யாத்தி:18:19 இப்பொழுது என் சொல்லைக்கேளும், உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன், தேவனும் உம்மோடு கூட இருப்பார்.........” 18:24 மோசே தன் மாமன் சொல்கேட்டு அவன் சொன்னபடியெல்லாம் செய்தான். மோசேயின் குடும்பம் ஒன்று சேர்ந்த இடத்தில் சந்தோஷம் இருந்தது என்று பார்த்தோம். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, குடும்ப நலனுக்காக முடிவு எடுத்து, விட்டு கொடுத்து வாழ்ந்த குடும்பம் என்று அவர்களைப் பற்றி பார்த்தோம். யாத்தி:18: 14 – 25 வசனங்களைப் படிக்கும் போது இன்னுமொரு சம்பவத்தைப் பற்றி படிக்கிறோம்.… Continue reading மலர்:1இதழ்: 79 மாமனாரிடம் ஆலோசனையா?????
மலர்:1இதழ்: 78 நல்லதொரு குடும்பம்!
யாத்தி: 18: 5 “மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயின் குமாரரோடும், அவன் மனைவியோடுங்கூட, அவன் பாளயமிறங்கியிருந்த தேவ பர்வதத்தினிடத்தில் வனாந்திரத்துக்கு வந்து….” நாம் கடந்த நாட்களில் மோசேயுடைய வாழ்க்கையைப் பற்றி பார்த்தோம். பெண்கள் அவன் வாழ்க்கையில் முக்கிய இடம் வகுத்தனர் என்று அறிந்தோம். அவன் தாய் யோகெபெத், சகோதரி மிரியம், பார்வோன் குமாரத்தி, அவன் மனைவி சிப்போராள் என்ற பல பெண்கள் அவன் வாழ்க்கையை பாதுகாத்து, வளர்த்து, நேசித்து வந்தனர் என்று பார்க்கிறோம்.… Continue reading மலர்:1இதழ்: 78 நல்லதொரு குடும்பம்!
மலர்:1இதழ்: 77 தலைக்கு வந்த ஆபத்து!
யாத்தி:4: 20, 24, 25 அப்பொழுது மோசே தன் மனைவியையும், தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக் கொண்டு எகிப்து தேசத்துக்கு திரும்பினான்.... வழியில் தாங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு வெளிப்பட்டு அவனைக் கொல்லப் பார்த்தார். அப்பொழுது சிப்போராள் ஒரு கருக்கான கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள். நாம் டிசெம்பர் மாதம் முதல் வாரத்தில், மோசேயின் மனைவியாகிய சிப்போராளைப்… Continue reading மலர்:1இதழ்: 77 தலைக்கு வந்த ஆபத்து!
மலர்:1இதழ்: 76 2011 புத்தாண்டு சிறப்பு மலர்!
யோவான்: 14: 6 “அதற்கு இயேசு; நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” கடந்த மாதம், நானும் என் மகனும், தென்னிந்தியாவில் உள்ள பல மாகாணங்களில் உள்ள எங்கள் ஊழிய மையங்களுக்கு, கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள , காரில் பிரயாணப்பட்டோம். எங்களுடைய காரில் GPS என்ற வழி காட்டும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஒருநாள் நாங்கள் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில், நான்கு வழி சாலையில் வந்து கொண்டிருந்த போது எங்களுடைய வழிகாட்டும் கருவியிலிருந்து… Continue reading மலர்:1இதழ்: 76 2011 புத்தாண்டு சிறப்பு மலர்!
அன்பு சகோதர சகோதரிகளே! இயேசுவின் இனிய நாமத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்கள்! கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த ராஜாவின் மலர்கள் என்ற தியான மலரை எழுத ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாளும் பலர் இதைப் படித்து பயனடைந்து வருவதால் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். இதை நான் பெண்களுக்கான தியான மலராக எழுதிய போதிலும் அநேக சகோதர்கள் இதை வாசித்து பயன் பெறுவதாக எனக்கு எழுதினர். அதனால் புதிய ஆண்டு பரிசாக இதை குடும்ப மலராக அளிக்க விரும்புகிறேன். வேதத்தில்… Continue reading
மலர்:1இதழ்: 75 பாலைவனத்தில் கிடைத்த நீரோடை!
யாத்தி: 2: 21, 22 மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்க சம்மதித்தான்; அவன் சிப்போரள் என்னும் தன் குமாரத்தியை மோசேக்கு கொடுத்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்றாள்; நான் அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி அவனுக்கு கேர்சொம் என்று பேரிட்டான். மோசே! 40 வருடங்கள் அரண்மனையில் வாழ்ந்தான்! பார்வோன் குமாரத்தியின் செல்லக் குமாரனாய், பார்வோன் ராஜாவின் பேரனாய் எல்லாவித செல்வங்களையும் அனுபவித்து வளர்ந்தான். எகிப்து ராஜ்யத்தை ஆளவேண்டிய ராஜகுமாரன் ஒருநாள் எபிரேயரைக்… Continue reading மலர்:1இதழ்: 75 பாலைவனத்தில் கிடைத்த நீரோடை!
மலர்:1இதழ்: 74 குடும்பம் ஒரு பரிசு!
யோவான்:13: 34 “ நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்கு கொடுக்கிறேன்” உங்களில் யாராவது ராஜாவின் மலர்களுக்கு புதிதாக வந்திருப்பீர்களானால், ஒரு சிறு முன்னுரை கொடுக்க விரும்புகிறேன்! நாம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆதியாகமத்திலிருந்து ஆரம்பித்தோம். நம்முடைய வேத ஆராய்ச்சியில் நாம் பெண்களைப்பற்றி மாத்திரம் படிக்கவில்லை. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு என்று பலரைப் பற்றிப் படித்தோம். ஆனால் வேதத்தில் ஏதாவது ஒரு பெண்ணின்பெயர் வரும்போது… Continue reading மலர்:1இதழ்: 74 குடும்பம் ஒரு பரிசு!
மலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்?????
எண்ணா:12: 13, 15 அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி; தேவனே அவளை குணமாக்கும் என்று கெஞ்சினான். அப்படியே மிரியாம் ஏழுநாள் பாளயத்துக்கு புறம்பே விலகப்பட்டிருந்தாள். மிரியாம் சேர்த்துக்கொள்ளப்படுமட்டும் ஜனங்கள் பிரயாணம் பண்ணாதிருந்தார்கள். தேவனுடைய சேவைக்காக தங்களை அர்ப்பணித்த அநேக மிஷனரிகளைப் பற்றி படிக்கும்போது நாம் இவர்களை சந்திக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்று எண்ணுவதுண்டு! அப்படிப்பட்டவர்களின் பட்டியலில் இடம் பெறுபவர் டாக்டர் பால் பிராண்ட் என்ற மருத்துவரும் அவர் மனைவி மார்கரெட் அம்மையாரும். அவர் நம்முடைய… Continue reading மலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்?????
மலர்:1இதழ்:72 முறுமுறுப்பால் வந்த விபரீதம்!
எண்ணா:12: 1, 2 “எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால் மிரியாமும் ஆரோனும்,அவன் விவாகம் பண்ணியிருந்த எத்தியோப்பிய தேசத்து ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி: கர்த்தர் மோசேயைக்கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக் கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார். சில நேரங்களில் நம்மை சுற்றி நடக்கும் ஆபத்து, விபத்துகளைப் பற்றி கேள்விப்படும்போது, “அதன் பின்னர் அவர்கள் என்றென்றும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்” என்ற வாக்கியம் கதைகளுக்கு மாத்திரம் அல்ல நம் வாழ்க்கைக்கும் சொந்தமாயிருந்தால்… Continue reading மலர்:1இதழ்:72 முறுமுறுப்பால் வந்த விபரீதம்!
மலர்:1இதழ்: 71 அதிகாலையில் துதிசெய்!
யாத்தி:15: 20, 21 “ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும், தன் கையில் தம்புருவை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புரோடும், நடனத்தோடும் அவளுக்கு பின்னே புறப்பட்டுப்போனார்கள். மிரியாம் அவர்களுக்கு பிரதிவசனமாக; கர்த்தரைப் பாடுங்கள்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையும் குதிரை வீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள்.” இன்று காலையில் எப்பொழுதும் எழும்புகிற நேரத்தைவிட சிறிது அதிக நேரம் படுத்திருக்க என் சரீரம் ஆசைப்பட்டது. ஆனால் என் வீட்டுத் தோட்டத்தில் உள்ள பறவைகளின் சத்தம் என்னை… Continue reading மலர்:1இதழ்: 71 அதிகாலையில் துதிசெய்!
