லேவியராகமம்: 25: 25 ” உங்கள் சகோதரன் தரித்திரப்பட்டு, தன் காணியாட்சியிலே சிலதை விற்றால், அவன் இனத்தான் ஒருவன் வந்து , தன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன்”. காலையில் கிழக்கு வெளுத்ததுமே ரூத் எழும்பி விட்டாள். இன்று என்ன நடக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு அவள் உள்ளத்தில் அதிகமாக இருந்தது. தன்னுடைய நாட்டை விட்டு ஒரு புதிய நாட்டுக்குள், புதிய ஜனத்துக்குள் வந்திருக்கிறாள். அன்று என்ன நடக்கப்போகிறது என்று அறியாதவளாய் ரூத், வேலைக்கு செல்லும் மற்ற பெண்களோடு இணைந்து… Continue reading இதழ்: 1252 தனக்கு சொந்தமானதை மீட்டுக் கொள்ள வந்தவர்!
Category: Thought for today
இதழ்:1251 சுவாசம் பெருமூச்சாய் மாறும் வேளையில் ஆறுதல் அளிப்பவர்!
ரூத்: 2: 13 ” அதற்கு அவள்: என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்க வேண்டும்; நான் உம்முடைய வேலைக்காரிகளில் ஒருத்திக்கும் சமானமாயிராவிட்டாலும், நீர் எனக்கு ஆறுதல் சொல்லி உம்முடைய அடியாளோடே பட்சமாய்ப் பேசினீரே என்றாள்.” இன்றைய வேதாகமப் பகுதியை வாசித்தவுடன், இது ஒரு மனதைத் தொடும் வசனம் இதை எழுதி வைக்க வேண்டும் என்ற எண்ணம்தான் வந்தது. இஸ்ரவேலரில் மதிப்பும் மரியாதையும் பெற்றிருந்த போவாஸிடம் ரூத் வந்தபோது, அவனுடைய தகுதிக்கும், மதிப்பும், முன்னால் தான்… Continue reading இதழ்:1251 சுவாசம் பெருமூச்சாய் மாறும் வேளையில் ஆறுதல் அளிப்பவர்!
இதழ்:1250 எதினாலே எனக்கு இந்த தயவு ஐயா?
ரூத்: 2 : 9 “…உனக்குத் தாகம் எடுத்தால், தண்ணீர்க் குடங்களண்டைக்குப் போய் வேலைக்காரர் மொண்டுகொண்டு வருகிறதிலே குடிக்கலாம் என்றான்.” யோவான்: 4: 13, 14 “இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக; இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்”. தண்ணீர்க்குடம், தாகம் என்ர வார்த்தைகளைக் கேட்டதும் நமக்கு ஞாபகத்துக்கு வருவது சமாரிய ஸ்திரீ தான்… Continue reading இதழ்:1250 எதினாலே எனக்கு இந்த தயவு ஐயா?
இதழ்:1249 எக்காலத்திலும் நன்றியால் ஸ்தோத்தரி!
ரூத்: 2: 10 அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள். எங்களது சென்னை அடிக்கடி வறண்டு போவது எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான். சில நாட்களில் உஷ்ணம் தாங்க முடியாமல் குளிர்ந்த காற்றையும், மழைத்தூரலையும் பார்க்க உள்ளமும், சரீரமும் ஏங்க ஆரம்பித்தது விடும். அப்படிப்பட்ட வறண்ட காலத்தில் ஒருநாள் திடீரென்று கருமேகங்கள் கூடி , குளிர்ந்த காற்றோடு மழை பெய்ய ஆரம்பித்தவுடன்… Continue reading இதழ்:1249 எக்காலத்திலும் நன்றியால் ஸ்தோத்தரி!
இதழ்:1248 எஜமானுடைய சுதந்தரத்துக்குள் வா!
ரூத்: 2 : 15 அவள் கதிர் பொறுக்கிக்கொள்ள எழுந்தபோது போவாஸ் தன் வேலைக்காரரை நோக்கி: அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும்; அவளை ஈனம் பண்ண வேண்டாம். பிறருக்கு கொடுப்பதில் மூன்று வகைகள் உள்ளன என்று வாசித்திருக்கிறேன். ஒன்று முணங்கிக்கொண்டே, ஐயோ வந்து நிற்கிறார்களே என்ன செய்வது என்று கொடுப்பது, இரண்டு கொடுக்க வேண்டியக் கடமை, இதிலிருந்து தப்பவே முடியாது என்று கொடுப்பது, மற்றொன்று மனமுவந்து நன்றியறிதலோடு கொடுப்பது என்று. பல வருடங்கள் கிறிஸ்தவ ஊழியத்தில் இருந்துவிட்டதால்,… Continue reading இதழ்:1248 எஜமானுடைய சுதந்தரத்துக்குள் வா!
இதழ்:1247 கர்த்தருடைய சித்தத்துக்குள் வாழ்வதே பாதுகாப்பு!
ரூத்: 1: 22 “இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள்”. அன்பின் சகோதர சகோதரிகளே இந்த புதிய மாதத்தைக் காணச் செய்த தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரங்களை ஏறெடுப்போம்! நாம் இன்று உயிரோடிருப்பதும், நிற்பதும் நிர்மூலமாகாதிருப்பதும் அவருடைய சுத்த கிருபை அல்லவா? நன்றியோடு அவரை துதிப்போம்! கடந்த மாதம் நாம் நகோமியின் வாழ்வில் கசப்பு என்ற விஷம் கிரியை செய்து… Continue reading இதழ்:1247 கர்த்தருடைய சித்தத்துக்குள் வாழ்வதே பாதுகாப்பு!
இதழ்:1245 புத்தம் புது ஆரம்பம்!
ரூத்: 1: 22 “இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள்”. சில மாதங்களுக்கு முன்பு ஒரு மருத்துவ கட்டுரையைப் படித்த போது ஆச்சரியப்படக்கூடிய ஒரு உண்மையை அறிந்தேன். ஒரு தாயின் வயிற்றில் உருவாகும் கருவில், இருதயத் துடிப்பானது நான்கே வாரங்களில் , அந்தக் குழந்தை யானது தன்னுடைய முதல் மூச்சு விடுமுன்னரே ,ஆரம்பித்து விடுகிறது என்பது தான் அது.… Continue reading இதழ்:1245 புத்தம் புது ஆரம்பம்!
இதழ்:1244 உதிர்ந்து போன உன் வாழ்வு துளிர் விட்டு மலரும்!
ரூத்: 1: 21 நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பி வரப்பண்ணினார்; நாங்கள் சென்னையில் அநேக வருடங்கள் வாழ்ந்து விட்டோம். இங்கு வெயில் காலம், மழைகாலம் என்ற இரண்டு காலங்களைத் தவிர, வேறெந்த காலத்தையும் பார்த்ததில்லை. ஆனால் அமெரிக்க தேசத்தில் என் மகள் வாழும் பகுதியில் நான்கு காலங்களும் அழகாக மாற்றம் பெரும். நான் ஒருமுறை குளிர் காலம் முடிந்தபின்னர் வரும் இளவேனிற் காலத்தில் அங்கு இருந்தேன். அங்கிருந்த ஒவ்வொரு மரமும்… Continue reading இதழ்:1244 உதிர்ந்து போன உன் வாழ்வு துளிர் விட்டு மலரும்!
இதழ்: 1243 கசப்பான வாழ்வு எப்படி தேனாக இனிக்கும்?
ரூத்: 1 : 19, 20 ” அப்படியே இருவரும் பெத்லெகேம் மட்டும் நடந்து போனார்கள்; அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, ஊரார் எல்லாரும் அவர்களைக் குறித்து ஆச்சரியப்பட்டு, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள். அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்.” இந்த புத்தகத்தை ராஜாவின் மலர்களுக்காக நான் எழுத ஆரம்பிக்குமுன், என்னிடம் யாராவது ரூத் என்ற புத்தகத்தைப்பற்றி சுருக்கமாக கூறும்படிக் கேட்டிருந்தால், ரூத்… Continue reading இதழ்: 1243 கசப்பான வாழ்வு எப்படி தேனாக இனிக்கும்?
இதழ்:1242 அப்பா உம்மையே நேசிப்பேன்!
ரூத்: 1: 17 நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரித்து அங்கே அடக்கம் பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும், அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள். ரூத் நகோமியிடம் கூறிய இந்த வார்த்தைகளை நான் வாசித்த போது, ஒருகணம் நான் நகோமியின் திகைப்பைக் கற்பனைப் பண்ணிப் பார்த்தேன். அயல்நாட்டில், பிழைப்பைத்தேடி சென்ற இடத்தில் கணவனையும், இரு குமாரரையும் இழந்த ஒரு விதவை. இப்பொழுது எல்லாவற்றையும் இழந்த பின்னர்… Continue reading இதழ்:1242 அப்பா உம்மையே நேசிப்பேன்!
