1 சாமுவேல்: 1: 1, 2 “எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனுஷன் இருந்தான். அவனுக்கு எல்க்கானா என்று பேர் ; அவன் எப்பிராயீமியனாகிய சூப்புக்குப் பிறந்த தோகுவின் குமாரனாகிய எலிகூவின் மகனான எரோகாமின் புத்திரன். அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்;” இன்று நான் நகோமி, ரூத், போவாஸ் இவர்களின் குடும்பத்தை விட்டு, எல்க்கானா, அன்னாள், சாமுவேல் என்பவர்களின் குடும்பத்துக்குள் நுழையப் போகிறோம். ஆண் பெண் என்ற பாகுபாடு அதிகமாக ஆட்டம்… Continue reading இதழ்:1262 இந்த உலகத்துக்கு ஒத்த வேஷம்!
Category: Thought for today
இதழ்:1261 ஆஆ!!!! அந்த ஒரு அயர்ந்த மாலைப் பொழுது!
மத்தேயு: 26: 41 நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். நாளைய தினம் ஒரு புதிய புத்தகத்தை ஆரம்பிக்கும் முன்னர் ஒரு சிறிய செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று கர்த்தர் என்னோடு பேசியதால் இன்று இதை எழுதுகிறேன். தம்முடைய சீஷர்களோடு தனிமையில் நேரம் செலவிடுவது நம்முடைய ஆண்டவருக்கு இது முதல் தடவையல்ல! ஆனால் அந்த இரவு முற்றிலும் மாறுபட்ட ஒரு இரவு! மத்தேயு கூறுகிறார் அந்த… Continue reading இதழ்:1261 ஆஆ!!!! அந்த ஒரு அயர்ந்த மாலைப் பொழுது!
இதழ்:1260 குடும்பம் என்னும் அழகிய மலர்த்தோட்டம்
ரூத்: 4: 16 “நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள்.” நாம் ரூத்தின் புத்தகத்தை இன்றோடு முடிக்கப் போகிறோம்! கடந்த முறை பெத்லெகேமுக்கு சென்றபோது மேய்ப்பர்கள் மந்தையைக் காத்த இடம் என்ற ஒரு பரந்த வெளிக்கு சென்றோம். அங்கு நடந்து கொண்டிருந்த போது அது ஒருகாலத்தில் போவாஸ், ரூத்துடைய வயல்வெளியாக இருந்த இடம் என்று சொன்னார்கள். இந்தமுறை ரூத்தின் புத்தகம் எழுதும் போது அந்த வயல்வெளி என் மனக்கண்களில் தோன்றியது!… Continue reading இதழ்:1260 குடும்பம் என்னும் அழகிய மலர்த்தோட்டம்
இதழ்:1259 கடினமான வாழ்வு கற்றுத்தந்த பொறுமை!
ரூத்: 3: 18 ” அப்பொழுது அவள் : என் மகளே, இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு: அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாறமாட்டான் என்றாள். சாலொமோன் ராஜாவாக முடிசூடப்பட்ட பின்னர், கர்த்தர் அவனுக்கு சொப்பனத்திலே தரிசனமாகி நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் ( 1 ராஜாக்கள்: 3: 5 – 9) என்ற சம்பவம் வேதத்தில் எனக்கு பிடித்தமான சம்பவங்களில் ஒன்று. அச்சமயம் சாலொமோன் ஒன்றும் வயதானவரும்,… Continue reading இதழ்:1259 கடினமான வாழ்வு கற்றுத்தந்த பொறுமை!
இதழ்:1258 அதிகம் பேசுவதைவிட அதிகம் செவிசாய்த்தலே நலம்!
ரூத்: 1:18 “அவள் தன்னோடேகூட வர மன உறுதியாயிருக்கிறதைக் கண்டு, அப்புறம் அதைக்குறித்து அவளோடே ஒன்றும் பேசவில்லை.” நான் சிறியவளாக இருந்தபோது யாரோ ஒருவர் மூலமாக நான் கற்றுக்கொண்டஒரு பேருண்மை ஒன்று உண்டு. கர்த்தர் நம்மை உருவாக்கும்போது நமக்கு ஒரே ஒரு வாயை ஏன் கொடுத்தார் தெரியுமா? நாம் குறைவாக பேசவேண்டும் என்பதற்காகவே! அதே சமயம் அவர் நமக்கு இரண்டு செவிகளைக் கொடுத்ததின் அர்த்தம் நாம் அதிகமாக செவிசாய்த்து கேட்க வெண்டும் என்பதற்காகவே என்ற வார்த்தைகள் என் மனதில்… Continue reading இதழ்:1258 அதிகம் பேசுவதைவிட அதிகம் செவிசாய்த்தலே நலம்!
இதழ்: 1257 சூரியகாந்தி மலர் போன்ற புன்னகை!
ரூத்: 2: 10 “அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி; நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள்”. ஒருதடவை நாங்கள் நேப்பாள நாட்டுக்கு காரில் பிரயாணமாய் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தோம். பயங்கர சோர்வுடன் வந்து கொண்டிருந்த போது திடீரென்று பல்லாயிரக்கணக்கானோர் எங்களைப் பார்த்து புன்னகைப் பூப்பது போன்றத் தோற்றத்துடன் கண்களில் பட்டது ஒரு சூரியகாந்தி மலர்த் தோட்டம். அவற்றின் நிறம் அந்த இடத்துக்கே ஒரு வெளிச்சத்தைக்… Continue reading இதழ்: 1257 சூரியகாந்தி மலர் போன்ற புன்னகை!
இதழ்:1256 நீ எங்கும் அலையத் தேவையில்லை!
ரூத்: 2: 21 “பின்னும் மோவாபிய ஸ்திரீயான ரூத்; அவர் என்னை நோக்கி, என் அறுப்பெல்லாம் அறுத்துத் தீருமட்டும் நீ என் வேலைக்காரிகளோடே கூடவே இரு என்று சொன்னார் என்றாள்.” இஸ்ரவேல் மக்களை பாவத்தில் விழப்பண்ணிய மோவாபிய பெண்களின் மரபில் வந்த ரூத், மோவாபைத் துறந்து, தேவனாகிய கர்த்தரை விசுவாசித்து, அவருக்குத் தன்னை ஒப்புக்கொடுத்ததாள் என்று பார்த்தோம். விசுவாசம் மட்டுமல்லாமல் , தைரியத்தோடு அவள் எடுத்த முடிவால் , கர்த்தர் அவள் வாழ்க்கையில் பெரியத் திட்டங்களை நிறைவேற்றினார். ரூத்தின்… Continue reading இதழ்:1256 நீ எங்கும் அலையத் தேவையில்லை!
இதழ்:1255 நீர் காட்டும் பாதையின் மறுமுனையை நான் அறியேன்!
ரூத்: 1 : 16 “அதற்கு ரூத் : நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக் குறித்து,என்னோடே பேச வேண்டாம்;” தாவீதின் கதையைக்கேளுங்க...... பிள்ளைகளே தாவீதின் கதையைக் கேளுங்க....... இளைஞன் தாவீது, வீரன் தாவீது, இஸ்ரவேலின் தேவனுக்கு பயந்த தாவீது அந்த தாவீதின்.... அந்த தாவீதின் கதையைக் கேளுங்க....... இந்தப் பாடல் என் காதுகளில் தொனிக்கும் போதெல்லாம், சின்னத் தாவீது எப்படி எட்டடி உயரமுள்ள பெலிஸ்த வீரனின் முன்னால் கூழாங்கற்களோடு தைரியமாக யுத்தத்துக்கு சென்றானோ,… Continue reading இதழ்:1255 நீர் காட்டும் பாதையின் மறுமுனையை நான் அறியேன்!
இதழ்:1254 கலக்கமும் தயக்கமும் அற்ற விசுவாசம்!
ரூத்: 2: 11 ” அதற்கு போவாஸ் பிரதியுத்தரமாக; உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும், உன் தாயையும், உன் ஜந்மதேசத்தையும் விட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும், எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது.” ஒருமுறை நாங்கள் ஊட்டிக்கு காரில் சென்று கொண்டிருந்தோம். போகும் வழியில் மலைப் பாதையில், சாலையின் இரண்டு பக்கமும் வானுயர்ந்த மரங்கள் நின்றன. அவற்றின் நடுவே வானைத்தொடும் நெருப்பு போல , சிவப்பு… Continue reading இதழ்:1254 கலக்கமும் தயக்கமும் அற்ற விசுவாசம்!
இதழ்: 1253 முதிர் வயதிலே ஆறுதலும் ஆதரவும் அளிப்பவர்!
ரூத்: 4:15 ” அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர் வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன்”. சில நாட்களாக நகோமியுடனும், ரூத்துடனும் நாம் மோவாபை விட்டு, பெத்லெகேமுக்குக் கடந்து வந்தோம். மோவாபின் கசப்பை பின் வைத்து, அவர்கள் அறுவடையின் காலத்தில் பெத்லெகேமில் நுழைந்தவுடன் அவர்களுக்கு போவாஸுடைய தாராளமான கிருபையால் அவனுடைய சுதந்தரத்துக்குள் பிரவேசிக்கும் சிலாக்கியம் கிடைத்தது.அவர்களுடைய பசி, தாகம் தீர்க்கப்பட்டது. அவர்கள் பரலோகப் பிதாவினாலும், போவாஸ் என்னும் இரட்சகராலும் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். போவாஸ் பட்டணத்து மூப்பரின் முன்பு… Continue reading இதழ்: 1253 முதிர் வயதிலே ஆறுதலும் ஆதரவும் அளிப்பவர்!
