நியா: 21:25 “அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை. அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்”. கடந்த சில வாரங்களா நாம் நியாதிபதிகளின் புத்தகத்தை படிக்கிறோம். இஸ்ரவேல் மக்களின் நடத்தையானது அவர்களுடைய தலைவர்கள் எப்படி இருந்தார்களோ அப்படி அசைவாடிக்கொண்டிருந்ததைப் பார்த்தோம். மோசேயால் இஸ்ரவேலுக்குள் வேவுக்காரனாய் அனுப்பப்பட்ட காலேபின் மருமகன் ஒத்னியேல் என்பவன், காலேபைப் போலவே ஒரு தேவனுடைய மனிதனாய் இஸ்ரவேலை நல்வழியில் நடத்தியதைப் பார்த்தோம். கர்த்தரின் வழியில் நடத்திய ஒத்னியேல் மரித்தபின் மறுபடியும் மக்கள் தேவனை விட்டு பின்வாங்கிப்போனார்கள்.… Continue reading இதழ்:1914 காற்றில் அசைந்தாடும் நாணலைப் போன்ற வாழ்க்கை!
Category: Thought for today
இதழ்:1913 நீ எடுத்த அந்த முடிவு!!!!!!
நியா: 8: 31- 35 ” சீகேமிலிருந்த அவனுடைய மறுமனையாட்டியும் அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். அவனுக்கு அபிமெலேக்கு என்று பேரிட்டான். பின்பு யோவாசின் குமாரனாகிய கிதியோன் நல்ல விருந்தாப்பியத்திலே மரித்து ஒப்ராவிலே தன் தகப்பனாகிய போவாஸ் என்னும் அபியேஸ்ரியனுடைய கல்லறையில் அடக்கப்பண்ணப்பட்டான். கிதியோன் மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் திரும்பவும் பாகால்களைப் பின்பற்றிச் சோரம்போய் பாகால்பேரீத்தைத் தங்களுக்கு தேவனாக வைத்துக்கொண்டார்கள். இஸ்ரவேல் புத்திரர் தங்களைச் சுற்றிலுமிருந்த தங்கள் எல்லாச் சத்துருக்களின் கையினின்றும் தங்களை இரட்சித்த தங்கள் தேவனாகிய… Continue reading இதழ்:1913 நீ எடுத்த அந்த முடிவு!!!!!!
இதழ்:1912 செவ்வையான பாதையிலிருந்து விலகாதே!
நியா: 8: 30 ” கிதியோனுக்கு அநேகம் ஸ்திரீகள் இருந்தார்கள்; அவனுடைய கர்ப்பப்பிறப்பான குமாரர் எழுபதுபேர்.” என் கணவரும் நானும் யூத் பார் க்ரைஸ்ட் (YFC) என்ற நிறுவனத்தில் இருபது ஆண்டுகள் பணி செய்தோம். இந்தியாவின் பல மாகாணங்களில் நாங்கள் வாழ்ந்திருக்கிறோம். ஆந்திராவில் கர்நூல் மாவட்டத்தில் நான்கு வருடங்கள் ஊழியம் செய்த போது, சுற்றியுள்ள அநேக கிராமங்களுக்கு செல்வதுண்டு. அவ்விதமாக நாங்கள் சென்ற போது மாட்டு வண்டிகளில் கூட பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது. ஒரு முறை அவ்வாறு… Continue reading இதழ்:1912 செவ்வையான பாதையிலிருந்து விலகாதே!
இதழ்:1911 நல்லதொரு கிறிஸ்தவ வாழ்க்கை!
நியா: 8: 27 “அதினால் கிதியோன் ஒரு ஏபோத்தை உண்டாக்கி, அதைத் தன் ஊரான ஒப்ராவிலே வைத்தான். இஸ்ரவேலரெல்லாரும் அதைப் பின்பற்றிச் சோரம் போனார்கள். அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியாயிற்று”. நல்ல எண்ணத்தோடு, உதவி செய்யும் நோக்கத்தோடு குடும்பத்துக்குள் ஏதாவது ஒரு பிரச்சனையில் தலையிட்டு அது உங்களுக்கே கெட்ட பெயரை வாங்கி கொடுத்த அனுபவம் உங்களுக்கு உண்டா? எனக்கு உண்டு! நல்ல முறையில் , பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணங்கள் ஏன் விவாகரத்தில் முடிவடைகின்றன? விவாகரத்து… Continue reading இதழ்:1911 நல்லதொரு கிறிஸ்தவ வாழ்க்கை!
இதழ்:1910 கர்த்தருடைய வழிநடத்துதலை மறந்து விட்டாயா?
நியா: 8: 22 ” அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள்.” இந்த மாதத்தின் முதல் நாளைக் காண கர்த்தர் கொடுத்த கிருபைக்காக அவருக்கு நன்றி செலுத்துவோம்! கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூறும் இந்த மாதத்தில் நாம் அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படியாக ஜெபிப்போம்! என்னுடைய கல்லூரி நாட்களில், எனக்கு சரித்திர கதைப்புத்தகங்கள் வாசிப்பது மிகவும் பிடிக்கும். அதிலும் விசேஷமாக… Continue reading இதழ்:1910 கர்த்தருடைய வழிநடத்துதலை மறந்து விட்டாயா?
இதழ்:1909 தடைகளைப் பார்க்காமல் முன்னேறிச்செல்!
நியா: 4:10 அப்பொழுது பாராக்; செபுலோன் மனுஷரையும், நப்தலி மனுஷரையும் கேதேசுக்கு வரவழைத்து, தன்னைப் பின்செல்லும் பதினாயிரம் பேரோடே போனான்; தெபோராளும் அவனோடேகூடப் போனாள். தனிப்பட்ட வாழ்க்கையில் சிறந்த தாலந்துகளை வெளிப்படுத்தும் கலைஞர்களை நான் வாயைப் பிளந்து பார்ப்பதுண்டு! எனக்கு எந்தக் கலையிலும் தாலந்து என்று சொல்லிக்கொள்ள எதுவுமே கிடையாது! ஆனால் சாலை ஒரங்களில் படம் வரைந்து பணம் வசூலிக்கும் கலைஞன் முதல், கல்லில் சிலை வடிக்கும் சிற்பக் கலைஞன் வரை, பல்வேறு கலைகளில் சிறந்து விளங்குபவர்கள்… Continue reading இதழ்:1909 தடைகளைப் பார்க்காமல் முன்னேறிச்செல்!
இதழ்:1908 சிறிய பொறுப்பையும் அலட்சியப்படுத்தாதே!
நியா: 4: 4 அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபோராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள். நான் பாத்திரங்கள் கழுவ இயந்திரத்தை உபயோகப்படுத்துவது வழக்கம். இன்று காலையில், நல்ல சுடு தண்ணீரில் பாத்திரங்களை கழுவி உலர்த்திய, அந்த மெஷினிலிருந்து பள பளவென்று பாத்திரங்களை வெளியே எடுத்து அடுக்கும்போது என்னுடைய அம்மா ஞாபகம்தான் அதிகமாக வந்தது. அம்மா பள பளவென்று பாத்திரம் விளக்குவார்கள். கழுவிய பாத்திரங்களை துடைத்து வெயிலில் காயவைத்து எடுத்து உள்ளே அடுக்குவார்கள். சின்னஞ்சிறு வயதில் எனக்கு பாத்திரம்… Continue reading இதழ்:1908 சிறிய பொறுப்பையும் அலட்சியப்படுத்தாதே!
இதழ்:1907 இரட்டிப்பான சமாதானம் வேண்டுமா?
நியா: 5: 31 “அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள் என்று பாடினார்கள். பின்பு தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது.” வால்பாறையில் உள்ள சோலையார் அணை பகுதியில் எங்களுடைய ரிசார்ட் ஒன்று இருக்கிறது. அங்கே வெயில் காலம் என்றழைக்கப்படும் மார்ச் மாதத்தில், சில்லென்று காற்று அடித்தாலும், சூரியனின் வெப்பத்தை சற்று அதிகமாகவே உணர முடியும். சூரியனுக்கு அருகாமையில் இருப்பதுபோல வெப்பம் கூர்மையாகத் தாக்கும். அணையில் உள்ள நீரில் சூரியனின் பிரதிபலிப்பு அதிகமாக இருக்கும் என்பதை… Continue reading இதழ்:1907 இரட்டிப்பான சமாதானம் வேண்டுமா?
இதழ்:1906 மனப்பூர்வமாய் கொடுத்தால் வெற்றி உண்டு!
நியா: 5: 1 – 3 “அந்நாளிலே தெபோராளும் அபினோகாமின் குமாரன் பாராக்கும் பாடினதாவது: கர்த்தர் இஸ்ரவேலுக்காக நீதியை சரிக்கட்டினதினிமித்தமும், ஜனங்கள் மனப்பூர்வமாய்த் தங்களை ஒப்புக்கொடுத்ததினிமித்தமும் அவரை ஸ்தோத்தரியுங்கள். ராஜாக்களே கேளுங்கள்; அதிபதிகளே செவிகொடுங்கள்; நான் கர்த்தரைப் பாடி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைக் கீர்த்தனம் பண்ணுவேன்.” இன்றைக்கு நாம் நியாதிபதிகளின் புத்தகம் 5 வது அதிகாரத்தில் எழுதப்பட்டுள்ள, இந்த “தெபோராளின் ஜெபம்” என்றழைக்கப்படும் பகுதியின் மூன்று நாள் தியானத்தை ஆரம்பிக்கப் போகிறோம். இந்தப்பாடலின் மூலம் தேவனாகிய கர்த்தர் தம்… Continue reading இதழ்:1906 மனப்பூர்வமாய் கொடுத்தால் வெற்றி உண்டு!
இதழ்:1905 வெதுவெதுப்பாய் இராதே!
நியா: 4: 24 “இஸ்ரவேல் புத்திரரின் கை கானானியரின் ராஜாவாகிய யாபீனை நிர்மூலமாக்குமட்டும் அவன் மேல் பலத்துக் கொண்டேயிருந்தது.” இன்று காலை ஒரு கப் தேநீரை சூடுபண்ணி வைத்துவிட்டு , சற்று நேரம் ராஜாவின் மலர்களுக்காக டைப் செய்து கொண்டிருந்தேன். அருகில் வைத்த தேநீரை மறந்து விட்டேன். திடீரென்று ஞாபகம் வர, தேநீர் கப்பை எடுத்து வாயில் வைத்தேன்! அது வெதுவெதுப்பாகி ருசியற்று இருந்தது. “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது… Continue reading இதழ்:1905 வெதுவெதுப்பாய் இராதே!
