ஆதி:32: 9-11 “பின்புயாக்கோபு, என்தகப்பனாகிய ஆபிரகாமின்தேவனும், என்தகப்பனாகிய ஈசாக்கின்தேவனுமாய்இருக்கிறவரே: உன்தேசத்துக்கும், உன்இனத்தாரிடத்துக்கும்திரும்பிப்போ உனக்கு நன்மை செய்வேன்என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே, அடியேனுக்கு தேவன்காண்பித்த எல்லா தயவுக்கும், எல்லா சத்தியத்துக்கும்நான் எவ்வளவேனும்பாத்திரன்அல்ல, நான்கோலும், கையுமாய்இந்த யோர்தானைக்கடந்துபோனேன், இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும்உடையவனானேன். என்சகோதரனாகிய ஏசாவின்கைக்குஎன்னைத்தப்புவியும்; அவன்வந்து என்னையும்பிள்ளைகளையும், தாய்மார்களையும் முறிய அடிப்பான்என்று அவனுக்கு நான்பயந்திருக்கிறேன்”. இந்த புதிய மாதத்தைக் காணச்செய்த தேவனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரங்களை செலுத்துவோம்! இந்த மாத முழுவதும் அவர் நம்மைக் காத்து, பராமரித்து நடத்துமாறு ஜெபிபோம்!… Continue reading இதழ்:2254 எந்த ஆபத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறாய்?
இதழ்:2253 நம்மை சற்று திரும்பிப் பார்ப்போம்!
ஆதி: 30: 25,26 “ராகேல்யோசேப்பைபெற்றபின், யாக்கோபு லாபானைநோக்கி; நான் என் ஸ்தானத்திற்க்கும், என்தேசத்துக்கும்போக என்னை அனுப்பிவிடும். நான்உமக்கு ஊழியஞ்செய்து சம்பாதித்த என்மனைவிகளையும், என்பிள்ளைகளையும்எனக்கு தாரும், நான்போவேன்; நான்உம்மிடத்தில்சேவித்தசேவகத்தைநீர்அறிந்திருக்கிறீர்என்றான்.” புத்திர சுவிகாரத்தை ஏமாற்றி பெற்றதால், தன் சகோதரன் ஏசாவுக்கு பயந்து யாக்கோபு அவன் தாயின் சகோதரனாகிய லாபானிடம் அடைக்கலமானான் என்று படித்தோம். யாக்கோபு தன்னை தேடி வந்த சூழ்நிலையையும், தன் மகள் ராகேல் மீது அவன் கொண்டிருந்த அன்பையும் நன்கு உபயோகப்படுத்தி சதி மன்னன் லாபான் அவனைத், தன் … Continue reading இதழ்:2253 நம்மை சற்று திரும்பிப் பார்ப்போம்!
இதழ்:2252 சதிமன்னன் சாத்தானால் வஞ்சிக்கப்படுகிறோமா?
ஆதி: 29:21 “ பின்புயாக்கோபுலாபானைநோக்கி, என்நாட்கள்நிறைவேறினபடியால்என்மனைவியினடத்தில்நான்சேரும்படிஅவளைஎனக்குத்தரவேண்டும்என்றான்.” நாம் வேதத்தில் ரெபெக்காள் சதி திட்டம் தீட்டி, யாக்கோபு ஏசாவைப் போல ஆள்மாறாட்டம் செய்து ஈசாக்கின் ஆசீர்வாதத்தைப் பெற செய்தாள் என்று பார்த்திருக்கிறோம். வேதத்தில் சில பக்கங்கள் புரட்டியவுடன் அவள் சகோதரன் லாபான் அதே விதமாக சதி திட்டம் தீட்டி, யாக்கோபுக்கு துரோகம் செய்கிறதைப் பார்க்கிறோம். சதி என்பது இவர்கள் இரத்தத்தில் ஓடிய குணம் போலும்! இந்த இடத்தில் சதி மன்னன் லாபானுடைய இளம் பிராயத்தை சற்று பார்ப்போம். ஆபிரகாமின்… Continue reading இதழ்:2252 சதிமன்னன் சாத்தானால் வஞ்சிக்கப்படுகிறோமா?
இதழ்:2251 மறைமுக வழிநடத்துதலுக்கு காத்திரு!
ஆதி: 29: 9-11 “அவர்களோடேஅவன்பேசிக்கொண்டிருக்கும்போதே, தன்தகப்பனுடையஆடுகளைமேய்த்துக்கொண்டிருந்தராகேல்அந்தஆடுகளைஒட்டிக்கொண்டுவந்தாள். யாக்கோபுதன்தாயின்சகோதரனாகியலாபானுடையகுமாரத்தியாகியராகேலையும், தன்தாயின்சகோதரனாகியலாபானின்ஆடுகளையும்கண்டபோது, யாக்கோபுபோய், கிணற்றின்வாயிலிருக்கிறகல்லைப்புரட்டிதன்தாயின்சகோதரனாகியலாபானின்ஆடுகளுக்குதண்ணீர்காட்டினான். பின்புயாக்கோபு ராகேலைமுத்தஞ்செய்து, சத்தமிட்டுஅழுது..” நாம் தாவீதை தேவனாகிய கர்த்தர் ஏன் நேசித்தார் என்ற தலைப்பைத் தொடருமுன் சற்று நாட்கள் ஆதியாகமத்தில் நடந்த சில சம்பவங்களைக் காணலாம்! இதற்கு முன் ரெபெக்காள் தண்ணீர் மொள்ள வந்த போது, ஆபிரகாமின் ஊழியக்காரனைக் கண்டு ,அவனுக்கும் அவன் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் வார்த்தாள் என்று படித்த ஞாபகம் உண்டு அ ல்லவா? இப்பொழுது கடிகார முள்ளை சற்று தள்ளி வைப்போம்.… Continue reading இதழ்:2251 மறைமுக வழிநடத்துதலுக்கு காத்திரு!
இதழ்:2250 பரிபூரண சுகமான வாழ்க்கை உண்டு!
சங்: 51: 8 நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூறும். தேவனாகிய கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்? என்ற தலைப்பின் பன்னிரண்டாம் பாகம் இன்று! கடந்த வாரத்தில் கர்த்தர் நம்மோடு பண்ணின உடன்படிக்கையில் மாறாதவர் என்று பார்த்தோம். அவர் வார்த்தை மாறாது! அவர் சொன்ன யாவற்றையும் நிறைவேற்றுவார். இன்று இதை தெளிவாக நம்முடைய மனதில் கொண்டு இந்த வசனத்தை நாம் மறுபடியும் படிக்கப்போகிறோம். தாவீது தான் தேவனாகிய கர்த்தருடன் கொண்டிருந்த அந்த… Continue reading இதழ்:2250 பரிபூரண சுகமான வாழ்க்கை உண்டு!
இதழ்:2249 அவருடைய உடன்படிக்கை மாறவில்லை!
சங்: 51: 7 - 11 நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன். என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன். நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூறும். என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை… Continue reading இதழ்:2249 அவருடைய உடன்படிக்கை மாறவில்லை!
இதழ்:2248 தேவன் வாக்கு தவறாதவர்!
சங்: 51: 9 - 11 என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும். தேவனாகிய கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்? என்ற தலைப்பில் இன்று பத்தாவது நாளாகப் படிக்கிறோம். சில வருடங்களுக்கு முன்னால் நானும் என் மகனும் பிஸினஸ் விஷயமாக வெளியூர்… Continue reading இதழ்:2248 தேவன் வாக்கு தவறாதவர்!
இதழ்:2247 கிறிஸ்து மட்டுமே அருளும் சந்தோஷம் என்னும் ஜீவ ஊற்று!
சங்: 51:8 நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூறும். தேவனாகிய கர்த்தர் தாவீதை ஏன் நேசித்தார்? என்ற தலைப்பின் 9 ம் பாகம் இன்று பார்கிறோம். உலகம் கொடுக்கக்கூடாத சந்தோஷம் ஒன்று உண்டு என்பது என்னைபோல நீஙகளும் அறிவீர்கள் என்று நம்புகிறேன். அதுமட்டுமல்ல இந்த சந்தோஷத்தை உலகம் நம்மிடமிருந்து பறிக்கவும் முடியாது.ஆனால் சில நேரங்களில் நம்முடைய வாழ்க்கையை நாமே ஆளுகை செய்து கொள்ளலாம் அங்கு கர்த்தர் தேவையில்லை என்று நாம்… Continue reading இதழ்:2247 கிறிஸ்து மட்டுமே அருளும் சந்தோஷம் என்னும் ஜீவ ஊற்று!
இதழ்:2246 நீர் சுத்திகரியும் அப்பொழுது சுத்தமாவேன்!
சங்:51:7 நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன். என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன். தேவனாகிய கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்? என்பதின் 8 வது பாகம் இன்று. தாவீது இந்த அன்புக் கடிதத்தின் முதல் சில வசனங்களில், தான் வழிதவறிப் போன இந்த நிலையில் கர்த்தருடைய கிருபை தனக்குக் கிடைக்க வேண்டுமென்று கெஞ்சுகிறான். தேவனுடைய மிகுந்த இரக்கங்களால் தன்னை ரட்சிக்க வேண்டுமென்று வேண்டுகிறான். தன்னுடைய பாவத்திலிருந்து முற்றிலும் சுத்திகரிக்கப்பட்டு, தன்னைக் குற்றப்படுத்தும்… Continue reading இதழ்:2246 நீர் சுத்திகரியும் அப்பொழுது சுத்தமாவேன்!
இதழ்:2245 பாவத்தின் வடிவமைப்பு பொய் தான்!
சங்:51:6 இதோ உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர். அந்தக்கருணத்தில் ஞானத்தை எனக்கு தெரியப்படுத்துவீர். தேவனாகிய கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்? இன்று ஏழாவது நாளாக இந்தத் தலைப்பில் தியானிக்கிறோம். நாம் கடைசியாக ஏதேன் என்னும் பரிபூரண அழகானத் தோட்டத்தைப் பற்றிப் பார்த்தோம். அந்த அழகிய சுற்றுபுறத்தில் வாழ்ந்தவர்கள் தான் ஆதாமும் ஏவாளும். தேவனாகிய கர்த்தர் அந்தத் தோட்டத்தில் உள்ள எல்லாவற்றையும் அனுபவிக்க அவர்களுக்கு சுதந்தரம் கொடுத்தாலும், ஒரே ஒரு மரத்தின் கனியை மாத்திரம் புசிக்க வேண்டாம் என்றிருந்தார். வேதம்… Continue reading இதழ்:2245 பாவத்தின் வடிவமைப்பு பொய் தான்!
