சங்:51: 1 தேவனே உமது கிருபையின்படி எனக்கு இரங்கும். உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னை சுத்திகரியும். தேவனாகிய கர்த்தர் தாவீதை எதனால்நேசித்தார்? இந்தத் தலைப்பை தாவீது எழுதிய சங்கீதங்களின் மூலம், சில வாரங்கள் படிக்கப்போகிறோம் என்று சொல்லியிருந்தேன். இன்று இரண்டாவது நாள்! சங்கீதம் 51 ஐ நாம் வரி வரியாகப் படிக்கும்போது அதின் பின்னணியை நாம் மறக்கக்கூடாது. இதை எழுதிய ராஜாவாகிய தாவீது, யூதாவுக்கும், இஸ்ரவேலுக்கும் ராஜா. இந்த சங்கீதத்தில் தாவீது எழுதிய… Continue reading இதழ்:2240 தவறிப் போன ஒரு மகன் போல…
இதழ்:2239 ஒரு ஆணித்தரமான உண்மை தெரியுமா?
சங்கீதம் 51:1 தேவனே உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். இன்றுமுதல் நாம் சில வாரங்கள் தேவனாகிய கர்த்தர் தாவீது ராஜாவை ஏன் நேசித்தார் என்று அலசிப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். நாம் இதை செய்யாவிட்டால் நாம் தாவீதின் வாழ்க்கையைப் பற்றி படித்து முடித்ததற்கு அர்த்தமே இல்லாமல் போகும்! தேவனாகிய கர்த்தர் ஏன் ஏன் ஏன் தாவீதை நேசித்தார்? உங்களுக்கு ஏதாவது பதில் தெரியுமானால் என்னோடு தயவு… Continue reading இதழ்:2239 ஒரு ஆணித்தரமான உண்மை தெரியுமா?
இதழ்:2238 தேவனே நம் வெகுமதியாவார்!
2 சாமுவேல் 14: 17, 21 ராஜாவாகிய என் ஆண்டவனுடைய வார்த்தை எனக்கு ஆறுதலாயிருக்கும் என்று உமது அடியாளாகிய நான் எண்ணினேன். நன்மையும் தீமையும் கேட்கும்படி ராஜாவாகிய என் ஆண்டவன் தேவனுடைய தூதனைப்போல இருக்கிறார்.... அப்பொழுது ராஜா யோவாபைப் பார்த்து: இதோ இந்தக் காரியத்தைச் செய்கிறேன். நீ போய் அப்சலோம் என்னும் பிள்ளையாண்டானைத் திரும்ப அழைத்துக்கொண்டு வா என்றான். வேதத்தில் ஆபிரகாம் தேவனாகிய கர்த்தரால் , தான் இதுமுன் அறிந்திராத ஒரு தேசத்துக்கு புறப்படும்படி அழைக்கப்பட்டார். கர்த்தருடைய… Continue reading இதழ்:2238 தேவனே நம் வெகுமதியாவார்!
இதழ்:2237 பெலவீனத்திலும் அவரையே நம்பு!
2 சாமுவேல் 14: 15,16 இப்போதும் என் ஆண்டவனாகிய ராஜாவோடே இந்த வார்த்தையை பேச வந்த முகாந்தரம் என்னவென்றால்: ஜனங்கள் எனக்குப் பயமுண்டாகினதினால் நான் ராஜாவோடே பேசவந்தேன். ஒருவேளை ராஜா தமது அடியாளுடைய வார்த்தையின்படி செய்வார் என்று உமது அடியாளாகிய நான் நினைத்ததினாலும் வந்தேனே ஒழிய வேறில்லை. என்னையும் என் குமாரனையும் ஏகமாய்த் தேவனுடைய சுதந்திரத்திற்கு புறம்பாக்கி அழிக்க நினைக்கிற மனுஷனுடைய கைக்குத் தமது அடியாளை நீங்லாக்கிவிடும்படிக்கு ராஜா கேட்பார். தெக்கோவாவிலிருந்து வந்த பெண் புத்திசாலியானவள் என்று… Continue reading இதழ்:2237 பெலவீனத்திலும் அவரையே நம்பு!
இதழ்:2236 அவரை அறிந்ததால் வரும் தைரியம்!
2 சாமுவேல் 14: 12, 13 அபொழுது அந்த ஸ்திரீ ராஜாவாகிய என் ஆண்டவனோடே உமது அடியாள் ஒரு வார்த்தைசொல்ல உத்தரவாக வேண்டும் என்றாள். அவன் சொல்லு என்றான். அப்பொழுது அந்த ஸ்திரீ: பின்னை ஏன் தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாய் இப்படிப்பட்ட நினைவை நீர் கொண்டிருக்கிறீர். துரத்துண்ட தம்முடையவனை ராஜா திரும்ப அழைக்காததினாலே ராஜா இப்பொழுது சொன்ன வார்த்தையினால் குற்றமுள்ளவரைப்போல இருக்கிறார். எனக்கு சின்ன வயதிலிருந்தே மிருக கண்காட்சிக்கு போவது மிகவும் பிடிக்கும். அங்கே உள்ள மிருகங்களில்… Continue reading இதழ்:2236 அவரை அறிந்ததால் வரும் தைரியம்!
இதழ்:2235 நீ பெற்ற இரக்கத்தை மற்றவருக்கு காண்பி!
2 சாமுவேல் 14;11 பின்னும் அவள்; இரத்தப்பழி வாங்குகிறவர்கள் அழிம்பு செய்து, என் குமாரனை அதம்பண்ணப் பெருகிப் போகாதபடிக்கு, ராஜாவானவர் தம்முடைய தேவனாகிய கர்த்தரை நினைப்பாராக என்றாள். அதற்கு ராஜா: உனது குமாரனுடைய மயிரில் ஒன்றாவது தரையில் விழுவதில்லை என்று கர்த்தரின்ஜீவனைக்கொண்டு சொல்கிறேன் என்றான். தாவீதுடைய நம்பிக்கைக்குரிய சேனை வீரனும் அவன் நண்பனுமாகிய யோவாப் தாவீதுக்கும் அவனுடைய குமாரனாகிய அப்சலோமுக்கும் இடையே இருந்த இடைவெளியைப் போக்க தெக்கோவாவிலிருந்து ஒரு புத்தியுள்ள ஸ்திரீயைக் கொண்டு வந்தான். அவள் தன்னுடைய… Continue reading இதழ்:2235 நீ பெற்ற இரக்கத்தை மற்றவருக்கு காண்பி!
இதழ்:2234 மாபெரும் காரியத்தை நமக்காக செய்யும் இயேசு கிறிஸ்து!
2 சாமுவேல் 14: 9,10 பின்னும் அந்த தெக்கோவாவூர் திரீ ராஜாவைப் பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவனே, ராஜாவின்மேலும் அவர் சிங்காசனத்தின்மேலும் குற்றமில்லாதபடிக்கு, அந்தப்பழி என்மேலும், என் தகப்பன் வீட்டின்மேலும் சுமரக்கடவது என்றாள். அதற்கு ராஜா உனக்கு விரோதமாகப் பேசுகிறவனை என்னிடத்தில் கொண்டுவா. அப்பொழுது அவன் இனி உன்னைத் தொடாதிருப்பான் என்றான். கடந்த சில நாட்களாக நாம் தெக்கோவாவூரின் புத்தியுள்ள ஸ்திரீயைப் பற்றி படித்து வருகிறோம். அவள் எல்லாவற்றையும் பகுத்தறியத் தக்க ஞானம் கொண்டவள் என்றும், அவள்… Continue reading இதழ்:2234 மாபெரும் காரியத்தை நமக்காக செய்யும் இயேசு கிறிஸ்து!
இதழ்:2233 அன்று நான் சற்று இரங்கியிருந்தால்?
2 சாமுவேல் 14: 5 -8 ராஜா அவளைப் பார்த்து: உனக்கு என்ன வேண்டும் என்றதற்கு அவள்: நான் விதவையானவள். என் புருஷன் சென்று போனான். உமது அடியாளுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்கள் இருவரும் வெளியிலே சண்டைபண்ணி, அவர்களை விலக்க ஒருவரும் இல்லாதபடியினால், ஒருவன் மற்றவனை அடித்துக் கொன்று போட்டான். வம்சத்தார் எல்லாரும் உம்முடைய அடியாளுக்கு விரோதமாய் எழும்பி, தன் சகோதரனைக் கொன்றுபோட்டவனை ஒப்பி, அவன் கொன்ற அவன் சகோதரனுடைய பிராணனுக்காக நாங்கள் அவனைக் கொன்றுபோடுவோம்.… Continue reading இதழ்:2233 அன்று நான் சற்று இரங்கியிருந்தால்?
இதழ்:2232 இன்று எதை தேவனுக்கு அர்ப்பணிக்கப் போகிறாய்!
2 சாமுவேல் 14: 1- 4 ராஜாவின் இருதயம் அப்சலோமின்மேல் இன்னும் தாங்கலாயிருக்கிறதைச் செருயாவின் குமாரன் யோவாப் கண்டு, அவன் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்திரீயை அழைத்து...நீ துக்க வஸ்திரங்கள் உடுத்திக்கொண்டு.... ராஜாவினிடத்தில் போய் அவரை நோக்கி இன்ன இன்ன பிரகாரமாய் சொல்..... அப்படியே ..அந்த ஸ்திரீ ராஜாவோடே பேசப்போய் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: ராஜாவே ரட்சியும் என்றாள். இன்றைய வேதாகமப்பகுதியில் நாம் பார்க்கும் இந்தப்பெண்ணை தாவீதுடைய சேனைத்தலைவனும், நெருங்கிய நண்பனுமாகிய , யோவாப் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள… Continue reading இதழ்:2232 இன்று எதை தேவனுக்கு அர்ப்பணிக்கப் போகிறாய்!
இதழ்:2231 எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கும் ஞானம்!
2 சாமுவேல் 14: 1- 2 ராஜாவின் இருதயம் அப்சலோமின்மேல் இன்னும் தாங்கலாயிருக்கிறதைச் செருயாவின் குமாரன் யோவாப் கண்டு, அவன் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்திரீயை அழைத்து.. இன்றைய வேதாகமப் பகுதியில் நாம் படிக்கும் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்திரீயைப்பற்றி, இதுவரை வேதத்தில் படித்ததாக ஞாபகமே இல்லை! உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? இந்தப் பெண்ணைப் பற்றி பிரசங்கம் கேட்டிருக்கிறோமா? நான் கேட்டதே இல்லைங்க! வேதத்தை வாசிக்கும்போது அல்லது வேதாகமக் கல்லூரியில் படிக்கும்போது இந்தப் பெண்ணைப் பற்றி ஒருவேளை படித்திருந்தாலும்… Continue reading இதழ்:2231 எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கும் ஞானம்!
