2 சாமுவேல் 6:20 தாவீது தன் வீட்டாரை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பும்போது நாம் வீட்டுக்கு வரும்போதும், வீட்டை விட்டு போகும்போதும் கர்த்தருடைய ஆசீர்வாதத்தை உச்சரித்து செல்வோமானால் எவ்வளவு ஆசீர்வாதமாயிருக்கும் என்று இன்றைய வேதாகமப் பகுதி என்னை சிந்திக்கத் தூண்டியது. 2 சாமுவேல் 6 ல் கடைசி வசனங்களை வாசிக்கும்போது, தாவீது தன் வீட்டாரை சந்திக்க ஆவலாயிருப்பது தெரிய வருகிறது. தாவீது தன் குடும்பத்தை விட்டு 3 மாதங்கள் பிரிந்திருந்ததை மறந்து விடாதீர்கள். தாவீது கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியை எடுத்து… Continue reading இதழ்:2132 குடும்பத்துகுள் வீசப்படும் கடுஞ்சொற்கள்!
இதழ்: 2131 சந்தோஷ ஆடல் பாடலின் மேல் விழுந்த மண்!
2 சாமுவேல் 6: 20 .. சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டு வந்து, அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்து போட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்றாள். அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பியருக்கு எழுதிய நிருபத்தில், கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன் ( பிலி:4:4) என்கிறார். இது பவுல் சிறையிலிருந்து எழுதிய நிருபங்களில் நான்காவது என்றும்,… Continue reading இதழ்: 2131 சந்தோஷ ஆடல் பாடலின் மேல் விழுந்த மண்!
இதழ்:2130 உன் சாட்சியே நீ யாரென்று பறைசாற்றும்!
2 சாமுவேல்: 6:12 தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீது ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டுவந்தான். 2 சாமுவேல் ஆரம்பிக்கும்போது ஊசாவின் மரணத்தால் இருளாய் இருந்தாலும், அந்த இருள் சீக்கிரமே ஓபேத்ஏதோமின் சாட்சியால் மாறுகிறது. கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் தேவனுடைய பெட்டியை எடுத்து வந்ததால் ஏற்பட்ட விளைவைக் கண்ட தாவீது பயந்து அந்தப் பெட்டியை தன்னிடமாய்க் கொண்டுவராமல்,… Continue reading இதழ்:2130 உன் சாட்சியே நீ யாரென்று பறைசாற்றும்!
இதழ்:2129 கர்த்தரின் பிரசன்னத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பம்!
2 சாமுவேல்: 6: 10,11 அதைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லாமல், கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே கொண்டுபோய் வைத்தான், ..... கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார். ஓபேத்ஏதோம் என்ற பெயரைக் கொண்ட யாரையாவது நாம் இன்றைய மாடர்ன் உலகத்தில் பார்த்திருக்கிறோமா? ஆனால் உங்களில் யாரவது ஆண் குழந்தைக்கு நல்ல பெயர் வேண்டும் என்று நினைப்பீர்களானால், இதோ ஒரு அற்புதமான ஒரு பெயர்! தாவீது கர்த்தருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் செயல்பட்டதால் உயிரழந்தான் வாலிபன் ஊசா.… Continue reading இதழ்:2129 கர்த்தரின் பிரசன்னத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பம்!
இதழ்:2128 சிட்சையின் மூலம் வரும் ஆசீர்வாதம்!
2 சாமுவேல் 6: 6,7 ....மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி அதைப் பிடித்தான், அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின்மேல் கோபம் மூண்டது. அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார். அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான். பரிசுத்தமான தேவனைப்பற்றி படித்துக்கொண்டிருக்கிறோம். இன்றைய வேதாகமப் பகுதி நமக்கு மிகவும் முக்கியமான ஒன்று! யாத்திராகமம் 25 - 30 வரை வாசிப்பீர்களானால் கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியை வைக்கவேண்டிய தேவனுடைய கூடாரத்தை… Continue reading இதழ்:2128 சிட்சையின் மூலம் வரும் ஆசீர்வாதம்!
இதழ்:2127 பரிசுத்தம் பழைய நாகரீகமாகி விட்டதோ?
2 சாமுவேல் 6:1,2 பின்பு தாவீது இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட முப்பதினாயிரம் பேரைக்கூட்டி, கேருபின்களின் நடுவே வாசமாயிருக்கிற சேனைகளுடைய கர்த்தருடைய நாமம் தொழுதுகொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியைப் பாலையூதாவிலிருந்து கொண்டுவரும்படி அவனும் அவனோடிருந்த அந்த ஸ்தலத்தாரும் எழுந்துபோய், வேதம் ஒரு அற்புதமான புத்தகம்! இதை நாம் ஒரு கதையிலிருந்து மறு கதை என்று போகாமல், இங்கு படிப்பதுபோல முறையாக தொடர்ந்து வாசிக்கும்போது அது ஒரு சரித்திரமாக அல்லாமல் மிகுந்த ஆசீர்வாதமாக அமையும். நாம் படிக்க ஆரம்பித்திருக்கும் இந்த அதிகாரத்தை… Continue reading இதழ்:2127 பரிசுத்தம் பழைய நாகரீகமாகி விட்டதோ?
இதழ்:2126 திருப்தியாக வாழக் கற்றுக் கொள்!
2 சாமுவேல் 5: 13 அவன் எப்ரோனிலிருந்து வந்தபின்பு, எருசலேமில் இன்னும் அதிகமான மறுமனையாட்டிகளையும், ஸ்திரீகளையும் கொண்டான். 1 சாமுவேல் 30: 23-24 அதற்கு தாவீது: என் சகோதரரே கர்த்தர் நமக்குத் தந்ததை நீங்கள் இப்படி செய்ய வேண்டாம்.....யுத்தத்திற்கு போனவர்களின் பங்கு எவ்வளவோ அவ்வளவு ரஸ்துகளண்டையில் இருந்தவர்களுக்கும் பங்குவீதம் கிடைக்கவேண்டும்; சரிபங்காக பங்கிடவேண்டும் என்றான். இன்றைய வேத வசனங்கள் அதிருப்தியையும், மனநிறைவையும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. இவை தாவீதின் உள்ளத்தில் மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் காணப்படும்… Continue reading இதழ்:2126 திருப்தியாக வாழக் கற்றுக் கொள்!
இதழ்:2125 நேர்மை என்பது நாம் கிறிஸ்துவின் சீஷர் என்பதின் மறு பெயர்!
1 சாமுவேல் 27:10 இன்று எத்திசையில் போய் கொள்ளையடித்தீர்கள் என்று ஆகீஸ் கேட்கும்போது தாவீது: யூதாவுடைய தென் திசையிலும்,....கேனியருடைய தென் திசையிலும் என்பான். 2 சாமுவேல் 5:3 இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் எப்ரோனிலே ராஜாவினிடத்தில் வந்தார்கள். தாவீதுராஜா எப்ரோனிலே கர்த்தருக்கு முன்பாக அவர்களோடே உடன்படிக்கை பண்ணினபின்பு அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள். இந்த புதிய மாதத்தின் காலையில் கர்த்தரை முழு மனதோடு ஸ்தோத்தரிப்போம்! அவர் நல்லவர்! அவர் கிருபை என்றுமுள்ளது! இன்றைய வேதாகமப்பகுதியில் நாம்… Continue reading இதழ்:2125 நேர்மை என்பது நாம் கிறிஸ்துவின் சீஷர் என்பதின் மறு பெயர்!
இதழ்:2124 மன்னிப்பு எதிர்காலத்தை மாற்றும்!
1 சாமுவேல்: 26:8,9 அப்பொழுது அபிசாய் தாவீதைப் பார்த்து: இன்று தேவன் உம்முடைய சத்துருவை உம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார். இப்பொழுதும் நான் அவனை ஈட்டியினால் இரண்டு குத்தாகக் குத்தாமல், ஒரே குத்தாக நிலத்தில் உருவக்குத்தட்டுமா என்றான். தாவீது அபிசாயைப் பார்த்து: அவரைக் கொல்லாதே. கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கைகளைப்போட்டு, குற்றமில்லாமல் போகிறவன் யார்? என்று சொன்னான். தாவீது இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தான். கோலியாத்தைக் கொன்றபின்னர் சவுலின் சேவகனாகவும், சவுல் அசுத்த ஆவியால்… Continue reading இதழ்:2124 மன்னிப்பு எதிர்காலத்தை மாற்றும்!
இதழ்:2123 ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்!
1 சாமுவேல் 25:13 அப்பொழுது தாவீது தன் மனுஷரைப் பார்த்து: நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொள்ளுங்கள் என்றான். 2 சாமுவேல் 2:1 பின்பு தாவீது கர்த்தரை நோக்கி: நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான். தாவீது பத்சேபாளுடன் கொண்ட உறவைப்பற்றி நாம் படிக்கும் முன்னர், தாவீதின் சில அடிப்படை குண நலன்களை நாம் பார்க்காமல் கடந்து போகக்கூடாது என்று நினைத்தேன்! இன்றிலிருந்து சில நாட்கள், ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாய் தாவீதின்… Continue reading இதழ்:2123 ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்!
