ரூத்: 1: 1 நியாதிபதிகள் நியாயம் விசாரித்து வரும் நாட்களில்… ஞாயிற்றுக்கிழமை காலைதோறும் நாங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் பிரட் டோஸ்ட் பண்ணுவது எனக்கு வழக்கம். இப்பொழுதெல்லாம் 7 வகை தானியங்களால் செய்யப்பட்ட பிரட் கிடைக்கிறது. இரண்டு துண்டு பிரட்டுக்கு நடுவே வேர்க்கடலை பட்டரை த்தடவி , வாழைப்பழத்தை துண்டுகளாக நறுக்கி வைத்து டோஸ்ட் செய்வது மிகவும் ருசியாக இருக்கும்! இது ருசியாக மட்டும் அல்ல, நன்றாக பசியும் தாங்கும் ஏனெனில் இதில் நமக்குத்தேவையான புரதச் சத்து… Continue reading இதழ்: 949 சத்துவமும், பெலனும்,இனிமையும் தரும் வேதம்!
Category: Thought for today
இதழ்:948 உன்னை ஒருக்காலும் மறந்ததேயில்லை!
ஏசா: 49: 16 இதோ என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன் சில வருடங்களுக்கு முன்பு என்னுடன் வேதாகமக் கல்லூரியில் படித்த ஒரு நண்பர் போன் பண்ணினார். அநேக வருடங்கள் கழித்து அவருடைய குரலைக் கேட்டபோது என்னால் யார் என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. நான் உங்களோடு படித்தேனே உங்களுக்கு ஞாபகம் இல்லையா என்று பலமுறை கேட்டார். நான் அத்தனை வருடங்களுக்கு முன்னர் கல்லூரியில் கொடுத்த ஒரு செய்தியையும் ஞாபகம் வைத்திருப்பதாக சொன்னார். நிச்சயமாக நானும் அந்த நண்பரின் பெயரையும்,… Continue reading இதழ்:948 உன்னை ஒருக்காலும் மறந்ததேயில்லை!
இதழ்:947 மெய்யாக விடுதலை உண்டு!
நியாதிபதிகள்: 16: 21 பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள். தெலீலாளின் மடியில் நித்திரை அடைந்த சிம்சோன், தூக்கத்திலிருந்து எழுந்த போது , நம் வாழ்க்கையில் நாம் எடுக்க வேண்டிய முக்கியமான முடிவுகளை, நாம் நம் கண்களின் இச்சையின்படி எடுப்போமானால் என்ன நடக்கும் என்று மட்டும் அவனுக்குத் தெளிவாக விளங்கியது! அவன் தெலீலாளின் பிடியில் இருந்தபோது மூன்று காரியங்கள் நடந்தது என்று… Continue reading இதழ்:947 மெய்யாக விடுதலை உண்டு!
இதழ்: 946 உன் பலமும், உனக்கு ஜெயமும் திரும்ப வரும்!
நியாதிபதிகள் 16: 22 அவன் தலைமயிர் சிரைக்கப்பட்ட பின்பு திரும்பவும் முளைக்கத் தொடங்கிற்று. சில நேரங்களில் தலைமுடியை சற்று அதிகமாக டிரிம் பண்ணிவிட்டு, ஐயோ அதிகமாக வெட்டிவிட்டோமே, வளர இன்னும் எத்தனை மாதங்கள் ஆகுமே என்று கவலைப்படுவதுண்டு. ஆனாலும் ஆச்சரியப்படும்படியாய் வெட்டிய முடி வளர்ந்து விடுகிறது. அப்படித்தான் நம்முடைய கதாநாயகன் சிம்சோனின் வெட்டிய முடி வளர ஆரம்பித்தது. சிம்சோனின் வாழ்க்கையில் முடி வளர ஆரம்பித்தது சரீரப்பிரகாரமாக அவனுக்குக் கிடைத்த பரிசு மட்டுமல்ல ஆவிக்குரிய பரிசும்தான்! நாம்… Continue reading இதழ்: 946 உன் பலமும், உனக்கு ஜெயமும் திரும்ப வரும்!
இதழ்: 945 சிம்சோனுக்கு போடப்பட்ட கால்க்கட்டு!
நியாதிபதிகள் 16: 6, 7 தெலீலாள் சிம்சோனைப் பார்த்து; உன் மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது, உன்னைச் சிறுமைப் படுத்த உன்னை எதினாலே கட்டலாம் என்று நீ எனக்குச் சொல்லவேண்டும் என்றாள். அதற்கு சிம்சோன்; உலராத பச்சையான ஏழு அகணிநார்க் கயிறுகளாலே என்னக் கட்டினால், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான். பெரியவர்கள் நம் வீடுகளில் அடிக்கடி ‘ஒரு கால்க்கட்டு போட்டால் எல்லாம் சரியாகிவிடும்’ என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அவர்கள் திருமண பந்தத்தையே கால்க்கட்டு என்றனர்… Continue reading இதழ்: 945 சிம்சோனுக்கு போடப்பட்ட கால்க்கட்டு!
HE IS TRULY TRUSTWORTHY
On this Sunday evening as I was reflecting personally on my relationship with a God whom I have learned to trust, I saw our helper carrying food to feed our two dogs Asher and Casper. These two are dependent and rely on us for everything. Everyday at 5 p.m they wait for their food. Why?… Continue reading HE IS TRULY TRUSTWORTHY
இதழ்: 944 பணம்! மிகப் பெரிய பணம்!
நியாதிபதிகள்: 16:5 “அவளிடத்திற்குப் பெலிஸ்தரின் அதிபதிகள் போய்: நீ அவனை நயம் பண்ணி, அவனுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்றும், நாங்கள் அவனைக் கட்டிச் சிறுமைப்படுத்துகிறதற்கு எதினாலே அவனை மேற்கொள்ளலாம் என்று அறிந்துகொள்; அப்பொழுது நாங்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு உனக்குக் கொடுப்போம் என்றார்கள்”. இன்றைய வேதாகமப்பகுதியை வாசிக்கும்போது எப்பொழுதும் பணம் பணம் என்று அலையும் இந்த சமுதாயத்திற்காகவே சிம்சோனின் கதை எழுதப்பட்டது போல எனக்குத் தோன்றியது. நியாதிபதிகள் 16:4 ல் சிம்சோன் தெலீலாளை… Continue reading இதழ்: 944 பணம்! மிகப் பெரிய பணம்!
இதழ்: 943 நம்முடைய வாழ்வை வீணாக்கும் தெலீலாள்!
நியாதிபதிகள்: 16:5 அவளிடத்திற்குப் பெலிஸ்தரின் அதிபதிகள் போய்: நீ அவனை நயம் பண்ணி, அவனுடைய மகா பல்ம் எதினாலே உண்டாயிருக்கிறது என்றும், நாங்கள் அவனைக் கட்டிச் சிறுமைப்படுத்துகிறதற்கு எதினாலே அவனை மேற்கொள்ளலாம் என்று அறிந்துகொள்; ஏதேன் தோட்டத்தில் ஒருநாள் சர்ப்பமானவன் ஏவாளின் வருகைக்காகக் காத்துக்கொண்டேயிருந்தான். தனிமையில், தற்காப்பு இல்லாமல் வந்த ஏவாளின் பெலவீனத்தை தாக்கினான்! சர்ப்பம் தந்திரமாக வைத்த வலையில் விழுந்தாள் ஏவாள். 1 பேதுரு 5: 8 ல் பேதுரு நம்மிடம் சாத்தான் எவனை விழுங்கலாமோவென்று… Continue reading இதழ்: 943 நம்முடைய வாழ்வை வீணாக்கும் தெலீலாள்!
இதழ்: 942 பிள்ளைகளை வளர்ப்பதில் எங்கே தவறி விட்டோம்?
நியாதிபதிகள்: 14:6 “ஆனாலும் தான் செய்ததை அவன் தன் தாய் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.” தன்னுடைய பிள்ளையை நல்லமுறையில் கர்த்தருடைய பிள்ளைகளாக வளர்க்க எல்லாத் தியாகங்களையும் பண்னுகிற ஒவ்வொரு தகப்பனுக்கும் தாய்க்கும் இன்றைய தியானத்தை அர்ப்பணிக்கிறேன். நாம் சிம்சோனின் வாழ்க்கையைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறோம். சிம்சோனின் தகப்பனாகிய மனோவாவும் அவனுடைய உத்தம மனைவியும் , நசரேயனாக வாழக் கர்த்தரால் அழைக்கப்பட்ட தங்கள் மகன் படிப்படியாக கர்த்தரைவிட்டு, அவருடைய சித்தத்தைவிட்டு வழி தவறி செல்வதை கவனித்துக்கொண்டுதான் இருந்தனர். இன்று அநேகப்… Continue reading இதழ்: 942 பிள்ளைகளை வளர்ப்பதில் எங்கே தவறி விட்டோம்?
இதழ்: 941 சிம்சோனை வீழ்த்திய காம வெறி!
நியாதிபதிகள்: 16:1 ” பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய் அங்கே ஒரு வேசியைக் கண்டு அவளிடத்தில் போனான்.” தன் மனைவி பெலிஸ்தரின் கோபத்தால் தீக்கிரையான பின்னர் சோகத்தில் ஆழ்ந்து போனான் சிம்சோன் என்று நமக்கு எண்ணத் தோன்றும். அவள் தான் எனக்கு வேண்டும் என்று அடம் பிடித்து அடைந்த பெண் அல்லவா? அவன் கண்களுக்குப் பிரியமாயிருந்தவள் அல்லவா? ஆனால் அப்படியல்லாமல், பெலிஸ்தரை சின்னபின்னமாய் சங்காரம் பண்ணிவிட்டு ஏத்தாம் ஊர் கன்மலை சந்திலே குடியிருந்தான். சற்று நாட்களில் இஸ்ரவேலரும்… Continue reading இதழ்: 941 சிம்சோனை வீழ்த்திய காம வெறி!
