ஆதி : 24: 67 “ அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக் கொண்டு போய்,அவளைத் தன் மனைவியாக்கிக் கொண்டு அவளை நேசித்தான். ஈசாக்கு தன் தாய்க்காக கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதல் அடைந்தான்.” வருடங்கள் கடந்தோடின! சாராள் தன் 127 வது வயதில் மரிக்கிறாள். திருமண வயதை அடைந்துவிட்டான் ஈசாக்கு. ஆபிரகாம் தன் முதிர்ந்த வயதில், தன் குமாரன் ஈசாக்குக்கு திருமணம் ஒழுங்கு செய்கிறதைப் பார்க்கிறோம். தன் மகனுக்கு சரியான… Continue reading மலர்1: இதழ்:26 திருமணங்கள் எங்கே நிச்சயிக்கப்படுகின்றன?
மலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்! விளைவு?
மலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்! விளைவு?.
அன்பின் சகோதர, சகோதரிகளே, ராஜாவின் மலர்கள் மே 2 ம் தேதியிலிருந்து புதிய பொலிவுடன் தொடர உள்ளது. யாத்திராகமம் 21, 22, 23 ம் அதிகாரங்களில் உள்ள தேவனுடைய கட்டளைகளை நாம் தொடர்ந்து தியானிக்கப் போகிறோம். அதற்கு முன்னோடியாக நீங்கள் விரும்பி வாசித்த சில தியானத் துளிகளை மறுபடியும் வெளியிடுகிறேன். கர்தருடைய ஆசிர்வாதம் நம்மனைவரோடும் தங்குவதாக! உங்கள் சகோதரி, Prema Sunder Raj
மலர்:1இதழ் 86 தீர்க்காயிசு வேண்டுமா?
யாத்தி: 20:12 …உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக. தேவன் இஸ்ரவேல் மக்கள் மூலமாய் நமக்கு அளித்த ஒரு சில பிரமாணங்களை படித்தபின்னர் நாம் யாத்திராகமத்தை விட்டு கடந்து செல்லலாம் என்று நாம் பார்த்தோம். ஆனால் ஒரு மாதமாக என்னால் இதைதொடர்ந்து எழுத முடியவில்லை. இன்று நாம் தியானிக்கிற முதல் பிரமாணம் யாத்தி 20: 12 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்பது. … Continue reading மலர்:1இதழ் 86 தீர்க்காயிசு வேண்டுமா?
மலர்:1இதழ் 85 கடலின் நடுவே ஓர் வெட்டாந்தரை!
யாத்தி: 14: 21, 22 மோசே தன் கையை சமுத்திரத்தின் மேல் நீட்டினான், அப்பொழுது கர்த்தர் இரா முழுவதும் பலத்த கீழ்க்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து அதை வறண்டு போகப் பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று. இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்து போனார்கள். அவர்கள் வலதுபுறத்திலும், அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது. எனது வலது கரத்தில் வாதத்தினால் ஏற்பட்ட வலியினால் இந்த தியானம் எழுதுவது தடைப்பட்டு… Continue reading மலர்:1இதழ் 85 கடலின் நடுவே ஓர் வெட்டாந்தரை!
மலர்:1இதழ் 84 ஷ்………… அமைதி!
யாத்தி: 14: 13 “...... நீங்கள் நின்று கொண்டு இன்றைக்கு கர்த்தர் உங்களுக்கு செய்யும் இரட்சிப்பை பாருங்கள்......” நாங்கள் கிராமங்களில் சிறு குழந்தைகளை ஒன்று சேர்க்கும்போது அவர்களை அமைதிப்படுத்துவது ஒரு கடினமான காரியமாய் இருக்கும். கட்டுக்கு அடங்காமல் பிள்ளைகள் கத்தும்போது சிலநேரம் உரத்தகுரலில் ‘இப்பொழுது அமைதியாய் இருக்கிறீர்களா இல்லையா’ என்று சத்தமிட்டால் தான் குழந்தைகள் அடங்குவார்கள். நான் யாத்தி: 14: 13 வாசித்தபோது இப்படித்தான் யோசித்தேன். இஸ்ரவேல் மக்களின் அழுகை, கூக்குரல், முறுமுறுப்பு இவற்றை கேட்ட தேவன்,… Continue reading மலர்:1இதழ் 84 ஷ்………… அமைதி!
மலர்:1இதழ் 83 பயப்படாதிருங்கள்!
யாத்தி:14: 13 “அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி பயப்படாதிருங்கள்...” யாத்திராகமத்தில் நாம் படிக்கிற விதமாக, சில காரியங்களை உங்கள் மனக்கண்கள் முன் படம் போல வைக்கிறேன்! இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்த தேவனாகிய கர்த்தர் அவர்களை பகலிலே மேக ஸ்தம்பத்திலும், இரவிலே அக்கினி ஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்று வழிநடத்தினார். எகிப்திலே மகா அற்புதத்தை கண்களால் கண்ட அவர்கள் தேவனாகிய கர்த்தர் மேல் தங்கள் முழு நம்பிக்கையையும் வைத்திருப்பார்கள் என்று… Continue reading மலர்:1இதழ் 83 பயப்படாதிருங்கள்!
மலர்:1இதழ்:82 யுத்தம் உண்டு! ஜெயம் யாருக்கு?
Red_Sea_Crossing யாத்தி: 14: 1,4 “கர்த்தர் மோசேயை நோக்கி: ஆகையால் பார்வோன் அவர்களைப் பின் தொடரும்படிக்கு நான் அவன் இருதயத்தை கடினப்படுத்தி, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும், அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன் என்றார்....” கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை கானானை நோக்கி நடக்க விடாமல், அதற்கு எதிர் திசையில் வழிநடத்தி சமுத்திரத்துக்கும், வனாந்திரத்துக்கும் இடையே பாளையமிரங்க கட்டளையிட்டார் என்று பார்த்தோம். பார்வோனின் அரண்மனையில் பரபரப்பு! கோஷேன் நாட்டிலிருந்து புறப்பட்ட இஸ்ரவேலரை அவர்கள்… Continue reading மலர்:1இதழ்:82 யுத்தம் உண்டு! ஜெயம் யாருக்கு?
மலர்:1இதழ்:81 ஒருபுறம் வனாந்திரம் மறுபுறம் சமுத்திரம்????
யாத்தி:14: 1-3 கர்த்தர் மோசேயை நோக்கி: நீங்கள் திரும்பி மித்தோலுக்கும், சமுத்திரத்துக்கும் நடுவே...... சமுத்திரக்கரையிலே பாளயமிரங்குவீர்களாக. அப்பொழுது பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைக் குறித்து:அவர்கள் தேசத்திலே திகைத்து திரிகிறார்கள், வனாந்திரம் அவர்களை அடைத்துப் போட்டது என்று சொல்லுவான்’. எங்களுடைய கிராஸ் 2 கிராஸ் என்ற நிறுவனத்தில், எல்லாவிதமான தையல் வேலைகளும் நடைபெறுகிறது. கையினால் பூ போடுவதிலிருந்து, கம்ப்யூட்டர் மூலம் இயக்கப்படும் இயந்திரங்கள் மூலம் எம்ப்ரோயடேரி போடும் வேலை வரை நடைபெறுகிறது. சில நேரங்களில் பெண்கள் கையினால்… Continue reading மலர்:1இதழ்:81 ஒருபுறம் வனாந்திரம் மறுபுறம் சமுத்திரம்????
மலர்:1இதழ்:80 அமைதி காப்பது பொன்னுக்கு ஒப்பானது!
எண்ணா:12: 1, 2 “எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால் மிரியாமும் ஆரோனும்,அவன் விவாகம் பண்ணியிருந்த எத்தியோப்பிய தேசத்து ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி: கர்த்தர் மோசேயைக்கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக் கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார். மோசேயின் மனைவியாகிய சிப்போராளின் மூலம் நம் குடும்பத்தில் கடைபிடிக்க வேண்டிய சில நல்ல குணநலன்களைப் பற்றி பார்த்துக் கொண்டு வருகிறோம். நேற்று நாம் மோசே தன் மாமனாரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, அவருடைய ஆலோசனையைக்… Continue reading மலர்:1இதழ்:80 அமைதி காப்பது பொன்னுக்கு ஒப்பானது!
