யோசுவா: 8:1 நீ பயப்படாமலும், கலங்காமலும் இரு; நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து ஆயிபட்டணத்தின்மேல் போ, இதோ, ஆயியின் ராஜாவையும், அவன் பட்டணத்தையும், அவன் நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன். அமெரிக்கா தேசத்தின் ஆரிசோனா மாநிலத்தில் இருக்கும், ’தி கிராண்ட் கேனன்’ என்ற உலகப்புகழ் பெற்ற மலைக் கணவாயைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உலகத்திலேயே மிகப் பெரிய, மிக அழகான கணவாய் இது என்றால் மிகையாகாது. சிவப்பு நிறத் துணியை மடித்ததுபோல சிவப்புக் கற்களான பாறைகள்… Continue reading இதழ்:869 இதோ என் கரத்திலிருந்து பெற்றுக்கொள்!
இதழ்: 868 இன்று எனக்கு பெலன் தாரும்!
யோசுவா: 8:1 ”… நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து ஆயிபட்டணத்தின்மேல் போ,..” இன்று அப்பாவின் ஞாபகம் அதிகமாய் வந்தது ஏன் என்று இதை எழுத ஆரம்பிக்கும்போதுதான் புரிந்தது. எட்டு வருடங்களுக்கு முன்பு இருதயக் கோளாரினால் பாதிக்கப்பட்ட அவர்கள் தானாக எழும்பவோ அல்லது எதையும் செய்யவோ முடியாமல் படுக்கையில் இருந்தார்கள். இந்திய ராணுவத்தில் இருந்த அவர்களுடைய கைகளில் நல்ல பெலன் இருந்தது, மனதில் தைரியமும் இருந்தது ஆனால் கால்களும், சரீரமும் பெலனிழந்து போய்விட்டன. இரண்டு மூன்று… Continue reading இதழ்: 868 இன்று எனக்கு பெலன் தாரும்!
இதழ்: 867 ஆகோரின் பள்ளத்தாக்கில் இளைப்பாறுதல் கிடைக்குமா?
யோசுவா 7:26 ..” அவன்மேல் இந்நாள் வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே கர்த்தர் தன் கோபத்தின் உக்கிரத்தை விட்டு மாறினார்; ஆகையால் அவ்விடம் இந்நாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும். ஒசியா: 2:15 அவளுக்கு திராட்சத்தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்.” நான் முதன்முறையாக ஆகானின் கதையை என்னுடைய சன்டே ஸ்கூலில் கேட்ட ஞாபகம் இருக்கிறது! அன்று எனக்கு பழைய ஏற்பாட்டின் தேவன் மீது அதிக பயம் வந்தது. கடவுள் ஆகானுக்கு மட்டும் அல்ல,… Continue reading இதழ்: 867 ஆகோரின் பள்ளத்தாக்கில் இளைப்பாறுதல் கிடைக்குமா?
இதழ்:866 சிற்றின்பம் என்னும் பெயரில் எதை ஒளித்து வைத்திருக்கிறாய்?
யோசுவா: 7:21 ”கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும், நான் கண்டு அவைகளை இச்சித்து, எடுத்துக்கொண்டேன். இதோ அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைந்திருக்கிறது. பலநாட்களாக நாம் ஆகானைப்பற்றி படித்துக்கொண்டிருக்கிறோம். இஸ்ரவேலின் சேனையில் ஒரு போர்வீரனாக, தேவனாகிய கர்த்தரின் சித்தப்படி எரிகோவை அழிக்கப் புறப்பட்ட இந்த வீரன், பொருளாசை என்ற சலனத்துக்கு சற்று இடம் கொடுத்ததால், அவன் நோக்கம் தடுமாறி, கண்களால் கண்ட பொருட்களை இச்சித்து,… Continue reading இதழ்:866 சிற்றின்பம் என்னும் பெயரில் எதை ஒளித்து வைத்திருக்கிறாய்?
இதழ்:865 பார்வைக்கு இன்பமான ஒரு காரியம்!
யோசுவா: 7:21 ”கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும், நான் கண்டு……” ஆதி:3:6 அப்பொழுது ஸ்திரியானவள் அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியை தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு…. கர்த்தரால் மனிதனுக்காக உருவாக்கப்பட்ட ஏதேன் தோட்டத்தில் புத்தியை தெளிவிக்கும் என்று ஒரு கனியைக் காட்டி வஞ்சகம் பேசி சாத்தான் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கண்ணி வைத்து தன் வலையில் விழ வைத்தான். நாம்கூட… Continue reading இதழ்:865 பார்வைக்கு இன்பமான ஒரு காரியம்!
இதழ்: 863 எங்கே பத்திரமாக வைத்து விட்டாய் உன் கர்த்தரை?
யோசுவா: 6:27 இவ்விதமாகக் கர்த்தர் யோசுவாவோடேகூட இருந்தார்; அவன் கீர்த்தி தேசமெங்கும் பரம்பிற்று. எனக்கு மிகவும் பிடித்தமான கிறிஸ்மஸ் அலங்காரங்களில் ஒன்று நாங்கள் மேலை நாட்டிலிருந்து வாங்கிவந்த மெழுகுவர்த்தி ஸ்டாண்ட். அதில் ஆறு மெழுகுவர்த்திகளோடு மூன்று அடுக்குகள் சிவப்பும் வெள்ளையுமான கிறிஸ்மஸ் மலர்கள் சுற்றி வளைந்து இருந்ததால், பார்க்க மிகவும் அழகாக இருக்கும். போனவருடத்திற்கு முந்தின வருடம் கிறிஸ்மஸ் முடிந்தவுடன் எல்லா அலங்காரப் பொருட்களையும் எடுத்து வைக்கும்போது நான் அந்த மெழுகுவர்த்தி ஸ்டாண்டை மாத்திரம் தனியே எடுத்து… Continue reading இதழ்: 863 எங்கே பத்திரமாக வைத்து விட்டாய் உன் கர்த்தரை?
இதழ்: 862 ஒன்றைவிட்டு மற்றொன்றைத் தாவி பிடிக்கும் குரங்கைப் போல!
யோசுவா:7:1 “………. ஆகான் என்பவன் சாபத்தீடானதிலே சிலதை எடுத்துக்கொண்டான்; நாங்கள் அடிக்கடி வால்ப்பாறை போவது வழக்கம். அது மலைமேல் அமைந்திருக்கும் ஒரு பட்டணம்! மலைகளில் கார் ஏற ஆரம்பித்தவுடன், கண்ணாடியை இறக்கிவிட்டு, சில்லென்ற இயற்கை காற்றை அனுபவிப்போம். போகும்வழியில் குரங்குகள் ஏராளமாய் அங்கும் இங்கும் தாவி ஓடிக்கொண்டிருக்கும். அங்கே உள்ள ஒரு அருவியில் குளிக்க ஏராளமான மக்கள் வருவார்கள். அவர்கள் குரங்குகளுக்கு ஏதாவது கொடுப்பது வழக்கம். ஒருநாள் நான் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தபோது ஒரு குரங்கு கையில்… Continue reading இதழ்: 862 ஒன்றைவிட்டு மற்றொன்றைத் தாவி பிடிக்கும் குரங்கைப் போல!
இதழ்: 861 பூவையும் பிஞ்சையும் அழித்து விடும் குழிநரிகள் போல!
யோசுவா: 7: 2 – 4 “…… அந்த மனுஷர் போய் ஆயியை வேவுபார்த்து, யோசுவாவினிடத்தில் திரும்பி வந்து அவனை நோக்கி, ஜனங்கள் எல்லாரும் போகவேண்டியதில்லை, ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம் பேர் போய் ஆயியை முறிய அடிக்கலாம்; அவர்கள் கொஞ்சம் பேர்தான் என்றார்கள். அப்படியே ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவ்விடத்திற்குப் போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஆயியின் மனுஷருக்கு முன்பாக முறிந்தோடினார்கள். ஒருநாள் எங்கள் வீட்டின் முதல் மாடியில் நாங்கள் புதிதாய் வாங்கி வந்த ஒரு கடிகாரத்தை… Continue reading இதழ்: 861 பூவையும் பிஞ்சையும் அழித்து விடும் குழிநரிகள் போல!
இதழ்: 860 பூமிக்குள் பொறுமையாய் இருக்கும் நிலக்கரி வைரமாவது இல்லையா?
யோசுவா 2: 10 நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட போது கர்த்தர் உங்களுக்கு முன்பாக சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதையும், நீங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம் பண்ணின எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம். ராகாபின் சரித்திரத்தைப் படிக்க ஆரம்பித்தபோது பதினைந்து நாட்கள் நாம் தியானைக்கும்படி என்னால் எழுத முடியும் என்று நான் நிச்சயமாக எண்ணவேயில்லை. பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலுமிருந்து ராகாபைப் பற்றி படிக்க ஆரம்பித்தபோதுதான், இந்தப் பெண்மணியின் வாழ்க்கையைப் பற்றி ஒரு புத்தகமே… Continue reading இதழ்: 860 பூமிக்குள் பொறுமையாய் இருக்கும் நிலக்கரி வைரமாவது இல்லையா?
இதழ்: 859 சுற்றிலும் மதில் எழுப்பப்பட்ட ஒரு வாழ்க்கை!
யோசுவா: 6:1 எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை. இஸ்ரவேல் மக்கள் கானானின் எல்லையை நெருங்கிவிட்டனர். நாம் ஒருசில மாதங்களுக்கு முன்னால் படித்தவிதமாக மோசே பன்னிரண்டு வேவுகாரரை கானானுக்குள் அனுப்பியிருந்தான். அதில் காலேபும், யோசுவாவும் கானானைப் பற்றி பாலும் தேனும் ஓடுகிற தேசம் என்ற மகிழ்ச்சியோடு வந்தனர், ஆனால் மற்ற பத்துபேரும் அந்த தேசம் நமக்கு அழிவும் அழுகையும்தான் என்று துக்கமுகமாய் வந்தனர். தங்களை வழிநடத்தி வரும் தேவனாகிய… Continue reading இதழ்: 859 சுற்றிலும் மதில் எழுப்பப்பட்ட ஒரு வாழ்க்கை!
