1 இராஜாக்கள் 11:4,9,10 சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நியதேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்.....ஆகையால் தேவனாகிய கர்த்தர் சாலொமோனுக்கு இரண்டுவிசை தரிசனமாகி, அந்நிய தேவர்களைப் பின்பற்றவேண்டாம் என்று கட்டளையிட்டிருந்தும்.... அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமற்போனதினால் கர்த்தர் அவன்மேல் கோபமானார். தானியேலின் புத்தகம் 3 ம் அதிகாரத்தில் பாபிலோனின் ராஜாவாகிய நெபுகாத்நேச்சார் ஒரு பொற்சிலையை பண்ணுவித்து, கீத வாக்கியங்களின் சத்ததைக் கேட்கும்போது அதைத் தாழ் விழுந்து பணிந்து கொள்ள வேண்டும் என்று தன்னுடைய சகல தேசத்தின் எல்லா… Continue reading இதழ்:2289 எதைக் கொண்டு உன்னை திருப்திபடுத்துகிறாய்?
இதழ்:2288 வயிறு வலிக்கும் வரை சாப்பிடுவோம் அல்லவா?
1 இராஜாக்கள் 11:3 அவனுக்கு பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள். அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப் பண்ணினார்கள். நமக்கு பிடித்தமான உணவு ஒன்றை யோசித்து பாருங்கள். கொஞ்ச நாட்கள் அதை சாப்பிடமுடியாமல் போய்விட்டால் அதைக் கண்டவுடன் வயிறு வலிக்கும் வரை சாப்பிடுவோம் அல்லவா? ஆம்! வயிறு வலிக்கும் வரை - இங்குதான் இன்றைய தியானத்தை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். எண்ணாகமம் 11 ல் இஸ்ரவேல் மக்கள், எகிப்திலிருந்து அவர்களோடு புறப்பட்ட கொஞ்சம்… Continue reading இதழ்:2288 வயிறு வலிக்கும் வரை சாப்பிடுவோம் அல்லவா?
இதழ்:2287 இந்த ராஜஸ்திரீ தேவன் நமக்களித்த ஒரு அடையாளம்!
மத்தேயு 12:42 தென் தேசத்துக் ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து சாலோமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்..... நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்த சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றம்சுமத்துவாள். இன்று கடைசியாக பத்தாவது நாளாக சேபாவின் ராஜஸ்திரீயைப் பற்றிப் படிக்கப் போகிறோம். இன்றைய நாட்களில் அநேக தீர்க்கதரிசனங்களைப் பற்றியும், தீர்க்கதரிசிகளைப் பற்றியும் கேள்விப் படுகிறோம். உண்மையாகவே தேவனுடைய செய்தி தான் நமக்குக் கொடுக்கப்படுகிறதா அல்லது அது ஒரு தனிப்பட்ட மனிதனின் செய்தியா… Continue reading இதழ்:2287 இந்த ராஜஸ்திரீ தேவன் நமக்களித்த ஒரு அடையாளம்!
இதழ்:2286 கொடுப்பதை விட அதிகமாய் பெற்றுக் கொள்கிறோம்!
1 இராஜாக்கள் 10:13 ராஜாவாகிய சாலொமோன் தானே சந்தோஷமாய் சேபாவின் ராஜஸ்திரீக்கு வெகுமதிகள் கொடுத்ததும் அல்லாமல், அவள் விருப்பப்பட்டு கேட்டது எல்லாவற்றையும் அவளுக்குக் கொடுத்தான். இளம் சாலொமோனின் ஞானத்தையும், செல்வ செழிப்பையும் பற்றி அறிந்த சேபாவின் ராஜஸ்திரீ, அதை அவனுக்கு வழங்கியவர் சாலொமோனுடைய தேவன் என்பதையும் கேள்விப்பட்டு, தான் கேட்டது உண்மையா என்று அறியும்படியாய் தன்னுடைய தேசத்திலிருந்து புறப்பட்டு வந்தாள் என்று பார்த்தோம். அநேக ஒட்டகங்களில் பரிசுப்பொருட்களைத் தாங்கியவளாய்,அவள் கடினமான பாலைவனத்தை கடந்து வந்தாள். அவள் அமைதியாய்… Continue reading இதழ்:2286 கொடுப்பதை விட அதிகமாய் பெற்றுக் கொள்கிறோம்!
இதழ்:2285 நன்றியோடு ஜீவிக்கும் வாழ்வு!
1 இராஜாக்கள் 10:10 அவள் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும்,மிகுதியான கந்த வர்க்கங்களையும்,இரத்தினங்களையும் கொடுத்தாள்.சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவாகிய சாலொமோனுக்கு கொடுத்த அவ்வளவு கந்தவர்க்கங்கள் பிற்பாடு ஒருக்காலும் வரவில்லை. வேதாகம வல்லுநர் மத்யூ ஹென்றி அவர்கள் கூறிய இந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. நன்றியறிதல் நல்லது ஆனால் நன்றி - வாழுதல் அதைவிட மேலானது ( Thanksgiving is good but thanks-living is better) இதை வாசிக்கும்போது, புதிய ஏற்பாட்டில் லூக்கா 17 ம் அதிகாரத்தில்… Continue reading இதழ்:2285 நன்றியோடு ஜீவிக்கும் வாழ்வு!
இதழ்:2284 தேவனின் நற்குணத்தை பிரதிபலி!
1 இராஜாக்கள் 10:9 உம்மை இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வைக்க, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக. கர்த்தர் இஸ்ரவேலை என்றைக்கும் சிநேகிக்கிறபடியினால் நியாயமும் நீதியும் செய்கிறதற்கு உம்மை ராஜாவாக ஏற்படுத்தினார் என்றாள். சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனிடம் கேள்விகணைகளைத் தொகுத்து அதற்கு விடைகளையும் அறிந்தபின்னர், இஸ்ரவேல் முழுவதும் சுற்றிப்பார்க்கிறாள். சாலொமோன் கட்டின தேவாலயத்தின் பிரம்மாண்டத்தையும், தாவீதின் நகரத்தையும் சுற்றிப் பார்த்தபின்னர் அவள் முதன்முதலாக பேச ஆரம்பிக்கிறாள். அவள் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளுடைய அறிவின் கூர்மையைக் காண்பிக்கின்றன!… Continue reading இதழ்:2284 தேவனின் நற்குணத்தை பிரதிபலி!
இதழ்:2283 தலைமுறையாய்த் தொடரும் ஆசீர்வாதம்!
1 இராஜாக்கள் 10:8-9 உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள் , எப்போதும் உமக்கு முன்பாக நின்று உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள். உம்மை இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வைக்க, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக. சேபாவின் ராஜஸ்திரீ தன்னுடைய அழகிய பயணத்தின் கடைசிப் பகுதிக்கு வருகிறாள். அவளுடைய கடினமான விடுகதைகளால் சாலொமோனை சோதித்த பின்னர், தேவனாகிய கர்த்தர் அவனுக்கு அளித்திருந்த ஞானத்தையும், அவனுடைய ராஜ்யத்தின் செழிப்பையும், அங்கு காணப்பட்ட ஒழுங்கு முறைகளையும் தன்னுடைய கண்ணாரக்… Continue reading இதழ்:2283 தலைமுறையாய்த் தொடரும் ஆசீர்வாதம்!
இதழ்:2282 நீங்களும் ருசி பாருங்களேன்!
1 இராஜாக்கள் 10:7 நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அந்த வார்த்தைகளை நான் நம்பவில்லை, இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று காண்கிறேன்.... இன்றைய வேதாகமப் பகுதி எனக்கு ரோமர் 14:5 ல் , ..அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்க வேண்டும் என்று விசுவாசிகளுக்கு கூறியது நினைவுக்கு வந்தது. இதை என்னிடம் பிரித்து எழுதும்படி சொன்னால் இப்படித்தான் எழுதுவேன், 'வேதாகமத்தை வாசி, ஆழமாகப் படி, அதைக் கற்றுக்கொள், உன் உள் மனதில் நிச்சயமாய் விசுவாசி!'… Continue reading இதழ்:2282 நீங்களும் ருசி பாருங்களேன்!
இதழ்:2281 நம் வாழ்வின் ஒழுங்கு தேவனை மகிமைப் படுத்தும்!
1 இராஜாக்கள்10: 4-5 சேபாவின்ராஜஸ்திரீசாலொமோனுடையசகலஞானத்தையும், அவன்கட்டினஅரமனையயும், அவன்பந்தியின்போஜனபதார்த்தங்களையும், அவன்ஊழியக்காரரின்வீடுகளையும், அவன்உத்தியோகஸ்தரின்வரிசையையும்,அவர்கள்வஸ்திரங்களையும், அவனுடையபானபாத்திரக்காரரையும், அவன்கர்த்தருடையஆலயத்துக்குள்பிரவேசிக்கும்நடைமண்டபத்தையும்கண்டபோதுஅவள்ஆச்சரியத்தால்பிரமைகொண்டு, சேபாவின் ராஜஸ்திரீயை பற்றியல்லவா படித்துக் கொண்டிருக்கிறோம்! ஒரு நிமிடம் நம்மை சேபாவின் ராஜஸ்திரீயின் இடத்தில் வைத்து கற்பனை செய்வோம். உலகம் போற்றும் மிகுந்த ஞானமும், செல்வமும் உள்ள சாலொமோனின் அழகிய அரமனைக்குள் நடந்து கொண்டிருக்கிறோம்.....கட்டடங்களும், கண்ணைகவரும் மரவேலைகளும் நம் கவனத்தை ஈர்க்கின்றன! சாலொமோனோடு பந்தியில் அமருகிறோம். அப்பப்பா எத்தனை வரிசை! எத்தனை விதமான உணவு! அதை பரிமாறும் விதம்! அந்த ஊழியரின்… Continue reading இதழ்:2281 நம் வாழ்வின் ஒழுங்கு தேவனை மகிமைப் படுத்தும்!
இதழ்:2280 உம் பாதம் அமர்ந்து கற்றுக் கொள்ளும் மறைபொருள்!
1 இராஜாக்கள் 10:3 அப்பொழுது சாலொமோன் அவள் கேட்டவைகளையெல்லாம் விடுவித்தான். அவளுக்கு விடுவிக்கக்கூடாதபடிக்கு, ஒன்றாகிலும் ராஜாவுக்கு மறைபொருளாயிருக்கவில்லை. சேபாவின் ராஜஸ்திரீயைப்பற்றி சில நாட்கள் படித்துக் கொண்டிருக்கிறோம். அவள் ஒரு அராபிய நாட்டை சேர்ந்தவள். சாலொமோனையும் அவனோடு இணைந்திருந்த தேவனுடைய நாமத்தையும் அறிய வேண்டி எருசலேமுக்கு வந்தவள். இன்றைய வேதாகமப் பகுதி கூறுகிறது, அவள் சாலொமோனிடம் அநேக காரியங்களை கேட்டறிந்தாள் என்று பார்க்கிறோம். படிப்பும், ஞானமும் ஆண்களுக்கே உரித்தான அந்த காலகட்டத்தில், இந்தப் பெண் அநேக ஆழமான கேள்விகளோடு… Continue reading இதழ்:2280 உம் பாதம் அமர்ந்து கற்றுக் கொள்ளும் மறைபொருள்!
