2 சாமுவேல் 12: 21- 23 .. நீர் செய்கிற இந்தக் காரியம் என்ன? பிள்ளை உயிரோடிருக்கையில் உபவாசித்து அழுதீர், பிள்ளை மரித்தபின்பு எழுந்திருந்து அசனம்பண்ணுகிறீரே என்றார்கள். அதற்கு அவன், பிள்ளை இன்னும் உயிரோடிருக்கையில், பிள்ளை பிழைக்கும்படிக்குக் கர்த்தர் எனக்கு இரங்குவாரோ, எப்படியோ யாருக்குத் தெரியும் என்று உபவாசித்து அழுதேன். அது மரித்திருக்கிற இப்போது நான் உபவாசிக்க வேண்டியது என்ன? இனி நான் அதைத் திரும்பிவரப்பண்ணக் கூடுமோ? நான் அதினிடத்துக்குப் போவேனே அல்லாமல் அது என்னிடத்துக்குத் திரும்பி… Continue reading இதழ்:1473 பரலோகத்தில் சந்திப்போம் என்ற நிச்சயம் உண்டா?
Category: Thought for today
இதழ்: 1472 ஏன் என் ஜெபம் கேட்கப்படவேயில்லை!
2 சாமுவேல் 12: 16,18 அப்பொழுது தாவீது அந்தப் பிள்ளைக்காகத் தேவனிடத்தில் பிரார்த்தனைப்பண்ணி, உபவாசித்து, உள்ளே போய் இராமுழுதும் தரையிலே கிடந்தான். ஏழாம்நாளில் பிள்ளை செத்துப்போயிற்று. கேட்கப்படாத ஜெபம் உங்கள் வாழ்க்கையில் உண்டா? எனக்கு உண்டு! 1977 ல் என்னுடைய அம்மா நோய்வாய்ப்பட்டு படுத்திருக்கும்போது நானும் தாவீதைப்போலத்தான் அழுது, உபவாசம் பண்ணி, தரையில் விழுந்து கிடந்து ஜெபித்தேன். அப்பொழுது அம்மாவிற்கு 42வயதுதான். கர்த்தர் என்னுடைய ஜெபத்தை நிச்சயம் கேட்பார் என்று வாலிப பிராயத்தில் இருந்த நான் விசுவாசத்தோடு… Continue reading இதழ்: 1472 ஏன் என் ஜெபம் கேட்கப்படவேயில்லை!
இதழ்:1471 பொன்னை புடமிடுவது போன்ற அனுபவம் உண்டா?
2 சாமுவேல் 12:14, 15 ஆனாலும் இந்தக் காரியத்தினாலே .... உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய்ச் சாகும் என்று சொல்லி நாத்தான் தன் வீட்டுக்குப் போய் விட்டான்.அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார். நான் கடலோரப் பட்டணத்தில் வாழ்ந்தாலும் மலைகளை ரசிப்பது எனக்கு மிகவும் பிரியம். அடுக்கடுக்கான மலைத்தொடரும், பள்ளத்தாக்க்குகளும் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். சமீபத்தில் ஸ்காட்லாண்டு தேசத்தின் உயர்ந்த மலைகளை ஹெலிகாப்டரிலிருந்து எடுத்த வீடியோ ஒன்றைப் பார்த்தேன். சொல்ல வார்த்தைகளே… Continue reading இதழ்:1471 பொன்னை புடமிடுவது போன்ற அனுபவம் உண்டா?
இதழ்:1470 பூவோடு சேர்ந்த நாரும் மணப்பது போல!
2 சாமுவேல் 12:14 ஆனாலும் இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினாலே ..... நம்மை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் வேத வார்த்தைகளில் ஒன்றுதான் இன்றைய வேதாகமப் பகுதி நினைக்கிறேன். தேவனாகிய கர்த்தர் தாவீதும் பத்சேபாளும் செய்த பாவத்தின் எதிர்விளைவைப் பற்றி பேசியது நம் ஒவ்வொருவருக்கும் பொருந்தும். தாவீது பத்சேபாளுடன் செய்த பாவத்தை அவனுக்கு உணர்த்திய நாத்தான், அந்தக் காரியம் கர்த்தருடைய சத்துருக்கள் அவரை தூஷிக்க காரணமாகி விட்டதை உணர்த்துகிறான். தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட இஸ்ரவேலின்… Continue reading இதழ்:1470 பூவோடு சேர்ந்த நாரும் மணப்பது போல!
இதழ்:1469 என்னால் தப்பிக்கவே முடியாதோ????
2 சாமுவேல் 12:13 ..... நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார். ஒரு குழைந்தைகள் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு அறையிலிருந்து குழந்தைகள் ஓடி இன்னொரு அறைக்குள் நுழைந்தனர். அந்த கதவு உடனே மூடப்பட்டது. அது அவர்களை வேறொரு கால கட்டத்துக்கு அழைத்து சென்றது. அந்தக் குழந்தைகளால் அங்கிருந்து வெளியே வரவே முடியவில்லை. அவர்கள் எவ்வளவு எட்டியும் அந்தக் கதவு அவர்களுக்கு எட்டவேயில்லை! அவர்கள் சிறு பிள்ளைகளாக இருந்ததால் ஒருவருக்குக்கூடமற்றொருவரைத்… Continue reading இதழ்:1469 என்னால் தப்பிக்கவே முடியாதோ????
இதழ்: 1468 பிரியப்படுத்துகிறாயா? காயப்படுத்துகிறாயா?
2 சாமுவேல் 12:13 அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய் பாவஞ் செய்தேன் என்றான். இந்த தியானத்தைத் தொடர ஒவ்வொருநாளும் கர்த்தர் அருளும் கிருபைக்காக அவருக்கு ஸ்தோத்திரம்! யூதாவையும் இஸ்ரவேலையும் வல்லமையோடு ஆண்ட தாவீது தன்னுடைய மகிமையின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் போதுதான், தீர்க்கதரிசியாகிய நாத்தான் அவனிடம் வந்து, அவனும் ஒரு சாதாரண மனிதன் தான், ஒரு பாவிதான் என்று நினைவூட்டினான்! தாவீதுக்கு தன்னுடைய நிலையை உணர ஒரு கணம் கூட ஆகவில்லை! நம்முடைய இருதயத்தில் கொளுந்து… Continue reading இதழ்: 1468 பிரியப்படுத்துகிறாயா? காயப்படுத்துகிறாயா?
இதழ்:1467 ஆரோக்கியத்தை சிதைக்கும் பாவம்!
சங்கீதம் 38: 3,4 உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை, என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை. என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகிற்று. அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று. இன்றைய வேதாகமப்பகுதியில் நாம் பார்க்கும் தாவீதின் வார்த்தைகள் எனக்கு பாவத்தை நாம் நம்முடைய வாழ்வில் அனுமதிக்கும்போது வரும் விளைவு எப்படியிருக்கும் என்று விளக்கிற்று! தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்த மேய்ப்பனாக தன் வாழ்வைத் தொடங்கிய தாவீது, மந்தைவெளியில் தேவனாகியக் கர்த்தரை நோக்கிப்பார்த்த தாவீது,… Continue reading இதழ்:1467 ஆரோக்கியத்தை சிதைக்கும் பாவம்!
இதழ்:1466 நான்கு சுவருக்குள் நடப்பவை வெளியே தெரியாது அல்லவா?
2 சாமுவேல் 12:12 நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய். நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார்... தாவீதின் அரண்மனைக்கு முன்னும், பின்னும், இருபுறமும் வாழ்ந்த மக்களின் புருவங்கள் உயர்ந்தன! தாவீது ஒளிப்பிடத்தில் செய்த பாவத்தை, உரியாவைக் கொன்றதை பத்சேபாளிடமும், அரண்மனையில் உள்ளோரிடமும் மறைக்க பெரும்பாடுதான் பட்டிருப்பான். ஒவ்வொருநாள் காலையிலும் அவன் இருளில் செய்த காரியம் யாருக்கும் தெரிந்து விடுமோ என்ற பயத்தில் தான் எழுந்திருப்பான். தாவீது இஸ்ரவேலின் புகழ்… Continue reading இதழ்:1466 நான்கு சுவருக்குள் நடப்பவை வெளியே தெரியாது அல்லவா?
இதழ்:1465 தவறாக விதைத்தால் எதை அறுப்போம்?
2 சாமுவேல் 12: 10,11 இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால் , பட்டயம் என்றென்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும். கர்த்தர் சொல்கிறது என்னவென்றால் இதோ நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன். அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான். நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது விளையாட்டு மைதானத்தில் இருந்த ஒரு… Continue reading இதழ்:1465 தவறாக விதைத்தால் எதை அறுப்போம்?
இதழ்:1464 ஏன் என்னை இவ்வாறு இழிவு படுத்துகிறாய்?
2 சாமுவேல் 12:9 கர்த்தருடைய பார்வைக்கு பொல்லாப்பான இந்தக் காரியத்தை செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன? தாவீதும் பத்சேபாளும் உண்மையாக மனந்திருந்தியதால் கர்த்தர் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டார் என்று எழுதவேண்டுமென்றுதான் எனக்கு ஆசை! ஆனால் கர்த்தர் தன்னுடைய பாதைத் தவறிப் போய் மனந்திருந்திய பிள்ளைகளை எவ்வாறு முற்றிலும் மன்னிக்கிறார் என்று நாம் பார்க்குமுன், இன்றைய வேதாகம வசனத்தை சற்று நேரம் படிப்போம். இந்த இடத்தில் நம்மை தேவனாகிய கர்த்தருடைய இடத்தில் வைத்துப் பார்ப்போமானால்,… Continue reading இதழ்:1464 ஏன் என்னை இவ்வாறு இழிவு படுத்துகிறாய்?
