2 சாமுவேல்: 6: 10,11 அதைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லாமல், கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே கொண்டுபோய் வைத்தான், ..... கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார். ஓபேத்ஏதோம் என்ற பெயரைக் கொண்ட யாரையாவது நாம் இன்றைய மாடர்ன் உலகத்தில் பார்த்திருக்கிறோமா? ஆனால் உங்களில் யாரவது ஆண் குழந்தைக்கு நல்ல பெயர் வேண்டும் என்று நினைப்பீர்களானால், இதோ ஒரு அற்புதமான ஒரு பெயர்! தாவீது கர்த்தருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் செயல்பட்டதால் உயிரழந்தான் வாலிபன் ஊசா.… Continue reading இதழ்:2129 கர்த்தரின் பிரசன்னத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பம்!
Category: To the Tamil Christian community
இதழ்:2128 சிட்சையின் மூலம் வரும் ஆசீர்வாதம்!
2 சாமுவேல் 6: 6,7 ....மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி அதைப் பிடித்தான், அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின்மேல் கோபம் மூண்டது. அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார். அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான். பரிசுத்தமான தேவனைப்பற்றி படித்துக்கொண்டிருக்கிறோம். இன்றைய வேதாகமப் பகுதி நமக்கு மிகவும் முக்கியமான ஒன்று! யாத்திராகமம் 25 - 30 வரை வாசிப்பீர்களானால் கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியை வைக்கவேண்டிய தேவனுடைய கூடாரத்தை… Continue reading இதழ்:2128 சிட்சையின் மூலம் வரும் ஆசீர்வாதம்!
இதழ்:2127 பரிசுத்தம் பழைய நாகரீகமாகி விட்டதோ?
2 சாமுவேல் 6:1,2 பின்பு தாவீது இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட முப்பதினாயிரம் பேரைக்கூட்டி, கேருபின்களின் நடுவே வாசமாயிருக்கிற சேனைகளுடைய கர்த்தருடைய நாமம் தொழுதுகொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியைப் பாலையூதாவிலிருந்து கொண்டுவரும்படி அவனும் அவனோடிருந்த அந்த ஸ்தலத்தாரும் எழுந்துபோய், வேதம் ஒரு அற்புதமான புத்தகம்! இதை நாம் ஒரு கதையிலிருந்து மறு கதை என்று போகாமல், இங்கு படிப்பதுபோல முறையாக தொடர்ந்து வாசிக்கும்போது அது ஒரு சரித்திரமாக அல்லாமல் மிகுந்த ஆசீர்வாதமாக அமையும். நாம் படிக்க ஆரம்பித்திருக்கும் இந்த அதிகாரத்தை… Continue reading இதழ்:2127 பரிசுத்தம் பழைய நாகரீகமாகி விட்டதோ?
இதழ்:2126 திருப்தியாக வாழக் கற்றுக் கொள்!
2 சாமுவேல் 5: 13 அவன் எப்ரோனிலிருந்து வந்தபின்பு, எருசலேமில் இன்னும் அதிகமான மறுமனையாட்டிகளையும், ஸ்திரீகளையும் கொண்டான். 1 சாமுவேல் 30: 23-24 அதற்கு தாவீது: என் சகோதரரே கர்த்தர் நமக்குத் தந்ததை நீங்கள் இப்படி செய்ய வேண்டாம்.....யுத்தத்திற்கு போனவர்களின் பங்கு எவ்வளவோ அவ்வளவு ரஸ்துகளண்டையில் இருந்தவர்களுக்கும் பங்குவீதம் கிடைக்கவேண்டும்; சரிபங்காக பங்கிடவேண்டும் என்றான். இன்றைய வேத வசனங்கள் அதிருப்தியையும், மனநிறைவையும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. இவை தாவீதின் உள்ளத்தில் மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் காணப்படும்… Continue reading இதழ்:2126 திருப்தியாக வாழக் கற்றுக் கொள்!
இதழ்:2124 மன்னிப்பு எதிர்காலத்தை மாற்றும்!
1 சாமுவேல்: 26:8,9 அப்பொழுது அபிசாய் தாவீதைப் பார்த்து: இன்று தேவன் உம்முடைய சத்துருவை உம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார். இப்பொழுதும் நான் அவனை ஈட்டியினால் இரண்டு குத்தாகக் குத்தாமல், ஒரே குத்தாக நிலத்தில் உருவக்குத்தட்டுமா என்றான். தாவீது அபிசாயைப் பார்த்து: அவரைக் கொல்லாதே. கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கைகளைப்போட்டு, குற்றமில்லாமல் போகிறவன் யார்? என்று சொன்னான். தாவீது இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தான். கோலியாத்தைக் கொன்றபின்னர் சவுலின் சேவகனாகவும், சவுல் அசுத்த ஆவியால்… Continue reading இதழ்:2124 மன்னிப்பு எதிர்காலத்தை மாற்றும்!
இதழ்:2123 ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்!
1 சாமுவேல் 25:13 அப்பொழுது தாவீது தன் மனுஷரைப் பார்த்து: நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொள்ளுங்கள் என்றான். 2 சாமுவேல் 2:1 பின்பு தாவீது கர்த்தரை நோக்கி: நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான். தாவீது பத்சேபாளுடன் கொண்ட உறவைப்பற்றி நாம் படிக்கும் முன்னர், தாவீதின் சில அடிப்படை குண நலன்களை நாம் பார்க்காமல் கடந்து போகக்கூடாது என்று நினைத்தேன்! இன்றிலிருந்து சில நாட்கள், ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாய் தாவீதின்… Continue reading இதழ்:2123 ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்!
இதழ்:2122 நன்மை தீமையை பிரிக்கும் கோடு!
2 சாமுவேல் 5:10 தாவீது நாளுக்கு நாள் விருத்தியடைந்தான். சேனைகளின் தேவனாகிய அவனோடேகூட இருந்தார். தேவனாகிய கர்த்தர் அவருடைய பிள்ளைகளாகிய நம்மோடு ஏற்படுத்தும் அழகிய உறவைப்பற்றி பார்த்தபின்னர், நாம் இன்று தாவீதின் வாழ்க்கையைத் தொடருகிறோம். தாவீதைப்பற்றி எல்லோருடைய மனதிலும் எழும் ஒரே கேள்வி, கர்த்தருடைய இருதயத்திற்கேற்ற ஒருவன் என்று அழைக்கப்பட்ட தாவீது எப்படி பெண்களோடு கொண்ட உறவில் தவறு செய்தான் என்று! தாவீதைப் பற்றி கடந்த சில நாட்களில் அதிகமாக படித்தபோது, தன் இள வயதில் தேவனோடு… Continue reading இதழ்:2122 நன்மை தீமையை பிரிக்கும் கோடு!
இதழ்:2120 கர்த்தர் மாறாதவர் என்பதை புரிந்து கொள்ளுங்களேன்! – எதிர்பார்ப்பு 3
எபிரேயர் 13:8 இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். என்னிடம் ஒரு பழைய வாஷிங் மெஷின் இருந்தது. ஒருநாளும் ரிப்பேர் என்று யாரிடமும் கொடுத்ததேயில்லை. நான் புதிய மெஷின் வாங்கியவுடன், எத்தனையோ வருடங்கள் உழைத்த அந்த மெஷினை என்னிடம் வேலை செய்த பெண்ணுக்கு கொடுத்தேன். சில வருடங்கள் கழித்து அவளை நான் பார்த்தபோது அந்த மெஷின் இன்னும் நன்றாக வேலை செய்கிறது என்றாள். அப்படிப்பட்ட ஒரே தன்மையுள்ள திடமான மெஷினைப் போன்ற நல்ல உறவை… Continue reading இதழ்:2120 கர்த்தர் மாறாதவர் என்பதை புரிந்து கொள்ளுங்களேன்! – எதிர்பார்ப்பு 3
இதழ்:2119 நம்பித்தான் பாருங்களேன் – எதிர்பார்ப்பு 2
எரேமியா: 17:7 கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். நம்பிக்கை! இந்த வார்த்தைக்கு அர்த்தத்தைத் தேடி நான் அகராதிக்கு போகவேண்டாம்! அந்த வார்த்தையின் அர்த்தத்தை என் அம்மாவிடம் கண்டிருக்கிறேன். தன்னை நம்பி யார் எந்த பொறுப்பைக் கொடுத்தாலும் தன்னால் முடிந்தவரை சரியாக செய்து முடிக்கும் குணம் அம்மாவிடம் இருந்தது. ஒரு காரியத்தை மறுபடியும் ஞாபகப்படுத்தவே தேவையில்லை! எப்படியாவது அது நடந்து விடும்! ஆனால் அம்மாவைவிட நான் நம்பக்கூடியவர் யார் தெரியுமா? என்னுடைய… Continue reading இதழ்:2119 நம்பித்தான் பாருங்களேன் – எதிர்பார்ப்பு 2
இதழ்:2118 ருசித்து மட்டும் பாருங்கள் – எதிர்பார்ப்பு 1
சங்: 34:8 கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள், அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். நம் ஒவ்வொருவருக்கும் எதிர்பார்ப்புகள் உண்டு. இந்த வாரம் நான்கு எதிர்பார்ப்புக்ளைப் பற்றிப்படிக்கப்போவதாக சொல்லியிருந்தேன். உங்களிடம் ஒரு கேள்வி! யாருடனாவது பழகும்போது அவர் மிகவும் நல்லவராகவும், மனதுக்கு பிடித்தவராகவும் இருந்து, பின்னால் நீங்கள் எதிர்பாராத அளவுக்கு முற்றிலும் மாறான குணம் படைத்தவர் என்று தெரிய வரும் போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது? நிச்சயமாக உங்கள் ஒவ்வொருவருக்கும் இப்படிப்பட்ட அனுபவம் இருக்கும் என்று நினைக்கிறேன்.… Continue reading இதழ்:2118 ருசித்து மட்டும் பாருங்கள் – எதிர்பார்ப்பு 1
