Call of Prayer

ஜெபக்கூடாரம்

                       தேவனை இரக்கம் காட்ட வைத்த ஜெபம்        யோனா: 2:1,10 ”அந்த மீனின் வயிற்றிலிருந்து யோனா, தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி ..... கர்த்தர் மீனுக்கு கட்டளையிட்டார், அது யோனாவை கரையிலே கக்கி விட்டது.     ஒவ்வொரு சனிக்கிழமையும் நாம் தேவனுடைய சமுகத்தில் நம் ஜெப வேண்டுதல்களோடு வருகிற நாள். இன்றைய வேத வசனத்தில், யோனா தேவனுக்கு கீழ்ப்படியாமல் ஓடினாலும்,, மனந்திருந்தி தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணியபோது கர்த்தர் அவனை விழுங்கியிருந்த மீனின்… Continue reading ஜெபக்கூடாரம்

Bible Study

மலர்:1இதழ்: 55 காரிருளில் ஓர் ஒளி!

  ஆதி:  39:20 “ யோசேப்பின் எஜமான் அவனைப் பிடித்து ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான், அந்த சிறைச்சாலையில் அவன் இருந்தான்.”   யாக்கோபின் செல்லக் குமாரனுக்கு நடந்தது என்ன? திருமதி போத்திபாரினால் பொய் பழி சுமத்தப்பட்டு, சிறைச்சாலையில் வந்தடைகிறான் யோசேப்பு. அமைதியாய் அன்பான தகப்பனோடே, செல்லமாய் வாழ்ந்த வாழ்க்கை எங்கு மறைந்ததது? திடீரென்று அவன் வாழ்க்கையில் வீசிய புயல் எங்கிருந்து வந்தது? ஒன்றுக்கு பின்னால் ஒன்றாக நடந்த சம்பவங்கள், அவனை… Continue reading மலர்:1இதழ்: 55 காரிருளில் ஓர் ஒளி!

Bible Study

மலர்:1இதழ்: 54 எனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடையாது!

ஆதி:  39:14 – 15 “ அவள் தன் வீட்டு மனிதரைக் கூப்பிட்டு: பாருங்கள், எபிரேய மனுஷன் நம்மிடம் சரசம்பண்ணும்படிக்கு அவனை நமக்குள் கொண்டுவந்தார், அவன் என்னோடே சயனிக்கும்படி என்னிடத்தில் வந்தான்; நான் மிகுந்த சத்தமிட்டு கூப்பிட்டேன், நான் சத்தமிட்டு கூப்பிடுகிறதை அவன் கண்டு, தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு வெளியே ஓடிப்போய்விட்டான் என்றாள்”   போத்திபாரின் மனைவி யோசேப்பின் மேல் கண்ணைப் போட்டு வலை வீசினாள் என்று நேற்று பார்த்தோம்! அவனது சௌந்தர்யம், இளமை, திறமை,… Continue reading மலர்:1இதழ்: 54 எனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடையாது!

Bible Study

மலர்:1 இதழ்: 53ஒரே ஒரு கணம் சிற்றின்பம் தவறா???

ஆதி:  39:7 “சிலநாள் சென்றபின், அவன் எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள்”   யோசேப்பை ஏற்றிக்கொண்டு இஸ்மவேலரின் வண்டி வேகமாய் பாலைவனத்தை கடந்து சென்றன. யாக்கோபு, ராகேலுக்கு பிறந்த செல்ல குமாரன், 17 வயதான யோசேப்பு, இப்பொழுது அடிமையாக எகிப்து தேசத்துக்கு அழைத்து செல்லப்படுகிறான்!  அவன் என்றுமே கண்டிராத புதிய நாட்டில், புதிய மக்கள் மத்தியில் வாழப்போகிற  இந்த இளைய குமாரனின் உள்ளத்தில் என்ன எண்ணங்கள் ஓடியிருக்கும்? தன்னை நேசித்த தகப்பன் யாக்கோபை… Continue reading மலர்:1 இதழ்: 53ஒரே ஒரு கணம் சிற்றின்பம் தவறா???

Bible Study

மலர்:1 இதழ்: 52 நீ யாருக்கு சொந்தம்?????

ஆதி:  38: 25 – 26 “ அவள் (தாமார்) வெளியே கொண்டுவரப் பட்டபோது, அவள் தன் மாமனிடத்துக்கு அந்த அடைமானத்தை அனுப்பி, இந்த பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும், இந்த கோலும், இந்த ஆரமும் யாருடைவகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள். யூதா அவைகளை பார்த்தறிந்து, என்னிலும் அவள் நீதியுள்ளவள், அவளை என் குமாரனாகிய சேலாவுக்கு கொடாமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளை சேரவில்லை.”   அன்பானவர்களே! ஒருவேளை… Continue reading மலர்:1 இதழ்: 52 நீ யாருக்கு சொந்தம்?????

Bible Study

மலர்:1இதழ்: 51 சுயநலத்தினால் பேசிய பேரம்!

ஆதி:  38:16 “( யூதா ) அந்தவழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடம் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி எனக்கு என்ன தருவீர் என்றாள்.” தாமார் தன் கைம்பெண் வேஷத்தை கலைத்து தன்னை வேசியைப்போல அலங்கரித்து, முக்காடிட்டு, திம்னாவுக்கு போகிற வழியில் நீருற்றண்டையில் அமர்ந்தாள் என்று பார்த்தோம். ஆடுகளுக்கு மயிர்கத்தரிக்கும் காலம் அது,  ஆதலால் யூதா தன் சிநேகிதனுடன் சேர்ந்து தன் மந்தையை மயிர்கத்தரிப்பதர்காக… Continue reading மலர்:1இதழ்: 51 சுயநலத்தினால் பேசிய பேரம்!

Call of Prayer

ஜெபக்கூடாரம்!

                              ஆயிசு நாட்களை கூட்டிய ஜெபம்   ஏசா:  38:5 “நீ போய் எசேக்கியாவை நோக்கி:  உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; உன் விண்ணபத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்”   ஒவ்வொரு சனிக்கிழமையும் நாம் தேவனுடைய சமுகத்தில் நம் ஜெப வேண்டுதல்களோடு வருகிற நாள். இன்றைய வேத வசனத்தில், எசேக்கியா ராஜா வியாதிப்பட்டு இருக்கையில், அவன் அழுது ஜெபித்தபோது, கர்த்தர் ஏசாயா… Continue reading ஜெபக்கூடாரம்!

Bible Study

மலர்:1இதழ்:50 திம்னாவுக்கு போகிற வழியில்……

ஆதி:  38:14,15  “ சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாக கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை களைந்து போட்டு, முக்காடிட்டு தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்கு போகிற வழியிலிருக்கிற நீருற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள். யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்த படியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து” நேற்று நாம் தாமாருக்கு இழைக்கப் பட்ட அநியாயத்தை கர்த்தர் கண்டார் என்று பார்த்தோம். இன்றைய வேத பகுதியில் நான் தாமார் நடந்து… Continue reading மலர்:1இதழ்:50 திம்னாவுக்கு போகிற வழியில்……

Bible Study

மலர்:1 இதழ்: 49 உன்னைக் காண்கிற கண்கள்!

ஆதி:  38:6,7  “யூதா தன் மூத்த மகனாகிய ஏர் என்பவனுக்கு தாமார் என்னும் பேருள்ள ஒரு பெண்ணைக் கொண்டான். யூதாவின் மூத்த மகனாகிய ஏர் என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால் கர்த்தர் அவனை அழித்து போட்டார்.”  நேற்று நாம் யோசேப்பை அவன் சகோதரர் இஸ்மவேலருக்கு விற்று போட்டதைப் பற்றி பார்த்தோம். யோசேப்பின் வாழ்வை நாம் தொடரு முன் வேதத்தில் தாமார் என்ற பெண்ணின் கதையை வாசிக்கிறோம். நம்முடைய இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில்  (மத்: 1:3)  இடம்… Continue reading மலர்:1 இதழ்: 49 உன்னைக் காண்கிற கண்கள்!

Bible Study

மலர்:1 இதழ்: 48 தம்பி ஒரு முள்!

  ஆதி:  37:3 “ இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்பு தனக்கு பிறந்ததினால் இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்கு பலவருணமான அங்கியை செய்வித்தான்”   அப்பாவுக்கு தம்பியை தான் மிகவும் பிடிக்கும், அவனுக்கு தான் எல்லாம் செய்வார்கள், அம்மாவுக்கு அக்கா தான் உயிர், அவளுக்குத்தான் எல்லாம் கிடைக்கும், நான் என்றால் ஆகாது... என்றெல்லாம் பிள்ளைகள் குறை கூறுவதை கேட்கிறோம். இந்த பிள்ளைகள் தாய் தகப்பனை நேசித்தாலும், அந்த பாசத்தின் நுனியில் ஒரு சிறிய… Continue reading மலர்:1 இதழ்: 48 தம்பி ஒரு முள்!