1 சாமுவேல்: 1: 2 அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்தி பேர் அன்னாள் இரண்டு மனைவிமார்! ஒரு கணவன்! ஒரு குடும்பம்! நான் இதைப்பற்றி சற்று யோசித்தபோது எப்படி ஒரு பெண் தன் கணவனை இன்னொருத்தியோடு பங்கு போட்டுக் கொண்டு ஒரே வீட்டுக்குள் வாழ முடியும் என்று என்னால் சிந்தித்துப் பார்க்கவே முடியவில்லை. என்னைக் கேட்டால், என்னால் நிச்சயமாக இப்படி வாழ முடியவே முடியாது. ஆனால் இன்று பல நாடுகளில், பல குடும்பங்களில் இன்றும் இப்படிப்பட்ட… Continue reading இதழ்:2001 நம் வாழ்க்கையை நிலைகுலைய வைக்கும் இன்னொரு பெண்!
இதழ்:2000 கர்த்தருக்கு பிரியமில்லாத உறவுகள் வேண்டாமே!
1 சாமுவேல்: 1: 1, 2 “எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனுஷன் இருந்தான். அவனுக்கு எல்க்கானா என்று பேர் ; அவன் எப்பிராயீமியனாகிய சூப்புக்குப் பிறந்த தோகுவின் குமாரனாகிய எலிகூவின் மகனான எரோகாமின் புத்திரன். அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்;” அன்பின் தேவனுடைய பிள்ளைகளே இன்று 2000 இதழ்களை முடித்திருக்கும், மகிமையுள்ள கிறிஸ்து ராஜாவின் மலருக்காக தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். http://www.rajavinmalargal.com என்ற இணையதளத்திற்கு ஒவ்வொரு நாட்களும் 60க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து… Continue reading இதழ்:2000 கர்த்தருக்கு பிரியமில்லாத உறவுகள் வேண்டாமே!
இதழ்:1999 இந்த இராத்திரியிலே ஒருவேளை இடறல் வரலாம்!
மத்தேயு: 26: 41 நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். நாம் ரூத்தின் புத்தகத்தை முடித்து விட்டோம்! அடுத்த புத்தகத்தை நாம் ஆரம்பிக்குமுன் ஒரு சின்ன பிரேக்! ஈஸ்டரே முடிந்து விட்டது, இப்பொழுது இதை எழுதுகிறீர்களே என்று நீங்கள் கேட்கலாம், ஒரு சிறிய உந்துதலால் இதை இன்று எழுத முடிவு செய்தேன். தம்முடைய சீஷர்களோடு தனிமையில் நேரம் செலவிடுவது நம்முடைய ஆண்டவருக்கு இது முதல் தடவையல்ல! ஆனால்… Continue reading இதழ்:1999 இந்த இராத்திரியிலே ஒருவேளை இடறல் வரலாம்!
இதழ்:1998 உங்கள் பிள்ளைகளுக்கு முதலில் இதை செய்யுங்கள்!
ரூத்: 4: 16 “நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள்.” வானவில் என்ற வார்த்தையே எனக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொண்டு வரும்! பெருமழை பெய்து கொண்டிருந்த ஒரு சமயம், மழையினால் பெரிய இழப்புகள் நேர்ந்து, இந்த மழை எப்பொழுது நிற்கும் என்று எல்லோரும் ஏங்கிக் கொண்டிருந்த சமயம், ஒருநாள் காலை அழகிய வானவில் ஒன்று வானத்தின் ஒரு மூலையிலிருந்து மறு மூலையைத் தொட்டதுபோல வந்தது. முதல் முறையாக வானவில்லைப் பார்த்த… Continue reading இதழ்:1998 உங்கள் பிள்ளைகளுக்கு முதலில் இதை செய்யுங்கள்!
இதழ்:1997 வாழ்க்கையில் பொறுத்திருக்கும் ஞானம்!
ரூத்: 3: 18 ” அப்பொழுது அவள் : என் மகளே, இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு: அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாறமாட்டான் என்றாள். சாலொமோன் ராஜாவாக முடிசூடப்பட்ட பின்னர், கர்த்தர் அவனுக்கு சொப்பனத்திலே தரிசனமாகி நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் ( 1 ராஜாக்கள்: 3: 5 – 9) என்ற சம்பவம் வேதத்தில் எனக்கு பிடித்தமான சம்பவங்களில் ஒன்று. அச்சமயம் சாலொமோன் ஒன்றும் வயதானவரும்,… Continue reading இதழ்:1997 வாழ்க்கையில் பொறுத்திருக்கும் ஞானம்!
இதழ்:1996 செவி கொடுப்பதே அன்பின் அடையாளம்!
ரூத்: 1:18 “அவள் தன்னோடேகூட வர மன உறுதியாயிருக்கிறதைக் கண்டு, அப்புறம் அதைக்குறித்து அவளோடே ஒன்றும் பேசவில்லை.” நான் சிறியவளாக இருந்தபோது யாரோ ஒருவர் மூலமாக நான் கற்றுக்கொண்ட ” நமக்கு கர்த்தர் ஒரு வாயும், இரண்டு செவிகளும் கொடுத்திருப்பது நாம் குறைவாய் பேசவும், நிறைய கேட்கவும் தான்” என்ற பேருண்மை என் மனதில் என்றும் தங்கி விட்டது. என்னுடைய வாழ்நாளில் இந்த உண்மை என்னை பல இக்கட்டான சம்பவங்களில் காப்பாற்றியிருக்கிறது. அதுமட்டுமல்ல என்னுடன் வேலை செய்த பெண்களின்… Continue reading இதழ்:1996 செவி கொடுப்பதே அன்பின் அடையாளம்!
இதழ்: 1995 நூறு கவலைகளும் போக ஒரு வழி!
ரூத்: 2: 10 “அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி; நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள்”. ஒருதடவை நாங்கள் நேப்பால் நாட்டுக்கு காரில் பிரயாணமாய் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தோம். பயங்கர சோர்வுடன் வந்து கொண்டிருந்த போது திடீரென்று பல்லாயிரக்கணக்கானோர் எங்களைப் பார்த்து புன்னகைப் பூப்பது போன்றத் தோற்றத்துடன் கண்களில் பட்டது ஒரு சூரியகாந்தி மலர்த் தோட்டம். அவற்றின் நிறம் அந்த இடத்துக்கே ஒரு வெளிச்சத்தைக்… Continue reading இதழ்: 1995 நூறு கவலைகளும் போக ஒரு வழி!
இதழ்:1994 அங்கும் இங்கும் அலைய வேண்டாமே!
ரூத்: 2: 21 “பின்னும் மோவாபிய ஸ்திரீயான ரூத்; அவர் என்னை நோக்கி, என் அறுப்பெல்லாம் அறுத்துத் தீருமட்டும் நீ என் வேலைக்காரிகளோடே கூடவே இரு என்று சொன்னார் என்றாள்.” இந்த புதிய மாதத்தைக் காணச் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்! நாம் காணும் ஒவ்வொரு நாளும் தேவன் நமக்களிக்கும் ஈவு என்பதை மறவாமல் அவருக்கு நன்றி செலுத்தி, இந்த மாதம் முழுவதும் நம்மை அவர் கரம் பிடித்து நடத்தும்படி அவரிடம் ஒப்புவிப்போம். நாம் ரூத்தைப் பற்றிப் படித்துக்… Continue reading இதழ்:1994 அங்கும் இங்கும் அலைய வேண்டாமே!
A VERY BLESSED EASTER TO YOU ALL
HE IS RISEN! RISEN INDEED! நமக்காக மரித்து உயிர்த்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த இந்த நாள் நம் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையயும் , சந்தோஷத்தையும் அருளட்டும்! உங்கள் குடும்பங்களில் அவருடைய அன்பும் சந்தோஷமும் நிரம்பியிருக்கட்டும்! HIS LOVE ENDURES FOREVER ( John 3:16) Happy Easter! உங்கள் சகோதரி பிரேமா சுந்தர் ராஜ்
இதழ்:1993 நீ அறியாத திட்டங்கள் உனக்காக காத்திருக்கிறது!
ரூத்: 1 : 16 “அதற்கு ரூத் : நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக் குறித்து,என்னோடே பேச வேண்டாம்;” கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்மை சிலுவை பரியந்தம் தாழ்த்தி, தம்முடைய பிதாவின் சித்தத்தின்படி, தம்மையே நமக்காக ஜீவபலியாக ஒப்புக்கொடுத்த நாள் இது! அவர் தம்முடைய மரணத்தின் மூலம் நமக்கு பெற்றுத்தந்த இரட்சிப்புக்காகவும், பாவத்தின்மேலும் மரணத்தின் மேலும் கொடுத்த ஜெயத்திற்காகவும் இன்று நாம் அவரை ஸ்தோத்தரிப்போம். நாம் ரூத்தின் சரித்திரத்தை தொடரலாம்! தாவீதின் கதையைக்கேளுங்க!… Continue reading இதழ்:1993 நீ அறியாத திட்டங்கள் உனக்காக காத்திருக்கிறது!
