1 சாமுவேல் 13: 5,6 பெலிஸ்தர் இஸ்ரவேலரோடு யுத்தம் பண்ணும்படி முப்பதினாயிரம் இரதங்களோடும், ஆறாயிரம் குதிரைவீரரோடும், கடற்கரை மணலத்தனை ஜனங்களோடும் கூடிக்கொண்டுவந்து, பெத்தாவேலுக்குக் கிழக்கான மிக்மாசிலே பாளயமிறங்கினார்கள். அப்பொழுது இஸ்ரவேலர் தங்களுக்கு உண்டான இக்கட்டைக் கண்டபோது, ஜனங்கள் தங்களுக்கு உண்டான நெருக்கத்தினாலே கெபிகளிலும், முட்காடுகளிலும், கன்மலைகளிலும்,துருக்கங்களிலும், குகைகளிலும் ஒளித்துக்கொண்டார்கள். இஸ்ரவேல் மக்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்டனர் என்று பார்த்தோம். ஒரு ராஜா கிடைத்த பின்னர் அவர்கள் தங்களுக்கு தாங்களே வினை வைத்த மாதிரி ஆகி… Continue reading இதழ்:2041 பயப்படுதலைப் பார்க்கிலும் விசுவாசமே நலம்!
இதழ்: 2040 அவரது அன்பின் கரம் உங்களை அணைக்க வேண்டுமா?
1 சாமுவேல்: 12: 24 அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்து பாருங்கள். தேவனாகியக் கர்த்தர் நம்மிடம் சிநேகிதம் கொள்ள வாஞ்சையாய் இருக்கிறார் என்று பார்த்தோம். பிதாவாகிய தேவனைப் பற்றி நான் படிக்கும்போதெல்லாம், அவர் வானத்தையும் அதிலுள்ள யாவற்றையும் ஆளுகை செய்யும் மகா சக்தி வாய்ந்த தேவனாயிருந்தும் என்னுடைய மிகச்சிறிய உள்ளத்தில் வாசம் செய்து ஆளுகை செய்வது என்னை பிரம்மிக்க வைக்கும். நாம் நம்முடைய வசதிக்கேற்றவாறு பிதாவாகிய தேவனை ஒரு பொம்மையைப் போல… Continue reading இதழ்: 2040 அவரது அன்பின் கரம் உங்களை அணைக்க வேண்டுமா?
இதழ்:2039 நீங்கள் என் ஊழியக்காரர் மட்டுமல்ல!
யோவான் 15:15 நான் உங்களைச் சிநேகிதர் என்றேன் இந்த புதிய மாதத்திலும் நம்முடைய தின தியானத்தைத் தொடர கர்த்தர் கொடுத்த கிருபைக்காக நன்றி செலுத்துகிறேன். பிதாவாகிய தேவனைப் பற்றி சில நாட்கள் சிந்திக்கலாம் என்று சொன்னேன் நினைவிருக்கிறதா? நெருக்கமான நண்பர்களோடு பேசிக் கொண்டு இருக்கும்போது நேரம் போவதே தெரியாது அல்லவா? ஒருசிலர் நண்பர்களுக்கு எவ்வவளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் தெரியுமா? நண்பர்களைத் தன் குடும்பத்துக்கும் மேலாக கருதுபவர்களைப் பார்த்ததுண்டா? நாம் வாசிக்கும் இந்த வசனத்தில், கர்த்தராகிய… Continue reading இதழ்:2039 நீங்கள் என் ஊழியக்காரர் மட்டுமல்ல!
இதழ்:2038 உம்மைப் பற்றி இன்னும் அறிய வேண்டுமே!
1 சாமுவேல் 12:24 நீங்கள் எப்படியும் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழுஇருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள். சாமுவேல் இஸ்ரவேல் மக்களோடு உரையாடும்போது அவர்கள் தேவனாகிய கர்த்தரை முழுஇருதயத்தோடும்கூட சேவிக்கும்படியாக ஊக்கப்படுத்துவதை இந்த வசனத்தில் பார்க்கிறோம். ஆனால் சில நேரங்களில் மாம்சமான நாம் உன்னதங்களில் வாசம் செய்பவரை சேவிப்பது கடினமாகவே தோன்றுகின்றது அல்லவா! பரலோகத்தில் வாசம் பண்ணுபவர் என் சத்ததை கேட்பாரா? இது என்றுமே புரியாத பரம இரகசியம்! ஆதலால் ஒருசில நாட்கள் நம்முடைய பரம தகப்பனைப் பற்றிப்… Continue reading இதழ்:2038 உம்மைப் பற்றி இன்னும் அறிய வேண்டுமே!
இதழ்:2037 கர்த்தர் நம்மை மன்னிக்காவிடில்?
1 சாமுவேல் 12:20,22 அப்பொழுது சாமுவேல் ஜங்களை நோக்கி: பயப்படாதேயுங்கள். நீங்கள் இந்த பொல்லாப்பையெல்லாம் செய்தீர்கள். ஆகிலும் கர்த்தரைவிட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழு இருதயத்தோடும் சேவியுங்கள். கர்த்தர் உங்களைத் தமக்கு ஜனமாக்கிக் கொள்ள பிரியமானபடியால், கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனங்களைக் கைவிடமாட்டார். அமெரிக்க தேசத்தில் ஒலி ஒளி அரங்கத்தில் ஒருமுறை கிறிஸ்துவின் பிறப்பை சித்தரித்த நாடகத்தையும், மறுமுறை மோசேயின் சரித்திரத்தையும் காண கர்த்தர் உதவி செய்தார். அந்த நாடகங்களின் சிறப்பு அம்சமே அதன்… Continue reading இதழ்:2037 கர்த்தர் நம்மை மன்னிக்காவிடில்?
இதழ்:2036 உன் வாழ்வின் நிலை என்ன?
1 சாமுவேல்: 12: 12 .. உங்கள் தேவனாகிய கர்த்தரே உங்களுக்கு ராஜாவாயிருந்தும், நீங்கள் என்னை நோக்கி: அப்படியல்ல, ஒரு ராஜா எங்கள்மேல் ஆளவேண்டும் என்றீர்கள். நாம் சாமுவேலின் வாழ்க்கையின் கடைசிப்பகுதிக்கு வந்திருக்கிறோம். சாமுவேல் இப்பொழுது முதிர்வயதடைந்திருந்தாலும், அவருடைய வாழ்நாள் முழுவதும், மக்களுக்குத் தேவையான ஆலோசனையும், ஆவிக்குரிய வழி நடத்துதலும் அவரிடம் எப்பொழுதும் தடையில்லாமல் கிடைத்தது என்பதை எந்த இஸ்ரவேலரும் மறுதலிக்க மாட்டனர். இப்பொழுதோ இந்த வயதானவருக்கு பதிலாக ஒரு வாலிபனான, அழகுள்ளவனான, சுறுசுறுப்புள்ளவனான ஒரு தலைவனைத்… Continue reading இதழ்:2036 உன் வாழ்வின் நிலை என்ன?
இதழ்:2035 கர்த்தருடைய ஈவை இழந்து போகாதே!
1 சாமுவேல்: 10:9 அவன் சாமுவேலை விட்டுப் போகும்படித் திரும்பினபோது, தேவன் அவனுக்கு வேறே இருதயத்தைக் கொடுத்தார். இஸ்ரேவேலின் முதல் ராஜாவாகும்படி தெரிந்து கொள்ளப் பட்ட சவுல் தான் ஒரு பென்யமீன் கோத்திரத்தான் என்றும், மிகவும் அற்பமானக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும் கூறியதைப் பார்த்தோம். தேவனுடைய உத்தம தீர்க்கதரிசியான சாமுவேல், சவுலை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகிக்க வந்தபோது அவர் சவுலை நோக்கி, கர்த்தருடைய ஆவி உம் மேல் இறங்கும்போது நீ பழைய மனிதனைப்போல அல்ல புதியவனாவாய் என்றார்.… Continue reading இதழ்:2035 கர்த்தருடைய ஈவை இழந்து போகாதே!
இதழ்:2034 ஆயத்தமுள்ள இருதயம் மட்டுமே தேவை!
1 சாமுவேல்: 9:21 அப்பொழுது சவுல் பிரதியுத்தரமாக: நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா? நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வானேன் என்றான். சில மாதங்களுக்கு முன்னர், ஒரு கர்த்தருடைய ஊழியர் எனக்கு அனுப்பியிருந்த கடிதத்தைப் பார்த்தேன். ஒரு வெள்ளைக் காகிதத்தில் 2 பக்கங்கள் அவர் வாங்கியிருந்த பட்டங்களையும், விருதுகளையும் பற்றி எழுதியிருந்தார். அதைப் பார்த்தவுடன் இவர் என்ன வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறாரா அல்லது ஊழியத்துக்கு… Continue reading இதழ்:2034 ஆயத்தமுள்ள இருதயம் மட்டுமே தேவை!
இதழ்:2033 உன் தினசரி வேலைகளின் மத்தியில் தேவன் கிரியை செய்ய முடியும்!
1 சாமுவேல் 9: 11,12 அவர்கள் பட்டணத்து மேட்டின்வழியாய் ஏறுகிறபோது, தண்ணீர் எடுக்கவந்த பெண்களைக் கண்டு: ஞானதிருஷ்டிக்காரன் இங்கே இருக்கிறாரா என்று அவர்களைக் கேட்டார்கள்.அதற்கு அவர்கள்: இருக்கிறார். இதோ, உங்களுக்கு எதிரே இருக்கிறார். தீவிரமாய்ப் போங்கள். இன்றைக்கு ஜனங்கள் மேடையில் பலியிடுகிறபடியினால், இன்றையதினம் பட்டணத்திற்கு வந்தார். என்னுடைய சிறு வயதிலிருந்தே வேதாகமத்தின் கதைகளை நான் ஆவலோடே கேட்பேன். உண்மையில் சொல்லப்போனால் தானியேல் சிங்கக் குகையில் இருந்த கதை, எபிரேய வாலிபர் மூவர் அக்கினிச் சூளையில் இருந்து வெளியே… Continue reading இதழ்:2033 உன் தினசரி வேலைகளின் மத்தியில் தேவன் கிரியை செய்ய முடியும்!
இதழ்:2032 நீ அளக்கும் அளவுகோல் எது?
1 சாமுவேல்: 9:2 அவனுக்கு சவுல் என்னும் பேருள்ள சவுந்தரியமான வாலிபனாகிய ஒரு குமாரன் இருந்தான். இஸ்ரவேல் புத்திரரில் அவனைப்பார்க்கிலும் சவுந்தரியவான் இல்லை. எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான். இஸ்ரவேல் மக்கள் ராஜா தான் வேண்டும் என்று கேட்டனர்! கர்த்தர் அவர்கள் கேட்டதற்கு அதிகமாகவே அவர்களுக்கு அருளிச் செய்தார்! ஆம்! அதிகமாகவே என்பதற்கு அர்த்தம் அவர்களுக்கு கர்த்தர் ஏற்படுத்திக் கொடுத்த முதல் ராஜாவான சவுலைக் குறித்துதான் சொல்கிறேன்!. கர்த்தர் சாமுவேலை அனுப்பி மகா சவுந்தரியவனாகிய… Continue reading இதழ்:2032 நீ அளக்கும் அளவுகோல் எது?
