யோசுவா: 6:1 எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை. அப்பா! இஸ்ரவேல் மக்கள் கானானின் எல்லையை நெருங்கிவிட்டனர்! நாம் ஒருசில மாதங்களுக்கு முன்னால் படித்தவிதமாக மோசே ஒரு நாற்பது வருடங்களுக்கு முன்னர் பன்னிரண்டு வேவுகாரரை கானானுக்குள் அனுப்பியிருந்தான். அதில் காலேபும், யோசுவாவும் கானானை சுற்றிப் பார்த்து பாலும் தேனும் ஓடுகிற தேசம் என்ற மகிழ்ச்சியோடு வந்தனர், ஆனால் மற்ற பத்துபேரும் அந்த தேசம் நமக்கு அழிவும் அழுகையும்தான் என்று… Continue reading இதழ்: 1133 இருதயத்தை சுற்றி அமைக்கப்பட்ட பயம் என்ற மதில்!
Tag: அடிமைத்தனம்
இதழ்: 1082 பனிப்பாறையில் மோதிய டைட்டானிக் கப்பல் போல!
லேவி: 24: 10 -12 ”அக்காலத்திலே இஸ்ரவேல் ஜாதியான ஸ்திரிக்கும், எகிப்திய புருஷனுக்கும் பிறந்த புத்திரனாகிய ஒருவன், இஸ்ரவேல் புத்திரரோடேக்கூட புறப்பட்டு வந்திருந்தான். இவனும், இஸ்ரவேலனாகிய ஒரு மனிதனும் பாளயத்திலே சண்டை பண்ணினார்கள். அப்பொழுது இஸ்ரவேல் ஜாதியான அந்த ஸ்திரியின் மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து தூஷித்தான். அவனை மோசேயினிடத்தில் கொண்டு வந்தார்கள். அவன் தாயின் பேர் செலோமித். அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் குமாரத்தி. கர்த்தரின் வாக்கினாலே தங்களுக்கு உத்தரவு வருமட்டும், அவனைக் காவல் படுத்தினார்கள்.… Continue reading இதழ்: 1082 பனிப்பாறையில் மோதிய டைட்டானிக் கப்பல் போல!
இதழ்: 1077 நம்மை அழகுபடுத்தும் விதிமுறைகள்!
சங்கீதம்: 119:133 “ உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும்.” நாம் இந்தப் புதிய ஆண்டில் லேவியராகமத்தை படிக்க ஆரம்பிக்கிறோம். அநேகர் இதை வாசிக்க கஷ்டப் படுகிறதை பார்த்திருக்கிறேன். ஒன்றுமே புரியவில்லை, சொன்னதையே திருப்பி சொல்வது போல உள்ளது என்று பலர் கூறுவார்கள். அடுத்த சில வாரங்கள் நாம் லேவியராகமத்தின் மூலமாய் தம்மை வெளிப்படுத்தும் தேவனாகிய கர்த்தரின் தன்மைகளைப் பற்றி படிப்போம். அவரைப் பற்றியும், அவருடைய கிரியைகள் பற்றியும் முழுவதும் அறிந்து… Continue reading இதழ்: 1077 நம்மை அழகுபடுத்தும் விதிமுறைகள்!
இதழ்: 1070 ஒவ்வொன்றும் தனிவிதம்!
யாத்தி: 21: 1 மேலும் நீ (மோசே) அவர்களுக்கு அறிவிக்கவேண்டிய பிரமாணங்களாவன; எனக்கு மலர்கள் என்றால் மிகவும் பிடிக்கும். என்னுடைய வீட்டில் பூக்கும் பூக்களைத்தான் இந்த ராஜாவின் மலர்களின் தோற்றப்படமாக நான் போடுவதுண்டு! ஒவ்வொரு மலரும் தனிவிதம் என்று ரசித்துப் பார்க்கத் தோன்றும்! தனி மணமும் உண்டு! இந்த உலகில் நாம் காணும் ஒவ்வொரு மலர்களுக்கும் தனி அழகையும் தனித் தன்மையையும், தனி மணத்தையும் அளித்து உருவாக்கிய தேவன், நம்மை எவ்வாறு உருவாக்கியிருப்பார்! ஒவ்வொரு மலருக்கும் உருவில், நிறத்தில், மணத்தில்… Continue reading இதழ்: 1070 ஒவ்வொன்றும் தனிவிதம்!
இதழ்: 998 திசை மாறிய வண்டியின் சக்கரங்கள்!
ஆதி: 12:10 அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று. தேசத்திலே பஞ்சம் கொடியதாயிருந்தபடியால், ஆபிராம் எகிப்து தேசத்திலே தங்கும்படி அவ்விடத்துக்குப் போனான். ஆபிராம் சாராயுடைய குடும்ப வண்டியின் சக்கரம் வேகமாய் சுழன்றன! ஆபிராம் மோரே என்ற சமபூமிக்கு வந்த போது கர்த்தர் தரிசனமாகி ‘ உன் சந்ததிக்கு இந்த தேசத்தைக் கொடுப்பேன் ’ என்றார். ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டு தெற்கே பிரயாணம் பண்ணினான். புழுதியான பாதையில் வண்டியின் சக்கரங்கள் கானான் தேசத்தை நோக்கி வேகமாக சேற்று கொண்டிருக்கும்போது, அந்ததேசத்தில் பஞ்சம்… Continue reading இதழ்: 998 திசை மாறிய வண்டியின் சக்கரங்கள்!
இதழ்:947 மெய்யாக விடுதலை உண்டு!
நியாதிபதிகள்: 16: 21 பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள். தெலீலாளின் மடியில் நித்திரை அடைந்த சிம்சோன், தூக்கத்திலிருந்து எழுந்த போது , நம் வாழ்க்கையில் நாம் எடுக்க வேண்டிய முக்கியமான முடிவுகளை, நாம் நம் கண்களின் இச்சையின்படி எடுப்போமானால் என்ன நடக்கும் என்று மட்டும் அவனுக்குத் தெளிவாக விளங்கியது! அவன் தெலீலாளின் பிடியில் இருந்தபோது மூன்று காரியங்கள் நடந்தது என்று… Continue reading இதழ்:947 மெய்யாக விடுதலை உண்டு!
