உங்கள் நிமித்தம் என்மேல் கோபங்கொண்டு எனக்கு செவிகொடாமல் என்னை நோக்கி; போதும்… Continue reading மலர் 6 இதழ்: 397 – உனக்காக வேறொரு திட்டமொன்று!
மலர் 6 இதழ் 396 – கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்!
உபாகமம்:2:7 ”உன் தேவனாகிய கர்த்தர் உன் கைக்கிரியைகளிலெல்லாம் உன்னை ஆசிர்வதித்து வருகிறார். இந்த பெரிய வனாந்தரவழியாய் நீ நடந்து வருவதை அறிவார். இந்த நாற்பது வருஷமும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருந்தார். உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை..” நேற்று நாம் உபாகமம் புத்தகத்தை ஆரம்பித்தோம். இந்த புத்தகம் இஸ்ரவேல் மக்களின் பிரயாணத்தை சரித்திரபூர்வமாக விளக்கும் புத்தகம் மாத்திரம் அல்ல, வல்லமையுள்ள தேவ மனிதனான மோசேயின் ஆவிக்குரிய பிரயாணத்தின் நாட்குறிப்பும்கூட என்று பார்த்தோம். அன்றன்று கர்த்தர் கொடுக்கும் செய்தியை… Continue reading மலர் 6 இதழ் 396 – கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்!
மலர் 6 இதழ் 395 – சித்திரமும் கைப்பழக்கம்!
உபாகமம்: 1:4 ”நாற்பதாம் வருஷம், பதினோராம் மாதம் முதல் தேதியிலே, மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி தனக்கு கர்த்தர் விதித்த யாவையும் அவர்களுக்குச் சொன்னான்…” இன்று நாம் உபாகமம் புத்தகத்தை ஆரம்பிக்கிறோம். இந்த புத்தகத்தை நாம் படிக்கும்போது கர்த்தர் தாமே நம்மோடுகூட இருக்க ஜெபிப்போம். சித்திரமும் கைப்பழக்கம் என்ற வாசகத்தைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எந்த ஒரு கலையும் பல நாட்கள் கடின முயற்சியோடு, பயிற்சி எடுத்தபின் தான் நமக்கு சிறப்பாக வரும். ஒரு கோடு அல்லது வட்டம்… Continue reading மலர் 6 இதழ் 395 – சித்திரமும் கைப்பழக்கம்!
மலர் 6 இதழ் 394 – இதுவரை ஒன்றுமே கேட்கவில்லையே!
எண்ணா: 27:4 ”……எங்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே எங்களுக்கு காணியாட்சி கொடுக்கவேண்டும் என்றார்கள்.” ’வாய் உள்ள பிள்ளைதான் பிழைக்கும்’ என்ற பழமொழி தெரியுமா? எத்தனை முறை நாம் வாய் திறந்து கேட்காதால், நமக்கு வந்து சேரவேண்டியவை வராமல் போய்விட்டன. இது நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் நடப்பது தானே! கேட்பது என்ற வார்த்தைக்கு எபிரேய மொழியில் பிரசுரித்தல் என்று அர்த்தம் உண்டு! இதைத்தான் செலோப்பியாத்தின் ஐந்து குமாரத்திகளும் செய்தனர். அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து கடந்த நாட்களில் சில அருமையான காரியங்களை நாம்… Continue reading மலர் 6 இதழ் 394 – இதுவரை ஒன்றுமே கேட்கவில்லையே!
மலர் 6 இதழ் 393 – நியாயமாய் நடப்பதே தேவ சாயலின் அடையாளம்!
எண்ணா: 27: 6,7 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி, செலோப்பியாத்தின் குமாரத்திகள் சொல்லுகிறது சரிதான். அவர்களுக்கு அவர்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே சுதந்தரம் கொடுக்கவேண்டும்; அவர்கள் தகப்பன் பின் வைத்த சுதந்தரத்தை அவர்களுக்கு கிடைக்கும்படி செய்வாயாக. ஒருவேளை நீங்கள் புதிதாக ராஜாவின் மலர்களுக்கு வந்திருப்பீர்களாகில், தயவுசெய்து கடந்த இருநாட்களின் தியானங்களையும் வாசித்துப் பாருங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு இதன் தொடர்ச்சி தெரியும். நாம் மனாசே வழிவந்த செலோப்பியாத்தின் குமாரத்திகள் ஐந்து பேரைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் தன் தகப்பனுக்கு… Continue reading மலர் 6 இதழ் 393 – நியாயமாய் நடப்பதே தேவ சாயலின் அடையாளம்!
மலர் 6 இதழ் 392 ஒரு தராசின் மறு தட்டு!
எண்ணாகமம்: 27:4 ”எங்கள் தகப்பனுக்குக் குமாரன் இல்லாததினாலே அவருடைய பேர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அற்றுப்போகலாமா?...” என்ன அநியாயம்! என்ற வார்த்தையை நாம் அடிக்கடி உபயோகப்படுத்துகிறோம் அல்லவா? சிறு வயதில் அந்த வார்த்தையை எப்படி முதன்முதலில் உபயோகப்படுத்த ஆரம்பித்தோம் என்று யோசித்து பார்த்தேன். அம்மா பலகாரம் செய்து எனக்கும் அண்ணனுக்கும் இரண்டய் பிரித்து வைத்திருப்பார்கள். இரண்டு தனித்தனி டப்பாவில் முறுக்கு, சீடை வைக்கப்பட்டிருக்கும். அண்ணன் எங்கள் இருவர் டப்பாவையும் கையில் எடுத்துப் பார்த்துவிட்டு ‘என்ன அநியாயம்மா, அவளுக்கு… Continue reading மலர் 6 இதழ் 392 ஒரு தராசின் மறு தட்டு!
மலர் 6 இதழ் 391- நியாயத்துக்கு குரல் கொடுத்த சகோதரிகள்!
எண்ணாகமம்: 27: 1,2 யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் குடும்பங்களில் மனாசேயின் குமாரனாகிய மாகீரின் மகனாகிய கிலெயாத்துக்குப் பிறந்த ஏபேருக்கு புத்திரனாயிருந்த செலோப்பியாத்தின் குமாரத்திகளாகிய மக்லான், நோவாள், ஓக்லாள், மில்காள், திர்சாள் என்பவர்கள் வந்து, ஆசரிப்பு கூடாரவாசலிலே மோசேக்கும், ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், பிரபுக்களுக்கும், சபையனைத்திற்கும் முன்பாக நின்று; எண்ணாகமத்திலிருந்து நாம் அநேக காரியங்களை படித்துக் கொண்டிருக்கிறோம். உங்களைப் போலத்தான் நானும் இந்த புத்தகத்தை அதிகமாக படிக்காமல் ஒதுக்கினேன். இதில் நம் பரலோகப் பிதா, நமக்காக… Continue reading மலர் 6 இதழ் 391- நியாயத்துக்கு குரல் கொடுத்த சகோதரிகள்!
மலர் 6 இதழ் 390 – பகலில் சுட்டெரிக்கும் வெயில்!
எண்ணாகமம்: 14: 30 இந்த வனாந்தரத்தில்…… உங்களில் இருபது வயதுமுதல், அதற்கு மேற்ப்பட்டவர்களாக எண்ணப்பட்டு உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும், எனக்கு விரோதமாய் முறுமுறுத்தவர்களுமாகிய அனைவர்களின் பிரேதங்களும் விழும். எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள், நான் உங்களை குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை.” இதை வாசிக்கும்போது என்னுடைய பள்ளிக்கூட நாட்கள்தான் நினைவுக்கு வந்தது. நான் ஆறாவது படிக்கும்போது என்னுடைய வகுப்பில் இருந்த ஒருசில மாணவர்கள், சின்ன இடைவேளை… Continue reading மலர் 6 இதழ் 390 – பகலில் சுட்டெரிக்கும் வெயில்!
