யோசுவா 2:2 அப்பொழுது எரிகோவின் ராஜா ராகாபண்டைக்கு ஆள் அனுப்பி உன்னிடத்தில் வந்து உன் வீட்டுக்குள் பிரவேசித்த மனுஷரை வெளியே கொண்டுவா; அவர்கள் தேசத்தையெல்லாம் வேவுபார்க்கும்படி வந்தார்கள் என்றான். நாம் ராகாபைப் பற்றி படித்துக்கொண்டிருக்கிறோம். இஸ்ரவேலின் வேவுக்காரர் இருவர் வேசியான அவளுடைய வீட்டுக்குள் பிரவேசித்து அங்கே தங்கினார்கள் என்று நேற்று பார்த்தோம். சில நேரங்களில் பிரச்சனைகள் நாம் அழைக்காமலே நம் வாசலைத் தட்டுகின்றன என்பது எவ்வளவு உண்மை! ராகாப் இந்த இரு வேவுகாரரையும் தன் வீட்டுக்கு அவள்… Continue reading இதழ்:1862 அழையாத விருந்தாளியாய் வந்தடையும் பிரச்சனைகள்!
இதழ்:1861 சாக்குபோக்கு சொல்லாதே!
யோசுவா: 2:1 ”நூனின் குமாரனாகிய யோசுவா சித்தீமிலிருந்து வேவுகாரராகிய இரண்டு மனுஷரை இரகசியமாய் வேவு பார்க்கும்படி அனுப்பி நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்து வாருங்கள் என்றான்; அவர்கள் போய் ராகாப் என்னும் பெயர் கொண்ட வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து….” நாடகங்கள் பார்த்த அனுபவம் உண்டா? நாடகத்துக்கு உயிர் கொடுப்பது அதன் பின்னணி தானே! ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி வருவதற்குள் மேடையின் பின்னணி அதற்குத் தக்கவாறு மாறினால் தான் காட்சிக்கு உயிர் கிடைக்கும்! நாம்… Continue reading இதழ்:1861 சாக்குபோக்கு சொல்லாதே!
இதழ்:1860 மோசேக்கு பின்னர் வந்த தலைவன்!
யோசுவா: 1: 9 நான் உனக்குக் கட்ளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்..” மோசே இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து வழிநடத்த கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட தாசன். யாத்திராகமம் 3 ம் அதிகாரத்திலிருந்து உபாகமம் 34 ம் அதிகாரம் வரை வேதத்தில் மோசேயுடைய ஊழியத்தைபற்றிப் படிக்கிறோம். நீண்ட காலம் தலைவராயிருந்த மோசேயை இழந்ததும் மக்கள் துக்கமடைந்தனர். இன்னும் வனாந்தரத்தை தாண்டவில்லை! யோர்தானைக் கடக்க வேண்டும்! எதிரிகளை முறியடிக்கவேண்டும்! கானானை… Continue reading இதழ்:1860 மோசேக்கு பின்னர் வந்த தலைவன்!
இதழ்:1859 நித்திய புயங்களில் அடைக்கலம் பெறு!
உபாகமம்:33:27 “ அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; ” வேதத்தை வாசிப்பது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அநேகர் சங்கீதத்தை தவிர மற்ற பழைய ஏற்பாட்டு புத்தகங்களைத் தவிர்த்து விடுவதைப் பார்த்திருக்கிறேன்! அதிலும் இந்த உபாகமம் புத்தகத்தின் விநோதமான இந்தப் பெயருக்கு நமக்கு அர்த்தமே தெரியாது பின்னர் எப்படி வாசிப்பது என்று நினைப்பார்கள்! இந்த உபாகமம் புத்தகத்தை நாம் சில வாரங்கள் படிக்க கர்த்தர் நமக்கு உதவி செய்தார்.… Continue reading இதழ்:1859 நித்திய புயங்களில் அடைக்கலம் பெறு!
இதழ்:1858 கர்த்தருடைய வார்த்தைகளால் போதிக்கப்படுதல்!
உபாகமம்: 33:3 மெய்யாகவே அவர் ஜனங்களை நேசிக்கிறார். அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள். அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து உம்முடைய வார்த்தைகளினால் போதனையடைவார்கள்.” நாம் மோசே இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்த கடைசி உபதேசத்தைப் படித்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய வாழ்க்கை என்னும் வீட்டின் அஸ்திபாரம் கன்மலையாகிய கிறிஸ்து என்றும், நம்முடைய வீட்டின் முதல் தூண் நாம் பயப்படும் வேளையிலும், நாம் இடறும் வேளையிலும், அவருடைய பாதத்தில் விழுந்து அவர் கால்களை விடாமல் பிடித்துக்கொள்ளும் வாழ்க்கை என்றும்… Continue reading இதழ்:1858 கர்த்தருடைய வார்த்தைகளால் போதிக்கப்படுதல்!
இதழ்:1857 நம்முடைய வீட்டின் முதல் தூண்!
உபாகமம்: 33:3 மெய்யாகவே அவர் ஜனங்களை நேசிக்கிறார். அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள். அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து…” மோசே தன் வாழ்க்கையை கன்மலையாகிய கர்த்தரின் மேல் கட்டியிருந்தான், கர்த்தரை முகமுகமாய் அறிந்திருந்தான் என்று பார்த்தோம். நம்முடைய வாழ்க்கையும் கற்பாறையாகிய கிறிஸ்து இயேசுவின் கட்டப்பட்டால் எந்த புயல் வீசினும், எந்த அலை வந்தாலும் அது நிலைத்திருக்கும் என்று பார்த்தோம். ஒரு வீட்டின் அஸ்திபாரத்தை கன்மலையின்மேல் போட்டால் மாத்திரம் போதாது. அந்த வீடு நிலைத்திருக்க நல்ல… Continue reading இதழ்:1857 நம்முடைய வீட்டின் முதல் தூண்!
இதழ்:1856 நான் அறிந்த தேவன் ஒரு கன்மலை!
உபாகமம்:34:12 ”கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை” நாங்கள் 2006ல் முதன்முறையாக இஸ்ரவேல் தேசத்துக்கு சென்றபோது, கெத்செமனே தோட்டத்தில் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து யூதாஸ் என்பவனால் காட்டிக்கொடுக்கப்பட்ட மரத்தடியில் நின்று கொண்டு எங்கள் இருவரையும் சேர்த்து போட்டோ எடுக்கமுடியாமல், யாரிடம் கேட்பது என்று திகைத்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது ஒரு சகோதரி, ரஷ்யா நாட்டை சேர்ந்தவர்கள், எங்களிடம் வந்து கேமராவை வாங்கி சேர்ந்து நில்லுங்கள் நான் போட்டோ எடுக்கிறேன் என்று சொல்லி… Continue reading இதழ்:1856 நான் அறிந்த தேவன் ஒரு கன்மலை!
இதழ்:1855 பூந்தோட்டத்தை அழிக்கும் களைகள்!
உபாகமம்: 28:15 ” இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்க கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில் இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்கு பலிக்கும்.” கதைப் புத்தகங்களில் மந்திரவாதியின் சாபத்தினால் மனிதன் பூனையாவதைப் பற்றி படித்திருக்கிறேன்! ஏழை எளிய மக்கள் ஒருவரோடொருவர் சண்டை போட்டுக் கொள்ளும்போது நீ மண்ணாய் போவாய், நீ விளங்காமல் போவாய், என்று சாபமிடுவதையும் கண்களால் பார்த்திருக்கிறேன். ஒரு கிராமத்தில் ஒரு குடும்பத்தில் பிள்ளைகள்… Continue reading இதழ்:1855 பூந்தோட்டத்தை அழிக்கும் களைகள்!
இதழ்:1854 உன் வாழ்வு ஆசீர்வாதமாகும்!
உபாகமம்:28:14 “ இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும், அவைகளுக்கு செவிகொடுத்து வந்தால் கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்.” நான் அலுவலகத்துக்கு போகும் வழியில் வயல்வெளிகள் உள்ளன! நீர்ப்பாய்ச்சியிருக்கும் வயல்களில் வாத்துகள் கூட்டம் கூட்டமாய் வலம் வந்துக்கொண்டிருக்கும் அழகை அடிக்கடி நான் ரசிப்பதுண்டு. அதில் எப்பொழுதுமே ஒரு வாத்து முன்னால் இருக்கும், மற்றவை அனைத்தும் அந்த தலைவர் வாத்து போகிற திசையில் தான் திரும்புவார்கள்!… Continue reading இதழ்:1854 உன் வாழ்வு ஆசீர்வாதமாகும்!
இதழ்:1853 கிருபை என்னும் மழைக்காக வேண்டிக் கொள்!
உபாகமம்: 28:12 ஏற்றகாலத்திலே உன் தேசத்திலே மழை பெய்யும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும்,கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷ சாலையாகிய வானத்தை திறப்பார். மே மாதத்தில் ஒருநாள், நாங்கள் காரில் பெங்களூருக்கு போய்க் கொண்டிருந்தோம். அன்று மழைக்கு எந்த அறிகுறியுமே இல்லை. சென்னையிலிருந்து வேலூர் வரை கடும் வெயில் காய்ந்து கொண்டிருந்தது! வேலூரைத் தாண்டி சற்று தூரம் சென்றவுடன் திடீரென்று மின்னல்களோடு, கருமேகத்துடன் மழை கொட்டியது. அப்படிப்பட்ட மழையை நான் இதுவரை பார்த்ததே இல்லை. என்றைக்குமே… Continue reading இதழ்:1853 கிருபை என்னும் மழைக்காக வேண்டிக் கொள்!
