யோசுவா:14:6 கேனாசியனான எப்புனேயின் குமாரனாகிய காலேப் அவனை நோக்கி; காதேஸ்பர்னேயாவிலே கர்த்தர் என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும் தேவனுடைய மனுஷனாகிய மோசேயோடே சொன்ன வார்த்தையை நீர் அறிவீர். இன்றைக்கு இந்த தியானத்தை எழுதும்போது, என்னுடைய அப்பா இறந்து 26 நாட்களே ஆகியுள்ளன. அப்பா மரிப்பதற்க்கு முன்பே நான் இந்த தியானத்தை எழுத ஆரம்பித்திருந்தேன். தகப்பன் மகள் உறவைப் பற்றிய இந்த தியானத்தை அப்பா இறந்த பின்னால் என்னால் எழுதவே முடியவில்லை. அப்பாவை இழந்த வேதனையுடன்தான் எழுதுகிறேன். எப்பொழுதோ வாசித்த வாசகம் ஒன்று " பெண்… Continue reading மலர் 2 இதழ் 165 ‘அப்பா என்பது’ ……. எத்தனை ஆசீர்வாதமான சொல்!!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
திடன்கொள்ளுங்கள், நான் தான், பயப்படாதிருங்கள்! ( மாற்கு:6:50) "தளர்ந்த கைகளை திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள், மனம்பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ உங்கள் தேவன் நீதியை சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்…" ஏசாயா: 35: 3,4 ராஜாவின் மலர்கள் வாசகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்! பயம் என்பது நம்மில் அனேகருக்குள் பலவிதங்களில் ஒளிந்து கொண்டிருக்கிறது. இந்த வருடத்தின் கடைசிநாளில் தாணே புயல் காற்று வீசியதால் வந்த அழிவைப் பார்த்து… Continue reading புத்தாண்டு வாழ்த்துக்கள்!
புதிய ஆண்டில் ராஜாவின் மலர் தொடரும்!
ராஜாவின் மலர்கள் வாசகர்களுக்கு என் உள்ளம் கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன். கடந்த இரண்டு மாதங்களாக வேதாகம தியானத்தை தொடர்ந்து எழுத முடியாத வேளையிலும் உங்கள் அன்பும் ஜெபமும் என்னைத் தாங்கியது. இந்த புதிய ஆண்டிலிருந்து தியானத்தை தொடர்ந்து தடையில்லாமல் எழுத கர்த்தர் என்னோடு இருந்து பெலன் தர வேண்டுமென்று ஜெபியுங்கள்! உங்கள் சகோதரி பிரேமா சுந்தர் ராஜ்
மலர்:1 இதழ்: 42 நான் எப்படியாவது அடைந்தாக வேண்டும்!
ஆதி: 34:2-4 “அவளை ஏவியனான ஏமோரின் குமாரனும், அத்தேசத்தின் பிரபுவுமாகிய சீகேம் என்பவன் கண்டு அவளைக் கொண்டுபோய், அவளோடே சயனித்து அவளைத் தீட்டு படுத்தினான். அவனுடைய மனம் யாக்கோபின் குமாரத்தியாகிய தீனாள் மேல் பற்றுதலாயிருந்தது; அவன் அந்தப் பெண்ணை நேசித்து, அந்தப் பெண்ணின் மனதுக்கு இன்பமாய்ப் பேசினான். சீகேம் தன் தகப்பனாகிய ஏமோரை நோக்கி: இந்தப் பெண்ணை எனக்கு கொள்ள வேண்டும் என்று சொன்னான்.” நேற்று நாம், தீனாள் தன் கூடாரத்தின் பாதுகாப்பையும், தேவனின்… Continue reading மலர்:1 இதழ்: 42 நான் எப்படியாவது அடைந்தாக வேண்டும்!
மலர்:1 இதழ்: 41 மதியற்ற பெண்!
ஆதி:34:1 “ லேயாள் யாக்கோபுக்கு பெற்ற குமாரத்தியாகிய தீனாள் தேசத்துப் பெண்களைப் பார்க்க புறப்பட்டாள்.” நாம் நம் வாழ்க்கையில் என்றாவது தவறான முடிவுகள் எடுத்து பின்னர் அதற்காக மிகவும் வருந்தியதுண்டா? நம்மில் சிலர் திருமணத்தில் கூட அவசர முடிவு எடுத்ததினால், நம் வாழ்நாள் முழுவதும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கலாம். சிறு காரியங்களில் நாம் எடுக்கிற முடிவுகள் கூட நமக்கு பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நாம் எடுக்கிற எந்த முடிவும்,… Continue reading மலர்:1 இதழ்: 41 மதியற்ற பெண்!
மலர்:1 இதழ்: 39 தனிமையா? தோல்வியா?
ஆதி: 32: 27, 28 “ அவர் உன் பேர் என்ன என்று கேட்டார்; யாக்கோபு என்றான். அப்பொழுது அவர்; இனி உன் பேர் யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும், தேவனோடும், மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்.” யாக்கோபின் குடும்பத்தார் தேவன் காட்டிய புதிய வாழ்வைத் தேடி,தொடர்ந்து நடந்தனர். அவர்கள் எதிர்காலத்தை எதிர்நோக்கி செல்லும்போது இதோ ஏசா 400 பேர் கொண்ட பெரிய படையோடு யாக்கோபை எதிர்கொண்டு வருகிறான் என்று. யாக்கோபுக்கு தான் ஏசாவை… Continue reading மலர்:1 இதழ்: 39 தனிமையா? தோல்வியா?
அன்பின் சகோதர சகோதரிகளே, கடந்த ஒரு மாத காலமாக வேதாகம தியானத்தை தொடர முடியாதற்கு வருந்துகிறேன். நான் பணி புரியும் நிறுவனத்தின் சார்பாக கௌத்தமாலா என்ற நாட்டுக்கு சென்றதாலும், பின்னர் அங்கிருந்து அமெரிக்கா தேசத்தில் என் மகள் வீட்டுக்கு வந்ததாலும் என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை. நான் யோசுவாவின் வாழ்க்கையைப் பற்றித் தொடருமுன் ஒருசில நாட்கள் எனக்கும், மற்றும் பலருக்கும் பிடித்த சில தியானத் துளிகளை மறுபடியும் வெளியிட விரும்புகிறேன். தேவனாகிய கர்த்தர் உங்கள் ஒவ்வொருவருடனும் இருந்து… Continue reading
மலர் 2 இதழ் 164 இதோ பார்! வெற்றி உன் பக்கம்!
யோசுவா: 8:1 நீ பயப்படாமலும், கலங்காமலும் இரு; நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து ஆயிபட்டணத்தின்மேல் போ, இதோ, ஆயியின் ராஜாவையும், அவன் பட்டணத்தையும், அவன் நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன். அமெரிக்கா தேசத்தின் ஆரிசோனா மாநிலத்தில் இருக்கும், ’தி கிராண்ட் கேனன்’ என்ற உலகப்புகழ் பெற்ற மலைக் கணவாயைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உலகத்திலேயே மிகப் பெரிய, மிக அழகான கணவாய் இது என்றால் மிகையாகாது. சிவப்பு நிறத் துணியை மடித்ததுபோல சிவப்புக் கற்களான பாறைகள்… Continue reading மலர் 2 இதழ் 164 இதோ பார்! வெற்றி உன் பக்கம்!
மலர் 2 இதழ் 163 எழுந்திருக்க எனக்கு பெலன் தாரும்!
யோசுவா: 8:1 ”… நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து ஆயிபட்டணத்தின்மேல் போ,..” என்னுடைய எண்பது வயதான அப்பா படுக்கையில் இருக்கிறார்கள். இருதயக் கோளாரினால் பாதிக்கப்பட்ட அவர்களால் தானாக எழும்பவோ அல்லது எதையும் செய்யவோ முடியாது. இந்திய ராணுவத்தில் இருந்த அவர்களுடைய கைகளில் நல்ல பெலன் இருக்கிறது, மனதில் தைரியம் இருக்கிறது ஆனால் கால்களும், சரீரமும் பெலனிழந்து போய்விட்டன. இரண்டு மூன்று தடவை தானாக எழும்ப முயற்சி செய்ததால் கீழே விழுந்து விட்டார்கள். இன்று காலையில்… Continue reading மலர் 2 இதழ் 163 எழுந்திருக்க எனக்கு பெலன் தாரும்!
மலர் 2 இதழ் 160 தோல்விகள் என்னும் பள்ளத்தாக்கு!
யோசுவா 7:26 ..” அவன்மேல் இந்நாள் வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே கர்த்தர் தன் கோபத்தின் உக்கிரத்தை விட்டு மாறினார்; ஆகையால் அவ்விடம் இந்நாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும். ஒசியா: 2:15 அவளுக்கு திராட்சத்தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்.” நான் முதன்முறையாக ஆகானின் கதையை என்னுடைய சன்டே ஸ்கூலில் கேட்ட ஞாபகம் இருக்கிறது! அன்று எனக்கு பழைய ஏற்பாட்டின் தேவன் மீது அதிக பயம் வந்தது. கடவுள் ஆகானுக்கு மட்டும் அல்ல,… Continue reading மலர் 2 இதழ் 160 தோல்விகள் என்னும் பள்ளத்தாக்கு!
