ஆதி:44: 18 “ அப்பொழுது யூதா அவனண்டையிலே சேர்ந்து, ஆ என் ஆண்டவனே , உமது அடியேன் உமது செவிகள் கேட்க ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேட்பீராக; அடியேன் மேல் உமது கோபம் மூளாதிருப்பதாக; நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர்” இன்று நாம் யோசேப்பின் வாழ்விலிருந்து இன்னுமொரு காரியத்தை கற்று கொள்ளப் போகிறோம்! அதற்கு முன்னால் ஒரே ஒரு கேள்வி! உங்கள் வாழ்வில் யாரையாவது பார்த்து, ஏன் ஒருவேளை உங்கள் உறவினரை பார்த்து, நாளுக்கு நாள் அவர்கள் பேசும் கொடிய… Continue reading மலர் 6 இதழ் 340 துரோகியை மன்னிப்பது எப்படி?
Category: The word of God
On this Sunday evening I was thinking of the delicate mint plants that have grown around our home in Valparai. It is extremely rocky terrain. We have been building supportive walls on the pathway with stones that were unearthed right there. Last week while I was there, I saw the tiny mint plants and some… Continue reading
மலர் 6 இதழ் 339 தீமைக்கல்ல! நன்மைக்கே!
ஆதி:50: 20 நீங்கள் எனக்கு தீமை செய்ய நினைத்தீர்கள், தேவனோ இப்படி நடந்து வருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு அதை நன்மையாக முடியப்பண்ணினார். யோசேப்பு எகிப்துக்கு அதிகாரியான பின்னர், கர்த்தர் பார்வோனுக்கு சொப்பனத்தின் மூலமாய் உரைத்தது போலவே, மிகப் பெரிய பஞ்சம் உண்டாயிற்று. கானான் தேசமும், எகிப்தும்தேசமும் பஞ்சத்தினாலே மெலிந்து போயிற்று. கானானிலே யாக்கோபும், அவன் குடும்பத்தாரும் பஞ்சத்தினாலே வாட ஆரம்பித்தனர். கானானில் மட்டும் அல்ல, எங்குமே உணவுப் பொருள் இல்லாததால், யாக்கோபு தன் குடும்பம்… Continue reading மலர் 6 இதழ் 339 தீமைக்கல்ல! நன்மைக்கே!
மலர் 6 இதழ் 338 அந்நிய பெண்ணை மணக்கலாமா?
ஆதி:41: 44, 45 பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி; நான் பார்வோன்; ஆகிலும் எகிப்து தேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது, தான் காலையாவது அசைக்கக் கூடாது என்றான். மேலும் பார்வோன் யோசேப்புக்கு, சாப்நாத்பன்னேயா என்ற பெயரையிட்டு, ஒன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்து தேசத்தை சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டான். நாங்கள் அமெரிக்காவில் எங்களுடைய நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த போது, அவர் மனைவி என்னிடம் வந்து,… Continue reading மலர் 6 இதழ் 338 அந்நிய பெண்ணை மணக்கலாமா?
மலர் 6 இதழ் 337 உலகத்தார் உன்னில் காண்பது என்ன?
ஆதி:41: 39” பின்பு பார்வோன் யோசேப்பை நோக்கி; தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால்,உன்னைப் போல விவேகமும், ஞானமும் உள்ளவன் வேறோருவனும் இல்லை” யோசேப்பின் வாழ்க்கையைப் பற்றி சற்று அதிகமாகவே எழுதுகிறேன் என்று தோன்றுகிறது! யோசேப்பு தன் சகோதர்களால் விற்கப்பட்ட பின் எகிப்தை வந்து அடைகிறான். ஒரு பணக்கார வாலிபனாய் வாழ்ந்தவன் போத்திபாரின் வீட்டில் ஒரு அடிமையாக வேலை செய்கிறான். ஆதியாகமம் 39 ம் அதிகாரத்தில் இரண்டே வசனங்கள் வந்தவுடன், கர்த்தர் அவனோடிருந்தார் என்று போத்திபார் அறிந்ததாக வாசிக்கிறோம்… Continue reading மலர் 6 இதழ் 337 உலகத்தார் உன்னில் காண்பது என்ன?
மலர் 6 இதழ் 336 எனக்கு வழிகாட்டி என்னை நடத்தும்!
சங்கீ: 31: 3 என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். பல நாட்களுக்கு முன்பு மார்டின் லூதெருடைய மனைவி Katherine அம்மையார் எழுதிய சில வரிகளைப் படித்தேன். அவர்கள் “ஆண்டவரே என்னுடைய எல்லா துயரங்களுக்காகவும் நன்றி, அவைகள் மூலமாய் நான் உம்முடைய மகிமையை காண உதவி செய்தீர், என்னை நீர் ஒரு நாளும் கைவிடவும் இல்லை, மறக்கவும் இல்லை ” என்று எழுதியிருந்தார்கள். எல்லா துயரங்களுக்காகவும் நன்றி! ‘எல்லா’… Continue reading மலர் 6 இதழ் 336 எனக்கு வழிகாட்டி என்னை நடத்தும்!
மலர் 6 இதழ் 335 கடவுளை பைத்தியக்காரர் என்று எண்ணாதே!
ஆதி:41: 14, 38 அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனைத் தீவிரமாய் காவல்கிடங்கிலிருந்து கொண்டுவந்தார்கள். அவன் சவரம் பண்ணிக்கொண்டு, வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்தில் வந்தான். அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி; தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப் போல வேறொருவன் உண்டோ என்றான் இன்றைய தியானத்தை எழுத யோசேப்பின் வாழ்க்கையை ஆராய்ந்த போது பவுல் எழுதிய இந்த வார்த்தைகள் தான் ஞாபகத்துக்கு வந்தது. கலா:6: 7 மோசம் போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார்.… Continue reading மலர் 6 இதழ் 335 கடவுளை பைத்தியக்காரர் என்று எண்ணாதே!
மலர் 6 இதழ் 334 காரிருள் சூழ்ந்த வேளையில்!
ஆதி: 39:20 “ யோசேப்பின் எஜமான் அவனைப் பிடித்து ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான், அந்த சிறைச்சாலையில் அவன் இருந்தான்.” யாக்கோபின் செல்லக் குமாரனாகிய யோசேப்பு திருமதி போத்திபாரினால் பொய் பழி சுமத்தப்பட்டு, சிறைச்சாலையில் வந்தடைகிறான். அமைதியாய் அன்பான தகப்பனோடே, செல்லமாய் வாழ்ந்த வாழ்க்கை எங்கு மறைந்ததது? திடீரென்று அவன் வாழ்க்கையில் வீசிய புயல்காற்றும், மின்னலும், இடியும் எங்கிருந்து வந்தன! ஒன்றுக்கு பின்னால் ஒன்றாக நடந்த சம்பவங்கள், அவனை… Continue reading மலர் 6 இதழ் 334 காரிருள் சூழ்ந்த வேளையில்!
மலர் 6 இதழ் 333 அழகிய சூழல்! யாரும் பார்க்காத தனிமை!
ஆதி: 39:14 – 15 “ அவள் தன் வீட்டு மனிதரைக் கூப்பிட்டு: பாருங்கள், எபிரேய மனுஷன் நம்மிடம் சரசம்பண்ணும்படிக்கு அவனை நமக்குள் கொண்டுவந்தார், அவன் என்னோடே சயனிக்கும்படி என்னிடத்தில் வந்தான்; நான் மிகுந்த சத்தமிட்டு கூப்பிட்டேன், நான் சத்தமிட்டு கூப்பிடுகிறதை அவன் கண்டு, தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு வெளியே ஓடிப்போய்விட்டான் என்றாள்” போத்திபாரின் மனைவியை யோசேப்பின் சௌந்தர்யம், இளமை, திறமை, அனைத்தும் காந்தம் போல கவர்ந்தன! வீட்டின் பொறுப்புகளை திறமையாக கவனித்த அவனை… Continue reading மலர் 6 இதழ் 333 அழகிய சூழல்! யாரும் பார்க்காத தனிமை!
மலர் 6 இதழ் 332 பாவத்தை அனுசரித்துப் போவது தவறா என்ன?
ஆதி: 39:7 “சிலநாள் சென்றபின், அவன் எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள்” நாம் இடையில் யூதா, தாமாரின் கதையில் கவனம் செலுத்திவிட்டோம்! யாக்கோபின் செல்லக் குமாரன் யோசேப்பு என்ன ஆனான்? யோசேப்பை ஏற்றிக் கொண்டு இஸ்மவேலரின் வண்டி வேகமாய் பாலைவனத்தை கடந்து சென்றது. யாக்கோபுவுக்கும், ராகேலுக்கும் பிறந்த பதினேழு வயதான யோசேப்பு, இப்பொழுது அடிமையாக எகிப்து தேசத்துக்கு அழைத்து செல்லப்படுகிறான்! ஒரு புதிய நாட்டில், புதிய மக்கள் மத்தியில் வாழப்போகிற இந்த… Continue reading மலர் 6 இதழ் 332 பாவத்தை அனுசரித்துப் போவது தவறா என்ன?
